Monday, 7 March 2016

மேற்கு வங்கத்தில் பலாத்காரம் செய்ய வந்தவர்களிடமிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த இளம்பெண்.

பதிவு செய்த நேரம்:2016-03-07

ஹவுரா: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் தன்னை பலாத்காரம் செய்ய வந்தவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக இளம்பெண் 2வது மாடியிலிருந்து குதித்தார். குதித்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண்  மாடியில் இருந்து கீழே விழுகையில் மண் குவியல் கிடந்ததால் சிறிது காயத்துடன் உயிர் பிழைத்தார். பலாத்கார வழக்கில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  
இது குறித்து அந்த பெண் கூறுகையில், நண்பர்கள் அவருக்கு பதுபானம் கலந்து கொடுத்து பின்னர் அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறினார். பின்னர் அவரை பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் மாடியில் இருந்து கீழே விழுந்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment