Showing posts with label மாவட்ட செய்திகள். Show all posts
Showing posts with label மாவட்ட செய்திகள். Show all posts

Tuesday, 4 October 2016

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் உட்கட்சி மோதலில் கொலை? சக நிர்வாகி தீக்குளித்ததால் அம்பலம்!!


கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் உட்கட்சி மோதலில் கொலை? சக நிர்வாகி தீக்குளித்ததால் அம்பலம்!!
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் உட்கட்சி மோதலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார் கடந்த மாதம் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலையைக் கண்டித்து இந்து முன்னணியினர் வெறியாட்டம் போட்டனர்.
கோவையில் பூட்டப்பட்ட கடைகளை உடைத்து இந்து முன்னணியினர் கொள்ளையடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. துடியலூர் மகாலட்சுமி பேக்கரிக்குள் நுழைந்தும் அக்கும்பல் சூறையாடினர்.
அப்போதே இந்து முன்னணியினரிடையேயான உட்கட்சி மோதலால் தான் இக்கொலை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் பாஜகவினர் உள்ளிட்டோர் மத அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டினர். சென்னையில் தடையை மீறி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் போராட்டமும் நடைபெற்றது.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனோ, தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது என கூறியிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் என்பவர் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, சசிகுமார் கொலை வழக்கில் தாம் கைது செய்யப்படலாம் என்பதற்கு பயந்து தீக்குளித்ததாக கூறியுள்ளார். இதனால் சசிகுமார் உட்கட்சி மோதலில்தான் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Wednesday, 28 September 2016

கோட்டைப்பட்டினம், மல்லிப்பட்டினம் மீனவர்கள் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிக்க அதிரடி முடிவு.


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 300க்கும் அதிகமான விசைப்படகுகள் மூலம் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்படித்து வருகின்றனர். இந்த மீனவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே மீன்கள் இறால், நண்டு உள்ளிட்டவை குறைவாகவே கிடைத்து வருகிறது. இதற்கு தகுந்த விலை கிடைக்கவில்லை. மேலும் அரசு தரும் மானிய டீசல் போதவில்லை.
மானிய டீசலை அதிகரித்தால் மீனவர்களுக்கு ஏற்படும் ஓரளவு நஷ்டத்தை தவிர்க்கலாம். மானிய டீசலை உயர்த்தி தர வேண்டும், இலங்கையில் உள்ள படகுகளை மீட்டு தர போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி மீனவர்கள் இன்று 6வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள், மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
320 விசைபடகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவ பிரதிநிதிகள் கூறுகையில், மீனவரத்து இல்லை. மானிய டீசல் போதவில்லை. பெரும்பாலான மீனவர்களின் படகுகள்் இலங்கையில் உள்ளது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு மீனவர்கள் நஷ்டத்தில் உள்ளோம். மானிய டீசலை உயர்த்த வேண்டும். படகுகளை மீட்டு தரவேண்டும். இல்லைஎன்றால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என்றனர்.
சேதுபாவாசத்திரம்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் பகுதியில் துறைமுகம் அமைக்க, மீனவர்கள் விட்டுக்கொடுத்த இடத்துக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். துறைமுக விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மல்லிப்பட்டிணம் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், இந்திய கடலோர கப்பல் படை முகாம் இயங்கி வரும் கட்டிடம் காலி செய்ய இருப்பதால் அந்த கட்டிடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும்.
விசைப்படகுக்கு மாதம் ஒன்றுக்கு விற்பனைவரி நீக்கம் செய்யப்பட்ட டீசல் 1,500 லிட்டரை 3,000 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி முதல் மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்ட பகுதி நாட்டுப்படகு, பைபர் கிளாஸ் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று 6வது நாளாக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தாஜூதீன் கூறும்போது, இதே நிலை நீடித்தால் வரும் 10ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் உள்ளாட்சி தேர்தலை மீனவர்கள் புறக்கணிப்போம் என்றார்

Tuesday, 27 September 2016

மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தலை எதிர்கொள்ளும் தஞ்சை, திண்டுக்கல்!


