Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Monday, 17 October 2016

உடல் எடை குறைய சீரகத் தண்ணீர் குடியுங்கள்!

நாள்தோறும் சீரகத் தண்ணீர் குடித்தால், உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும்.

உடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவும்.
அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சீரகத் தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சீரகத்தில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
இங்கு சீரகத் தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சீரகத் தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும்.
ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து, தினமும் குடித்து வர வேண்டும்.
சீரக தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.
சீரகத் தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
நவீன வாழ்க்கை சூழலில் முறையற்ற உணவுப் பொருள் பழக்கம், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்கள் நம் உடலில் எளிதாக நுழைகின்றன. ஆனால் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.
தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
சீரகத் தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாகும்.
சீரகத் தண்ணீரின் மருத்துவ குணம் அறிந்த கேரளத்து மக்களின் அன்றாட குடிநீரே சீரகத் தண்ணீர் தான். இதன் மகத்துவம் அறிந்த நாமும் இன்றிலிருந்து சீரகத் தண்ணீர் குடிப்போம். சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக வாழ்வோம்.

Tuesday, 11 October 2016

ஆண்களே இளநரை என்று கவலையா? இதச் செய்யுங்க மறைந்துவிடும்!


நரைமுடி இன்றைய தலைமுறைகளில் சர்வ சாதரணமாகிவிட்டது. நமது பாட்டிகளுக்கு 60 வயதுகளிலுமே ஒன்றிரண்டு முடிகள்தான் நரைத்தது. இப்போதும் பல முதியவ்ர்களுக்கு முடி கருமையாக இருப்பதை காணலாம்.
இதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஷாம்பு உபயோகித்தது இல்லை. இன்று பதினெட்டு ப்ளஸ்களிலேயே நரைமுடியை மறைக்க கலரிங் செய்து கொள்கிறார்கள்.
இவை எத்தகைய அபாயத்தை உண்டு பண்ணும். பலவித நோய்களை தருவதோடு கூந்தல் வளர்ச்சியும் 30 க்கு மேல் மோசமாக இருக்கும்.
இள நரையை தடுக்க கலரிங்க் செய்யத் தேவையில்லை. இந்த நெல்லிகாய் சிரப்பை வாரம் ஒருமுறைஉபயோகியுங்கள். நரை முடி காணாமல் போய்விடும்.
புதிதான நெல்லிக்காயை சுத்தம் செய்து அதனை துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.

நெல்லிக்காயை இடித்து அல்லது மிக்ஸியில் போட்டு சாறை எடுத்துக் கொள்ளவும்.

அந்த நெல்லிக்காய் சாறை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நீரில் தேயிலைப் பொடியை போட்டு கொதிக்க வைத்து, வரத் தேநீர் தயார் செய்து, அதனை நெல்லிக்காய்சாறுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

உங்கள் கூந்தலை தனித்தனியான பிரித்து இந்த் சாறினை தடவவும்.. தலையில் ஸ்கால்ப்பில் தடவுங்கள். மிச்சமிருந்தால் நுனிவரை தடவலாம்.

1 மணி நேரம் பிறகு தலை அலசவும். இப்படி வாரம் 1 அல்லது 2 முறை செய்தால் உங்கள் கூந்தலின் நரை போக்கி இளமையாக மிளிரும்.

சூயிங்கம் விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும்.


குழந்தையாக இருக்கும் போது சூயிங்கம் விழுங்கிவிட்டால் வயிறு ஒட்டிக்கொள்ளும், அது சரியாக 7 வருடம் ஆகும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். செரிமானம் ஆகாது என பல விஷயங்கள் கூறுவார்கள். இன்றும் கூட ஒருசிலர் சூயிங்கம் விழுங்கிவிட்டு பயப்படுவதுண்டு. ஆனால், உண்மையில் சூயிங்கம்மை விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும் என்பதை பற்றி பார்ப்போம்…
நீண்ட நாட்களாக ஒரு புரளியை நீங்கள் கேள்விப்பட்டு வந்திருப்பீர்கள். சிறு வயது முதலே சூயிங்கம்மை விழுங்கினால் அது செரிமானம் ஆகாது, ஒருசில வருடங்கள் அது வயிற்றில் தங்கிவிடும் என்றெல்லாம் கூறுவார்கள். இது முற்றிலுமான பொய். இனிப்பூட்டிகள் மற்றும் ஃப்ளேவர்கள் கொண்ட சூயிங்கம் வயிற்றில் செரித்து விடும்.
சூயிங்கமில் இருக்கும் அந்த கம் போன்ற மூலப்பொருள் எளிதாக கரையாது. அது வயிற்றிலேயே ஒட்டிக்கொள்ளும் என கூறுவார்கள். அப்படி இல்லை. மற்ற உணவுகளை காட்டிலும் இது முழுமையாக செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளுமே தவிர வயிற்றிலேயே தங்கிவிடாது.
வயிற்று கோளாறு போன்ற சில உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் சூயிங்கம் விழுங்கினால் பாதகமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. வயிற்று வலி, பிடிப்பு போன்றவை ஏற்படலாம். பெரிய அளவில்… பெரிய அளவில் சூயிங்கம்மை விழுங்கினால் அது பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் சில சமையம் சூயிங்கம்மை விழுங்கும் போது தொண்டையில் அது சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
உணவு சாப்பிட்ட பிறகு ஓரிரு நிமிடங்கள் சூயிங்கம் மென்றால் வாய் துர்நாற்றம் குறையும் வாய்ப்புகள் உண்டு. ஆயினும் அதிகம் சூயிங்கம் பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் அறிவுரைக்கின்றனர்.
தினமும் அதிக நேரம் சூயிங்கம் மெல்வது தாடை எலும்பில் கோளாறுகள் உண்டாக்கலாம். 

Monday, 10 October 2016

கொசுக்களை ஒழிக்க வழி இருக்கு!


இன்றளவில் பெருகி வரும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். இந்த நோயின் தாக்கம் மரணம் வரைகூட கொண்டு செல்லும். கொசுக்களை தவிர்க்க கெமிக்கல் கலந்த கொசுவிரட்டிகளை பயன்படுத்தும்போது பாதிப்புகளும் அதிகம். இதற்கு மாற்றாக இயற்கை முறையில் கொசுக்களை விரட்டும் வழிகளைப் பற்றி பார்க்கலாம்.
*கொசுக்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க தேங்காய் எண்ணெய் தடவினால் போதுமானது என்று வாட்ஸஅப் வதந்திகள் பரவி வருகின்றன. தேங்காய் எண்ணெயால் ஒரளவு மட்டுமே தாக்குபிடிக்க முடியும்.  மருந்து கடைகளில் கிடைக்கும் நொச்சி எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தடவினால் கொசுக்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். 
*இதேபோல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டு கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வீசுவது மட்டுமல்ல... கொசுக்களும் நெருங்காது.
*புதினாவை சிறிது நீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளித்தால், இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்து விடும்.
*வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளை கைப்பிடியளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் பச்சிலை தைலத்தை கொசுவிரட்டியாக பயன்படுத்தலாம். கை, கால், பாதங்களிலும் சிறிதளவு தடவினால், பச்சிலை தைலத்தின் நெடி தாங்காமல் கொசு ஓடிவிடும். மேற்சொன்ன பச்சிலையை உலர வைத்து, அதில் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை என இருவேளைகளிலும் வீட்டுக்கு சாம்பிராணி புகை காட்டலாம். 
*பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் 1:5 என்ற கணக்கில் கலந்து துணியில் தோய்த்து, ஜன்னல், கதவு மற்றும் வீட்டில் துளையுள்ள இடங்களில் தொங்கவிட்டால் கொசுக்கள் உள்ளே வராது.
*கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து எரித்து வீடு முழுக்க காட்டலாம் அல்லது தண்ணீரில் கற்பூரத்தைப் போட்டு வைக்கலாம். இதனால் ஈக்கள் முழுவதும் கட்டுப்படுத்தப்படும். ஆனால் கொசுக்களை ஓரளவே கட்டுப்படுத்தலாம்.
*யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது. ஆஸ்துமா நோயாளிகள் கொசுவினை விரட்ட புகைபோடுவதை தவிர்ப்பது நல்லது.

Thursday, 6 October 2016

சிறுநீரகக் கற்களைக் கரையச் செய்யும் சிட்ரஸ் பழங்கள்.


சிறுநீரகக் கற்கள் என்பது பல்வேறு மினரல்கள் கலந்து கரைய முடியாத சிறு சிறு கல்லாய் மாறிவிடும், இவை சிறுநீரில் வெளியேற முடியாமல் அடைத்துத் தாங்க முடியாத வலியை உண்டாக்கும்.
பெரும்பாலும் கால்சியம் ஆக்ஸலெட் என்ற தாதுதான் சிறுநீரக கற்களாய் உடலில் தோன்றும். சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகும். சிறுநீரகக் கற்கள் உருவாகும் ஆபத்தில் இருப்பவர்கள் கீரைகள், ஆசஸலேட் உள்ள உணவுகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் அதிகமாக நீர் அருந்துதல் மிக முக்கியம்.
சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும். மேலும் அவ்வாறு உருவாகிய கற்களைக் கரையச் செய்யும் ஆற்றல் உண்டு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
சிட்ரஸ் பழங்களிலுள்ள ஹைட்ராக்ஸி சிட்ரேட் என்ற பொருள் சிறு நீரகக் கற்கள் உருவாகக் காரணமான கால்சியம் ஆக்ஸலேட்டைக் கரையச் செய்யும் என அமெரிக்காவிலுள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Tuesday, 4 October 2016

கோடையில் தொல்லைத் தரும் சிறுநீரக கற்கள்...


கோடையில் தொல்லைத் தரும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி…? வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளும் ஆரம்பமாகும். அப்படி கோடையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிறுநீரக கற்கள். இந்தியாவில் மட்டும் சிறுநீரக கற்களால் கிட்டத்தட்ட 5.7 மில்லியன் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
மற்ற காலங்களுடன் ஒப்பிடுகையில் கோடையில் தான் சிறுநீரக கற்கள் அதிகம் ஏற்படும். அதிலும் கோடையில் அதிகப்படியான வெயிலினால் 40% அதிகமாக சிறுநீரக கற்கள் வருவதற்கு முக்கிய காரணிகளாகும். அதுமட்டுமின்றி, கோடையில் கொளுத்தும் வெயிலினால் உடலில் இருந்து அதிகப்படியான நீரானது வியர்வையின் வழியே வெளியேறுகிறது.
இருப்பினும் பெரும்பாலான மக்கள் தண்ணீர் அதிகம் குடிக்காமல், உடலில் நீர் வறட்சி ஏற்படுகிறது.  தண்ணீர் அதிகம் குடிக்கவும், கோடையில் பகலிலும், இரவில் படுக்கும் முன்னும் தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதோடு, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீரை வெளியேற்ற வேண்டும். கோடையில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால், அவை சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். எனவே கோடையில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை தவறாமல் குடியுங்கள்.
கோடையில் தாகத்தை தணிக்க எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதன் மூலம், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். கோடையில் ஆக்ஸலேட் என்னும் ஆசிட் அதிக அளவில் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சிறுநீரகத்தில கால்சியம் ஆக்ஸலேட் சிறுநீரக கற்களை உருவாக்கும்.
இந்த ஆசிட் நிறைந்த உணவுப் பொருட்களாவன சோடா, ஐஸ் டீ, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ் போன்றவை. காப்ஃபைனைக் குறைக்கவும். காப்ஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தும். கோடையில் உணவில் உப்பை அதிகம் சேர்க்க வேண்டாம். அப்படி உப்பை அதிகம் சேர்த்தால், அதுவும் சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்.
இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இதில் உள்ள பியூரின்ஸ் என்னும் பொருள் யூரிக் ஆசிட்டாக மாற்றும். கோடையில் அதிக அளவில் சாலட்டுகளை எடுத்துக் கொளளலாம். இதனால் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியும்.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதா?


இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தூங்கி எழுந்தவுடம் காபி அல்லது டீயில் தான் விழிப்பார்கள். இதுபோன்ற பழக்கத்தை தவிர்த்து, காலை தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள். இது உடலில் நிகழ்த்தும் ஆரோக்கிய அற்புதங்களை அறிந்தால், நீங்கள் இந்த பழக்கத்தை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். அது என்னவென்று கீழே பார்க்கலாம்.
ஒரு பெரிய டம்ளரில் 300 மி.லி அளவிலான நீர் நீங்கள் எழுந்தவுடன் பருகுவதால் உங்கள் சிறுநீர்கள் அற்புதமான அளவில் நச்சுக்களை வடிக்கட்ட ஆரம்பிக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கும். உடலில் தேவையின்றி தேங்கியிருக்கும் கெமிக்கல்களை நீக்க இது உதவும். ஒட்டுமொத உடல் செயல்திறனை ஊக்குவிக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடன்ல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும்.
நமது உடலில் படர்ந்து பெரிதாய் இடம் பெற்றிருக்கும் உடல் உறுப்பு சருமம் தான். இதை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நீங்கள் சீரான அளவில் நீர் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதை சரியாக பின்பற்றுவதால் சருமத்தில் அதிக சுருக்கம், வறட்சி உண்டாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஒருநாள் நீங்கள் சரியாக நீர் குடிக்காமல் இருந்தாலும், குடல் இயக்க செயற்பாட்டில் தாக்கங்கள் உண்டாகும். இதனால் மலம் கழிப்பதில் பிரச்சனைகள் உடனாகும். காலை எழுந்ததும் நீர் குடிப்பதால் மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஒரு மாதம் தொடர்ந்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து பாருங்கள். உங்கள் உடலில் என்னென்ன அற்புதங்கள் உண்டாகின்றன என்பதை நீங்கள் உணர முடியும்.

Saturday, 1 October 2016

கறிவேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!

      பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
 கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
 கொழுப்புக்கள் கரையும்:
 காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
 இரத்த சோகை:
 இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
 சர்க்கரை நோய்:
 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
 இதய நோய்:
 கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
 செரிமானம்:
 நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
 முடி வளர்ச்சி:
 கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
 சளித் தேக்கம்:
 சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
 கல்லீரல் பாதிப்பு:
 நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். 
 மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும். மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை. தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள். குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.

சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி


சிறுநீரகத்தின் வேலை ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேத்துறது தான். ஆனா வெயில் காலத்துல உடம்பில் இருக்குற நீரெல்லாம் வியர்வையாகவே ஆவியாகிறது. இதனால் உப்புகள் எல்லாம் சிறுநீரகத்தில் தங்குகிறது இதனால்தான் கல் உருவாகிறது.
நமது இரத்ததில் உள்ள உப்பு சத்து மற்றும் தேவையற்ற பாக்டீரியா நுழைவதை தடுக்கும். இங்கே மிகவும் எளிமையான கிடைக்ககூடிய கொத்தமல்லியை கொண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க முடியும்
சிறுநீரகத்தில் உள்ள கற்களை எவ்வாறு அகற்றுவது என்பதனை பார்ப்ப்போம்...
கொத்தமல்லி சாறு தயாரிக்கும் முறை:
ஒரு கப் ளவுள்ள கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பிறகு ஆறவைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் சுத்தமான பாட்டிலில் ஊற்றி அதனை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும்.
இதனை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நாளடைவில் சிறுநீரகத்தில் உள்ள கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறும். இவ்வாறு தொடர்ந்து குடிக்கும்போது வித்தியாசத்தை நன்கு உணர முடியும்.
அனைவரும் அறிந்த கொத்தமல்லி சிறந்த மருத்துவ மூலிகையாகும். சிறுநீரகத்தை சுத்தம் செய்யவதில் இதன் பங்கு அற்புதமானது. மேலும் இது இயற்கையாக விளையும் பொருள் என்பதால் வேறு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. நீங்களும் இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.

Tuesday, 6 September 2016

வெளிநாட்டில் பணிபுரியும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி !!!


எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் வெளிநாட்டு பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 300 அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது என இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
மேலும் பல நாடுகளுடன் இது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் வெளிநாட்டு பணியாளர்களுக்காக குறித்த குறைந்தபட்ச ஊதியத்தினை அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சு:

நீர் நம் உயிர்!

சாதாரணமாக நடுத்தர வயது மனிதனின் உடலில் 60 சதவிகிதம் நீர் உள்ளது. மனிதன் உயிர்வாழ நீர் அவசியம். வளர்சிதை மாற்றம், பளபளப்பான சருமம் மற்றும் உடலுக்குத் தேவையான ஆற்றல் போன்றவற்றுக்கும் நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பதும் மிக அவசியம்.
ஆனால், ‘டயட்டில் இருக்கிறேன்’ என்று பாட்டில் பாட்டிலாக தண்ணீர் அருந்துவது உயிருக்கே ஆபத்து என்கிறது ஆய்வு. தண்ணீர் குடித்து எடை குறைக்கலாம் என்று நினைத்து அதிகமாக தண்ணீர் அருந்துவது தவறு. ஒருநாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம் என்பதை அவரவரின் எடை, செய்யும் வேலையைப் பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.
80 கிலோ எடை உள்ள ஒருவர் 200 கிலோ எடை  உடையவர் அருந்தும் நீரின் அளவை எடுத்துக் கொள்ளக்கூடாது. 80 கிலோ எடை இருந்தால், தன் எடையில் பாதி அளவான 40 அவுன்ஸ் - அதாவது, சுமார் ஒன்றேகால் லிட்டர் தண்ணீர் அருந்தலாம்.
நீங்கள் செய்யும் வேலையைப் பொறுத்து குடிக்கும் நீரின் அளவை மாற்றிக் கொள்ளவேண்டும். ஏசி அறையில், கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்பவராக இருந்தால் குறைந்த அளவே போதும். கடினமான வேலை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால் 1/2 லிட்டர் தண்ணீரை கூடுதலாக அருந்துவது நல்லது.
உங்களால் சரியான அளவை பின்பற்ற முடியவில்லை என்றால், இதோ இந்த சின்ன விஷயங்களை கடைப்பிடித்தாலே நாளொன்றுக்கு தேவையான நீரை பருக முடியும்.காலை எழுந்தவுடன் 1 டம்ளர் தண்ணீர்அருந்துங்கள். உணவு வேளைக்கு அரைமணி நேரத்துக்கு முன் 2 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
உறங்கச் செல்வதற்கு 2மணி நேரத்துக்கு   முன்பு 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.வெளியில் செல்லும் போது உடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.நீர்ச் சத்துள்ள காய்கறிகள் மற்றும்  பழங்களிலிருந்தும் அதிகப்படியான நீர் கிடைப்பதால், நேரிடையாக அருந்தும் நீரின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.

Sunday, 4 September 2016

இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் குடைமிளகாயினால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்…


      குடைமிளகாய், மிளகாய் என்றாலே எகிரி ஓடுபவர்கள் கூட இதனை வெளுத்து வாங்குவாரகள். இதில் அவ்வளவு காரம் கிடையாது. மேலும் இதில் எக்கச்சக்க மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதனால் தான் பெரும்பாலான சைனீஸ் உணவுகளில் குடைமிளகாய் இல்லாமல் இருக்காது.
குடைமிளகாயில் குறிப்பாக வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன.
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் குடைமிளகாயினால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்…
குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடண்ட்டாக உள்ளது. இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. ஸ்கார்வி என்னும் நோயைத் தவிர்க்கின்றது.
குடைமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. செரிமானப் பிரச்சனைகளுக்கு குடைமிளகாய் மிகவும் நல்லது. வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது குடைமிளகாய்.
இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொழுப்பின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.
குடைமிளகாயில் உள்ள கேயீன் என்னும் வேதிப் பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது. இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து இதய ஆரோக்கியத்தை குடைமிளகாய் அதிகப்படுத்துகிறது. இதய அடைப்பினால் தவிப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும்.
குடைமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கூட்டுப் பொருள், சருமத்திலிருந்து முதுகெலும்பிற்குச் செல்லும் வலி சிக்னலைத் தடுக்கிறது.
மேலும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதிலும் குடைமிளகாய் வல்லது.
அட குடைமிளகாய்ல இவ்வளோ மேட்டர் இருக்கா?? இனி டெய்லி ஃப்ரை பண்ணிவிட வேண்டியதுதான்..!

