Saturday, 12 March 2016

பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்.


பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம். இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இந்த பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். இந்த பால் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். 
* உங்களுக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும். 
* உங்கள் முகத்தில் முகப்பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம். 
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும். 
* செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும். 
* பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்க மறுக்கும் நீதிபதி!

காவி விசுவாசமா?? காவி பயமா???

(மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க நீதிபதி #கோபால_கவுடா மறுத்துள்ளார். அதற்கான காரணம் எதையும் நீதிபதி கோபால கவுடா கூறவில்லை)
❌ 24 ஆண்டுகள் ஓடி விட்டன. உலகையே குலை நடுங்க வைத்த பாபர் மசூதி இடிப்பைச் செய்தவர்கள் யார் என்பது -கோவணம் கட்டாத கோலி விளையாடும் சிறுவன் கூட அறிந்த சேதியாகும். ஆனால், நம் நாட்டு நீதிமன்றங்களுக்கு மட்டும் தெரியாமல் போனது தான் (#கேவளம்) ஆச்சரியம்.
💥 ஒன்று மட்டும் உண்மை; இந்தப் பிரச்சினையில் குற்றவாளிகள் மட்டும் உரிய தண்டனைக்கு ஆளாகாமல் தப்ப விடப்பட்டு விடுவார்களேயானால், நீதிமன்றத்தின் மீதே மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது முற்றாகவே சீர்குலைந்து போகும்.
✔ இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சாதாரண மானவையல்ல. இந்திய குற்றவியல் சட்டம் 147, 153ஏ, 153பி, 295ஏ, 505, 120பி என்று நினைக்கவே கேவலமான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
☝ குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் சாதாரணமானவர்களுமல்ல; பிஜேபியின் உயர் மட்டத் தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 48 பேர்கள் மீது ரேபரேலி சி.பி.அய். நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வன்முறையின் எதிர் விளைவாக மும்பையில் நடைபெற்ற கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 247 பேர். இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு விட்டனர்.
💥 ஆனால் இந்த எதிர் விளைவுகள் கலவரத்திற்கு மூல காரணமாக இருந்த #பாபர்_மசூதி இடிப்புக் #குற்றவாளிகள் மட்டும் #தண்டிக்கப்படவில்லை என்பது கடைந்தெடுத்த மோசடியல்லவா! மும்பைக் கலவரத்திற்கு காரணம் என்று சொல்லி #யாகூப்மேனன் அவசர கதியில் #தூக்கிலிடப்பட்டு விட்டார். அது இன்னும் சர்ச்சையில் தான் இருந்து வருகிறது.
❌ ஆனால், பாபர் மசூதி இடிப்பில், கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட் எல்.கே. அத்வானியோ இந்தியாவின் துணைப் பிரதமராகி விட்டார் முரளி மனோகர் ஜோஷியோ மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக அலங்கரித்தார். உமாபாரதியும் மத்திய அமைச்சராகவும் ஆக்கப்பட்டு விட்டார்.
📌 நீதிபதி லிபரான் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை பாபர் மசூதியில் குற்றவாளிகள் என்று 68 பேர்களைப் பட்டியலிட்டது. அதில் ம
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயியும் இடம் பெற்றிருந்தார்.
❌ அடேயப்பா, நாடாளுமன்றத்தையே நிலை குலைய வைத்து விட்டனர் பிஜேபி உறுப்பினர்கள்; இத்தகைய #சிகாமணிகள் தான் நாடாளுமன்றத்தை #முடக்கலாமா?, ஜனநாயகக் கடமையை மறக்கலாமா என்று #நீலிக்_கண்ணீர் வடிக்கின்றனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து விட்டு வாஜ்பேயியை எப்படி குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கலாம் என்று இதோபதேசக் கேள்வியை எழுப்புகிறார்கள்???
💥 இந்த வழக்கை விசாரிப்பதில் நீதிபதிகள் தயக்கம் காட்டுகிறார்கள் - நான் விசாரிக்க மாட்டேன்; வேறு அமர்வுக்கு நகர்த்திடுக என்பதெல்லாம், நீதியின் உயர்ந்த தன்மைக்கு உகந்தது தானா?
💥 இப்படி பட்டவர்களை நீதிதுறையில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வேண்டும்.
நன்றி : விடுதலை நாளிதழ்

விவசாயிகளின் வங்கி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தல்.


விவசாயிகளின் வங்கி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தல்
விவசாயிகளின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. 
செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, தேர்தல் கூட்டணி குறித்து திமுக உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி முடிவு செய்யப்படும் என கூறினார். 
நெல்லை வேளாண்மை அதிகாரி முத்துகுமாரசாமி கொலை வழக்கை தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பாகவி, விவசாயி பாலன் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

வாட்ஸ் அப்பில் புதிதாக 5 அம்சங்கள் அறிமுகம்.


உலகெங்கிலும் 100 கோடிக்கும் மேலானவர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் அப்ளிகேசனில் புதிதாக 5 அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் அப்ளிகேசனின் சமீபத்திய அப்டேட் இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது, அந்த பதிப்பு 2.12.15 ஆகும், அதில் புதிதாக 5 அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக நமது வாட்ஸ் அப் உரையாடல்கள் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் ஆகியுள்ள அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்..
1) மேம்படுத்தப்பட்ட புகைப்பட பகிர்வு: (Enhanced photo sharing)
நாம் வாட்ஸ் அப் வாயிலாக அதிகமாக போட்டோக்களை ஷேர் செய்து வருகிறோம், இனி நமது டிராப் பாக்ஸ் (Drop Box), கூகுள் டிரைவ் ( Google Drive) மற்றும் மைக்ரோசாஃப்ட் ஒன் டிரைவிலிருக்கும் ( One Drive) போட்டோக்களையும் பகிரும் வசதி வாட்ஸ் அப்பில் உருவாகியுள்ளது. 
2) ஆவண பகிர்வு: ( Document sharing )
போட்டோக்களை பகிர்வதைப்போலவே இனி ஆவணங்களையும் பகிரும் வசதி உருவாகியுள்ளது, எனினும் 100mb அளவுள்ள ஆவணங்களை மட்டுமே பகிர இயலும்.
3) பின்னணி வண்ணங்கள்: ( Background colours)
நமது வாட்ஸ் அப் உரையாடல்களின் பின்னணியில், நமக்கு பிடித்தமான வண்ணங்களை இனி உபயோகிக்கலாம், இது ஹைக் ( Hike)ஆப்-பில் ஏற்கனெவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
4) சேமிப்பு திறன்: ( Storage space)
நமது மொபைலில் வாட்ஸ் அப் ஆப் பயன்படுத்தும் இடம் குறைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆடியோ, போட்டோ, மெசேஜ்களை சேமிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
5) வீடியோ ஜூம்: ( Video Zoom)
போட்டோக்களை ஜூம் செய்து பெரிதாக மாற்றி பார்ப்பதைபோல இந்த புதிய வாட்ஸ் அப் பதிப்பில் வீடியோ ஜூம் வசதி புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் செய்யப்பட்ட பதிப்பு ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் மொபைல்களிலும் கிடைக்கப்பெறும்.
 

தேர்தல் அறிக்கையை நம்பி இருக்கும் திமுக: ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க திட்டமா..?


சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ந‌டைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், மகளிரணி சார்பில் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அம்சங்கள் குறித்தும், மக்களிடம் பிரதானப்படுத்தி பேச வேண்டிய திட்டங்க‌ள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கூட்டணி கைகொடுக்காத நிலையில் தேர்தல் அறிக்கையை நம்பி இருக்கும் திமுக இலவச ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ரேஷன்கார்டுதாரர்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.5 ஆயிரம் பணம் வழங்கும் வாக்குறுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக யூகங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் அறிக்கை இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
நன்றி : காலைமலர்.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சை பெரும்பாலான இஸ்லாமியர்கள் அமெரிக்காவை வெறுப்பவர்களே


வாஷிங்டன் : ‘பெரும்பாலான இஸ்லாமியர்கள் அமெரிக்காவை வெறுப்பவர்கள் தான்’ என அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் இருக்கும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக கூறி உள்ளார். அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியாளர்  டொனால்ட் டிரம்ப், இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். ‘இஸ்லாமியர்கள் அமெரிக்காவை வெறுப்பவர்கள்’ என ஏற்கனவே அவர் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில், மயாமியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது டிரம்ப் அளித்த பதிலில், ‘அமெரிக்காவில் வசிக்கும் 16 லட்சம் இஸ்லாமியர்களையும் நான் குறை கூறவில்லை. ஆனால், பெரும்பாலான இஸ்லாமியர்கள் அமெரிக்காவை வெறுப்பவர்கள் தான் என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன். மத்திய கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான மசூதிகளில், அமெரிக்காவின் மரணத்தை வேண்டி தான் பிரார்த்தனை செய்கிறார்கள்’ என்றார்.
அதே போல, இந்தியர்கள் அமெரிக்க இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாக கூறி வரும் டிரம்ப், ‘நான் அதிபரானால், இந்திர்களிடமிருந்து வேலைவாய்ப்பை பறித்து அமெரிக்கர்களுக்கு தருவேன்’ என கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் வேலைபார்க்கும் இந்திய சாப்ட்வேர் ஊழியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எச் 1பி விசா பற்றி டிரம்ப்பிடம் கேள்வி கேட்டது. அதற்கு அவர், ‘எச்1பி விசா பற்றி நன்கு அறிவேன். ஒரு தொழிலதிபராகவே நானே அந்த விசாவை பயன்படுத்தியிருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன், எச்1பி விசாவை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இது நமது ஊழியர்களுக்கும், நமது தொழிலுக்கும் எதிரானது. இது அமெரிக்க தொழிலாளர்களுக்கு துரோகம் செய்வதற்கு சமம். எனவே எச்1பி விசாவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என்றார்.

Friday, 11 March 2016

2 பவுன் நகைக்கு 4000 அபாதரம் வாங்கி உள்ளார்கள் சென்னை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ! இது என்ன புது சட்டமாக உள்ளது ?



வேல் முருகன் என்ற சகோதரரிடம் இரண்டு பவுன் நகைக்கு 4000 அபாதரம் வாங்கி உள்ளார்கள் சென்னை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகள்
இது என்ன புது சட்டமாக உள்ளது ??
மூன்று மணி நேரம் காக்க வைத்து பணம் பெற்றுள்ளார்கள்
கஷ்ட பட்டு நாடு திரும்பும் படிக்காத பாமர மக்களை ஏமாற்றுவதும் மிரட்டுவதும் இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது
20 லட்சம் வரை மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லலாம் என மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தும்
வெறும் 2 பவுன் நகைக்கு கஷ்ட படும் ஏழை மக்களிடம் 4000 அபராதம் என்று சொல்லி பணம் பறிப்பது என்ன இரு நியாயம்
எந்த சட்டத்தில் உள்ளது
நாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய சலாவனிக்கு வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் பங்கு என்ன வென்று அரசுக்கு தெரியாத
சுட்டெரிக்கும் சூரியனில் கடந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து அதில் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து பொருட்கள் கொண்டு வந்தாள் அதற்க்கு வரி ?????
அதிகமாக ஷேர் செய்யுங்கள் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை ஷேர் செய்யுங்கள்
king fisher ஓனருக்கு கடனாக கொடுக்கப்பட்ட 5000 கோடி ரூபாய் பணத்தை தள்ளுபடி செய்த அரசு
ஏழை கள் வயிற்றில் மட்டும் அடிபதேன் ?????
தகவல் உதவி

எளிய இயற்கை வைத்தியம் நெஞ்சு சளி


தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

வாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு...


நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.

வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.

வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.

தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.

நடுவானில் விமானத்தில் மப்பில் 3 பெண்களிடம் மல்லுக்கட்டிய 2 ‘குடி’மகள்கள்


லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் விமானத்தில் இரண்டு பெண்கள் குடிபோதையில் பூம் பாக்ஸில் சத்தமாக பாட்டு கேட்டது தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்ட்டிமோரில் இருந்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் ஒன்று விமானம்பயணிகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கடந்த புதன்கிழமை கிளம்பியது.
விமானம் நடுவானில் பறக்கையில் 2 பெண்கள் குடிபோதையில் பூம் பாக்ஸில் சத்தமாக பாட்டு கேட்டுள்ளனர்.
அது பிற பயணிகளுக்கு அசவுகரியமாக இருந்துள்ளது. இதையடுத்து 3 பெண்கள் அந்த இரண்டு போதை பெண்களிடம் சென்று சத்தத்தை குறைக்குமாறு கூற அவர்கள் மறுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த 5 பெண்களுக்கு இடையேயான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. பெண்கள் தலைமுடியை இழுத்தும், கைகளால் குத்தியும், ஒருவரை கீழே தள்ளிவிட்டும் குழாயடி சண்டையை விட மோசமாக சண்டை போட்டனர்.
இதை பார்த்த சிப்பந்திகள் ஓடி வந்து அவர்களை விலக்கிவிட்டனர். இந்த சம்பவத்தை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

"இன்ஷா அல்லாஹ்" அமெரிக்காவை இஸ்லாம் ஆளும் - ஆய்வு தகவல்கள்


இஸ்லாத்தையும், உத்தம தலைவரையும் கிறிஸ்தவ, யூத சியோனிச பயங்கரவாதம் எதிர்ப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் மிக வேகமாக பரவும் மார்க்கம். முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.
சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம். இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.
அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.
அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த பத்து வருடங்களில் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையானது வியக்கத்தக்கவகையில் அதிகரித்துள்ளது. பள்ளிவாசல்களை அமைப்பதற்கான பொதுத்தடை இருந்தபோதிலும், பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2000 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் அமெரிக்காவில் 1209 பள்ளிவாசல்கள் மாத்திரமே காணப்பட்டது.எனினும் தற்போது அமெரிக்காவில் 2106 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றதாக கணக்கெடுப்பொன்று தெரிவிக்கின்றது. 2000 ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 74சதவீத அதிகரிப்பாகும்;.அதிகமான முஸ்லிம்கள் புறநகர் வாழ்க்கையைத் தழுவிவாழ்வதாகவும் இது காட்டுகின்றது.
நகர் பகுதிகளிலேயே பள்ளிவாசல்களின் எண்ணிக்கை கூடியளவில் அதிகரித்துள்ளது.2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது புறநகர்பகுதிகளில் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 16 சதவீதத்திலிருந்து 28 சதவீதம்வரை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் அதிபட்சமாக 257 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக கலிபோர்னியாவில் ஏறத்தாள 256 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதானது அமெரிக்காவில் இஸ்லாம் மிகவேகமாக வளாந்துவரும் சமயமாக விளங்குகின்றது என ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்போது இருக்கும் இஸ்லாமிய எண்ணிக்கையை பார்க்கும் போது 2020 ல் அமெரிக்காவை இஸ்லாம் ஆளும் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹு அக்பர் !!! அல்லாஹு அக்பர் !!! அயோக்கிய கூட்டத்தின் திரிபுவாதங்கள் தவிடுபுடியாகும். இன்ஷா அல்லாஹ்...
அமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்
உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் 2009-ஆம் வருடம் அமெரிக்க முஸ்லிம்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று. இதற்கான பதில் - ஆம் - 80%
முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். காலப் நிறுவனத்தின் அமெரிக்க முஸ்லிம்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக....
1. இனப் பின்னணி:
அமெரிக்க முஸ்லிம்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில், ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான். அமெரிக்க முஸ்லிம்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள். 28% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர். அமெரிக்க முஸ்லிம்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. கடைசியாக, சுமார் 1% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..
2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:
முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம். இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர். இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.
அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர். அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர். ஆக, அமெரிக்காவை பொறுத்தவரை மார்க்கப்பற்று என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமுள்ளது. ஆனால் அமெரிக்க முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த வித்தியாசம் இல்லாமல் இருபாலரும் கிட்டத்தட்ட சமமான நிலையிலேயே உள்ளனர். அமெரிக்க முஸ்லிம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வும் (77%) இதே முடிவுகளைத்தான் தருகிறது.
80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக கூறியிருந்தாலும் இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, இதே நிறுவனத்தால் வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர்.
3. பெண்கள்
யூதர்களுக்கு அடுத்து அமெரிக்காவில் அதிகம் படித்தவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள் தான். அதிலும், மேற்படிப்பு முடித்த மற்றும் பட்டம் பெற்ற முஸ்லிம்களில் ஆண்களை (39%) விட பெண்களே (42%) அதிகம். முஸ்லிம் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மற்றொரு குறிப்பிடத்தக்க தகவலையும் தருகின்றது. என்னவென்றால், பெண்கள் (40%), ஆண்களுக்கு (42%) நிகரான அளவில் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது, காலப் நிறுவனத்தால் சில முஸ்லிம் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும் போது வேறுபடுகின்றது. இந்த நாடுகளில் பெண்கள் பள்ளிக்கு வருவது (அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது) குறைவே. ஆனால் அமெரிக்காவில் அந்த நிலை இல்லை. அங்கு ஆண்களும் பெண்களும் சமமான அளவிலேயே பள்ளிக்கு வருகின்றனர்.
4. மற்றவைகள்:
70% முஸ்லிம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 6% அதிகம். அமெரிக்காவின் பள்ளிவாசல்கள் பல்நோக்கு கூடங்களாக உள்ளன. மது அருந்துவோரின் சதவிதம், மற்ற மார்க்க மக்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது. அதே சமயம், நான்கில் ஒரு முஸ்லிம் அமெரிக்கர் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். அமெரிக்க முஸ்லிம் பெண்களில் மூன்றில் ஒருவர் "professional Job"பில் உள்ளார்.
கறுப்பின முஸ்லிம் அமெரிக்கர்கள் மார்க்கத்தின் மேல் அதிக பற்று கொண்டுள்ளனர் (87%). இவர்களைத் தொடர்ந்து ஆசியர்களும் (86%), வெள்ளையர்களும் (72%) வருகின்றனர். காலப் நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையை (140 பக்கங்கள்) முழுவதுமாக படிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (File Size : ~5.2 MB).
One can download the complete document from: http://www.muslimwestfacts.com/mwf/116074/Muslim-Americans-National-Portrait.aspx இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக... ஆமின். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

தமிழகத்தில் முதல் முறையாக சிறைக் கைதிகள் வாக்களிக்க ஏற்பாடு: ராஜேஷ் லக்கானி


தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக சிறைக் கைதிகளும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறினார்.
மீனாட்சி கல்லூரியில் இன்று விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜேஷ் லக்கானி, தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.
சிறையில் இருக்கம் கைதிகள் கூட வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், சிறைக் கைதிகள் தபால் மூலம் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் தமிழக சிறைகளில் இருக்கும் 13 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்தார்

பழைய வாட்ஸ் அப் உரையாடல்களை எவ்வாறு புதிய மொபைலுக்கு மாற்றுவது?


உலகில் 100 கோடிக்கும் அதிகமானவர்களால் வாட்ஸ் அப் உபயோகிக்கப்பட்டு வருகிறது. பல முக்கிய தகவல்களை நாம் வாட்ஸ் அப் மூலமாக பரிமாறி வருகிறோம். அப்படி சேமித்து வைத்த முக்கியமான வாட்ஸ் அப் டேட்டாக்களை வேறு மொபைலுக்கு நாம் மாறும் போதும் நமக்கு தேவைப்படலாம், அந்த உரையாடல்களை எவ்வாறு புதிய மொபைலுக்கு மாற்றுவது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஐ.போன் பயனர்கள்:
ஐ-போனில் உள்ள வாட்ஸ் அப் டேட்டாக்களை மிகவும் சுலபமாக ஐ.கிளவுட் மூலமாக நாம் சேமிக்கலாம். இதற்காக கீழ்க்கண்டவாறு செட்டிங்ஸ்களை செலக்ட் செய்ய வேண்டும்.
Whatsapp settings>> Chats>> chat backup

புதிய ஆப்பிள் மொபைல் வாங்கி, வாட்ஸ் அப் இன்ஸ்டால் செய்த பிறகு, உங்களது மொபைல் எண்ணை எண்டர் எய்த பின்பு பழைய வாட்ஸ் அப் டேட்டாக்களை திரும்பப் பெரும் ஆப்ஷன் கிடைக்கும், அதை செலக்ட் செய்யும் போது  பழைய வாட்ஸ் அப் உரையாடல்களை நாம் திரும்பப் பெறலாம்.
ஆண்ட்ராய்ட் பயனர்கள்:
ஆண்ட்ராய்ட் உபயோகிப்பாளர்கள் பல வழிகளில் வாட்ஸ் அப் டேட்டாக்களை திரும்பப்பெரும் வசதி உள்ளது.
மைக்ரோ SD கார்டு:
ஆண்ட்ராய்ட் உபயோகிப்பாளர்கள் மைக்ரோ SD கார்டுகளில் தங்களது வாட்ஸ் அப் உரையாடல்களை பேக் அப் செய்து பின்னர் புதிய மொபல்களில் திரும்பப் பெறலாம்.
கணிப்பொறியில் சேமிக்கலாம்:
மைக்ரோ sd கார்டில் சேமிக்க முடியாதவர்கள், தங்களது கணிப்பொறி அல்லது லேப்டாப் மூலமாக வாட்ஸ் அப் உரையாடல்களை சேமிக்கலாம், அதற்கு முதலாவதாக உங்களது போனை கணிப்பொறியுடன் usb கேபிள் மூலமாக இணைத்து, அதில் தோன்றும் வாட்ஸ் அப் ஃபோல்டரை, கணிப்பொறியில் சேமித்து வைத்து, பின்னை புதிய மொபைலை இவ்வாறாக இணைத்து அந்த ஃபோல்டரை புதிய போனின் வாட்ஸ் அப் ஃபோல்டரில் பேஸ்ட் செய்வதன் மூலம் நாம் பழைய உரையாடல்களை திரும்பப் பெறலாம்.
கூகுள் டிரைவ்:
வாட்ஸ் அப் உரையாடல்களை திரும்பப் பெறும் மற்றொறு மிகச் சுலபமான வழி கூகுள் டிரைவ். வாட்ஸ் அப் டேட்டாக்களை கூகுள் டிரைவில் சேமித்துவிட்டு பின்னர், வேறு ஆண்ராய்ட் மொபைலில் நமது வாட்ஸ் அப் அக்கவுண்டை கட்டமைக்கும் போது பழைய உரையாடல்களை திரும்பப் பெறலாம்.
வாட்ஸ் அப் டேட்டாக்களை திரும்பப் பெரும் போது, மொபைல் டேட்டாவை விட
வைஃபை உபயோகித்தால் விரைவாக பரிமாற்றம் நடக்கும்

150 அடி கிணற்றில் விழுந்த சிறுவன் 3 நாளுக்கு பின் உயிருடன் மீட்பு


தேனி அருகே உள்ள பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது41) இவர் மனைவியுடன் கேரளாவில் எஸ்டேட் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். அவரது மகன் பிரதீப்(வயது13), சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி 8–ம் வகுப்பு படித்து வருகிறான்.
இவரது பாட்டி சரோஜினி பண்ணைப்புரத்தில் உள்ளார். கடந்த 8–ந்தேதி பாட்டி வீட்டிற்கு வந்தான். அங்கு சாப்பிட்டுவிட்டு விளையாட செல்வதாக கூறி சென்றவன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இதுகுறித்து கோம்பை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் பண்ணைப்புரத்தின் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள சுமார் 150 அடி ஆழ கிணற்றில் நேற்று காலை முனகல் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியே நடந்துசென்றவர்கள் சத்தம் வந்த கிணற்றின் அருகில் சென்று எட்டிப்பார்த்தனர்.
அப்போது முள்புதர்களும் செடிகளும் மண்டி திகிலூட்டும் கிணற்றில் சிறுவனின் அழுகுரல் கேட்டதால் உடனடியாக உத்தமபாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் புருசோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கயிற்றை கட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்த பிரதீப்பை உயிரோடு மீட்டனர்.
 இதுகுறித்து சிறுவன் கூறுகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாட்டி வீட்டிற்கு வந்த நான் அந்த கிணற்றின் பக்கத்தில் விளையாடினேன். புறா அதிகம் அந்த கிணறு அருகே பறந்துபோனதால் அதனை பிடிக்கலாம் என்றபோது தவறிவிழுந்தேன். நானும் 3 நாட்களாகவே சத்தம்போட்டேன். யாருக்கும் கேட்கவில்லை. இப்போது என்னை மீட்டுள்ளனர் என்றார்

Thursday, 10 March 2016

உங்களுக்கு அடிக்கடி கால் மரத்துப் போகிறதா?


உங்களுக்கு அடிக்கடி கால் மரத்துப் போகிறதா? குறிப்பாக இந்த பிரச்சனையை ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் சந்திப்பார்கள். அதிலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தாலோ அல்லது ஒரே நிலையில் நீண்ட நேரம் இருந்தாலோ மரத்துப் போகும். இதற்கு காரணம், உடலின் ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் வேண்டிய ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் இரத்தம் சரியாக வழங்காதது தான்.

பொதுவாக உடலில் கைகள், பாதம், விரல்கள், கால்கள் போன்ற பாகங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் தான் இந்த பிரச்சனை ஏற்படும். மேலும் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரக பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு போன்ற தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

க்ரீன் டீ :-

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமெனில் தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வாருங்கள். ஏனெனில் அதில் உள்ள எபிகேலோகேட்டசின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இரத்த நாளங்களை விரிவடைய செய்து, இரத்த ஓட்டத்தை தடையின்றி உடல் முழுவதும் பாய உதவுகிறது

ரோஸ்மேரி :-

நறுமணமிக்க ரோஸ்மேரி மூலிகை, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதற்கு இதனை உலர்ந்த வடிவத்திலோ அல்லது பிரஷ்ஷாகவோ உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

மிளகு :-

பெரும்பாலான உணவுப் பொருட்களில் காரத்திற்கும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் மிளகு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதிலும் இதனை அன்றாடம் ஏதேனும் ஒரு உணவுப்பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராக பாயும்.

தக்காளி:-

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, லைகோபைன் நிறைந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள லைகோபைன் பிளேக் கட்டமைப்பை உடைத்து, இரத்த ஓட்டத்தை உடலில் சீராக்குகிறது.

ஸ்மார்ட் போன்களில் பேட்டரியை சேமிக்க டிப்ஸ்..!!


1. திரை ஒளிர்வு (Brightness)
மொபைலின் Brightness-ஐ முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள். அதிகமாக வைத்திருந்தால் அதிகம் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

Settings => Display => Brightness பகுதிக்கு சென்று Brightness-ஐ மாற்றிக் கொள்ளலாம்.

2. GPS, Wi-Fi & Bluetooth
தேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

3. Live Wallpaper
ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வசதிகளில் ஒன்று Live Wallpaper எனப்படும் தொடுவுணர்வு கொண்ட அனிமேசன் புகைப்படங்கள். இந்த வசதியும் பேட்டரியை எடுத்துக் கொள்ளும். விருப்பமிருந்தால் சில நாட்கள் வைத்துக் கொண்டு பிறகு நீக்கிவிடுங்கள்.