தஞ்சை: நகராட்சியாக இருந்த தஞ்சாவூர், மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தலை எதிர்கொள்கிறது. தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பதவி பொதுவானதாகும். மேலும் திண்டுக்கல்லும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தலை சந்திக்கிறது. பொதுப்பிரிவில் இருந்த திண்டுக்கல் மாநகராட்சி தற்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தல் நடத்தப்படுவதால் இரு மாவட்டங்களிலும் தேர்தல் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூரில் 51 வார்டுகளும், திண்டுக்கல்லில் 45 வார்டுகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, 26 September 2016

கோவையில் வழிப்பறி - காவலர்கள் கைது


கோவை அருகே கேரள நகை வியாபாரியின் ஊழியர்களிடம் ரூ. 3.93 கோடி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பரமத்தி காவல்நிலைய காவலர் பழனிவேல் , தென்னிலை காவல்நிலைய காவலர் அர்ஜூனன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே இந்த வழக்கில்,  காவல் ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர்  சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் தர்மேந்திரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Saturday, 24 September 2016

கோவையில் இயல்பு நிலை திரும்புகிறது…! கலவரத்திற்கு காரணமான 108 பேர் கைது!!


கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று வன்முறையில் ஈடுபட்ட 108 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர்  சசிகுமார் என்பவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் வன்முறையில் ஈடுபட்டு சில வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். மேலும் சில வழிபாட்டுத்தலங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கோவை கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 108 பேரை போலீஸார் இன்று கைது செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
கோவையில் தற்பொழுது இயல்பு நிலை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, 9 September 2016

சவூதி அரபியாவில் மீண்டும் ஒரு தமிழ் சகோதரர் கொலை!

சவுதியில் மீண்டும் கடையநல்லூரை சார்ந்தவர் கொலை !


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் .
.
கடையநல்லூர் பரசுராமபுரம் தெற்கு தெருவை சார்ந்த மக்கட்டி துராப்ஷா சவூதிஅரேபியா ரியாத், மாண்புகா என்னும் இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் அங்குள்ள அரபியிடம் வீட்டு வாடகை வசூல் செய்து பேங்கில் போடும் வேலை செய்து வந்தாராம் இதனை நோட்டமிட்ட திருடர்கள் இவரிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதில் திருடனிடம் போராடி கத்தியால் குத்தப்பட்டு இறந்துள்ளா.
தற்போது சுமேசி ஆஸ்பத்திரியில் இவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது .
கடந்த வாரம் இதே கடையநல்லூரை சார்ந்த அய்யூப் என்பவரையும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பபட்டுது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 23 August 2016

தந்தை இறந்துவிட்டால்வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட்வழங்கலாம் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு:

மதுரை :

   தந்தை இறந்து விட்டால், வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நிஜிஸ் ஆர்சிபால்டு என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் அவருடைய தந்தை ஆலிவர் சமர் கடந்த 2000 ஆண்டு இறந்துவிட்டதாகவும் அதன் பின்னர் அவருடைய தாயார் 2வது திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
    இதனை தொடர்ந்து தன்னுடைய பாஸ்போர்ட்டில் இறந்த தந்தையின் பெயருக்கு பதில் வளர்ப்பு தந்தையின் பெயரை ஏற்க மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மறுத்துவிட்டதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.
    இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என கூறி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து 4 வாரத்துக்குள் மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Wednesday, 17 August 2016

சவூதி தம்மாமில் தவித்த இந்திய வாலிபர் மீட்பு !


பெரியகுளம் கீழ வடகரை காயிதேமில்லத் தெருவில் வசிக்கும்
ஜமால் மைதீன் இவரது மகன் யூனுஸ் சவூதி தம்மாமில் வேலைக்கு சென்றுள்ளார் சென்ற இடத்தில் தங்க இடமும் இல்லாமல் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மூன்று மாதங்களுக்கு மேல் மிகவும் சிரமத்துடன் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
விபரம் அறிந்த யூனுஸ் தகப்பனார் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில நிர்வாகிகளிடம் தனது மகனை மீட்டு தரக்கோரி மனு அளித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில நிர்வாகிகள் தம்மாமில் உள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடனடியாக யூனுஸ் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும்படி கோரினார்கள்.
இதன் அடிப்படையில் தம்மாம் I.S.F நிர்வாகிகள் ஜின்னா, மக்தூம், சபியுல்லா மற்றும் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்கும் இடவசதி மற்றும் சட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வாலிபரை மீட்டு பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
மும்பை சென்னை வழியாக 15/08/2016 காலை 11.30மணியளவில் மதுரை விமானநிலையம் வந்தடைந்த வாலிபரை விமான நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூசுப் தெற்கு நிர்வாகிகள் சாகுல் ஹமீது, சம்சுஅப்துல்லா 50வதுவார்டு நிர்வாகிகள் நாகூர் கனி, சம்சுதீன் யூனுஸின் தந்தை ஜமால்மைதீன் ஆகியோர் வரவேற்றனர்.
மகனை மீட்டு தன்னிடம் ஒப்படைத்த இந்தியன் சோஷியல் ஃபோரம் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளுக்கு வாலிபர் யூனுஸும் அவரது தந்தை ஜமால் மைதீன் அவர்களும் நன்றி கூறியதுடன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுநல சேவையை மனம் நெகிழ்ந்து பாராட்டினர்.
துரிதமாக செயல்பட்டு வாலிபரை மீட்டெடுத்து தாயகம் அனுப்பி வைத்த இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை தமிழ் பிரிவின் மாநில தலைவர் காயல் அபுபக்கர்,ஊடக பொறுப்பாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் பாராட்டினர்.
யூனுஸ் அவர்களின் தந்தை ஜமால் மைதீன் அவர்கள் இந்தியா தவ்ஹித் ஜமாஅத் பெரியகுளம் தொகுதி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: கீழை அரூஸி.

Friday, 12 August 2016

வெளிநாடுகளில் இருந்து திருச்சி வரும்பயணிகளுக்கு எச்சரிக்கை! திருச்சி ஏர்போர்டில் சூட்கேஸ் வைத்திருந்த விலை உயர்ந்த மொபைல் மாயம்!



திருச்சி: விமானத்தில் வந்து தவறிய சூட்கேஸ் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து 4 செல்போன்கள் மாயமானது. இதுபற்றி அவரது குடும்பத்தினர் கேட்டபோது ஏர்போர்ட் அதிகாரிகள் சரியான பதில் அளிக்காததால் கூச்சல் குழப்பம் உருவாகி பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அய்யனார்புரம் 2வது தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் (25). இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் வேலைக்காக சிங்கப்பூர் சென்றார். 
பின்னர் கடந்த 8ம் தேதி சொந்த ஊர் திரும்பினார். சிங்கப்பூரில் இருந்து வந்த மலிண்டோ விமானம் மலேசியா சென்று அதன்பின்னர் திருச்சி வந்தது. திருச்சி விமான நிலையத்தில் இறங்கிய பின்னர், பயணிகளின் சூட்கேஸ்கள் மற்றும் லக்கேஜ்கள் கன்வேயர் பெல்ட்டில் வந்தது. அதில் வந்த பொருட்களை கண்டறிந்து அவற்றின் உரிமையாளர்கள் எடுத்து சென்றனர். இதில் வெகு நேரமாக ரிஸ்வான் சூட்கேசுக்காக நின்று கொண்டிருந்தார். ஆனாலும், அனைத்து பயணிகளின் பொருட்கள் வந்து எடுத்து சென்ற பின்னர் ரிஸ்வான் சூட்கேஸ் வரவில்லை. 
இதுகுறித்து விமான நிலையத்தில் மலிண்டோ நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, மலேசியா சென்று திருச்சி வந்ததால் சூட்கேஸ் மிஸ்ஸாகி இருக்கலாம், நீங்கள் ஊருக்கு செல்லுங்கள் உங்களுடைய சூட்கேஸ் அங்கிருந்து பெறப்பட்டு மறுநாள் விமானத்தில் கொண்டு வந்து டோர்டெலிவரி செய்யப்படும் என கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதுபோல் நேற்று காரைக்குடியில் இவரது வீட்டிற்கு வந்த தனியார் கூரியர் ஊழியர்கள் ரிஸ்வான் சூட்கேஸ்சை ஒப்படைத்து சென்றனர். 
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் சூட்கேஸ்சை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த விலை உயர்ந்த 4 செல்போன்கள் மாயமாகி இருந்தது கண்டு ரிஸ்வான் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்த குடும்பத்தினர், இங்குள்ள மலிண்டோ விமான அலுவலகத்தில் இதுகுறித்து கேட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் எங்களுக்கு எதுவும் தெரியாது, இதுகுறித்து புகார் அளிக்க விரும்பினால் மலேசியா அல்லது சிங்கப்பூரில் தான் கொடுக்க வேண்டும் என்றனர். 
இதற்கிடையில் இதேபோல் கீரனூரை சேர்ந்த ஒருவர் தன்னுடைய சூட்கேஸ்சிலும் இதுபோல் விலை உயர்ந்த செல்போனை காணவில்லை என கூறி புகார் அளித்தார். விமான நிறுவன அலுவலக ஊழியர்கள் சரியாக பதில் கூறாததால் ஆத்திரமடைந்தவர்கள் டிக்கெட் வழங்கும் அலுவலக கண்ணாடி அருகே சூட்கேஸ்களை வைத்து மறைத்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. தகவலறிந்த ஏர்போர்ட் போலீசார் அங்கு சென்று சமாதானம் பேசி புகார் அளிக்குமாறு கூறினர். இதையடுத்து இருதரப்பினரும் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். 
எனவே வளைகுடா மற்றும் வெளிநாடுகளில் வரும் பயணிகள் சூட்கேஸ்ல் மொபைல் வைப்பதை தவிர்க்கவும்.

Wednesday, 3 August 2016

கத்தார் நாட்டில் பலியான தொழிலாளி; உடலை தாயகம் கொண்டு உதவுமாறு கோரிக்கை:

கத்தார்:

    கத்தார் நாட்டில் விபத்தில் பலியான, கடலூரை சேர்ந்த தொழிலாளியின் உடலை உடனடியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
   கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், கடந்த 2015ஆம் ஆண்டு கத்தார் நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி பணி முடிந்து திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் பலியானார்.
    இந்நிலையில் ராஜாவின் மரணம் குறித்து, அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவித்த தனியார் நிறுவனம் உடலை அனுப்ப 40 நாட்கள் ஆகும் என கூறியது. இந்நிலையில் ராஜாவின் உடலை உடனடியாக கொண்டு வர கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம்  மனு கொடுத்துள்ளனர்:

Monday, 1 August 2016

தமிழகத்தின் முதல் முஸ்லிம் பெண் கலெக்டர்ஆசியா மர்யம் IAS,


நாமக்கல் மாவட்ட கலெக்டராக பதவியேற்றுக்கொண்டார் ஆசியா மர்யம் IAS,
மாஷா அல்லாஹ்.....
தமிழகத்தின் முதல் முஸ்லிம்
பெண் கலெக்டர்.!
 இவரின் பணி சிறக்க அவைவரும் பிராத்தனை செய்வோம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!..

Saturday, 30 July 2016

மதுரை விமான நிலையத்தில் நடக்கும் அட்டுழியங்கள்!!!

மதுரை விமான நிலையத்தில் நடக்கும் அட்டுழியங்கள்!




காசு பறிக்கும் அதிகாரிகள் என்ற போர்வையில் இருக்கும் திருடர்கள்....
மனிதாபிமானமற்ற மதுரை ஏர்போர்ட் பிச்சைக்கார நாய்கள்...
துபாயில் இருந்து அல்லல் பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு நல்ல கம்பேனி டிவி கூட வாங்க பணம் இல்லாமல், வெறும் கையோடு வரக்கூடாது என்று சைனா டிவி நம்ம ஊரு மதிப்புக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள டிவி ஒன்று வாங்கி வந்த திருச்சியை சேர்ந்த நம் சகோதரிடம்
நம் மதுரை ஏர்போர்ட் பணம் திண்ணி அதிகாரி ரூபாய் 7000 ஆயிரம் கேட்க அவரோ அழுது புலம்பி கெஞ்சி கதறி காழில்விழாத குறையா 2000 அல்லது 3000வரை தருவதாக போரடிப்பார்த்தார்
விட்டானா அந்த வெளிநாட்டு துயரை அறியாத அதிகாரி ரூபாய் 7000 கொடு இல்லை என்றால் விட்டுவிட்டு ஓடு என்றான்
இவரோ பணம் இல்லாமல் உனக்கு இந்த டிவியை தந்துவிட்டு போவதற்கு இங்கேயே
உடைத்துவிட்டு போகிறேன் என்று உடைத்து  எரிந்துவிட்டு வந்துவிட்டார்
இதை நாம் சும்மா விடுவதா அயல்நாட்டில் நம் உழைப்பை சுரண்டுகிறார்கள் நம் நாட்டில் நம் பணத்தை சுரண்டுகிறார்கள்
இதே போல் இனியும் நடக்காமல் இருக்க பகிருங்கள் நண்பர்களே
இடம் மதுரை ஏர்போர்ட் spice jet
TV China elockta 250 Dubai money
நன்றி - மதுரை மைந்தன்.மற்றும் மேலப்பாளையம் ஹூஸைன்

Thursday, 28 July 2016

திருப்பூரில் பள்ளிவாசலை மூட வேண்டும் இல்லை என்றால் இழுத்து பூட்டுவோம் - இந்துத்துவ தீவிரவாதிகள் & மாவட்ட நிர்வாகம்.


திருப்பூரில் இந்துத்துவ அமைப்புகள் தூண்டுதலின் பெயரில் பள்ளிவாசலை வெள்ளி கிழமை இழுத்து மூட வேண்டும் இல்லை என்றால் பூட்டுவோம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு !!

திருப்பூரில் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு பள்ளிவாசல்களை இந்துத்துவ அமைப்புகள் குறி வைத்து மூட வேண்டும் என்ற வேலையை செய்து வருகிறது இதற்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வருகிறார்கள் ஏற்கெனவே திருமுருகண் பூண்டி , குருவாயுரப்பன் நகர் , செஞ்சி தோட்டம் என தொடர்ந்து தற்போது 15 வேலம்பாளையம் பகுதியில் மகா லட்சுமி நகர் பள்ளிவாசல் கடந்த ஐந்து வருடங்களுகாக நடந்து வருகிறது எந்த இடைஞ்சல் இல்லாமல் இதை தொடர்ந்து அது முறையாக வக்பு செய்ய பட்டு உள்ளது இப்போது !!
இந்து முண்ணனி தூண்டதல் பெயரில் குடியுருப்போர் சங்கம் என்ற பெயரில் பள்ளி வாசல் மீது வழக்கு தொடுக்க பட்டுள்ளது இதன் தீர்ப்பு கடந்த மாதம் கொடுக்க பட்டது அதில் என்ன அனுமதி வாங்க பட்டதோ அதற்கு பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட பட்டுள்ளது ஆனால் மாநாகராட்சி பல முறை பள்ளிவாசல் நிர்வாகிகள் அனுமதி கோரியும் வழங்க வில்லை இதை தொடர்ந்து கடந்த வாரம் ஆர் டி ஓ பள்ளியை மூட வேண்டும் என கூறி வந்ததை அடுத்து இந்திய தவ்ஹித் ஜமாஅத் தமுமுக எஸ் டி பி ஐ அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு பொது மக்கள் என கூடி பெரிய பதற்றத்தை தொடர்ந்து அதிகாரிகள் இஸ்லாமிய நிர்வாகிகளை அழைத்து நீங்கள் முறையாக நீதிமன்றம் மூலம் அணுகி ஒரு தீர்ப்பு பெறுங்கள் அது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என உறுதி அளித்தனர் !!
அதற்கு பின்னர் நீதிமன்றம் மாநகராட்சி என படி படியாக நடவடிக்கைகள் எல்லாம் பள்ளி நிர்வாகமும் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் எடுத்து கொண்டு இருக்கும் போது திடீரென இரண்டு நாட்கள் முன் இந்து முண்ணணி அதிகமாக ஆட்களை திரட்டி கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று பள்ளிவாசலை உடனடியாக மூட வேண்டும் என மனு அளித்து உள்ளனர் பின்னர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் மீது வழக்கு போட்டுள்ளனர் இதை அடுத்து நேற்று இரவு மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிவாலுக்கு நோட்டிஸ் கொடுத்து உள்ளனர் அதில் வெள்ளி கிழமைக்குள் பள்ளிவாசலை மூட வேண்டும் இல்லை என்றால் மாநகராட்சி மூடும் என்று கூற பட்டுள்ளது இதனை தொடர்ந்து !!
அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம் தலைவர் மஜித் தலைவர் தலைமையில் நடைபெற்றது இந்திய தவ்ஹித் ஜமாஅத் தமுமுக எஸ் டி பி ஐ ஜமாத்தே இஸ்லாமி ஜமாஅத்துல் உலமா என அனைத்து இஸ்லாமிய அமைப்பு கட்சிகளின் நிர்வாகிகள் கூடி தொடர்ந்து திருப்பூரில் பள்ளிவாசல்கள் மீது அவதூறு கூறி முடக்க நினைக்கும் இந்துத்துவ அமைப்புகளை கண்டித்து வெள்ளி கிழமை மாலை இன்சா அல்லாஹ் 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்ய பட்டுள்ளது !!
நீதிமன்றம் தீர்ப்புக்கு தடை ஆணை வாங்குவது தொடர்பாக இன்று அல்லது நாளை தடை ஆணை பெறும் பணிகள் நடைபெற்று கொண்டு உள்ளது !!
அல்லாஹ்வின் பள்ளியை காக்க இன்னொரு பாபர் மசுதியை இழக்காமல் இருக்கு நம் உரிமையை பெற ஒன்று கூடுவோம் திருப்பூரில் இன்சா அல்லாஹ் !!

Thursday, 14 July 2016

தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன. அந்த தீ விபத்தில் மாற்று திறனாளி ஒருவர் உயிரிழந்தார்.


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். கண்டியூரில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மாற்று திறனாளி ஒருவர் உயிரிழந்தார். தர்கா தெருவில் உள்ள குடிசை வீடு ஒன்றில் திடீரென தீ பற்றியது.
இது காற்றின் வேகத்தால் மளமளவென அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து வந்த தஞ்சை, திருவையாறு தீயணைப்பு படை மற்றும் இந்திய விமானப்படையின் 15-க்கும் மேற்பட்ட விமானங்களின் வாகனங்களில் வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
இதனால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர். விபத்தில் ஷேக் அலாவுதின் என்ற மாற்றுதிறனாளி உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன. ஏராளமான வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்துள்ளன.

Tuesday, 28 June 2016

திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு! திடீர் இயந்திர கோளாதால் 151 பயணிகளுடன் இரண்டு மணி நேரம் வானில் வட்டமிட்ட விமானம்: தவித்த பயணிகள்!


திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை இரண்டு மணி நேரம் தரையிறக்க முடியாமல் விமானி தவித்துள்ளார். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்று மாலை 5.35 மணியளவில் கோலாலம்பூர் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலே விமானத்தில் திடீரென்று கோலாராறு ஏற்பட்டுள்ளது. 
இதனால் விமானி மீண்டும் திருச்சி விமான நிலையத்திலே விமானத்தை தரையிறக்க முடிவு செயதார். ஆனால் திட்டமிட்டபடி தரையிறக்க முடியாததால், விமானம் சுமார் இரண்டு மணி நேரம் வானில் வட்டமடித்து கொண்டே இருந்தது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர் இரவு 7.35 மணி அளவில் விமானம் தரையிறக்கப்பட்டது.
இதனிடையே ஏராளமான பொது மக்கள் திருச்சி விமான நிலையத்தில் குவிந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் திருச்சி விமான நிலையம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. 
திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர்ஏசியா விமானம் நேற்று மாலை 5.20க்கு புறப்பட்டது. இதில், மொத்தம் 151 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட 6வது நிமிடத்தில் திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானிகள், ‘மானிட்டரில் கோளாறு ஏற்பட்டு செயல்படவில்லை’ என கூறியுள்ளார். இதன்பிறகு, எரிபொருளை குறைக்கும் வகையில் வானில் வட்டமிட விமானிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், 7.15 மணி வரை விமான நிலையத்தையே சுமார் 20 முறை சுற்றி சுற்றி வட்டமடித்தது. இதையறிந்ததும் பயணிகள் அலறினர். 
இரவு 7.20 மணிக்கு ரன்வேயில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, உயிர் பிழைத்த சந்தோசத்தில் பயணிகள் கூச்சலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நொறுங்கி விழும் அபாயம்: இதுகுறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ‘விமான என்ஜினுக்கு காற்றழுத்தம்  (பிரஷர்) தரும்  கேபின் பின் பகுதியில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. பிரஷர் குறைந்தால்  என்ஜினின் வேகம் குறைந்து நடுவானில் பறக்கும்போது கீழே விழும் ஆபத்து  உள்ளது. இந்த கோளாறு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும்  அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது’ என்றனர்.

Sunday, 26 June 2016

சிறந்த பராமரிப்பு பணி;பயணிகளுக்கு சேவையில் தென் இந்தியாவில் முதல் இடம்!இந்திய அளவில் திருச்சி விமானநிலையம் 6-வது இடம் பிடித்தது விமானநிலைய இயக்குனர் பேட்டி.

திருச்சி:

சிறந்த பராமரிப்பு பணி;பயணிகளுக்கு சேவையில் தென் இந்தியாவில் முதல் இடம்!இந்திய அளவில் திருச்சி விமானநிலையம் 6-வது இடம் பிடித்தது விமானநிலைய இயக்குனர் பேட்டி:
    சிறந்த பராமரிப்பு பணிக்காக திருச்சி விமான நிலையம் இந்திய அளவில் 6-வது இடத்தை பிடித்துள்ளது என விமானநிலைய இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.
     திருச்சி விமானநிலைய இயக்குனர் குணசேகரன் விமானநிலைய அலுவலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
      இந்தியா முழுவதும் 53 சர்வதேச விமானநிலையங்கள் உள்ளன. விமானநிலையங்களில் சிறந்த பராமரிப்பு பணிகளை செய்துள்ளது குறித்து நொய்டாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் விமானநிலையத்தில் கழிப்பறையை சுத்தமாக வைத்தல், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் உள்பட 36 வகையான சாராம்சங்களை ஆராய்ந்து, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
     இதில் இந்திய அளவில் சண்டிகார் விமானநிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. திருச்சி விமானநிலையம் 4.66 புள்ளிகள் பெற்று இந்திய அளவில் 6-வது இடத்தையும், தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களை கொண்ட தென் மண்டல அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டில் 4.9 புள்ளிகள் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இந்திய அளவில் திருச்சி விமான நிலையம் முதல் இடத்தை பிடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருச்சி விமானநிலையத்திற்கு பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விமானநிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. விமானநிலைய முனையம் விரிவாக்கத்திற்கு ரூ.900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பணிகள் தொடங்கப்படும். திருச்சி விமானநிலைய ஓடுதள பாதை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். நிலம் கையகப்படுத்திய பின் பணிகள் தொடங்கும்.
     திருச்சியில் இருந்து பெங்களூரு, மும்பைக்கு விமானங்கள் இயக்க 2 தனியார் விமான நிறுவனங்களிடம் பேசப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் பெங்களூரு, மும்பைக்கு திருச்சியில் இருந்து விமானங்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, 22 June 2016

வெளிநாடு பறக்க இனி சென்னை போக வேண்டாம்!! மதுரையில் பன்னாட்டு விமான நிலையம்!

மதுரை : 

தேசிய விமான கொள்கையில் மத்திய அரசு புது முடிவு எடுத்துள்ளதின் மூலம் மதுரைக்கு பன்னாட்டு விமான போக்குவரத்து விரைவில் கைகூடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு அதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகள் ரூ.130 கோடியில் தயார் நிலையில் உள்ளன. மதுரையில் சர்வதேச விமானநிலையம் அமைவது இழுபறி நிலையிலேயே நீடிக்கிறது. ரூ.130 கோடியில் சர்வதேச தரத்துடன் நவீன டெர்மினல் தயாராகி 6 ஆண்டுகளாகிறது. இரு நாட்டு விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரையை சேர்க்காததால் வெளிநாட்டு விமான சேவை தடைபட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட கார்கோ சேவையும் (சரக்கு முனையம்) செயல்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கிறது. இதற்கு சர்வதேச விமான நிலையமாக அந்தஸ்து கிடைக்கவில்லை என்பது காரணமாக சொல்லப்படுகிறது. பன்னாட்டு விமானங்கள் இயங்க அனைத்து வசதிகளும் உள்ளன. அதற்கான அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. 
சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா, அபுதாபி, குவைத் ஆகிய நாட்டு விமானங்கள் மதுரைக்கு நேரடியாக விமான சேவை வழங்க தயாராக இருக்கின்றன. ஆனால் அந்த நாட்டு விமானங்கள் மதுரைக்கு வர அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு இரு நாட்டு விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரையை சேர்க்காமல் இருப்பதே காரணமாகும். இலங்கை தலைநகர் கொழும்புக்கு மட்டுமே ஏற்கனவே உள்ள அனுமதி நீடிக்கிறது. மதுரை விமான நிலையத்தில் சரக்கு முனையம் அங்கீகார நோட்டிபிகேசன் 2013ல் வெளியிடப்பட்டது. அதுவும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. சர்வதேச தரத்துடன் 3 ஏரோ பிரிட்ஜ், 3 கன்வேயர் பெல்ட், 2 எக்ஸ்ரே ஸ்கேனர், 7 சுங்கத் துறை கவுண்டர், 20 இமிக்ரேசன் கவுண்டர், பயணிகளை பரிசோதிக்கும் 16 கவுன்ட்டர் உள்ளிட்ட தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. ஆனால் வெளிநாட்டு விமானங்களைத்தான் காணமுடியவில்லை. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
இங்குள்ளவர்கள் துபாய், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் வேலை பார்க்கின்றனர். தற்போது அவர்கள் சென்னை, திருச்சி அல்லது திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து காய்கறி, உலகபுகழ் மிக்க மதுரை மல்லிகை பூ, பழங்கள், ஜவுளி, ரெடிமேடு ஆடை, மோட்டார் வாகன உதிரி பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இதனை திருச்சி, கோவை, கொச்சி போன்ற விமான நிலையங்களுக்கு கொண்டு சென்று ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலையே நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சரவை தேசிய விமான கொள்கையில் மாற்றம் செய்து புது முடிவு எடுத்துள்ளது. இதில் வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவிலுள்ள சிறிய விமான நிலையங்களுக்கு நேரடி விமான சேவை தொடங்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மதுரைக்கு பன்னாட்டு விமான போக்குவரத்து விரைவில் எட்டும் வாய்ப்பு கைகூடி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன் ஆகியோர் கூறுகையில், “மத்திய அரசு விமான துறையில் எடுத்துள்ள புது கொள்கை முடிவில் வெளிநாடுகளுடன் இருவழி விமான சேவை ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில் கட்டுப்பாடு தளர்த்தி இருப்பதின் மூலம் மதுரைக்கு பன்னாட்டு விமான போக்குவரத்துக்கு நம்பிக்கை ஒளி தோன்றி உள்ளது. மதுரையில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. எனவே உடனடியாக இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரையை சேர்த்து பன்னாட்டு விமான சேவைக்கு வாசலை திறக்க வேண்டும்,” என்றனர்.

Thursday, 16 June 2016

திருச்சி MAM கல்லூரியில் +2 வில் 1000 மதிப்பெண் பெற்ற முஸ்லீம் மாணவர்களுக்குபொறியியல் கல்வி கட்டணம் இல்லை! அனைத்தும் இலவசம் !


அண்ணா பல்கலை கழகத்தில் கவுன்ஸிலிங் போட்டிருக்க வேண்டும்! 
ஆலீம் & எத்தீம் குடும்பத்து மாணவர்க்கு முன்னுரிமை! குறைந்த இடங்களே உள்ளன! தொடர்பு :- அன்வோ, சென்னை 044-42018485.
இலவச கல்வி இறுதி வாய்ப்பு 
கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேரூந்து கட்டணம் இல்லை
Admission help line 9894425011 
20-06-2016க்குள் அட்மிஷன் செய்துகொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும்
தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு Engineering , கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும். 
இச்சலுகை 20-06-2016க்குள் அட்மிஷன் செய்துகொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும் 
SC, SCA, ST மாணவ மாணவியருக்கு Engineering (B.E, ME ), College ல் படிக்கும் காலம் முழுவதும் இலவசக் கல்வி, இலவச தங்கும் விடுதி, இலவசப் பேருந்து வழங்கப்படும். இச்சலுகை 20-06-2016 க்குள் சேரும் மாணவ, மாணவியருக்கு மட்டும்.
BE சேரும் முதல் பட்டதாரி
BC,MBC மாணவர்களுக்கு BE படிக்க கட்டணம் ரூ.20000 மட்டும் 
SC/SCA/ST க்கு BE படிக்க இலவசக்கல்வியுடன் இலவச உணவு, இலவச தங்கும் விடுதி, இலவசப்பேருந்து மற்றும் ரூபாய் 40000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 
தொடர்புக்கு 9894425011
1.B.E Mechanical Engineering, 
2. B.E Electrical & Electronics Engineering 3.B.E Electronics & Communication Engg
4.B.E Computer Science Engineering , 
5. B.E Civil Engineering. 
6. B.E Aeronautical Engineering
இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே. kindly forward to all groups

Thursday, 2 June 2016

5 வருடங்களாக ஒரே ஒரு மாணவிக்காக இயங்கி வந்த பள்ளி மூடப்படும் அபாயம்


சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 5 வருடங்களாக ஒரே ஒரு மாணவிக்காக இயங்கி வந்த பள்ளி தற்போது மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. செய்யாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்த ஒரு மாணவிக்காக தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்களும், ஒரு துப்புறவு பணியாளரும் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த மாணவியும் படிப்பை முடித்து வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதால் அந்த பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. இதே போல் மானாமதுரையில் மானம்பாக்கி உள்ளிட்ட பல இடங்களில் ஓரிரு மாணவர்களுக்காக பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அரசு பள்ளிகளில் சரியான வசதிகள் இல்லாததாலேயே மக்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்வதா அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அரசு இதனை கவனத்தில் கொண்டு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வழிவகுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை ஆகும்.

Monday, 30 May 2016

​சவூதியில் தமிழ் பெண் சித்திரவதை - மீட்க கோரிக்கை!


சேலத்தில் இருந்து சவூதிக்கு வேலைக்கு சென்ற பெண் சித்திரவதை செய்யப்படுவதாக வாட்சப்பில் வீடியோ வெளியானதை தொடர்ந்து தனது மகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் சன்னியாசி குண்டு பாத்திமா நகரை சேர்ந்த பர்வீன் பானு குடும்ப சூழல் காரணமாக சவுதிக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. கடந்த 10 மாதங்களாக சம்பளம் தராமல் சித்ரவதை செய்வதாக பர்வீன் பானு வாட்சப் மூலமாக வீடியோ அனுப்பியதை தொடர்ந்து, நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் அந்த வீடியோவை ஒளிபரப்பினோம். இந்நிலையில் பர்வீன் பானுவின் தாயார் தன்னுடைய மகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பர்வீனை மீட்க சென்ற தன்னுடைய மருமகன் குறித்த தகவல் எதுவும் தெரியாததால், அவரையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.