தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக சிறைக் கைதிகளும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறினார்.
மீனாட்சி கல்லூரியில் இன்று விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜேஷ் லக்கானி, தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.
சிறையில் இருக்கம் கைதிகள் கூட வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், சிறைக் கைதிகள் தபால் மூலம் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் தமிழக சிறைகளில் இருக்கும் 13 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்தார்

No comments:
Post a Comment