Showing posts with label உலக செய்திகள். Show all posts
Showing posts with label உலக செய்திகள். Show all posts

Thursday, 13 October 2016

சவுதி - ரியாத்தில் சாராயம் கட்சி விற்ற ஐந்து பேர் அதிரடி படையரானால் கைது !!!


சவுதி அரேபியா- ரியாத்தில் சாராயம் காச்சி விற்ற கேரளா மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பலை சவுதி அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டனர். அந் நாட்டில் மதுபானங்கள் தயாரிப்பதும் விற்பதும் குடிப்பதும் பயங்கர குற்றம் 
அந்த நாட்டு சட்டப்படி மூவருக்கு மரண தன்டனையும் (தலை வெட்டு) இருவருக்கு தலா 10 ஆன்டு சிறை தண்டனை. கிடைக்கும் என்று ஏத்தி பார்க்கப்படுகிறது
நண்பர்களே !!!
நாம் நாடு விட்டு நாடு வருவதற்க்கு காரணம் நம்மலுடைய குடும்பங்களின் சூழ்நிலை காரனமாகவும் குடும்ப கஷ்டத்தின் காரனமாகவும் வந்திருக்கிரோம். இருக்க கூடிய காலத்தில் நன்மக்களாக வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும் இது போல் தங்களுடைய நட்பு வட்டதில் யாராவது செய்தால் தடுத்து நிருத்துங்கள்.
நமக்காக நமது தாய்,தந்தை மனைவி. காத்து கொண்டு இருக்கின்றனர்

இஸ்லாமிய சாம்ராஜ்யமான சவூதி அரேபியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அதிகமானவர்கள் அறிந்த செய்தியே! அதற்கான காரணங்கள்!!


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கள்ளக் குழந்தையான ஈரான் நாட்டின் மீது விதிக்கப் பட்ட பொருளாதாரத்தடை அகற்றப்பட்ட காரணத்தினால் அவர்களும் சந்தையில் கச்சா எண்ணெய் விற்க ஆரம்பித்து விட்டார்கள் . சவூதி அரேபியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியா போன்ற நாடுகள் ஈரானிடம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஈராக் , லிபியா போன்ற நாடுகளில் பொய்யான காரணங்களை கூறி படையெடுத்து அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்த அமெரிக்காவிடமும் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது .
எமன் எல்லையில் ஈரான் ஹூசிஈன்களுக்கு ஆயுத உதவிகளை செய்து சவூதிக்கு எதிராக போரை தூண்டிய காரணத்தினால் நாட்டின் பாதுகாப்பு கருதி போருக்காக செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது . .......
இது போன்ற காரணங்களினால் இந்த நாடு நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது . இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக விசிட் விசா , பிஸினஸ் விசா , இக்காமா , போக்குவரத்து விதிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனை பலரும் மிக கடுமையாக விமர்சிக்கின்றனர் .
அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் வழி முறைகளை சரியாக புரிந்தவர்கள் இஸ்லாமிய ஆட்ச்சியாளர்களை விமர்சனம் செய்யமாட்டார்கள். இவ்வாறு விமர்சனம் செய்வது கவாரிஜ்களின் வழிமுறைக்கு ஒப்பானது.
இந்த நாட்டின் மூலம் தனிமனிதர்களும் , இஸ்லாமிய சமூகமும் மார்க்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எண்ணிலடங்கா பலன்களை அடைந்துள்ளனர்.
இன்பங்களை அனுபவித்தவர்கள் துன்பத்திலும் பங்கெடுக்க வேண்டும். குறைந்த பட்சம் விமர்சிக்காமல் அமைதி காக்கட்டும் . ஷேக் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ் ) கூறினார்கள் இந்த ந்நாட்டிற்கு எதிரானவர்கள் சத்தியத்திற்கு எதிரானவர்கள் , தவ்ஹீதுக்கு எதிரானவர்கள்.
பதிப்புரிமை: நன்றி: யசீர் ஹமீத்

Thursday, 6 October 2016

கணினி உதவியுடன் விசா உண்மை தன்மையை சோதித்து அறிய பயனுள்ள லிங்க் உங்களுக்காக வழங்குகிறார்.


கணினி உதவியுடன்
விசா உண்மை தன்மையை சோதித்து அறிய பயனுள்ள லிங்க்  உங்களுக்காக வழங்குகிறார்.
மற்ற தமிழருக்கு உதவிடும் மனம் இருந்தால் நீங்களும் ஷேர் செய்யலாம்.

2. SAUDI IQAMA VISA CHECK LINk
---------------------------
https://visa.mofa.gov.sa/visaServices/PrintVisa

3. QATAR VISA CHECK ONLINE
-------------------------
https://www.moi.gov.qa/VsaWeb/Actions

4. OMAN VISA CHECK ONLINE
--------------------------
http://www.rop.gov.om/english/onlineservices_visastatus.asp

5. BAHRAIN VISA ONLINE CHECK
--------------------------
http://lmra.bh/portal/en/home

6. MALAYSIA VISA ONLINE CHECK
--------------------------
https://eservices.imi.gov.my/myimms/enqApplSts

7. SINGAPORE VISA ONLINE CHECK
VISIT VISA CHECK :-
------------------------------------------
https://save.ica.gov.sg/save-public/index.xhtml;jsessionid=pNgbWJ1QYhBG54lc2r9rLhrCgNKnSP6nf32LWDyC6cQytL01ZhTb!-727631320

WORK PERMIT CHECK
------------------------------
:-https://wponline.mom.gov.sg/WPOLLoginController?action=WPOLLoginAction&actionType=WPOLNonLogin

EPASS SPASS CHECK:-
-----------------------------
https://eponline.mom.gov.sg/epol/PEPOLUAMT012DisplayAction.do

Tuesday, 27 September 2016

சவுதி அரேபியா: வர்த்தக சந்தையை காப்பாற்ற 20 பில்லியன் ரியால் முதலீடு..!


ரியாத்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் குறைந்ததைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் நிதி நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்நாட்டு வணிக வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் போதிய நிதி இல்லாத காரணத்தால் பல வர்த்தக நிறுவனங்கள் முடங்கி விடும் அபாயம் நிலவுகிறது. 
இப்பிரச்சனைகளைக் களையும் வகையில் சவுதி அரேபிய நாட்டின் மத்திய வங்கி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.! 
நிதிப்பற்றாக்குறை 
 சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் குறைந்த காரணத்தினால் இந்நாட்டில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக வங்கிகளிடமும் போதிய அளவிலான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வணிக வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தைத் தாறுமாறாக உயர்த்தி வருகிறது.
 சவுதி வர்த்தகச் சந்தை  
ஏற்கனவே கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் பாதிப்பின் மூலம் அதிகளவிலான நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்திருக்கும் சவுதி அரேபிய நாட்டு நிறுவனங்கள், நிதி உதவி அளிக்க வேண்டிய வணிக வங்கிகளும் அதிக வட்டியை விதிக்கத் துவங்கியுள்ளதால் ஒட்டுமொத்த வர்த்தகச் சந்தையே சரிவு பாதையை நோக்கிச் செல்ல துவங்கியுள்ளது.  
முதலீடு 
 இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் முன்னரே களைய வேண்டும் என முடிவு செய்த சவுதி அரேபிய நாட்டின் மத்திய வங்கி, இந்நாட்டின் வங்கிகளில் சுமார் 20 பில்லியன் ரியால் அதாவது 5.3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் நாணய சந்தையை ஈர்க்கும் விதிமாகப் புதிதாக இரண்டு முதலீட்டுத் திட்டத்தையும் அறிவிக்க முடிவு செய்துள்ளது.  
நிதிநிலை  
வங்கிகளில் அரசு சார்பில் 20 பில்லியன் ரியால் முதலீடு செய்வதன் மூலம் நாட்டில் நிதிநிலை மேம்படும் என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் எந்த வங்கியில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்போகிறது என மத்திய வங்கி தெரிவிக்கவில்லை. இதனுடன் 7- 28 நாள் கொண்ட முதலீட்டுப் பத்திரத்தையும் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
     டெப்பாசிட்  
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தகம் கச்சா எண்ணெய். கடந்த சில மாதங்களாகச் சர்வதேச சந்தையில் இதன் விலை அதிகளவில் குறைந்து வங்கிகளில் டெப்பாசிட் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் சவுதி வங்கிகளில் டெப்பாசிட் அளவு சுமார் 3.3 சதவீதம் குறைந்துள்ளது.  
வட்டி விகிதம்  
அனைத்து வழிகளிலும் இருந்து நிதி வரவு குறைந்த காரணத்தினால் கடந்த 15 மாதங்களில் இந்நாட்டின் வங்கிகளில் வட்டி விகிதம் சுமார் 1.5 சதவீத அதிகரித்துள்ளது. போராட்டம் நாணய மதிப்பு, வர்த்தகச் சந்தை, நிதி நிலை, பணப்புழக்கம் ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர இந்நாட்டு அரசு தொடர்ந்து போராடி வந்தனர். தற்போது இந்நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை பிரச்சனையைக் களையவே இந்த 20 பில்லியன் ரியால் முதலீடு செய்வதை இறுதிக்கட்ட முடிவாக மத்திய வங்கி ஏற்றுள்ளது.  
ரியால் நாணய மதிப்பு..  
இந்தியா ரூபாய்க்கு எதிரான சவுதி ரியால் நாணய மதிப்பு 17.78 ரூபாய். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் எளிமையான நாணய பரிமாற்ற சேவைகளை பெற இதை கிளிக் செய்யவும்.  
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
  இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 0.04 சதவீதம் உயர்ந்து 44.52 டாலராக உள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.03 சதவீதம் உயர்ந்து 45.92 டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, 26 September 2016

தீவிரவாதத்தை வேரருக்கு வேண்டும் ஐ .நா வில் சுஸ்மா சுவராஜ் பேச்சு...!


தீவிரவாதத்தை வேரருக்கு வேண்டும் ஐ .நா வில் சுஸ்மா சுவராஜ் பேச்சு...!
தீவிரவாதிகளை உருவாக்கும் தீவிரவாத இயக்கங்களை கண்டறிந்து தீவிரவாதத்தை வேறோடு அறுக்க வேண்டும் என்று ஐ.நாவில் சுஸ்மா சுவராஜ் பேசியுள்ளார்.
தீவிரவாதத்தின் புகழிடமே RSS தான் என்பது உலகறிந்த விடயம். அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனம் ஒரு சர்வே வெளியிட்டது. அதில் இந்தியாவின் முதல் தீவிரவாத இயக்கம் RSS தான் என்று.
எல்லாம் தெரிந்த சுஸ்மாவுக்கு இது தெரியாமல் போய்விட்டது போலும்.
RSS ஐ ஒழித்தால் இந்தியா அமைதி பூங்காவாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
வீரவசனம் பேசிய சுஸ்மா இந்தியா திரும்பியதும் முதலில் செய்ய வேண்டிய பணி RSS ஐ ஒழிப்பதாகவே இருக்க வேண்டும் செய்வாரா?

​கோவை வன்முறை தொடர்பாக 801 பேர் மீது வழக்குப்பதிவு - 305 பேர் சிறையில் அடைப்பு


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 801 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 305 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 
இதில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு தரப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் கடைகள், பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் துடியலூர் பகுதியில் இரு கடைகள் மற்றும் காவல்துறை வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. 
இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 801 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக நகரப்பகுதியில் 145 பேரும், புறநகர் பகுதியில் 160 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் திருச்சி, சேலம் மற்றும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Thursday, 22 September 2016

முஸ்லிம் மதத்தை காரணமாக கூறி அகதிகளை திருப்பியனுப்ப முடியாது: ஒபாமா திட்டவட்டம்.


‘அமெரிக்காவுக்குள் தஞ்சம் புக வரும் அகதிகளை மத அடிப்படையில் நோக்க முடியாது. ஒருவர் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவே அவரை அமெரிக்காவுக்குள் நுழைய விடாமல் திருப்பியனுப்ப முடியாது’ என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.
ஐநா பொதுச் சபையின், 71-வது கூட்டத்தொடரின் இடையே, சர்வதேச தலைவர்கள் பங்கேற்கும் அகதிகள் தொடர்பான மாநாடு, அமெரிக்கா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசும்போது, 
‘அண்மைக்காலங்களில் சர்வதேச அளவில் 6.5 கோடி பேர் தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். 2-ம் உலகப் போருக்குப் பிறகு, தற்போது அதிக அளவில் மக்கள் அகதிகளாகியுள்ளனர். 
இவர்களில் 2.1 கோடி பேர், சொந்த மண்ணையும், உறவுகளையும் மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உடுத்த உடையை மட்டும் சுமந்துகொண்டு நாட்டைவிட்டு வெளியேறியவர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலைமையில் நம்மிடம் தஞ்சம் புக வருவோரை, அவர்களின் மதத்தைப் பார்த்து நாம் அனுமதிக்க முடியாது. உதாரணமாக, ஒருவர் முஸ்லிம் என்பதற்காகவே, அவருக்கு தஞ்சமளிக்க முடியாது எனக் கூறிவிட முடியாது. அப்படிச் செய்தால், நம்மைப் போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற தீவிரவாதிகளின் பிரச்சாரம் உண்மையாகிவிடும்.
மாறாக, வேற்றுமையில் ஒற்றுமையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்கும் போது, கடுமையான சோதனை நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதன் மூலம் போலியானவர்களை தடுத்துநிறுத்தலாம்.
அமெரிக்கா மீது பற்றுள்ள, கடினமாக உழைக்கக் கூடிய பல அகதிகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். தொழில்துறையிலும் சாதித்து வருகின்றனர். அகதிகள் நாட்டை பலப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு’ என்றார்.
அகதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது தீவிரவாத அச்சுறுத்தலுக்கு வித்திடும் என, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப் கடந்த ஓராண்டு காலமாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில், இவ்விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஒபாமா பேசியுள்ளார்.
ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்

சவூதி அரேபியாவில் புதிய சட்டம் :

சவூதி அரேபியாவில் புதிய சட்டம் :

சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியல் இந்த விபரங்கள் பின்வருமாறு:
1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க வேண்டும்.
✔மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்
2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க வேண்டும்
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால் முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
4. இக்காமா தொலைந்து விட்டால் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
6. விசிட், பிஸினஸ் அல்லது உம்ராஃஹஜ் விசாவில் வருபவர்கள் அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன் சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும் உம்ராஃஹஜ் விசாவில் வந்தவர்கள் மக்கா ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.
✔மீறினால்: சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும் யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.
✔மீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலை கொடுத்தவர் ‘வெளிநாட்டவராக’ (இக்காமா வைத்திருப்பவர்) இருந்தால் அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்
8. இக்காமா ஃ விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல் இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.
✔மீறினால்: SR 10000 அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.
9. ஹஜ் ஃஉம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்.
✔மீறினால்: உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூடும்.
10. தன்னுடைய கஃபீல் ஃ நிறுவனத்திற்கு வேலை செய்யாமல் பிற கஃபீல்ஃநிறுவனம்ஃசொந்த தொழில் செய்வது – பணி புரிவது குற்றம். மேலும் தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி தற்போது பணிபுரியும் நிறுவத்தில் ‘கஃபாலத் – ஸ்பான்ஸர்ஷிப்’ மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.
✔மீறினால்: இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது
11. தொழிலாளியின் கஃபீல் ஃ நிறுவனத்தில் வேலை செய்யாமல் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.
✔மீறினால்: SR 5000 அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்
12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும் அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.
✔மீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை – SR 5000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 50000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும் சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.
13. இக்காமா இல்லாதவர்களையோ இக்காமா காலாவதி ஆனவர்களையோ விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.
✔மீறினால்: முதல் முறை – SR 10000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 30000 அபராதம் ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும் இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
14. வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்
✔மீறினால்: SR 5000 அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.
15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.
✔மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை
16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால்…
✔ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.
17. தொடர்ந்து எந்த காரணமுமின்றி எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில் அவருடைய கஃபீல்ஃநிறுவனம் புகார் செய்ய வேண்டும்.
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்....

Wednesday, 21 September 2016

கத்தார் புதிய தொழிலாளர் சட்டம் பற்றிய 12 அம்சங்கள்!

  
   கத்தார் புதிய தொழிலாளர் சட்டம் பற்றிய 12 அம்சங்கள்!
1. புதிய சட்டம் இந்த ஆண்டு (2016) டிசம்பரில் இருந்து செயல்படுத்தப்படும்.
2. புதிய சட்டத்தின்படி தொழிலாளர் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் இருப்பார். (Sponsor முறை நீக்கப்படும்)
3. Cancel செய்து நாடு சென்றால் 2 ஆண்டுகள் தடை இனி இல்லை.
4. புதிய நிறுனவத்தில் தொழில் பெற பழைய நிறுவனத்தின் NOC தேவை இல்லை.
5. Cancel செய்து நாடு சென்றால் புதிய விசா ஒன்றை பெற்று மீண்டும் மறுநாளே கத்தார் செல்ல முடியும்.
6. நாடு செல்வதட்கு, வேலை புரியும் நிறுவனத்தில் இருந்தது Exit Permit தேவை இல்லை.
7. நாடு செல்ல 3 தினங்களுக்கு முன்பு வேலை புரியும் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும் மற்றும் Metrash 2 எனும் மொபைல் அப்ளிகேஷன் ஊடக Exit Permit விண்ணப்பிக்க வேண்டும்.
8. அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த ஆண்டு (2016) இறுதியில் புதிய தொழிலாளர் ஒப்பந்தம் மாற்றப்படும்.
9. பழைய ஒப்பந்தத்தில் வேலைக்குச் சேர்ந்த திகதியில் இருந்தே ஒப்பந்த காலம் கணக்கிடப்படும்.
10. தொழில் ஒப்பந்தங்கள் கத்தார் தொழிலாளர் அமைச்சகத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.
11. உங்கள் ஒப்பந்தம் கால எல்லை இல்லாமல் இருப்பின் 5 வருடத்திற்கு பின்னே புதிய தொழில் ஒன்றை பெற முடியும்.
12. உங்கள் ஒப்பந்தம் கால எல்லை குறிப்பிட்டு இருந்தால் குறிப்பிட்ட ஒப்பந்தம் நிறைவடைந்ததும் NOC இல்லாமல் புதிய வேலை ஒன்றை பெற முடியும்.

சவுதி அரேபிய விமானத்தில் தவறுதலாக விமானக் கடத்தல் அலாரத்தை அழுத்திய பைலட் ! ஏர்போர்டில் பரபரப்பு!

  

    சவுதி அரேபியன் ஏர் லைன்ஸ் விமானம் 872 என்ற விமானம் ஜித்தாவில் இருந்து இன்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியது. அப்போது விமான பைலட் தவறுதலாக விமான கடத்தலின் போது பயன்படுத்தும் எச்சரிக்கை அலாரத்தை பயன்படுத்தி விட்டார். 
இதை தொடர்ந்து மணிலா விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை செய்தனர்.பின்னர் எந்த மிரட்டலும் இல்லை என தெரியவந்தது. இதை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கபட்டனர். இந்த தவறால் 2 மணி நேரம் பயணிகள் விமானத்திலேயே இருக்க நேரிட்டது.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. பைலட் தவறுதலாக அவசர அழைப்பு மணியை அழுத்தி விட்டார். என மணிலா போலீஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tuesday, 20 September 2016

சவூதியில் செல்ஃபோன் கடைகள் அடைப்பு:இந்தியர்கள் வேலையிழப்பு!


ஜித்தா (20 செப் 2016): சவூதியில் செல்ஃபோன் கடைகளில் வெளிநாட்டினர் வேலை செய்யக்கூடாது என்ற உத்தரவை அடுத்து பல இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர்.
சவூதியில் செல்ஃபோன் கடைகளில் சவூதி குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று சவூதி தொழிலாளர் அமைச்சக உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதியிலிருந்து இந்த புதிய விதிமுறை அமுலுக்கு வந்தது.
இந்த நிலையில் முழுக்க வெளிநாட்டினர் மட்டுமே வைத்திருந்த ஆயிரக்கணக்காண செல்ஃபோன் கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.
இதனிடையே விதிமுறையை மீறி செல்ஃபோன் கடைகளில் பணிபுரிந்த வெளிநாட்டினர் தொழிலாளர் அமைச்சக அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, இந்திய ரூபாய்.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹஜ் பயணிகளுக்கு சவூதி அரசு எச்சரிக்கை!


ஜித்தா (19 செப் 2016): ஹஜ் யாத்ரீகர்கள் சட்டவிரோதமாக சவூதியில் தங்க எத்தனித்தால் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சவூதி குடியிருப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஹஜ் நிறைவடைந்த நிலையில், ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஹஜ் விசாவில் சவூதி வந்தவர்கள் ஹஜ் விசா காலாவதியாதவற்குள் தங்களது நாடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று சவூதி குடியிருப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு திரும்பி செல்லாமல் சவூதியிலேயே தங்க எத்தனித்தால் அவர்கள் கடும் தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்றும் அவர்களுக்கு உதவி புரிபவர்களும் கடும் தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்றும் சவூதி குடியிருப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அதேவேளை ஹஜ் விசாவில் சவூதி வந்தவர்கள் மக்கா, மதீனா தவிர வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உம்ரா வருடாந்திர அனுமதியை 10 மாதங்களாக நீட்டிக்க பரிசீலணை!


சவூதி அரேபியா, செப்-18
ஹஜ் யாத்திரைக்கு அடுத்து அதிகமாக புனித கஃபாவிற்கு விஜயம் செய்து முஸ்லீம்கள் நிறைவேற்றி வரும் வணக்க வழிபாடுகளில் ஒன்று உம்ராவாகும். இந்த உம்ரா பயணத்திற்கான அனுமதி தற்போது ஹிஜ்ரி வருடத்தில் ஸபர் மாதம் துவங்கி ரமலான் மாதம் வரையிலான 8 மாத காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
2030 எனும் தூர நோக்கு வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டு வரும் வருடத்திற்கு 8 மில்லியன் உம்ரா விசாக்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 30 மில்லியன் விசாக்கள் என்ற அளவை 2030 ஆம் ஆண்டிற்குள் எட்ட திட்டமிடப்பட்டுள்ளன.
எனவே, இனி முஹர்ரம் மாதமும் ஷவ்வால் மாதமும் கூடுதலாக உம்ரா சீசனில் சேர்க்கப்பட்டு 10 மாதங்களால் அதிகரித்திட திட்டங்கள் பரிசீலணை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்புடைய பொருட்களையும் ஆவணங்களையும் சேகரித்து பாதுகாத்து பார்வைக்கு வைக்கும் நடவடிக்கைகளுக்காக 'உலகின் பிரம்மாண்ட மியூசியம்' ஒன்றை மக்கா நகரில் எழுப்பும் ஆரம்பகட்ட வேலைகளை மக்கமாநகர சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகத்துடன் இணைந்து செய்து வருகிறது.
Source: Arab News

Sunday, 18 September 2016

பால் குடிப்பது கூட பசு வதை தானாம்...


      பசுவை பாதுகாப்பதாக கூறி, இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர் மாட்டிறைச்சி உண்பவர்களை தாக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தேறி சர்ச்சைக்குள்ளானதையெல்லாம் அறிந்திருப்போம்....
இந்த நிலையில், பால் குடிப்பது கூட பசு வதை தான் என்று டெல்லியை சேர்ந்த இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு சொல்கிறது..
பாலுக்காக பசுக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அதனை தடுக்க பாலுக்கு எதிராக பரப்புரை செய்ய உள்ளதாகவும், அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, பாலின் தேவை அதிகரித்திருப்பதால், அதற்காக பசுக்கள் பெருமளவு வதைக்கப்படுவதாக கூறுகிறது அந்த அமைப்பு.
குறிப்பாக, ஆண் கன்றுகள் இறைச்சிக்காக அனுப்பப்படுவதாகவும், பெண் கன்றுகள் பாலுக்காக வளர்க்கப்படுவதாகவும் கூறும் விலங்கு அமைப்பு, பசுக்களுக்கு செயற்கையாக ஹார்மோன்கள் செலுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறது.
பொதுவாக ஒரு விலங்கின் பாலை மற்ற விலங்குகள் குடிப்பதில்லை என்ற போது, மனிதன் மட்டும் ஏன் மாறாக செயல்படுவதாகவும் விலங்கு அமைப்பு கேள்வி எழுப்புகிறது.
பசும்பால் அத்தியாவசியமாகிவிட்ட நிலையில், விலங்குகள் அமைப்பு ஒன்று அதனை பசு வதையாக முறையிடுவது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

Friday, 16 September 2016

இஸ்லாத்தை தழுவி ஹஜ் கடமையை நிறைவேற்றிய இங்கிலாந்து தூதர் !

