Showing posts with label முக்கிய செய்திகள். Show all posts
Showing posts with label முக்கிய செய்திகள். Show all posts

Friday, 2 September 2016

மூன்று முறை 'தலாக்' என்று கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறையை எதிர்த்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் தாக்கல் செய்துள்ள வழக்கில், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


“மதரீதியிலான சட்டவிதிகளில்  உச்சநீதிமன்றம் தலையிடமுடியாது”
மூன்று முறை 'தலாக்' என்று கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறையை எதிர்த்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் தாக்கல் செய்துள்ள வழக்கில், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், சமூக மாற்றம் என்ற பெயரில் குரானில் சொல்லப்பட்ட சட்ட முறைகளை
உச்ச நீதிமன்றம் மாற்றி விவரிக்க முடியாது என்றும்,
தனிப்பட்ட மதரீதியான  சட்டவிதிமுறைகளை உச்ச நீதிமன்றம் மாற்றியமைக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மூன்று முறை, 'தலாக்' எனக் கூறி, விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.  இதுகுறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Sunday, 28 August 2016

நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா?.


நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா?
என்றால் கண்டிப்பாக உங்கள் உடம்பில் எந்த வேதனைகள் வரவும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அக்குபஞ்சர் நிபுணர்கள்
குறிப்பு : சிலர் அவசர கெதியில் தக்பீர் கெட்டி நிமிர்ந்து நிற்காமல் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே நிற்பர்,
ருக்கூ, பின்பு எழுந்து நிற்பது மற்றும் ஸுஜூதில் உடம்பில் உள்ள உருப்புகள் அதன் அதன் இடங்களில் அமைதி பெரும் வகையில் செய்யாமல் ஒழுங்கற்ற முறையில் செய்வார்கள் அவர்களுக்கு இது பொருந்தாது என்கிறார்கள், மருத்துவர்கள்.

Tuesday, 23 August 2016

இஸ்லாமிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வற்புறுத்தியவர்கள் கைது.


        விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு, இஸ்லாமிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்ததாக 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் விநாயகர் மண்டல் என்ற அமைப்பினர் போசாரி பகுதியில் உள்ள பேக்கரியில் 151 ரூபாய் நன்கொடை கேட்டுள்ளனர். நன்கொடை தர மறுத்ததால் கடையில் இருந்த 4 ஊழியர்களை  தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். அவர்கள் தோப்புக் கரணம் போட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில் 3 பேர் கைதாகியுள்ளனர்.

Wednesday, 27 July 2016

கோமாதாவுக்கு ஜே என்று கத்தியபடி 2 முஸ்லீம் பெண்களை சரமாரியாக உதைத்த கும்பல்..!


மண்டசூர், மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசூர் என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் மாட்டுக் கறியுடன் வந்த இரு முஸ்லீம் பெண்களை ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த போலீஸாரின் செயலும் கடும் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதை வேடிக்கை பார்த்த பொதுமக்களும் தடுக்க முயலாமல் செல்போனில் படம் எடுத்தபடி இருந்தனர். போலீஸாரோ அரை குறை மனதுடன் தாக்கியவர்களை விலக்கி விட முயற்சித்தனர். ஆனால் பல சமயங்களில் அவர்கள் வேடிக்கை பார்த்தபடி சும்மாவே நின்றிருந்தனர். இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அந்தப் பெண்களை காலால் உதைத்தும், கையால் அடித்தும், கன்னத்தில் அறைந்தும் மோசமாக நடந்து கொண்டது.
அந்த இரு பெண்களும் விற்பனை செய்வதற்காக 30 கிலோ மாட்டுக் கறியுடன் ரயிலில் வந்துள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு சிலர் பசு கறியுடன் வருவதாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்வதற்காக போலீஸார் வந்தனர். அந்த சமயத்தில்தான் அப்பெண்கள் இருவரும் தாக்கப்பட்டனர்.
விடாமல் தாக்குதல்
போலீஸார் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றபோதும் கூட அக்கும்பல் அப்பெண்களை தொடர்ந்து விடாமல் தாக்கிய வெறித்தனம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
கோமாதாவுக்கு ஜே
தாக்குதல் நடத்திய கும்பல் புனித கோமாதாவுக்கு ஜே என்று வாழ்த்தி கோஷமும் போட்டபடி தாக்கினர். அவர்கள் தாக்கியதில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த அராஜக தாக்குத் நடந்தது.

Thursday, 30 June 2016

இலங்கை இந்தியாவில் வெப்பத்தால் பலியாகப் போகும் பல லட்சம் மக்கள்!


நேற்று உலக மின்சக்தி நிறுவனம் வாயு மாசடைதலால் வருடாந்தம் 6.5 மில்லியன் மக்கள் இறக்கின்றார்கள் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தது.
இது தொடர்பாக இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கருத்துக்களைப் பகிர்ந்த ஆய்வாளர் சுரேஸ் தர்மா அவர்கள், உலகின் முன்னுள்ள அபாயங்கள் எவ்வாறானவை, எவ்வாறான அழிவுகள் இப்போது இடம்பெறுகின்றன என்பது பற்றியும்,
இந்த நூற்றாண்டின் இறுதியில் எவ்வாறான மாற்றங்களை எமது சந்ததியினர் எதிர்கொள்ளப் போகின்றார்கள்.
எவ்வாறான அழிவுகளை உலகம் பெறப் போகின்றது.
குறிப்பாக இலங்கை, இந்தியா, ஐரோப்பா, கனடா போன்றவற்றில் ஏற்படப் போகும் மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

Saturday, 25 June 2016

இந்த உணவுகள் ஏன் இந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டன என்று உங்களுக்கு தெரியுமா?


நாம் விரும்பி உண்ணும், பருகும் சிலபல உணவுகள் உலகின் பல நாடுகளில் ஆரோக்கிய நலன் குறித்து தடைசெய்யப்பட்ட பொருள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்! முக்கியமாக சமோசா, கெட்சப், சூயிங்கம், பாதாம், ஜெல்லி ஸ்வீட்ஸ் என இந்த பட்டியல் நீள்கிறது.
பெரும்பாலும் இந்த உணவு பண்டங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதால் தான் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல், எந்தெந்த நாடுகளில் எந்தெந்த உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளன என பார்ப்போம்...
இந்தியாவில் மிக சாதாரணமாக கருதப்படும் சமோசா, சோமாலியாவில் தடைசெய்யப்பட்ட உணவாகும். முக்கோண வடிவம் கிறிஸ்துவ மதத்தை குடிப்பது போன்று இருப்பதாலும், இஸ்லாம் மதத்திற்கு இது இணக்கமற்றதாக கருதப்படுவதாலும், சமோசா தடைசெய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் ஆரம்ப பள்ளிகளில் கெட்சப் தடைசெய்யப்பட்ட பொருளாகும். இது குழந்தைகள் மத்தியில் ஓர் அடிக்ஷனாக இருக்கிறது. அனைத்திற்கும் இதை சேர்த்துக் கொள்கின்றனர். இதை கலாச்சார அபாயமாக கருதி தடை செய்துள்ளனர்.
அமெரிக்காவில் கிண்டர் எக் தடைசெய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருளாக திகழும் இதில் பொம்மைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த உண்ணக் கூடாத பொருள் உள்ளே இருப்பதால் தான் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் தவறுதலாக பிளாஸ்டிக் பொருளை உண்டுவிடக் கூடாது என்பதற்காக அமேரிக்கா இதை தடை செய்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து சூயிங்கம் மெல்வது சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்படாமல் யாரும் சூயிங்கம் மெல்லக் கூடாது. மீறினால், 500 டாலர் அபராதம். சிங்கப்பூரின் அடையலாமே சுத்தம் தான், அதை இது கெடுக்கிறது என்பதற்காக தான் இந்த தடை.
கஞ்சா கலந்து விற்கப்படும் பாங்கு இந்தியா மட்டுமின்றி, உலகின் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் பச்சை பாதாம் விற்க தடை. சால்மோனெல்லா (salmonella) எனும் பாக்டீரியா பாதிப்பு உண்டாக இது காரணமாக இருப்பதாலும், இதனால், அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்படுகிறது என்பதாலும் பச்சை பாதாம் விற்பதை தடை செய்துள்னர்.
பெரும்பாலான காற்றோட்டமுள்ள சிட்ரஸ் ட்ரிங்க்ஸ்களான மவுண்டன் டியூ போன்றவற்றில் சேர்க்கப்படும் மூலப்பொருளான பி.வி.ஓ நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருளாகும். பி.வி.ஓ அதிகளவில் சேர்வது, ஞாபக சக்தி இழப்பு, மயக்கம், கவன குறைபாடு போன்ற பக்கவிளைவுகள் உண்டாக்க கூடியது ஆகும்.
Source
பச்சை பால் அமெரிக்காவின் 22 மாகணங்களில் தடை செய்ப்பட்டுள்ளது. ஆனால், இது ஐரோப்பிய, ஆப்ரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் பொருளாகும்.
ஜெல்லி ஸ்வீட்ஸ் ஐரோப்பிய கண்டங்களில் தடை செய்யப்பட்ட பொருளாகும். இவற்றில் சேர்க்கப்படும் மூலப்பொருள், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.

Tuesday, 7 June 2016

நீங்கள் ஒரு N.R.I.யா..? இந்தியாவில் உங்களது வங்கி கணக்குகளை பராமரிப்பது எப்படின்னு தெரியுமா..?

அயல்நாட்டில் வேலை கிடைத்திவிட்டதா? விசா கிடைத்த உடன், வெளிநாட்டு பயனத்திற்கு தயராகும் உங்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
விமானம் ஏறும் முன், உங்கள் வங்கி கணக்குகளை கண்டிப்பாக சரி பார்க்க வேண்டும், இல்லையெனில் இந்திய வங்கி கிளைகளில் இருக்கும் கணக்குகளுக்கும் அயல்நாட்டு வங்கியின் கணக்கிற்கும் உள்ள தொடர்பில் பல பிரச்சனைகள் கொண்டு வரும்.இதனால் நம் தலை தான் உருளும்.
இதனை தவிர்க்கவும், சிக்கல்களை எளிதாக தீர்க்கவும், கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.

1
181 நாட்கள்
முதன் முறையாக அயல்நாட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கு "நியமனம் ஆணையில் 181 நாட்களுக்கு அதிகமாக வேலை செய்பவர் என்று உறுதி அளிக்கப்பட்டு இருக்கும்". இதனால் 181 நாட்களுக்கு பிறகு அவர் என்ஆர்ஐ என்னும் அங்கீகாரத்தை அடைவர், எனவே பயனத்திற்கு முன்பே என்ஆர்ஐ கணக்கை தொடங்கலாம்.

2
என்ஆர்ஐ கணக்கு
என்ஆர்ஐ கணக்குகளை துவங்க, பயணம் செய்யும் நாடுகளையும், நாட்களை பொருத்து வங்கிகளே உங்களை என்ஆர்ஐ கணக்குகளை துவங்குவதற்காக உங்களை அனுகலாம், இல்லையென்றால் உங்கள் சம்பள கணக்கு இருக்கும் வங்கியில் நீங்கள் இணைய மூலமாகவோ அல்லது நேரடியாக தொடர்புகொள்ளுங்கள்.
சரி, புது கணக்கு துவங்கியாச்சு.. ஏற்கனவே இந்தியாவில் உங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகள், வைப்பு நிதி மற்றும் முதலீடுகளின் நிலை என்ன என்பதை பற்றி இங்கு காண்போம்.

3
உங்கள் பெயரில் உள்ள கணக்குகள்
உங்கள் பெயரில் இருக்கும் அனைத்து கணக்குகளும் என்ஆர்ஒ கணக்குகளாக மற்றப்படும். இதனால் கணக்கின் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு, ஆனால் வருமான வரி 30.9 சதவிதத்தில் கணக்கிடப்படும்.

4
கூட்டுக் கணக்கு
கூட்டுக் கணக்கில் இருக்கும் இரண்டாம் நபரின் கணக்குகளும் என்ஆர்ஒ கணக்குகளாக மற்றப்படும். இதனால் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படாவிட்டாலும், வருமான வரி 30.9 சதவிதத்தில் கணக்கிடப்படும்.

5
கூட்டுக் கணக்கில் நிங்கள் இரண்டாம் நபராக இருந்தால்?
இத்தகைய நிலையில் நிங்கள் என்ஆர்ஐ தகுதியை அடைந்த பிறகு, இந்த கணக்கை வித்தியாசமான முறையில் கையாளப்படும். அதாவது இந்த கணக்கை முதல் நபர் உயிருடன் இருக்கும் வரை இரண்டாம் நபரால் உபயோகப்படுத்த முடியாது.

6/9
வங்கி வைப்பு நிதிகள்
என்ஆர்ஐ தகுதியை அடைந்த பிறகு அனைத்து வைப்பு நிதிகளும் என்ஆர்ஒ வைப்பு நிதிகளாக மாற்றப்படும். இதனால் நிதியின் வட்டி விகிதம், முதிர்வு அடையும் காலம் என எதிலும் மாற்றம் இருக்காது. ஆனால் வருமான வரி மட்டும் 30.9 சதவிதமாக கணக்கிடப்படும்.

7/9
பிபிஎஃப் கணக்குகள்
2003ஆம் ஆண்டுக்கு முன் இந்த கணக்குகளில் முதலீடு செய்ய அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் 25.7.2003 அன்று வந்த சட்ட திருத்தத்தின் படி, பிபிஎஃப் கணக்கு முதிர்வு அடையும் வரை முதலீடு செய்யலாம். மேலும் இந்த கணக்குகள் என்ஆர்ஐ தகுதி அடையும் முன் தொடங்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஒரு என்ஆர்ஐ பிபிஎஃப் கணக்குகளில் முதலீடு செய்ய என்ஆர்இ அல்லது என்ஆர்ஒ கணக்குகளை பயன்படுத்த வேண்டும்.