4. Home Screen Widgets
ஆண்ட்ராய்ட் Home Screen-ல் நாம் வைக்கும் Widget-களை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், அதுவும் கொஞ்சம் பேட்டரி அளவை எடுத்துக் கொள்ளும். அதனால் நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிடுவது நன்று.

5. Background Applications

சில அப்ளிகேசன்களை பயன்படுத்தவில்லை என்றாலும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவும் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும். எனவே, அது போன்ற அப்ளிகேசனை Uninstall செய்வது நல்லது.

6. Vibrate Mode
பெரும்பாலான போன்களில், போனுக்கு அழைப்பு வருகையிலும், மெசேஜ் கிடைக்கும்போதும், ஒலியோடு, போன் அதிர்வும் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது பேட்டரியின் சக்தியைப் பெரும் அளவில் எடுத்துக் கொள்ளும். எனவே, அதிர்வினை இயங்காமல் வைப்பது, பேட்டரியின் வாழ்நாளை அதிகப்படுத்தும்.

7. High Temperature
போன் வெப்பமான சூழ்நிலையில் செயல்படுவது, பேட்டரியின் செயல்பாட்டினைக் குறைக்கும். எனவே, அதிக வெப்பம் உள்ள இடங்களில், மொபைல் போன்களைக் கையில் எடுத்துச் செல்வதைக் காட்டிலும், பாக்கெட்டில், கைப் பைகளில் வைத்துக் கொள்ளலாம்.

8. Battery Saving Mode
Do not disturb, sleep schedule, Flight Mode போன்ற சில வசதிகள் உங்கள் மொபைல் போனில் தேவையில்லாத தொந்தரவுகளைத் தவிர்த்து பேட்டரி சேமிப்பிற்கு உதவும்.

9.  Long Time Charging
நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் போடுவதால் நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் பேக்கப் வரும் என்ற தவறான நினைப்பால் சிலர் நீண்ட நேரம் சார்ஜிங் செய்வார்கள். ஆனால் இது  தவறானது. இதனால் உங்களுடைய செல்போன் சூடு அதிகமாகிவிடும். சூடேறினால் பேட்டரிக்கும், அதுதரும் பேக்கப் நேரத்திற்கும் ஆபத்து.

வெள்ளரியானது ரத்த அழுத்தம், மூட்டுவலி உள்ளிட்ட பலவகை நோய்களை தீர்க்கும் மருத்துவ பயன்களை கொண்டது.


மருத்துவ பயன்கள்
வெள்ளரியின் மருத்துவ பயன்களை கூற தொடங்கினால், அதன் பயன்கள் ஏராளம். 95 சத நீர்ச்சத்துடன், சாதாரண நீரைவிடச் சத்து மிகுந்த நீரைக் கொண்டிருப்பதால், உடல் வெப்பநிலையையும், நீர்ச்சத்தையும் சீராக பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
இதில் உள்ள வைட்டமின்களும், மாங்கனீஸ், பொட்டாசியம், சிலிக்கான் ஆகிய தாதுக்கள் தோல் பாதுகாப்பில் உதவுகின்றன. இதிலுள்ள லேரிசிரிசினால், பினோரெசினால், சீகோஐசோசிரிசினால் என்ற மூன்று லிக்னன்கள் பலவகையான புற்றுநோய்கள் வரும் வாய்ப்பை தடுக்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
மூட்டுவலிக்கு நிவாரணம்
வெள்ளரிச்சாறில் உள்ள பொட்டசியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியன ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன. வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல், ஈறுகளைப் பாதுகாக்கவும் வெள்ளரி உதவுகிறது. சீரணமண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குடல்புண் ஆகியவற்றை குணமாக்கி, சீரான சீரணத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
வெள்ளரி விதைகள் நாடாப்புழுக்களை வெளியேற்ற உதவுகின்றன. இதில் உள்ள சிலிகான், மூட்டு தசைகளுக்கு வலு அளிப்பதனாலும், வைட்டமின்கள் ஏ, பி6, சி, போலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியன யூரிக் அமில அளவை குறைப்பதாலும் மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்கின்றன. இன்சுலினை சுரக்கும் கணைய செல்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கியை (ஹார்மோன்) வெள்ளரி கொண்டுள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வெள்ளரி இனியது. இதில் உள்ள ஸ்டிரால்கள் என்ற கூட்டுப்பொருட்கள் கொழுப்பைக் குறைப்பதாகச் சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள சிலிக்கானும், கந்தகமும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
எடையை குறைக்க உதவுகிறது
கண்வீக்கம், கருவளையங்களை போக்கவும், சிறுநீரக கற்களை கரைக்கவும் வெள்ளரி உதவுகிறது. கொழுப்பில்லாத, கலோரி குறைவான உணவாதலால், எடையை குறைக்க இது மிகவும் ஏற்ற உணவு

புதுப்பட்டினம் உட்பட மாவட்டம் முழுவதும் தேர்தல் புகார்களை அளிக்க 1077 எனும் கட்டணமில்லா சேவை எண் அறிவிப்பு :: 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்டத்தேர்தல் நடத்தும் அலுவலருமான என்.சுப்பையன் அறிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 24
மணிநேரமும் செயல்படும் இந்த அறையில் அலுவலர்கள் பணிபுரிவதை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
அப்போது அவர் இதுகுறித்து கூறியதாவது,
தேர்தல் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

பருவநிலை மாற்றம் அமீரகம் முழுவதும் பலத்த மழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

11:27 AM | மார்ச் 10, 2016

அபுதாபி, 
அமீரகத்தில் சில பகுதிகளிலும், ஓமன் நாட்டிலும் நேற்று முன்தினம் திடீரென பலத்த மழை பெய்தது.
அடுத்த 3 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து அமீரகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது.
அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராசல் கைமா, புஜேரா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக காலையில் அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடங்கள் செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர். பகல் நேரம் இரவு போல் இருண்டு காட்சியளித்தது.
அபுதாபியில் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மழையுடன் சேர்ந்து 130 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியது. கலிபா சாலையில் கடை ஒன்றின் பெயர் பலகை உடைந்து விழுந்தது. இதன் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. அபுதாபி கடற்கரை சாலையில் கார்கள் மழை வெள்ளத்தில் சிக்கி மெதுவாக ஊர்ந்து சென்றன.
அபுதாபியில் உள்ள ஓட்டல் ஒன்றின் கண்ணாடிகள் பலத்த காற்று காரணமாக சேதமடைந்தன. அபுதாபி ஏர்போர்ட் சாலையில் பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. அந்த பகுதியில் கீழே விழுந்து இருந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் வேகமாக அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். கார்கள் நிறுத்தும் இடத்தின் மேற்கூரை சில இடங்களில் வேகமான காற்றின் காரணமாக சரிந்து விழுந்தது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.
அபுதாபி விமான கண்காட்சியும் தொடர்ந்து 2–வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. இதனைக் காண வந்த பார்வையாளர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். அபுதாபியில் மழை காரணமாக நேற்று மதியத்துக்கு பின்னர் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் ஒரு சில மணி நேரத்துக்கு பின்னர் விமான சேவை மீண்டும் தொடங்கியது.
அபுதாபியில் உள்ள மக்கள் மிகவும் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்றபடி வீடுகளை விட்டு யாரும் வெளியில் வரவேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டனர். அபுதாபியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 110 மி.மீ. மழை பெய்துள்ளது.
துபாயில் பெய்த மழையினால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அங்கு உள்ள தாழ்வான இடங்களில், குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான கார்கள் மழைவெள்ளத்தில் மூழ்கின. ஜுமைரா லேக் டவர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதிகாப்பு கருதி இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
துபாய் ஷேக் ஜாயித் சாலையில் தானுபே மெட்ரோ ரெயில் நிலையம் அருகே தண்ணீர் தேங்கி நின்றது. நேரம் செல்லச்செல்ல தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் குளம் போல் காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஜெபல் அலி தொழிற்பேட்டை பகுதியில் மழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அந்த பகுதிக்குள் கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள வீட்டின் முன்புறம் தண்ணீர் தொடர்ந்து தேங்கி வருவதாக குடியிருப்பு வாசி ஒருவர் கவலை தெரிவித்தார்.
கனமழையால் அலுவலகம் ஒன்றின் மேற்கூரை சேதமடைந்து கற்கள் அலுவலகத்தில் விழுவதாக அங்கு வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் கூறினார். துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி, ஜுமைரா பார்க் பகுதி, ஜுமைரா லேக் டவர்ஸ் பகுதி, டிஸ்கவரி கார்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி நின்று இருந்ததை காண முடிந்தது.
துபாயில் புர்ஜ் கலீபா கோபுரம் அருகே மழையுடன் மின்னலும் அதிகமாக இருந்தது. இந்த மின்னல் காரணமாக வானத்தில் சிறு கீறல் விழுந்தது போல் காணப்பட்டதாக அந்த பகுதி குடியிருப்புவாசி ஒருவர் தெரிவித்தார்.
துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்கள் நேற்று விடுமுறை அறிவித்து இருந்தன. இதனால் பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோரிடம் தங்களது குழந்தைகளை அழைத்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.
மழை காரணமாக விமான சேவைகள் தாமதம் ஆனது. எனினும் விமான நிலையத்துக்கு வருபவர்கள் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களது விமானம் செல்லும் நேரத்தை உறுதி செய்து விட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். குளோபல் வில்லேஜ் கண்காட்சி நேற்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
துபாயில் நேற்று பெய்த மழையால் 235 சிறு விபத்துகள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், ஒரு சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.
சார்ஜாவின் அனைத்து பகுதிகளிலும் கார்களை நிறுத்தும் இடத்தில் இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம். காலநிலை காரணமாக சார்ஜா மாநகராட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டது. சார்ஜா வாதி அல் ஹீலோ பகுதிக்கு செல்லும் சாலை இருபுறமும் மூடப்பட்டதாக சார்ஜா போலீசார் தெரிவித்தனர். சார்ஜாவில் உள்ள சாலைகளில் மழை இருள் காரணமாக கார்கள் செல்வது கூட தெரியாத அளவுக்கு காணப்பட்டதாக சாலையை கடந்து சென்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.
அஜ்மான், உம் அல் குவைன், புஜேரா, அல் அய்ன் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. ராசல் கைமா மலை பகுதிகளில் மழை வெள்ளம் கடல் போல் காட்சி அளித்தது. இதில் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
ராசல் கைமா சாலையில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியது. ஒரு சில இடங்களில் பனிக்கட்டி மழை பெய்ததாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். புஜேராவிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஒரு சில இடங்களில் ரோடு முழுமையாக துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவு காணப்பட்டது. ராசல் கைமா– புஜேரா இடையே தரைப்பாலத்தில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அந்த பகுதியை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.
மழை காரணமாக அமீரகத்தின் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் இன்று (வியாழக்கிழமை) விடுமுறை விடப்படுவதாக அமீரக கல்வி மந்திரி ஹுசைன் அல் ஹம்மாதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மஸ்கட், சோகர் உள்ளிட்ட ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கன மழை பெய்தது. ஓமனில் ஒரு சில இடங்களில் பெய்த பலத்த மழையில் கார்கள் சிறிது அளவு மட்டும் வெளியே தெரியும் படி தண்ணீரில் மூழ்கி இருந்ததை காண முடிந்தது.

லிங்க தரிசனம் எனக் கூறி ஐயர் ஆண் உறுப்பை வாயில் திணித்தார்!! 16 வயதுச் சிறுமியின் வாக்குமூலம்.


உத்தரப்பிரதேசத்தில் 45 வயதான கோவில் பூசாரியால் 15 வயதுச் சிறுமி நிறைமாத கர்ப்பமாக உள்ளார். சிறுமி கர்ப்பமானதால் குறித்த சிறுமியை அக் கிராமத்தில் உள்ள உறவுக்கார இளைஞனுக்கு திருமணம் செய்ய முற்பட்ட போது
 பொலிசார் அவர்களைக் கைது செய்தனர். அந் நேரத்தில் சிறுமி கர்ப்பமாகி உள்ளதை அறிந்த பொலிசார் சிறுமியிடம் விசாரணை நடாத்தி போது சிறுமி அதிர்ச்சித் தகவல்களைக் கூறியுள்ளார்.
அப்பகுதியில் உள்ள சிவன் கோவில் ஒன்றின் பூசாரி கோவிலுக்கு வரும் பெண்களையும் சிறுமிகளையும் பக்திவசப்படுத்துவதுபோல் வசப்படுத்தி அவர்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. சிவனின் லிங்கம் எனத் தெரிவித்து தனது ஆண் உறுப்பை தொட்டு பெண்களை வணங்கச் செய்தும் சிவனால் ஆசீர்வதிக்கப்படுகின்றீர்கள் என கூறி அவர்களின் அறியாமையை சாதகமாகப் பயன்படுத்தி கற்பழித்துள்ளதும் தெரியவந்துள்ளது. 
பூசாரியால் கர்ப்பமாகும் பெண்களை குறித்த குடும்பத்தினர் வேறு ஆண்களுக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இச் சிறுமியைப் பூசாரியிடம் கொண்டு சென்ற போது பூசாரி சிவனின் லிங்க தீர்த்தம் எனத் தெரிவித்து சிறுமியின் வாய்க்குள் தனது ஆண் உறுப்பை திணிது அதன் பின்னர் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளதாக சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாள்.
தலைமறைவாக உள்ள பூசாரியைப் பொலிசார் தேடி வருகின்றனர்.
http://kaalaimalar.net/linga-swamy/

Wednesday, 9 March 2016

மேற்குவங்க தேர்தல் : 56 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு.....!


தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ள சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக 56 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக முஸ்லிம்களுக்கு ஓரிரு தொகுதிகளை ஒதுக்கி முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகளை அள்ளி இறுதியில் கறிவேப்பில்லையாக மட்டுமே பயன்படுத்தி வரும் சூழலில்..
மேற்குவங்கத்தில் பிரதான கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

சவுதி அரேபிய விமானத்தில் தொழுகுவதற்க்கு இடம்..!


சவுதிஅரேபிய விமானத்தில் பயணிக்கும்போது கடமையான தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றும் வசதி ஏற்ப்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

சவுதி விமானத்தில் பயணம் செய்யும் இஸ்லாமிய சொந்தங்கள் இந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

கடத்தல்காரர்களிடம் இருந்து வகுப்புத்தோழியை காப்பாற்றிய பெண்ணிற்கு வீரதீர விருது.


ஆக்ரா: இந்து மதத்தை சேர்ந்த சிறுமியை கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்றியதற்காக ராணி லக்ஷ்மிபாய் தைரிய விருது 15 வயதான நசியா என்ற முஸ்லிம் பெண்ணிற்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் வழங்கினார். கடந்த ஆகஸ்ட் மாதம் கடத்தல்காரர்கள் இருந்து 6 வயது இந்து மதத்தை சேர்ந்த டிம்பி என்ற சிறுமியை நசியா காப்பற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
சக்ஹிர் பாதிமா முஹம்மாடிய பெண்கள் கல்லூரியை சேர்ந்த நசியா வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது காப்பாத்துங்கள் என்று சிறுமி கதறிய சத்தம் கேட்டு அந்த இடந்திற்கு சென்றார். அங்கு டிம்பியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முயற்சி செய்துள்ளனர். நசியா தனது உயிரை பற்றி கவலைப்படமால் அவர்களின் கைகளை தட்டி விட்டார். அவர் தொடர்ந்து கூச்சலிட பொதுமக்கள் வருவதை கண்ட கடத்தல் காரர்கள் தப்பி சென்றனர்.
சிறுமியை காப்பற்றி அவரது பெற்றோரிடம் நசியா ஒப்படைத்தார். அவரை காப்பாற்றிய பிறகு தான் டிம்பி அவரது பள்ளி ஜூனியர் என்பது தெரிய வந்ததாக கூறினார்.ஆக்ராவில் முஸ்லிம் இந்து இடையிலான பதற்றம் நிலவும் போது கடத்தல்காரர்கள் பிடியில் இருந்து தங்கள் குழந்தையை காப்பாற்றிய நசியாவை டிம்பியின் பெற்றோர்கள தங்கள் சொந்த மகள் போன்று பாவித்து வருகின்றனர்.

பழம் நழுவி பாஜகவில் விழுந்து விட்டதா ?


சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பமாக விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
Rediff.com இணையதளத்திற்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதை உறுதி செய்துள்ளார். தற்போது வரை பிரேமலதா விஜயகாந்திடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 
பாஜக - தேமுதிக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து பேச பிரேமலதா விஜயகாந்த் விரைவில் டெல்லி வரவுள்ளதாகவும் ஜவடேகர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
மொத்தமுள்ள 234 தொகுதிகளை பாஜக.,வும், தேமுதிகவும் சரிபாதியாக பங்கிட்டு கொள்வது தொடர்பான ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றதை போல், பாஜகவும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
ஏற்கனவே திமுக, மக்கள் நல கூட்டணி போன்றவை தேமுதிக வருகைக்காக காத்திருக்கும் நிலையில் பாஜக வின் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாடு செல்லும் ஆசையில் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறும் இளைஞர்கள்: கண்டுகொள்ளுமா காவல்துறை?


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புறங்களில் வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான விளம்பரங்களை வெளியிட்டு ஏமாற்றும் மோசடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்மாவட்டங்களில் போதிய தொழிற்சாலைகள் இல்லாததால் வேலையின்றி இளைஞர்கள் பலர் வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். இதுதவிர ஒரு சிலர் வெளிநாடுகளில் வேலைக்கு ஆசைப்பட்டு செல்கின்றனர். இவர்களை குறிவைத்து தங்குமிடம் இலவசம், ஓவர்டைம் பணிக்கு கூடுதல் ஊதியம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் இளைஞர்கள் கவரப்படுகின்றனர். பெரும்பாலான விளம்பரங்களில் செல்போன் நம்பர் மட்டுமே தொடர்புக்கு கொடுக்கப்படுகிறது. அரசு அனுமதி உண்டா, உண்மையிலேயே அது வேலைவாய்ப்பு நிறுவனமா என யாருக்கும் தெரிவதில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதி பெற்ற நிறுவனம் மட்டும்தான் விளம்பரம் செய்ய வேண்டும் எச்சரித்ததோடு, போலியான விளம்பரங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் போலி புரோக்கர்கள் தலைமறைவாகிவிட்டனர்.தற்போது மீண்டும் தலையெடுத்துள்ள அவர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு ஆயிரக்கணக்கானோர் தேவை என்று நகரம், கிராமம் என பல இடங்களில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். டூரிஸ்ட் விசாவை கொடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் இத்ததைய நிறுவனங்களை நம்பிச் செல்லும் பலர் அங்கு பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி சிறையில் அவஸ்தைப்படுகின்றனர்.கடந்த சில இரு ஆண்டுக்கு முன் மலேசிய விமானம் காணாமல் போன சம்பவத்தையடுத்து மலேசியா உள்ளிட்ட நாடுகள் விசாவிற்கு கடுமையான கெடுபிடிகளை விதித்துள்ளன. இது தெரியாமல் இளைஞர்கள் பலரும் வட்டிக்கு வாங்கி புரோக்கர்களுக்கு கொடுத்து ஏமாந்தனர்.
கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தில் இருந்து மலேசியா சென்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இருவர் உட்பட 32 பேர் போலி விசா மூலம் வந்தவர்கள் எனக்கூறி மலேசியா சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் குடும்பத்தினர் வறுமையில் வாடியதோடு மட்டுமல்லாமல் மனஉளைச்சலுக்கும் ஆளாகினர்.ஒருசிலர் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் போலி விளம்பரங்களின் பின்னணி குறித்து ஆராயாமல் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாடு சென்று விடுகின்றனர். அங்கு சென்ற பிறகு அவர்கள் குறிப்பிட்ட வேலை கிடைக்காமலும், 16 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்படுவதாலும் உடல் சோர்வு ஏற்படுவதோடு, மனஉளைச்சலும் தொற்றிக் கொள்கிறது. மேலும் ஒருசில இடங்களில் பாஸ்போர்ட்டையும் அவர்கள் பறித்துக் கொள்வதால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அதன்பிறகு மனைவி, உறவினர்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் முறையிட்டு வெளியுறவுத்துறை மூலம் மீட்கப்படுகின்றனர். எனவே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு போலி விளம்பரங்களை கண்டு ஏமாறுபவர்கள் உள்ளூரிலேயே சுய தொழில் தொடங்கி சுயமாக வாழலாம் எனவும், அரசு அனுமதியின்றி விளம்பரங்கள், போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுவோர் தமிழக அரசின் மேன்பவர் கார்ப்பரேசன் மூலம் அறிவிக்கப்படும் அறிவுப்புகளை மட்டும் நம்பி வேலைவாய்ப்பை பெறலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

அரபு நாட்டுக்கு செல்லும் சகோதரர்களே!! தவறான உடலுறவில் ஈடுபடாதீர்கள்


அரபு நாட்டுக்கு செல்லும் சகோதரர்களே, நீங்கள் கவணமாக இருக்க வேண்டிய முக்கியமான விசயம் பெண்கள் விசயத்தில் காரணம் யார் எந்த நாட்டுக்கு போனாலும் அங்குள்ள சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வேன் என்பதை அந்த நாட்டின் முதல் முதலாக நாம் செல்லும் போது கையெழுத்து வாங்கி விடுவார்கள். 
அதை மீறும் போது சட்டப்படி அவர்களால் தண்டனை கொடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டவரும் இந்தியாவில் இருக்கும் வரை இந்த நாட்டு சட்டப்படி இருப்பேன் கையெழுத்து வாங்கப்படுகிறது. அதனால் நாம் சென்ற நாட்டை குறை கூறுவதை விட நம் மேல் தவறு இல்லாமல் பாத்து கொள்வதே புத்திசாலித்தனம். 
இந்த போட்டாவில் இருப்பது பங்களாதேஷ் டிரைவரும் பிலிப்பினோ பனிப் பெண்னும் தவறான உறவின் போது கையும் களவுமாக பிடிபட்டவர்கள். இந்த நிலை நம் சகோதரர்களுக்கு வர வேண்டாம் என இறைவனை வேண்டுவோம். - See more at: http://seithyulagam.com/fullview-post-4773-cat-3.html#sthash.jcYmuVfh.Hkn6jdct.dpuf

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 17பேர் பலி


பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்த பட்சம் 17 பேர் பலியாகினர். 
வடமேல் நகரான ஷப்கடாரின்  நீதிமன்ற நுழைவாயிலில் இந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
இதில் 30 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 
கடந்த வாரம் மும்டாஸ் காட்ரி என்ற மதகுரு ஒருவர் தூக்கிலிடப்பட்டார்.
இதற்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்

பாஜகவுக்கு ஆப்படித்த விஜயகாந்த்.


தங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கையுடன் கருணாநிதி, வைகோ, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வலைவீசி வருகின்றனர். ஆனால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிடி கொடுக்காமல் போக்கு காட்டி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னமும், தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையே கூட்டணி முடிவாகாமல் இழுபறியில் நீடிக்கிறது. இதனால், பிரசாரம் மந்த நிலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என்று வெளிப்படையாக திமுகவும், பாஜகவும் தெரிவித்திருக்கின்றன. மக்கள் நல கூட்டணி தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால், தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தனது முடிவை அறிவிப்பதாக விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது பாஜகவுக்கு ஆப்பு அடித்து விட்டதாக விஜயகாந்த் தெரிவித்தார்

புதுப்பட்டினத்தை அடுத்த மல்லிப்பட்டிணத்தில் மீனவர் மீதான வன்முறை குறித்து ஆலோசனை கூட்டம் :: தமிழ்நாடு மாநில மீனவர் பேரவை தலைவர் தலைமையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.


புதுப்பட்டினத்தை அடுத்த மல்லிப்பட்டினத்தில் வன்முறைக்கு எதிரான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மீனவர் பேரவை மாநிலத்தலைவர் இரா.அன்பழகனார் தலைமை வகித்தார். மாநிலச்செயலர் ஏ.கே.தாஜுதீன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பிப்.2-ல் மல்லிப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச்செயலர் ஏ.கே.தாஜுதீன் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்தும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரியும், மாநிலச்செயலருக்கு கொலை மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பு வழங்ககோரியும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் மதவெறி அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பண்ணவயல் ராஜாதம்பி, மணமேல்குடி முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் சீனியார், மனிதநேய மக்கள் கட்சி மாநிலச்செயலர் பாதுஷா, மாவட்ட தேமுதிக துணைச்செயலர் ஓ.எஸ்.எம். முகமது அலி ஜின்னா ஆகியோர் பங்கேற்றனர்.

தேவாலயத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 9 பஜ்ரங்தள் அமைப்பினர் கைது


சத்தீஸ்கரில் தேவாலயத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 9 பஜ்ரங்தள்(BJP) அமைப்பினரை அம்மாநில போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் அருகே காஷ்னா கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் தேவாலயத்தில் புகுந்த 15 பேர் கொண்ட  கும்பல், தேவாலயத்தை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்தப் பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர். 
இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 5 வாரங்களில் நடந்த 4 வது தாக்குதல் இதுவாகும்.போலீசார் நடத்திய  விசாரணையில், பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக 9 பேரை  கைது செய்து போலீசார், 3 இருசக்கர வாகனங்களையும் பறி முதல் செய்தனர்.

Tuesday, 8 March 2016

கபடி விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோரைக் கொன்ற மகன்.


கபடி விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோரைக் கொன்ற மகன்
மகாராஷ்டிராவில் கபடி விளையாட அனுமதிக்காததால் இளைஞர் ஒருவர் தனது பெற்றோரைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள கிராமத்தில் சாகர் என்கிற இளைஞர் தனது சகோதரருடன் உள்ளுரில் நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொள்ள சென்றிருந்தார். 
திரும்பி வந்தபோது கபடி விளையாடச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோருடன் சாகர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் ஆத்திரத்தில் தனது பெற்றோரை கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: 5 லட்சம் மாணவர்களின் கதி?


சென்னை: போதிய அடிப்படை வசதிகள் இல்லாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு நிர்ணித்த விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படுவதற்கு பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக 2015 ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரு அரசாணைகள் வெளியிடப்பட்டன.
இந்த அரசாணைகளை ரத்து செய்து, அங்கீகாரமில்லாத அனைத்துப் பள்ளிகளையும் 2015-16-ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் மூடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்படும் மாணவர்களை அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பள்ளிக் கல்வித் துறை சார்பில், 746 பள்ளிகளிலும் படிக்கும் 5.12 லட்சம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே தாற்காலிக அங்கீகாரம் நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் தற்காலிக அங்கீகாரம் மே 31ம் தேதியுடன் முடிவடைவதால், அங்கீகாரத்தை நீட்டிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதன் காரணமாக 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்தாவதோடு, இதனால் அங்கு பயிலும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து இந்த 9444123456 வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.


சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டால் அது குறித்து மக்கள் வாட்ஸ்ஆப் மூலம் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் கட்சிகள் கூட்டணியை முடிவு செய்வதில் முனைப்பாக உள்ளன. இதற்கிடையே தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் நேர்காணலும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் பற்றி புகார் அளிப்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில்,
தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவது பற்றி தெரிய வந்தால் மக்கள் எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் புகார் அளிக்கலாம். விதிமீறல் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைக்கலாம்.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க விரும்புவோர் 9444123456 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 150 என்ற எண்ணிலும் மக்கள் புகார் அளிக்கலாம்.
ஆதாரத்துடன் வரும் வாட்ஸ்ஆப் புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

கும்பிட்டு கெஞ்சியும் கண்டு கொள்ளாமல் போனார் ஸ்மிருதி.. விபத்தில் இறந்த டாக்டரின் மகள் புகார்.


ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே யமுனா எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் பாதுகாப்புக் கார் மோதி படுகாயமடைந்த டாக்டருக்குத் தேவையான சிகிச்சைக்கு உதவி செய்ய அமைச்சர் ஸ்மிருதி மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது அந்த டாக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தங்களது தந்தையின் மரணத்திற்கு அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போனதே காரணம் என்று அவரது மகளும், மகனும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தனது தந்தை விபத்தில் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து அமைச்சர் ஸ்மிரிதியிடம் ஓடிப் போய் உதவி செய்யுமாறு அந்த டாக்டரின் மகள் கெஞ்சியுள்ளார். கையெடுத்தும் கும்பிட்டுள்ளார். ஆனால் ஸ்மிருதி அதைக் கண்டுகொள்ளாமல் விருட்டென்று கிளம்பிப் போய் விட்டாராம்.
யமுனா எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலையில், பெரும் சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஸ்மிருதி இராணியின் பாதுகாப்புக்காக வந்த காவலர்களின் கார் இன்னொரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில் அந்தக் காரில் பயணம் செய்த டாக்டர் உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்தனர். இதில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட டாக்டர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
முன்னதாக இந்த விபத்து குறித்து டிவிட்டரில் கூறிய ஸ்மிருதி, நான் பத்திரமாக இருக்கிறேன். எனக்கு எந்த ஆபத்தும் இல்லை. காயமடையவில்லை. சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் ஸ்மிருதியின் கூற்றை விபத்தில் பலியான டாக்டரின் மகளும், மகனும் மறுத்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் டாக்டரின் மகள் சான்டிலி கூறுகையில், அமைச்சருடன் வந்த கார் மோதியதில் எங்களது கார் நிலை குலைந்து விபத்துக்குள்ளானது. நாங்கள் தூக்கி வீசப்பட்டோம். எனது தந்தை ரமேஷ் நாகர் படுகாயமடைந்தார்.
விபத்து நடந்ததும் அமைச்சர் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி வந்து பார்த்தார். நான் அவரிடம ஓடிப் போய் கையெடுத்துக் கும்பிட்டு உதவி செய்யுமாறு கோரினேன். ஆனால் அவர் எதுவும் பேசாமல் போய் விட்டார். அவர் உதவி செய்திருந்தால் எனது தந்தை இந்நேரம் உயிர் பிழைத்திருப்பார் என்றார்.
ரமேஷ் நாகரின் மகன் அபிஷேக் கூறுகையில், எனது தங்கை அமைச்சரிடம் கெஞ்சியும் அவர் கேட்காமல் போய் விட்டார். அவர் எங்களுக்கு உதவி செய்யவில்லை. செய்ததாக அவர் கூறியது பொய் என்று கூறியுள்ளார் அவர்

Monday, 7 March 2016

மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் :: மாவட்ட தேர்தல் அலுவலர் விதிமுறைகள் குறித்து விரிவான விளக்கம்.



தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்ததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து விதமான விளம்பரப் பதாகைகளையும் தொடர்புடைய அலுவலர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரும், மாவட்டத்தேர்தல் நடத்தும் அலுவலருமான என்.சுப்பையன் உத்தரவிட்டார்.
ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக்கூட்டத்தில் அவர் பேசியது:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதால், அதை கடைப்பிடிப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் விழிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து விதமான பதாகைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சாலையோர பதாகைகளை அப்புறப்படுத்த வேண்டும். பறக்கும் படை குழுக்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவேண்டும்.
ஒவ்வொரு சட்டப்பேரவைத்தொகுதிகளிலும் கலந்தாய்வு கூட்டங்களை அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டும்.
பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு 3 நாள்களுக்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டும்.
கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். தொலைக்காட்சி, செய்தித்தாள், துண்டு பிரசுரம் போன்ற விளம்பரங்களுக்கு முன் அனுமதி சான்று பெற வேண்டும்.
நகர்ப்புறங்களில் வீட்டு உரிமையாளர்கள் அனுமதித்தாலும், சுவர்களில் விளம்பரம் எழுதுவதற்கு அனுமதி இல்லை.
கிராமப்புறங்களில் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியுடன் சுவர் விளம்பரம் எழுதலாம். வேட்பாளர்களின் செலவுக்
கணக்கில் சேர்க்கப்படும்.
இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கட்சிகளின் கொடிகளுக்கு அனுமதி பெற வேண்டும் என்றார் ஆட்சியர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம்.மயில்வாகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் வேன் கவிழ்ந்து விபத்து விராலிமலையிலிருந்து திமுக கூட்டத்துக்கு வந்த 29 பேர் காயம்


திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் வேன் கவிழ்ந்து விராலிமலையைச் சேர்ந்த 29 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திமுக மகளிரணி கூட்டம் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அதில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள கல்குடி கிராமத்திலிருந்து 29 பெண்கள் ஒரு வேனில் வந்து கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பினர். அதே பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் வேனை  ஓட்டினார்.
ஜங்ஷனிலிருந்து விராலிமலை சந்திப்பு பாலம் வழியாக மதுரை புறவழிச்சாலைக்கு சென்றபோது, புதிதாக பாலப்பணிகள் நடைபெறும் பகுதியில் (மன்னார்புரத்துக்கு முன்பாக) சென்று கொண்டிருந்த வேன் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் கல்குடியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (38), விஜயா (38), லட்சுமி (40), சுப்புலட்சுமி (25), ஓட்டுநர் பெரியண்ணன் உள்ளிட்ட 29  பேரும் காயமடைந்தனர். அனைவரையும் போலீஸôர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

மேற்கு வங்கத்தில் பலாத்காரம் செய்ய வந்தவர்களிடமிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த இளம்பெண்.

பதிவு செய்த நேரம்:2016-03-07

ஹவுரா: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் தன்னை பலாத்காரம் செய்ய வந்தவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக இளம்பெண் 2வது மாடியிலிருந்து குதித்தார். குதித்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண்  மாடியில் இருந்து கீழே விழுகையில் மண் குவியல் கிடந்ததால் சிறிது காயத்துடன் உயிர் பிழைத்தார். பலாத்கார வழக்கில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  
இது குறித்து அந்த பெண் கூறுகையில், நண்பர்கள் அவருக்கு பதுபானம் கலந்து கொடுத்து பின்னர் அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறினார். பின்னர் அவரை பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் மாடியில் இருந்து கீழே விழுந்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Sunday, 6 March 2016

மமக யாருடன் கூட்டணி ? திமுகவா அதிமுகவா இன்று ஜெ முடிவுசெய்வார்


மமக யாருடன் கூட்டணி ? திமுகவா அதிமுகவா இன்று ஜெ முடிவுசெய்வார்
அதெப்படி மனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி என்பதை அதிமுக முடிவெடுக்கும் என சொல்கிறீர்கள் எனக் கேட்கலாம்.
என்னதான் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம் இயக்கமாக இருந்தாலும் அது அதிமுகவின் சிறும்பான்மைக்கட்சி என்றே பார்க்கப்படுகிறது.
தானே புயல் வந்ததற்கே அம்மாவின் சாதனைகளை உலகிற்கு எடுத்துரைத்த மமக தற்போது சென்னை வெள்ளத்திற்கு புகழை அரசிற்கு ஆதரவாக அள்ளித்தரும் என எதிர் பார்க்கலாம்.
ஆகமொத்தம் மமக யார்பக்கம் இருந்தாலும் வெள்ள நிவாரப் புகழ் தவ்ஹீத் ஜமாஅத் காரங்க மமகவுக்கு எதிராக கங்கனம் கட்டு வேலை பார்க்கும் என்பது அந்த இயக்கத்தில் எழுதப்படாத விதி.
இதுவே மமகவின் தலைவிதி.

அலிகர் பல்கலை.க்கு சிறுபான்மை அந்தஸ்து: மோடியிடம் நேரில் வலியுறுத்தல்


உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமானது, சிறுபான்மை அந்தஸ்தை மீண்டும் பெற ஆதரவளிக்கக் கோரி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜமீருத்தீன் ஷா உள்பட 5 பேர் கொண்ட குழுவினர், பிரதமர் மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பின்போது, தங்களது கோரிக்கை மனுவை பிரதமரிடம் அக்குழுவினர் அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, மதச்சார்பற்ற நாடு. நமது அரசமைப்பின் 31-ஆவது பிரிவின்கீழ் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கான அடிப்படை உரிமை சிறுபான்மையினருக்கு உள்ளது. இந்த விவகாரத்தை மத்திய அரசு பரிவோடு கையாள்வது, சிறுபான்மையின இளைஞர்கள் மீது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க உதவும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமானது, கடந்த 1951-ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின்கீழ் அரசால் அமைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அதற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க முடியாது என்று ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 1967-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது

நான்கு மாத குழந்தைக்கு 20 முறை மாரடைப்பு…


இந்தியாவில் மும்பையில் பிறந்து நான்கு மாதங்களே ஆன குழந்தைக்கு 20க்கும் மேற்பட்ட தடவை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை அருகே சோலாப்பூரை சேர்ந்த நான்கு மாத குழந்தை அதிதி கில்பிலே. பிறந்து நான்கு மாதமே ஆன அதிதிக்கு, 20க்கும் மேற்பட்ட தடவை மாரடைப்பு ஏற்பட்டதால் தற்போது மும்பை மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பரிசோதித்த மருத்துவர் கூறுகையில், குழந்தைக்கு இடது கரோனரி இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, மூன்று லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படும்.
குழந்தையின் இதயத்திற்கு சிறிதளவு மட்டுமே இரத்த ஓட்டம் செல்வதால் தான் அடிக்கடி மாரடைப்பு ஏற்படுகிறது.
தற்போது சிகிச்சை அளித்து வரும் நிலையில் சாதாரண வாழ்க்கை வாழ இன்னும் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் எடை வெகுவாக குறைந்துவிட்டதாகவும் அதிதியின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி!


அதிகளவு பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப்பினை சில வகையான கைப்பேசிகளில் பயன்படுத்த எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலைப்பூவின் ஊடாக (Blogpost) தெரிவிக்கப்பட்ட இந்த தகவலின் அடிப்படையில் பிளாக்பெரி மற்றும் நோக்கியா கைப்பேசிகளிலேயே இவ்வாறு எதிர்காலத்தில் குறித்த சேவையை பயன்படுத்த முடியாது போகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர Nokia S40, Nokia Symbian S60 கைப்பேசிகள் உட்பட Android 2.1 மற்றும் 2.2, Windows Phone 7.1 ஆகிய இயங்குதளங்களில் செயற்படும் கைப்பேசிகளிலும் வாட்ஸ்அப் அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியாது போகும் எனவும், இவற்றில் போதியளவு வசதிகள் காணப்படாதமையே காரணம் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பயனர்களை புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துமாறு வாட்ஸ்அப் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இஸ்லாம் அன்பின் மார்க்கம் -ஒப்புக்கொண்ட போப்

இஸ்லாம் அன்பின் மார்க்கம் என்பதையும் குர்ஆன் உலக சமாதானத்திர்கு வித்திடும் வேதம் என்பதையும் இஸ்லாத்தை பற்றிய குறைந்த அளவு ஞானம் உள்ளவர்களும் ஒப்பு கொள்வர்
இஸ்லாம் அனைத்து மதத்தவர்களையும் அன்புடன் அறவணைத்து செல்லும் மார்க்கமாகும்
நபிகள் நாயகம் ஆட்சியில் அமர்ந்திருந்த கால கட்டத்தில் அவர்களின் ஆட்சியின் முஸ்லிம்கள் மட்டும் இன்றி கிருத்துவர்களும் சகுனிகளான யுதர்களும் வாழவே செய்தனர்
மாற்று மதத்தவரை அறவணைகும் மார்க்கமாக இஸ்லாம் இருந்ததால் நபிகள் நாயகத்தின் காலத்தில் அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த கிருத்துவர்களுக்கும் யுதர்களுக்கும் ஒரு சிறு துன்பம் கூட ஏர்படவில்லை
சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த கிருத்துவர்களின் உலக தலைவர் இந்த உண்மைகளை நன்கு உணர்ந்திருப்பதால் தான்
இஸ்லாம் அன்பின் மார்க்கம் என்றும் குர்ஆன் அமைதியை போதிக்கும் வேதம் என்றும் கூறி இஸ்லாத்தை புகழ்ந்துள்ளார்
போப் அவர்களின் இந்த கருத்து உண்மையானதாகவும் வரவேர்க்க தக்கதாகவும் அமைந்துள்ளது

Saturday, 5 March 2016

வெளிநாடுகளில் வேலை ஏமாற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள்.


வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கோவையில் உள்ள சில தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஏமாற்றி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட, வெளிநாடுகளில் வேலை வாங்கித் தரும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான நிறுவனங்கள் குறைந்த செலவில் நுழைவு இசைவு (விசா), கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் வெளி நாடுகளில் அதிக ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுகின்றன.
அவ்வாறு விளம்பர அறிவிப்பைப் பார்த்து தொடர்பு கொள்ளும் இளைஞர்களையும், மாணவர்களையும் ஏமாற்றி பல லட்சம் பணம் பறித்து குறிப்பிட்ட நிறுவனங்களில் வேலை அல்லது கல்வி நிறுவனங்களில் இடம் வாங்கிக் கொடுக்காமல் வெளிநாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த இரு மாதங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
மேலும், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகள் இளைஞர்கள், மாணவர்களிடம் சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தவணை முறையில் அவர்களது வசதிக்கேற்ப பணம் வாங்கி விடுகின்றனர். இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நாட்டுக்கு அனுப்புவதற்கு பதிலாக வேறு நாடுகளுக்கு அல்லது அதே நாட்டுக்கு வேலைவாய்ப்பு விசாவுக்கு பதிலாக சுற்றுலா விசா கொடுத்து அனுப்பி விடுகின்றனர்.
அவ்வாறு அங்கு செல்லும் இளைஞர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்கு சரிவர உணவு கிடைக்காதது, குறைந்த அளவிலான மாத ஊதியம், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது ஆகியவற்றால் துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதில், ஒரு சிலர் அங்குள்ள நண்பர்கள், அல்லது உறவினர்களின் உதவியால் மீண்டும் நாடு திரும்பி விடுகின்றனர்.
ஆனால், வசதியற்ற ஒரு சில இளைஞர்கள் குடும்ப சூழ்நிலையைக் கருதி குறிப்பிட்ட காலம் முடிவடையும் வரை பணியில் இருந்து விட்டு நாடு திரும்புகின்றனர். மேலும், நிதிப் பற்றாக்குறையால் பசி, பட்டினி உள்ளிட்ட கொடுமைகளால் இளைஞர்கள் உயிரிழக்கும் துயரச் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
மாணவர்களைக் குறிவைக்கும் நிறுவனங்கள்: பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளை ரஷியாவில் புகழ்பெற்ற அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கட்டணத்தில் சேர்த்துக் கொள்வதாக ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நிறுவனம் கடந்த ஆண்டு கவர்ச்சிகரமான விளம்பரம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ஜி.ஆர்.சாரதி (19), ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பர்ஸ்ட்பாவ்லவ் (ஊஐதநபடஅயகஞய) மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிக்க அந்த நிறுவனத்திடம் பல தவணைகளில் சுமார் ரூ.4 லட்சம் செலுத்தி 2015 அக்டோபர் 13-இல் ரஷியா சென்றுள்ளார்.
இதனிடையே, சாரதியைப் போல சுமார் 30 மாணவ, மாணவியர் ரஷியா சென்றுள்ளனர். ஆனால், அங்கு அந்த நிறுவனம் குறிப்பிட்ட மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்க்காமல் சிறிய கட்டடத்தில் அடிப்படை வசதிகளின்றி இயங்கி வரும் டுடோரியல் சென்டரில் சேர்த்துள்ளனர். மேலும், சரிவர உணவு கொடுக்காமலும் கொடுமைப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், அங்குள்ள ஏஜென்சி நிறுவனத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது சரிவர பதில் அளிக்காமல் மாணவர்களை மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ்பாபு (31) என்பவரை சாரதி கடந்த ஜனவரியில் சந்தித்துள்ளார்.
அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அவரிடம் தெரிவித்துள்ளார். அதேபோல், அவரது நண்பர்களான தேனியைச் சேர்ந்த ராஜேஷ் (20), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வைரமுத்து மற்றும் 3 மாணவிகளும் அந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ரமேஷ்பாபு உதவியுடன் அங்குள்ள இந்தியத் தூதரகம் மூலமாக பெற்றோர்களின் உதவியை நாடியுள்ளனர். பின்னர், 6 மாணவர்களின் பெற்றோரும் தலா ரூ.60 ஆயிரத்தை ரமேஷ்பாபுவின் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளனர். இதையடுத்து, அந்த டுடோரியல் சென்டரில் தலா ரூ.12 ஆயிரம் செலுத்தி தங்களது பள்ளிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி இந்தியா திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோவை மாநகரில் செயல்படும் 5 வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஆள்களை அனுப்பி வருகிறது.
இது போன்ற மோசடிகள் குறித்து எங்களிடம் புகார் அளித்தால் தனியார் நிறுவனங்கள், ஏஜென்சிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என்பதை அந்தப் பகுதிக்கு உள்பட்ட காவல் ஆய்வாளர்கள் மூலம் சோதனை நடத்தி, உரிய அனுமதியில்லாமல் செயல்படும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். அப்போது மட்டுமே இது போன்ற மோசடியில் இருந்து இளைஞர்களை விடுவிக்க இயலும் என்றார்.