இரவு 7 மணிக்கு பிறகு சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படலாம்: புதிய ஆய்வறிக்கை.

     
    இரவு 7 மணிக்கு பிறகு சாப்பிடும் நபர்களுக்கு விரைவில் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக புதிதாக எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
துருக்கி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் 700 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில், இரவு 7 மணிக்கு பிறகு உணவு சாப்பிடும் நபர்களுக்கு எளிதில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குள் தூங்கும் நபர்களுக்கு இதயம் தொடர்பான பிற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
இரவு உணவு அருந்தியதற்கு பின்னர் தூங்கும்போது நமது இரத்த அழுத்தமானது 10 சதவிகிதம் அளவிற்கு குறைய வேண்டும்.
ஆனால், 7 மணிக்கு பிறகு சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரம் இடைவெளி இல்லாமல் உடனடியாக படுக்கைக்கு செல்லும் நபர்களுக்கு இரத்த அழுத்தம் குறையாதது தெரியவந்துள்ளது.
மேலும், இரவில் தாமதமாக உணவு சாப்பிடும் நபர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலை தொடர்ந்தால், அவர்கள் எளிதில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Wednesday, 31 August 2016

கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதை உடனே நிறுத்துங்கள் - ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவல்!

        
           சில வருடங்களாக ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பல வகையான பால்களை ஆய்வு செய்து வந்தனர். இந்த ஆய்வின் முடிவில் ஆரோக்கியமற்றது அல்லது உடல் எடை அதிகரிக்க செய்யும் என்ற காரணத்தால் நாம் அதிகம் பயன்படுத்த தயங்கும் கொழுப்பு நீக்கப்படாத பால் தான் ஆரோக்கியமானது என கண்டறியப்பட்டது.
மேலும், கொழுப்பு நீக்கப்பட்டு விற்கபடும் ஸ்கிம்டு மில்க் எனும் பால் வகை தான் பலவகையான ஆரோக்கிய குறைபாடுகள் / கோளாறுகளுக்கு காரணியாக விளங்குகிறது என்பதையும் இந்த ஆய்வில் ஹார்வர்ட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
வைட்டமின் சத்துக்கள் உடலில் சீராக இருக்க செய்கிறது.
குடல் புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கிறது.
மிகுதியான கால்சியம் சத்து அளிக்கிறது.
எலும்புகளின் வலிமையை ஊக்கப்படுத்துகிறது.

கொழுப்பு நீக்கப்படுவதால் இதில், கொழுப்பின் அளவு குறைவாக இருப்பினும், சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. இந்த வகை சர்க்கரை உடல் பருமன், எளிதாக நோய் தொற்று ஏற்படுதல் போன்றவைக்கு காரணியாக இருக்கிறது.

ஸ்கிம்டு மில்க் என்ற பெயரில் தனியாக பதப்படுத்தி விற்கபடும் பால்களும் இருக்கின்றன. இவை ஆர்கானிக் என்ற பெயரில் விற்கப்படுகிறது. ஆனால், இதில் ட்ரான்ஸ் கொழுப்பு சேர்க்கப்படுகின்றன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை ஆகும்.
இப்போது, கொழுப்பு நீக்கப்பட்டு, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி போன்ற பல வகை ஃப்ளாவர்கள் சேர்த்து குழந்தைகளை கவரும் வகையிலும் பால்கள் விற்கப்படுகின்றன. இவை அனைத்தும் பதப்படுத்தி விற்கப்படும் பால் வகைகள் ஆகும்.
இதில் சேர்க்கப்படும் சர்க்கரை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணியாக இருக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பலவகையிலான உடல்நல பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் ஏராளம்.
உண்மையில் தூய்மையான பசும்பால் தான் சிறந்தது. இதில் இருக்கும் மூலப்பொருட்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளாக (antibiotics) செயல்படுகின்றன. புற்கள், காய்கறிகள் சாப்பிட்டு ஆர்கானிக் முறையில் வளர்ந்த பசுமாட்டின் பால் தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நாம் உடல்நலனுக்கு நல்லது என்று நம்பி வாங்கும் பொருட்கள் சில தான் உண்மையில் உடல்நலனை சீர்குலைந்து போக செய்கிறது. எனவே, இனிமேல் எந்த ஒரு உணவு பொருள் வாங்குவதாக இருப்பினும், அதை பற்றி சிறிதளவு ஆராய்ந்து வாங்க வேண்டியது அவசியம்.

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளை போக்கும் மல்லிகை பூ


       மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..
உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...
வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.
மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.
மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

Sunday, 28 August 2016

உடலில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரே ஒரு டேஸ்டி மில்க்.

                 
               பொருளாதார உழைப்பிற்கு உடல் தான் முதல் முதலீடு. அது ஆரோக்கியமாக இருந்தால்தான் நீங்கல் தெம்பாக செயல்பட முடியும். ஒரு தலைவலி வந்தால்கூட அன்று நாள் முழுவதும் போராட்டமாகத்தான் இருக்கும். நமது உடல் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனையை இன்னும் ஒருபடி மேல போய், பிரச்சனையே உடலாக இருந்தால், பாதி நேரம் இந்த பாதிப்புகளை சரி பண்ணுவதிலேயே முடிந்துவிடும். பின் எப்படி வேலையில் கவனம் செலுத்துவது.
ஆகவே உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமாய் நீங்கள் கவனிக்க வேண்டிய உறுப்புக்கள் எவை தெரியுமா? மூளை, இதயம், கல்லீரல், மற்றும் சிறுநீரகம்.
இவை ஆரோக்கியமாக இருந்தால் உங்களால் நீண்ட ஆயுளோடு வாழ முடியும்.
மூளைக்கு நல்ல தூக்கத்தையும், இதயத்திற்கு கொழுப்பு குறைவான உணவையும், கல்லீரலுக்கு ஆரோக்கியமான உணவுகளையும், சிறு நீரகத்திற்கு நிறைய நீரையும் நாம் கொடுத்தால் அவற்றின் ஆரோக்கியம் எப்போதும் பலப்படும். இப்படி நான்கு உறுப்புகளுக்கும் பலம் தரும் ஒரு ஆரோக்கிய பானம் எது தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.
ஹெர்பல் பால் மிகவும் சத்து நிறைந்த , சுவை நிறைந்த ஒரு பால். இதில் நாம் அன்றாடம் குடிக்கும் பால் இருக்காது. தேங்காய்ப் பால், மஞ்சள், பட்டை , தேன் கலந்த இந்த பாலை தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்தால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் அகற்றிவிடும்.
நச்சுக்களை அகற்றும். இரைப்பை வியாதிகளை குணப்படுத்தும். சரும வியாதிகளை சரிபடுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். நுரையீரலை பலப்படுத்தும்.
தூக்கமின்மை வியாதியை குணபடுத்தும், தசைகளுக்கு வலிமை தரும். ஜீரண மண்டலத்தை வலிமையாக்கும். ஆர்த்ரைடிஸை குணமாக்கும். உணவு அலர்ஜியை தடுக்கும். மன அழுத்தத்தைப் போக்கும்.
தேவையானவை :
தேங்காய் பால் - 2 கப்
தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் - 1 டீஸ்பூன்
இஞ்சி -பொடியாய் நறுக்கியது அரை ஸ்பூன்
பட்டைபொடி- அரை டீஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்.
மிளகுபொடி - ஒரு சிட்டிகை.
ஒரு பாத்திரத்தில் தேனை தவிர்த்து , தேவையான மற்ற அனைத்தையும் கலந்து கொதிக்கவிடவும். இது தங்க நிறமாக மாறும். கொதி வந்ததும் அதனை இறக்கி வெதுவெதுப்பான நிலையில் தேன் கலந்து குடிக்கவும்.

Friday, 26 August 2016

ஆண்களே! உங்க கருவளம் மேம்பட வேண்டுமா? அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...


      ஆசியா மற்றும் இந்தியாவில் சாப்பிடப்படும் பழங்களில் ஒன்று தான் அத்திப்பழம். இந்த அத்திப்பழம் உலர்ந்த வடிவில் நிறைய கடைகளில் விற்கப்படுகிறது. உலர்ந்த வடிவிலான அத்திப்பழம் மில்க் ஷேக் மற்றும் லஸ்ஸியாகவும் தயாரித்து கடைகளில் விற்கப்படுகிறது.
அத்திப்பழம் எந்த வடிவில் இருந்தாலும், ஒரே அளவிலான சத்துக்களைத் தான் தன்னுள் கொண்டுள்ளது. இந்த பழம் ஆரோக்கியமானது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு மற்றும் பல் சொத்தை ஏற்படும். ஆனால் அளவாக உட்கொண்டு வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
இங்கு அத்திப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் அத்திப்பழத்தை சாப்பிடும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால் செரிமான பிரச்சனையே வராது. மேலும் இது மலமிளக்கியாக செயல்படுவதால், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும்.
அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம், உடலில் இரத்த அழுத்தத்தின் அளவை சீராகப் பராமரிக்க உதவும். இதனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.
ஆய்வு ஒன்றில் அத்திப்பழத்தில் உள்ள உட்பொருட்கள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
அத்திப்பழம் இரும்புச்சத்தை உடலுக்கு வழங்கி, ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தி, இரத்த சோகை வரும் அபாயத்தைத் தடுக்கும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் ஸ்நாக்ஸாக அத்திப்பழத்தை உட்கொண்டு வந்தால், அது வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, வேகமாக உடல் எடை குறைய உதவும்.