8/9
டீமாட் மற்றும் பங்குகள் உரிமைகள்
என்ஆர்ஐ பங்கு சந்தையில் முதலீடு செய்ய பிஐஎஸ் (Portfolio Investment Services) கணக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்ஆர்ஐ தகுதி அடையும் முன் வாங்கிய பங்குகளை பிஐஎஸ் கணக்கிற்கு மாற்றி கொண்ட பின் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.

9/9
கூட்டு என்ஆர்இ கணக்குகளை தொடங்கவும்
பயனத்திற்கு முன்பு, இந்தியாவில் என்ஆர்இ கணக்குகளை தொடங்கி அதில் கூட்டு நபரை சேர்க்கவும். இதனால் உங்கள் வருமானத்தைக் கொண்டு இந்தியாவில் உள்ள முதலீட்டை அவர் பராமரித்துக் கொள்வர். 

Friday, 6 May 2016

குர்ஆனின் கூறும் யூனுஸ் நபியின் வரலாற்றைமெய்பித்த அதிசய மனிதர் லுயிகி மார்கியூஸ்மூன்று தினங்கள் மீனின் வயற்றில் வாழ்ந்து மீண்டு வந்த அதிசய மனிதர் .


ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது மோசமான வானிலை காரணமாக மாயமானார்.
தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.
ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் ராட்சத திமிங்கில கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர்.
தான் 72 மணி நேரம்  திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.
இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-
நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.
இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது குர் ஆன் கூறும் யூனுஸ் நபியின் வரலாற்றை நினைவு படுத்துகின்றது
சில தினங்கள் நபி அவர்கள் மீனின் வயிற்றில் வாழ்ந்த வரலாற்றை திருகுர்ஆன் குறிப்பிடுகிறது இனி யூனுஸ் நபியின் வரலாற்றை பற்றி குர்ஆன் கூறுவதை கேளுங்கள்
'இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.
அவர் நம்மை துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.
அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்'
-குர்ஆன் 37: 143,144,145
யூனுஸ் நபி அவர்கள் பல நாட்கள் மீன் வயிற்றி்ல் இருந்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அவர்கள் மீண்டும் உயிருடன் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்ற நிகழ்ச்சியை திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.
நபி யூனுஸ் பின் மத்தா அவர்கள் (யோனா - Jonah) கி.மு 8-ம் நூற்றாண்டில் இராக்கிலுள்ள நைனுவா என்னும் பகுதிக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். சிலைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவருடைய சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக பல்லாண்டுகள் பாடுபட்டார்கள். ஆனாலும் அவருடைய சமூகம் அவரை நிராகரித்துவிட்டது. இதனால் மனம் வெறுத்துப் போன நபி யூனுஸ் அவர்கள் அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமலேயே அந்த ஊரை விட்டும் வெளியேறி விட்டார்கள்.
அல்லாஹ்வின் ஆணையின்றி வெளியேறுவது தவறு என்று உணராமலேயே அங்கே பயணிக்க தயாராக இருந்த கப்பலில் ஏறி சென்று விட்டார்கள். எனவே அல்லாஹ் அவரை தண்டிக்க நினைத்தான். அவர் பயணித்த கப்பலை நடுக்கடலில் தடுமாற, தத்தளிக்க வைத்தான். இறுதியில் அக்கப்பலில் யாராவது ஒரு நபர் இறங்கினால் தான் மற்றவர்கள் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே அவர்களுக்கிடையில் சீட்டு குலுக்கி போட்டார்கள். அதில் நபி யூனுஸ் அவர்களின் பெயர் வரவே அவர் கடலில் தூக்கி வீசப்பட்டார். அச்சமயம் அல்லாஹ் நபி யூனுஸ் அவர்களை விழுங்கும் படி ஒரு மீனுக்கு கட்டளையிட்டான். மீன் வயிற்றில் சிறைபிடித்தான். தவறை உணர்ந்து இறைத் தூதர் மன்னிப்புக் கேட்டவுடன் மீன் வயிற்றிலிருந்து அவரை விடுவிக்கிறான் இறைவன்.
ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம். மேலே சொன்ன தினத் தந்தியின் செய்தியும் இதனை உண்மைப்படுத்துகிறது.
மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான். கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு.
இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும். பெரும் கப்பலையே சாய்த்து விடும் வல்லமை உடையது இது என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.
திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும். மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன.
ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.
திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.
ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான்.
இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீன்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இந்நிகழ்வும் ஆதாரமாக இருக்கிறது.

Wednesday, 4 May 2016

சற்று முன் : இஸ்லாத்தை இழிவாகப் பேசிய 2 ஹிந்து ஆசிரியைகள் கைது


சற்று முன் : இஸ்லாத்தை இழிவாகப் பேசிய 2 ஹிந்து ஆசிரியைகள் கைது
6 மாத சிறை தண்டனை.
வங்கதேசத்தில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிகவும் கேவலமாகப் பேசிய 2 ஹிந்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டனை கொடுக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
A court in southern Bangladesh sentenced two Hindu schoolteachers to six months in jail for making “abusive” remarks about Islam that led a mob to attack their school, a magistrate said Tuesday

Wednesday, 27 April 2016

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத எவ்வித தடையும் இல்லை - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு....!!


மத்திய அரசின் மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பான விசாரணையை எடுத்துக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதில் எந்த ஒரு தடையும் இல்லை என்று அதிரடி தீர்பளித்துள்ளது.

Friday, 15 April 2016

முன்பு ஆயிரங்களில் இஸ்லாத்தில் நுழைந்தவர்கள், தற்போது லட்சத்தில் நுழைகிறார்கள்!!

Rasmin misc-

இன்றைய நவீன உலகை ஆளும் தகுதி படைத்த ஒரே வார்த்தை இஸ்லாம் மாத்திரமே! எந்தவொரு மதத்தினாலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை உலக வரலாற்றில் ஏற்படுத்திய பெருமை இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு. இஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்களை கூட தன் தூய கருத்தினால்,உண்மை செய்திகளினால் உள்ளிழுத்து நேர்வழியின் பக்கம் அவா்களை கொண்டு வந்த சத்திய மார்க்கம் தான் இந்த இஸ்லாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை இஸ்லாத்தை எத்தனையோ சக்திகள் அழிக்க நினைத்த போதும்,இறுதியில் இஸ்லாமே வெற்றிவாகை சூடியுள்ளது. இன்று வல்லரசுகள் என்று தங்களை மார் தட்டிக் கொள்ளக் கூடிய எத்தனையோ நாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக காய் நகர்த்தினாலும் அந்த நாடுகளில் இஸ்லாம் கிளை விடுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. 
இஸ்லாத்தில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு. 
கடந்த காலங்களை விட தற்போது இஸ்லாத்தின் பக்கம் வருபவா்களின் எண்ணிக்கை பண்மடங்காக உயர்ந்துள்ளது. அதே போல இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவர்களை தட்டிக் கேட்கும் மனப்பாங்கும் மக்கள் மத்தியில் துளிர் விட்டுள்ளது. பிரித்தானியா போன்ற நாடுகளில் இதுவரை எந்த மதமும் பெறாத அபார வளர்ச்சியையும் வரவேற்பையும் இஸ்லாம் கண்டுள்ளது. கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தில் நுழைந்த மேற்கத்தைய மக்கள் தற்போது லட்சத்தில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். கிருத்தவர்களின் தலைமை பீடமான வத்திக்கானிலிருந்து வெளிவரும் லோசேர் வேடோர் ரோம்மானோ ( LOSSERVATOR ROMMANO ) என்ற பிரபல பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு கருத்துக் கணிப்பில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கிறது என்றும், உலக சனத்தொகையில் 4ல் ஒருவா் முஸ்லிமாக வாழ்வதோடு, விகிதாசாரத்தின் அடிப்படையில் 28 சதவீதம் முஸ்லீம்களும் 24 சதவீதம் கத்தோலிக்கர்களும் காணப்படுவதுடன் மொத்த மக்கள் தொகையில் 130 கோடிப் பேர் முஸ்லீம்கள் என்றும் 112 கோடிப் பேர்தான் கிருத்தவா்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள் ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். (CNN) குறிப்பிடுகிறது. அதேபோல் வல்லரவு நாடுகளில் பொதுவாக வருடத்திற்கு 15 புதிய பள்ளிவாயல்கள் கட்டப்படுவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கருப்பின மக்களை அதிகம் கவரும் இஸ்லாம் 
ஜாதி,மொழி,நிறம் என்று பாகுபாடு காட்டும் மதங்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பலா் இன்று தூய கொள்கையின் பால் வந்தவண்ணம் இருக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளி்ல் கருப்பினத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்றத் தாழ்வு காட்டப் படுவதின் மூலம் மனதுடைந்து, வாழ்கையையே வெருக்கும் அளவுக்கு தள்ளப் பட்ட மக்களுக்கு உண்மையான தெளிவை இஸ்லாம் கொடுத்து மனிதனை மனிதனாக வாழ வைப்பதே இதற்கான காரணமாகும். ஐரோப்பா மற்றும் ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் அதிகமாக இளம் வயதினரே இஸ்லாத்தை தழுகிறார்கள் என்ற செய்தி அந்நாட்டு கிருத்தவத் தலைவர்களின் வயிறுகளில் புளியைக் கரைத்துள்ளது. இளம் வயதிலேயே இஸ்லாத்தினால் ஈர்க்கப் படும் பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பெண்கள் தாங்கள் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப் பட்டதற்கான காரணமாக ஹிஜாபைத் தான் தெரிவிக்கிறார்கள். பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில் கல்லூரிகளில் கல்வி கற்கும் இஸ்லாமியப் பெண்களுக்கு ஹிஜாப் அணிய தடை விதித்து சட்டம் இயற்றியதும் அதை எதிர்த்து அவா்கள் குரல் கொடுத்ததும் அணைவரும் அறிந்ததே! ஹிஜாப் அணிய வேண்டி நீதிமன்றம் சென்று வழக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முஸ்லீம் சகோதரி சபீனா. ஹிஜாப் அணிய தடை விதித்தற்காக நீதி மன்றங்கள் வரை சென்று வழக்கில் வெற்றி பெற்று கொண்ட கொள்கையை நிலை நிறுத்திய சகோதரிகளும் இந்நாடுகளில் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தாலி போன்ற நாடுகளில் பல சகோதரர்கள் குடும்பமாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதும் அங்குள்ள அரச குடும்பத்தை சேர்ந்தவர்களே இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளதும் அந்நாட்டு ஆளும் வர்க்கத்தை சிந்திக்க வைத்துள்ளது. இஸ்லாத்திற்கு எதிராக எத்தனையோ தடைகளை விதித்தும், அந்தத் தடைகளையெல்லாம் தாண்டி இஸ்லாம் வீறு நடை போடுவது தமக்கு வியப்பை ஏற்படுத்துவதாக ரோமன் கத்தோலிக்க முன்னனி அறிஞரான விக்டோரியா பார்மன்டி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மூடப்படும் தேவாலயங்களும், திறக்கப் படும் பள்ளிவாயல்களும் 
வட அமேரிக்கா , இங்கிலாந்து , ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் நாளாந்தம் பல தேவாலங்கள் மூடப்படுகின்றன. அதில் அநேகமானவைகள் இரவு நேர கலியாட்ட நிலையங்களாகவும், பார்களாகவும் மாற்றப் பட்டுள்ளன. சில தேவாலயங்களை முஸ்லீம்களே முழு நேர வாடகைக்கு வாங்கி பள்ளிகளாக அவற்றை பயன்படுத்தி வருகின்றனா். இங்கிலாந்தின் மின் செஸ்டர் ஜும்மா பள்ளியும் ஏற்கனவே தேவாலயமாக இயங்கிய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து உருவாக்கப்பட்டதே.
கடந்தாண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மிக முக்கியமானவர்கள்.
இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்து பள்ளிவாயல்களின் மினாராக்களுக்கெதிராக பிரச்சாரம் செய்தவருமான சுவிஸ் நாட்டை சேர்ந்த டேனியல் ஸ்ட்ரீக் கடந்தாண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் முழு சுவிஸ் மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அணைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதே நேரம் நான்கு பள்ளிகள் மாத்திரமே இருந்த சுவிஸ் நாட்டில் ஐந்தாவது பள்ளியாக தனது சொந்த செலவில் ஒரு பள்ளியை நிர்மானிக்க ஆரம்பித்தார்.ஐரோப்பாவிலேயே மிகவும் அழகான பள்ளியாக அதனை கட்டி முடிப்பதே அவரின் லட்சியம் என்றும் அவா் தெரிவித்திருந்தார். அதே போன்று பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் டோனி பிலேயரின் மணைவியின் தங்கையான இன்லா அவா்கள் இஸ்லாத்தை தழுவியது பலரை ஆச்சரியத்தைில் ஆழ்த்தியது லண்டனில் 1967 ஆம் ஆண்டு பிறந்த லாஉரன் பூத் ( Lauren Booth) பிறப்பில் கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர். இவர் லண்டனில் நடைபெற்ற உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான பேரணியில் வைத்து தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதாக செய்தியாளர்களிடம் பிரகடனப்படுத்தினார்.

Thursday, 14 April 2016

சிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி!! – ஜாமியத் உலமா தர்கா முப்தி பேச்சு. காவிகள் வழியில் செல்லும் பாவிகள்.


(இஸ்லாத்தை இழிவுபடுத்திய தர்கா வணங்கிகள்)
 எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர். வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்ராம்பூரில் நடக்கும் சமூக நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு துறவிகளுக்கு ஜாமியத் உலமா அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.
 அப்போது ஜாமியத் உலமா தர்கா முப்தி முகமது இலியாஸ் கூறுகையில், முஸ்லீம்களின் முதல் நபி கடவுள் சிவன் ஆவார். எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான். இந்தியாவை இந்து நாடு என்று அறிவிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனா மற்றும் ஜப்பானில் உள்ள மக்களை சீனர்கள், ஜப்பானியர்கள் என்கிறோம். அதே போன்று இந்தியாவில் உள்ளவர்களை இந்துஸ்தானியர்கள் என்கிறோம் என்றார்.
 இவரின் உளரல் இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைத்துள்ளது.
 தர்கா வழிபாட்டில் மூழ்கியவர்களூக்கு இது ஒன்று விநோதமல்ல்.
 இறைவனை மட்டும் பின்பற்றும் உண்மை முஸ்லிம்களிடத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Friday, 8 April 2016

விஞ்ஞானிகளே வியந்துப்போன இரண்டு குர்ஆன் வசனம்!


குர்ஆன் பல மதங்கள் வாழும் காலத்தில் அருளப்பட்டது என்றாலும்கூட அதன் உண்மை தன்மைக்கோ அல்லது அதன் விஞ்ஞான தன்மைக்கோ இழுக்கு ஏற்பட வில்லை டார்க் ஏஜஸ் (உலகத்தில் எந்த கண்டுபிடிப்பும் இல்லாத கருப்பு ஆண்டு)
என்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் கூறும் காலத்தில் தான் இஸ்லாமிய விஞ்ஞான வளர்ச்சி மிகவும் அபாரமாக வளர்ந்து வந்தது …
அவர்கள் அது டார்க் ஏஜ்ங்க அப்போது எந்த கண்டுபிடிப்புக்கும் சாத்தியம் இல்லை என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார் ஆனால் அந்த காலத்தில் முஸ்லீம்கள் கண்டுபிடித்த மூளக்கருவை வைத்து பின்னாளில் பெயர் வாங்கி கொண்டவர்கள் ஏராளம் உதாரணத்திற்கு ஒன்று ஒன்று சொல்லலாம்.
அப்பாஸ் அல் ஜஹ்ராவி
இவர் தான் விமானத்தின் மூலக்கரு நமக்கு ரைட் சகோதர்களை தெரியும் ஆனால் அப்பாஸ் அல் ஜஹ்ராவியை தெரியாது.
இவர் மரண தருவாயில் சொன்ன ஒரே வார்த்தை இந்த உலகில் உள்ள மனிதன் நிச்சயம் ஒரு நாள் வானத்தில் பறப்பான். .
ஆக இவ்வளவு விஞ்ஞானத்தை இவர்களுக்கு ஊக்குவிக்க நிச்சயம் ஒரு இறைவாக்கு இறுந்தது அதுதான் அல் குர்ஆன் அந்த வகையில் வரும் இரண்டு வசனங்களை பாருங்கள்.
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல் குஆன் 39:21)
இரண்டாவது வசனம்.
மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்” (அல் குஆன் 23:18)
இதைப் பற்றி “The Bible, The Qura’n and Science” என்ற உலகப்புகழ் பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் விஞ்ஞான ஒளியில் பைபிளும், குஆனும்) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, The qura’n and Modern Science (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்:-
Water cycle என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
குர்ஆனில் கூறப்படுகின்ற water cycle பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது.
நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர்.
உதாரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம்.
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான் (அல் குஆன் 39:21)
இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாக தெரிகிறது என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது.
இந்த water cycle கோட்பாட்டை Bernard Palissy என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார்.
16 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவ வாதியின் கருத்துக்களான கடல் நீர் காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுக்களாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Descartes போன்ற சிறந்த சிந்தனையாளாகள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர்.
18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவ மேதை என போற்றப்படுகின்ற அஸ்டாட்டிலின் கோட்பாடான மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள ஊற்றுக்களில் நீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது என்று நம்பி வந்தனர்.
ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்பதைக் கூறுகின்றது.
இன்றைய காலக்கட்டத்தில் கண்டுபடிக்கப்பட்ட இந்த நவீன அறிவியல் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்துள்ளது …. 

Saturday, 2 April 2016

சவூதியில் வேலை செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி!


