தங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கையுடன் கருணாநிதி, வைகோ, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வலைவீசி வருகின்றனர். ஆனால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிடி கொடுக்காமல் போக்கு காட்டி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னமும், தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையே கூட்டணி முடிவாகாமல் இழுபறியில் நீடிக்கிறது. இதனால், பிரசாரம் மந்த நிலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என்று வெளிப்படையாக திமுகவும், பாஜகவும் தெரிவித்திருக்கின்றன. மக்கள் நல கூட்டணி தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால், தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தனது முடிவை அறிவிப்பதாக விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது பாஜகவுக்கு ஆப்பு அடித்து விட்டதாக விஜயகாந்த் தெரிவித்தார்

No comments:
Post a Comment