         

      சவூதி அரேபியா, செப்.16
மேற்கத்திய நாடுகளில் யூத, கிருஸ்தவ சதிகளால் இஸ்லாம் தூற்றப்பட்டும் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டும் வரும் நிலையில் அத்தகைய சதிகார கும்பலுக்கு மரண அடி தரும் வகையில் அதே மேற்கத்திய நாட்டு பிரபலம் ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ளார்.
சவுதி அரேபியாவிற்கான பிரிட்டிஷ் தூதர் சைமன் காலிஸ் அவர்கள் இஸ்லாத்தை தழுவி தனது மனைவியுடன் இந்த வருட ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

பிரிட்டனிலிருந்து வந்த 19,000 ஹஜ் யாத்ரீகர்களுடன் அவரும் தம் கடமையை நிறைவேற்றியதை பிரிட்டனுக்கான ஹஜ் கவுன்சில் மனமுவந்து வரவேற்றுள்ளது.
மேலும் சவுதி இளவரசி பாஸ்மாஹ் பின்த் சவூது அவர்களும் டிவிட்டர் வழியாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளாக இஸ்லாமிய உலகில் பல்வேறு அரசு பொறுப்புக்களை சுமந்து வாழ்வை கழித்துள்ள சைமன் காலிஸ் அவர்கள் அரபி மொழியை முறையாக பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Arab News

2070 இல் உலகளவிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள்! அமெரிக்க ஆய்வு மையம் தகவல்!



   அமெரிக்கா ஆய்வு மையம் தகவல்!
2050ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள் என்றும், 2070ல் உலக அளவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் என்றும் 'ஆய்வு' முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள ப்யூ (Pew) ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் 'உலக மதங்களின் எதிர்காலம்' என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்றாலும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களும் இந்தியாவில்தான் வசிப்பார்கள் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, இந்தோனேஷியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
2050 வாக்கில் ஐரோப்பாவில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இருமடங்காகியிருக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
புத்த மதத்தைப் பொறுத்தவரை, 2010ல் எந்த எண்ணிக்கையில் இருந்ததோ, அதே எண்ணிக்கை நீடிக்கும்.
உலகில், ஒவ்வொரு மதத்திலும் தற்போது இருப்பவர்களின் எண்ணிக்கை, எந்தெந்தப் பகுதிகளில் வசிக்கிறார்கள், அவர்களுடைய வயது, பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், சர்வதேச அளவில் இடம்பெயர்தல், மதமாற்றம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக ப்யூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2050 ஆம் ஆண்டு அமெரிக்காவை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் உருவெடுக்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனம்
PEW RESEARCH CENTER அறிவிப்பு
20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க முஸ்லிம்களின் எண்ணிக்கை குறிப்பிட்டு சொல்ல தக்க விதத்தில் இருக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் உருவெடுத்துள்ளது.
மேலும் ஒவ்வொரு நாளும் இஸ்லாத்தின் வளர்ச்சி அமெரிக்காவில் விரைவாகி கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டில் அமெரிக்காவை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் உருவெடுத்து விடும். அமெரிக்காவின் சிறுபாண்மை மதங்களில் ஒன்றாக கிருத்துவம் சுருங்கி விடும் என்று வாஷிங்டெனில் இயங்கும் ஆய்வு நிறுவனம் PEW RESEARCH CENTER தனது ஆய்வு ஒன்றில் குறிப்பிட்டிருப்பது அமெரிக்கர்களிடையே பரபரப்பை உருவாக்கி இருக்கறது.
இறை மறுப்பாளர்கள் சத்தியத்தின் ஒளியை தாங்கள் வாய்களால் ஊதி அணைக்க முயல்கின்றனர் இறைமறுப்பாளர்கள் விரும்பவில்லை என்றாலும் இறைவன் தனது மார்கத்தை முழுமையாக்கியே தீருவான்என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும்விதமாக இந்த ஆய்வு அமைகிறது.
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 13 September 2016

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட ராணுவத்தினர்

மெந்தர்: 

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.  மேலும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இந்த வருடம் பதினெட்டு இலட்சம் பேர் புனித ஹஜ்ஜை நிறைவேற்றியுள்ளனர்.: சவுதி அமைச்சகம் தகவல்!


ஹஜ் (Hajj) என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வயதுவந்த, உடல் நலமும், பணவசதியும் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களின் ஹஜ் பயணமும் கடமையாக்கப்பட்டுள்ளது.
ஹஜ் கடமையின் ஒவ்வொரு வழிபாடும் நபி இப்ராஹிம் (அலை) அவர்களையும், அவர்களின் மனைவி ஹாஜரா (அலை) அவர்களையும், மகன் இஸ்மாயில் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூருவதாக அமைகின்றது.
ஹஜ் செல்பவர்கள் துல்ஹஜ் பிறை 8ஆம் நாள் மினாவிற்குச் செல்ல வேண்டும். துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதித்த பின் அரஃபா செல்ல வேண்டும். அரஃபாவுடைய தினம், மிக சிறப்பான தினமாகும். துல் ஹஜ் பிறை 10ஆம் நாள் சூரியன் உதயமாகுவதற்கு முன் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு மினா வர வேண்டும்.
10ஆம் நாள் மினாவில் செய்யும் நான்கு அமல்கள். ஜம்ரத்துல் அக்பாவிற்கு மாத்திரம் ஏழு கற்களை வீச வேண்டும், கல் எறிந்ததற்குப் பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். அதாவது ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஒன்றை அல்லாஹ்விற்காக அறுப்பதாகும்.
குர்பானி கொடுத்த பின் தலை முடியை எடுத்து, குளித்து மணம்பூசி தனது வழமையான ஆடையை அணிந்து கொண்டு தவாபுல் இஃபாலா செய்வதற்காக மக்கா செல்ல வேண்டும்.
11ஆம் நாள் ளுஹருடைய நேரம் வந்ததிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும். 12ஆம் இரவும் மினாவில் தங்குவது அவசியமாகும்.
12ஆம் நாளும் மூன்று ஜம்ராக்களுக்கும் ளுஹர் தொழுகையின் பின் கல் எறிய வேண்டும். 12ஆம் நாளோடு ஹஜ் கடமையை முடித்துவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன் மினா எல்லையை விட்டும் வெளியாகிவிட வேண்டும்.
ஹஜ் கடமையை முடித்துவிட்டு தன் வீடு செல்ல விரும்புபவர்கள் கடைசியாகச் செய்யும் அமல் தவாபுல் வதாவாகும். தவாபுல் வதா என்பது கஃபத்துல்லாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் தவாபாகும். அதுவே ஹஜ் செய்பவரின் கடைசி அமலாகும்.
புனித ஹஜ்ஜை நிறைவேற்ற இந்த வருடம் ஹஜ் செய்தோர் எண்ணிக்கை 18,62,909 (பதினெட்டு இலட்சத்து அறுபத்தி இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது). 2012ம் ஆண்டு 31 இலட்சம் பேர் ஹஜ் செய்ததே கடந்த பத்து ஆண்டுகளில் அதிகபட்சம் ஆகும் என சவூதி அரசாங்கம் தங்களின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தகவல்: சவூதி அரசாங்கம்

Monday, 12 September 2016

ஹஜ் பெருநாளையொட்டி சவுதி மற்றும் துபாய் சகோதர்கள் பெருநாள் சந்திப்பு சிறப்பு .

ஹஜ் பெருநாளையொட்டி சவுதி மற்றும் துபாய் சகோதர்கள் பெருநாள் சந்திப்பு  சிறப்பு .

 பெரும்பாலான நமதூர்வாசிகள் இந்த ஈத்கானாவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.



அதன் புகைப்படம் இதோ உங்கள் பார்வைக்கு .










ஹஜ் பெருநாளையொட்டி ஜித்தாவில் சர்பியாஹ் (Sharfiyah )காலை 6.10 மணி அளவில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஹஜ் பெருநாளையொட்டி ஜித்தாவில் சர்பியாஹ் (Sharfiyah )காலை 6.10 மணி அளவில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெரும்பாலான நமதூர்வாசிகள் இந்த ஈத்கானாவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
அதன் புகைப்படம் இதோ உங்கள் பார்வைக்கு .