தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்ததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து விதமான விளம்பரப் பதாகைகளையும் தொடர்புடைய அலுவலர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரும், மாவட்டத்தேர்தல் நடத்தும் அலுவலருமான என்.சுப்பையன் உத்தரவிட்டார்.
ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக்கூட்டத்தில் அவர் பேசியது:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதால், அதை கடைப்பிடிப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் விழிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து விதமான பதாகைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சாலையோர பதாகைகளை அப்புறப்படுத்த வேண்டும். பறக்கும் படை குழுக்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவேண்டும்.
ஒவ்வொரு சட்டப்பேரவைத்தொகுதிகளிலும் கலந்தாய்வு கூட்டங்களை அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டும்.
பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு 3 நாள்களுக்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டும்.
கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். தொலைக்காட்சி, செய்தித்தாள், துண்டு பிரசுரம் போன்ற விளம்பரங்களுக்கு முன் அனுமதி சான்று பெற வேண்டும்.
நகர்ப்புறங்களில் வீட்டு உரிமையாளர்கள் அனுமதித்தாலும், சுவர்களில் விளம்பரம் எழுதுவதற்கு அனுமதி இல்லை.
கிராமப்புறங்களில் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியுடன் சுவர் விளம்பரம் எழுதலாம். வேட்பாளர்களின் செலவுக்
கணக்கில் சேர்க்கப்படும்.
கணக்கில் சேர்க்கப்படும்.
இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கட்சிகளின் கொடிகளுக்கு அனுமதி பெற வேண்டும் என்றார் ஆட்சியர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம்.மயில்வாகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment