Saturday, 12 March 2016

விவசாயிகளின் வங்கி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தல்.


விவசாயிகளின் வங்கி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தல்
விவசாயிகளின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. 
செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, தேர்தல் கூட்டணி குறித்து திமுக உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி முடிவு செய்யப்படும் என கூறினார். 
நெல்லை வேளாண்மை அதிகாரி முத்துகுமாரசாமி கொலை வழக்கை தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பாகவி, விவசாயி பாலன் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment