Wednesday, 9 March 2016

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 17பேர் பலி


பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்த பட்சம் 17 பேர் பலியாகினர். 
வடமேல் நகரான ஷப்கடாரின்  நீதிமன்ற நுழைவாயிலில் இந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
இதில் 30 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 
கடந்த வாரம் மும்டாஸ் காட்ரி என்ற மதகுரு ஒருவர் தூக்கிலிடப்பட்டார்.
இதற்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment