Wednesday, 9 March 2016

புதுப்பட்டினத்தை அடுத்த மல்லிப்பட்டிணத்தில் மீனவர் மீதான வன்முறை குறித்து ஆலோசனை கூட்டம் :: தமிழ்நாடு மாநில மீனவர் பேரவை தலைவர் தலைமையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.


புதுப்பட்டினத்தை அடுத்த மல்லிப்பட்டினத்தில் வன்முறைக்கு எதிரான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மீனவர் பேரவை மாநிலத்தலைவர் இரா.அன்பழகனார் தலைமை வகித்தார். மாநிலச்செயலர் ஏ.கே.தாஜுதீன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பிப்.2-ல் மல்லிப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச்செயலர் ஏ.கே.தாஜுதீன் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்தும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரியும், மாநிலச்செயலருக்கு கொலை மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பு வழங்ககோரியும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் மதவெறி அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பண்ணவயல் ராஜாதம்பி, மணமேல்குடி முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் சீனியார், மனிதநேய மக்கள் கட்சி மாநிலச்செயலர் பாதுஷா, மாவட்ட தேமுதிக துணைச்செயலர் ஓ.எஸ்.எம். முகமது அலி ஜின்னா ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment