Saturday, 12 March 2016

வாட்ஸ் அப்பில் புதிதாக 5 அம்சங்கள் அறிமுகம்.


உலகெங்கிலும் 100 கோடிக்கும் மேலானவர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் அப்ளிகேசனில் புதிதாக 5 அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் அப்ளிகேசனின் சமீபத்திய அப்டேட் இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது, அந்த பதிப்பு 2.12.15 ஆகும், அதில் புதிதாக 5 அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக நமது வாட்ஸ் அப் உரையாடல்கள் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் ஆகியுள்ள அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்..
1) மேம்படுத்தப்பட்ட புகைப்பட பகிர்வு: (Enhanced photo sharing)
நாம் வாட்ஸ் அப் வாயிலாக அதிகமாக போட்டோக்களை ஷேர் செய்து வருகிறோம், இனி நமது டிராப் பாக்ஸ் (Drop Box), கூகுள் டிரைவ் ( Google Drive) மற்றும் மைக்ரோசாஃப்ட் ஒன் டிரைவிலிருக்கும் ( One Drive) போட்டோக்களையும் பகிரும் வசதி வாட்ஸ் அப்பில் உருவாகியுள்ளது. 
2) ஆவண பகிர்வு: ( Document sharing )
போட்டோக்களை பகிர்வதைப்போலவே இனி ஆவணங்களையும் பகிரும் வசதி உருவாகியுள்ளது, எனினும் 100mb அளவுள்ள ஆவணங்களை மட்டுமே பகிர இயலும்.
3) பின்னணி வண்ணங்கள்: ( Background colours)
நமது வாட்ஸ் அப் உரையாடல்களின் பின்னணியில், நமக்கு பிடித்தமான வண்ணங்களை இனி உபயோகிக்கலாம், இது ஹைக் ( Hike)ஆப்-பில் ஏற்கனெவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
4) சேமிப்பு திறன்: ( Storage space)
நமது மொபைலில் வாட்ஸ் அப் ஆப் பயன்படுத்தும் இடம் குறைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆடியோ, போட்டோ, மெசேஜ்களை சேமிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
5) வீடியோ ஜூம்: ( Video Zoom)
போட்டோக்களை ஜூம் செய்து பெரிதாக மாற்றி பார்ப்பதைபோல இந்த புதிய வாட்ஸ் அப் பதிப்பில் வீடியோ ஜூம் வசதி புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் செய்யப்பட்ட பதிப்பு ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் மொபைல்களிலும் கிடைக்கப்பெறும்.
 

No comments:

Post a Comment