அத்திப்பழம் இதயத்திற்கு நல்லது. அதில் உள்ள பெக்டின் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும் மற்றும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை ஆரோக்கியமான அளவில் பராமரிக்கும்.

நிறைய ஆய்வுகள் அத்திப்பழம் பாலுணர்ச்சி மற்றும் கருவளத்தை மேம்படுத்துவதாக கூறுகின்றன. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள மக்னீசியம், ஜிங்க் மற்றும் மாங்கனீசு சத்து தான் காரணமாகவும் கூறுகின்றன.

அத்திப்பழத்தில் கால்சியமும் உள்ளது. ஆகவே இப்பழத்தை உட்கொள்வதால் எலும்புகள் வலிமை அடைந்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

Tuesday, 23 August 2016

பித்தப்பை கற்கள் இருந்தால் மற்றொரு அபாயமும் உண்டாகும்! அது என்ன?


கல்லீரலுக்கு அடியில் இருக்கும் ஒரு சிறிய உறுப்புதான் பித்தப்பை, பித்தப்பையில் சுரக்கும் அடர்த்தி மிகுந்த மஞ்சள் மற்றும் பிரவுன் கலந்த நிறத்திலிருக்கும் பைல் என்ற என்சைம் உணவிலுள்ள கொழுப்பை பிரித்து ஜீரணத்தை உண்டாக்குகிறது.அதோடு அதனை கல்லீரலுக்கும் வளர்சிதை மாற்றம் நடக்க அனுப்புகிறது.
அதோடு கொழுப்பில் கரையும் விட்டமின்கள் பைல் மூலமாகத்தான் கல்லீரலுக்கு அனுப்பப்படுகிறது. சில சமயங்களில் அதிகப்படியான கொழுப்பு, பைல் உப்பு மற்றும் பிலிருபின் எல்லாம் கலந்து கெட்டியாக கற்களாக அங்கே மாறும். அதைத்தான் பித்தப்பை கற்கள் என கூறுவோம்.
சமீபத்திய ஆய்வில் பித்தப்பை கற்கள் இருந்தால், இதய நோய்கள் தாக்கும் அபாயமும் ஏற்படும் என தெரியவந்துள்ளது.
அதிகப்படியான உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம், ரத்தக் கொதிப்பு, அதிக கொலஸ்ட்ரால் சர்க்கரை வியாதி ஆகியோருக்கு பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பித்தப்பை கற்கள் உண்டானால், அது பைல் சுரப்பையும் பாதிக்கின்றது. இதனால் கொழுப்பு ரத்தத்தில் அதிகரித்து இதயம் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
பித்தப்பையில் கற்கள் உருவாவதால், வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால் பலவித பிரச்சனைகள் உருவாகின்றன.
உடல்பருமன், ரத்தக் கொதிப்பு,கொலஸ்ட்ரால் ஆகியவையோடு பித்தப்பை கற்கள் இருக்கும் நோயாளிகளை விட, ஆரோக்கியமான வேறெந்த உடல் நிலை பிரச்சனைகளும் இல்லாமல், பித்தப்பை கற்கள் மட்டும் இருந்தால் அவர்களை இதய நோய்கள் அதிகம் தாக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளது என ஆராய்ச்சியில் தெரிகிறது.
பித்தப்பை கற்கள் மற்றும் இதய நோய்கள் தொடர்பாக மிகபரிய ஆராய்ச்சியை அமெரிக்காவிலுல்ள டுலானே பல்கலைக் கழகம் செய்து முடித்துள்ளது. கிட்டத்தட்ட 7 விதமான இதய நோய் மற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் பித்தப்பை மற்றும் இதயம் தொடர்பாக 3 விதமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன.

Monday, 22 August 2016

இந்த அறிகுறிகள் உங்க சிறுநீரகம் மோசமான நிலையில் உள்ளதைத் தான் குறிக்கிறது என்று தெரியுமா?

   
   உடல் ஆரோக்கியம் என்று வரும் போது, அதில் சிறுநீரக ஆரோக்கியம் முதன்மையானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சிறுநீரகம் தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும் மற்றும் தினமும் 10-150 குவாட்ஸ் இரத்தத்தை வடிகட்டுகிறது.
மேலும் சிறுநீரகம் உடலில் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றும், எலக்டோலைட்டுகளின் அளவை சீராக பராமரிக்கும், இரத்த அழுத்தத்தை சீராக்கும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும் மற்றும் எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கச் செய்யும்.
இவ்வளவு முக்கிய பணிகளைச் செய்யும் சிறுநீரகம் சரியாக இயங்காமல், நோயால் பாதிக்கப்பட்டு, ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காமல் விட்டால், அதனால் உயிரை இழக்கவும் நேரிடும்.
சரி, இப்போது சிறுநீரகம் மோசமான நிலையில் இருந்தால் தென்படும் அறிகுறிகள் குறித்து காண்போம்.
சிறுநீர் கழிக்கவே முடியாமல் தவிப்பது, நுரையுடனான சிறுநீர் வெளியேற்றம், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது அழுத்தத்தை உணர்வது போன்றவை சிறுநீரகத்தில் கோளாறு உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

சிறுநீரகம் சரியாக செயல்படாமல் இருந்தால், உடலில் உள்ள அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படாமல் தேங்கி, உடலில் ஆங்காங்கு வீக்கத்தை சந்திக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.
சிறுநீரக கோளாறு இருந்தால், இரத்தத்தில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, அதனால் வாய் துர்நாற்றம் அல்லது சுவையில் மாற்றத்தை உணரக்கூடும். சிறுநீரக பிரச்சனை முற்றிய நிலையில் இருந்தால், அவர்களால் உணவின் சுவையை உணர முடியாமல் இருப்பதோடு, பசியின்மையால் அவஸ்தைப்படுவார்கள்.

இன்னும் சில நேரங்களில், சிறுநீரக நோய் இருந்தால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவும் ஹார்மோனின் அளவு குறைந்து, உடலில் உள்ள செல்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், உடல் மிகுந்த சோர்வடையும். இது அப்படியே நீடித்தால், அதனால் இரத்த சோகையால் கூட பாதிக்கப்படக்கூடும்.
மேல் முதுகு பகுதியில் வலியை உணர்ந்தால், சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரகங்களில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, அதனால் மூச்சுவிடுவதில் கூட சிரமத்தை உணர நேரிடும்.
சிறுநீரகம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருந்தால், இரத்த சோகை முற்றி, அதனால் எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் போய், தலை பாரம், தலைச்சுற்றல் மற்றும் ஞாபக மறதி போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்.
சிறுநீரகம் சரியாக இயங்காமல் இருந்தால், சிறுநீரகங்களில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, சருமத்தில் கடுமையான அரிப்பை சந்திக்கக்கூடும். எனவே சருமத்தில் அரிப்பு கடுமையாக இருந்தால், சாதாரணமாக விட்டுவிடாமல், உடனே அதை கவனியுங்கள்.

நலம் தரும் நிலவேம்பு

   
    சித்த மருத்துவத்தில் ஆண்டாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருந்து வந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியபோது, அனைவர் கவனத்தையும் ஈர்த்தது நிலவேம்பு. சிறு செடி வகையைச் சேர்ந்த இதற்கு, காண்டம், காண்டகம், கோகனம், கிராதம் போன்ற பல பெயர்கள் உள்ளன.  நிலவேம்பில் சீமை நிலவேம்பு, நாட்டுநிலவேம்பு என இரண்டு வகைகள் உள்ளன. சிறியா நங்கையும் நிலவேம்பும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. 
*நிலவேம்பின் எல்லா பாகங்களுமே மருத்துவக் குணங்கள் உடையவைதான். எனினும், இலையும் தண்டும் அதிக அளவில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. 
*வாதசுரம் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல், நீர்க்கோவை, மூக்கடைப்பு ஆகியவற்றைப் போக்கும் ஆற்றல் நிலவேம்புக்கு உண்டு.  நிலவேம்பு  இலையைப் பொடித்து, 15 கிராம் எடுத்து, இதனுடன், கிச்சிலித்தோல், கொத்தமல்லி தலா சுமார் 200 மி.கி சேர்த்து, வெந்நீரில் கலக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து, வடிகட்டி 15  - 30 மி.லி அளவுக்கு நாள்தோறும் இரண்டு மூன்று முறை குடித்துவர, நிவாரணம் கிடைக்கும்.
*நிலவேம்புச் செடியை முதன்மை பொருளாகக்கொண்டு சித்தமருத்துவத்தில் தயாரிக்கப்படும் நிலவேம்புக் குடிநீர், டெங்கு காய்ச்சல் மற்றும் மூட்டுக்களைப் பாதித்து, தாங்கமுடியாத வலியை உண்டாக்கும் சிக்குன்குனியா ஆகிய இரண்டு காய்ச்சல்களுக்கும் சிறந்த மருந்து. 
*டெங்கு சுரம், சிக்குன்குனியா மற்றும் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு, அவற்றை அழிக்கும் ஆற்றல் கொண்டது நிலவேம்புக் குடிநீர் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 
*நிலவேம்பைப் பொடித்து, 34 கிராம் எடுத்து, 700 மி.லி வெந்நீரில் கலந்து, கிராம்புத்தூள், கருவாப்பட்டைத்தூள், ஏலப்பொடி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நான்கு கிராம் கலந்து, சுமார் ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் 15-30 மி.லி அளவுக்கு தினமும் பருகிவர, முறைசுரம், குளிர்சுரம், மூட்டுக்களில் ஏற்படும் பிடிப்பு, அஜீரணம், வயிற்றுப்புழுக்கள் நீங்கி, உடலுக்கு வலிமை கிடைக்கும்.
*நிலவேம்பு இலையைச் சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து, குடிநீர் செய்து, குடித்துவர கல்லீரல் தளர்ச்சி, நரம்புவலி, அஜீரணம், குடல் பொருமல் நீங்கும்.