சவூதியில் வேலை பார்க்கும் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு முக்கியமான செய்தி யாரும் தாங்கள் பெயரில் (finger print) வைத்து வாங்கிய internet sim card ல் தயவுசெய்து எந்த ஒரு காலிங் டாலர் போட்டு ஊருக்கு பேச வேண்டாம் அப்படிபேசினால் நிமிடத்திற்கு 3 ரியால் விகிதம் கணக்கு வைத்து மொத்தமாக ஊருக்கு போகும்போது airport ல் வசூலிக்கப்படும் இன்று ஒரு நண்பர் dammam airport ல் 1600 riyal அபராதம் காட்டியுள்ளார்.
இதை அதிகமாக பகிர்ந்து சவுதி வாழ் நம்மக்கள் அனைவர்க்கும் தெரியபடுத்தவும் நண்பர்களே.. தற்சமயம் நண்பர் கலுங்கு அப்துல்காதர் ஜித்தாவில் இருந்து கொடுத்த தகவல் ஜித்தா ஏர்போர்ட்டில் ஒருமலையாளிக்கு 3000 riyal அபராதம் வாங்கியதாக தகவல் சொன்னார் மலையாள டிவி சேனலிலும் இந்த செய்தி அறிவிக்கப்பட்டது

Tuesday, 15 March 2016

ஷரீஅத் சட்டத்திற்கு பங்கம் வரக் கூடாது, பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும் அரசியல் சாசன 44 ஆம் பிரிவு நீக்கப்பட வேண்டும் என முஸ்லிம் லீக் ஜனாதிபதியிடம் ஒரு கோடி கையெழுத்துக்களை ஒப்படைத்து வலியுறுத்தல்!!


ஷரீஅத் சட்டத்திற்கு பங்கம் வரக் கூடாது, பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும் அரசியல் சாசன 44 ஆம் பிரிவு நீக்கப்பட வேண்டும் என சமுதாயத் தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள்,
ஜனாதிபதியிடம் ஒரு கோடி கையெழுத்துக்களை ஒப்படைத்து வலியுறுத்தல்!!
பொதுசிவில் சட்டத்தை பரிந்துரை செய்யும் அரசியல் சாசனம் 44 வது பிரிவை ரத்து செய்யக்கோரியும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான ஷரீஅத் சட்டத்தைக் காத்திட வேண்டியும், தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை நடத்தியது.
நாடு முழுவதும் பெற்ற ஒரு கோடி கையெழுத்து படிவங்களை, இன்று டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவர் மேதகு பிரணாப் முகர்ஜி அவர்களை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது ஸாஹிப் எம்.பி., தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் ஸாஹிப் எக்ஸ் எம்.பி., தேசிய செயலாளர்கள் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி., குர்ரம் உமர் அனீஸ்,தேசிய துணைச் செயலாளர் ஆம்பூர் அப்துல் பாசித் எக்ஸ் எம்.எல்.ஏ., கேரள மாநில செயலாளர் அப்துல் வஹ்ஹாப் எம்.பி., ஆகியோர் நேரில் சந்தித்து அளித்தனர்.
ஷரீஅத் சட்டத்திற்கு பங்கம் வந்த போதெல்லாம், அல்லாஹ்வின் பேரருளால் அதனை சட்ட ரீதியாகச் சந்தித்து, அதனை தவிடு பொடியாக்கிய வரலாறு தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மட்டுமே உண்டு.
ஜஸாக்கல்லாஹூ கைரன்

Sunday, 13 March 2016

தொழுகை செய்வதை 5-ல் இருந்து ஒன்றாக குறைக்கவேண்டிய காலம்; பொது இடங்களில் அனுமதிக்க கூடாது - தஸ்லிமா நஸ்ரின்.

புதுடெல்லி, 

தினமும் 5 முறை தொழுகை செய்வது என்பதை ஒன்றாக குறைக்க வேண்டிய காலம் என்றும் பொது இடங்களில் அனுமதிக்க கூடாது என்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கூறிஉள்ளார். 
வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். கடந்த 20 வருடங்களில் அவர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடமாறி வாழ்ந்து தனது எழுத்துப் பணியை தொடர்கிறார். கடந்த வருடம் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்திகர் என்று தஸ்லிமா குறிப்பிட்டு இருந்தார்.

சில ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் வழிப்பாட்டு அறைகள் மூடப்பட்ட விவகாரங்களில் இஸ்லாமியர்கள் அதிருப்தியை வெளியிடுவதை சாடிஉள்ள தஸ்லிமா நஸ்ரின், ”ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் வழிப்பாட்டு அறைகளை மூடியது மிகவும் நல்ல முடிவாகும். இஸ்லாமியர்கள் கோபமாக உள்ளனர். அவர்கள் மட்டுமே வழிபாடு செய்யும் மக்கள். பள்ளிகள், அலுவலகங்கள், விமான நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என அனைத்து பொது இடங்களிலும் உள்ள வழிப்பாட்டு அறைகளை மூடவேண்டும், உங்களுக்கு விரும்பம் இருந்தால் உங்களுடைய வீட்டில் தொழுகை நடத்துங்கள்,” என்று கூறிஉள்ளார். 
டுவிட்டரில் தொடர்ச்சியாக தகவலை பதிவு செய்துஉள்ள தஸ்லிமா நஸ்ரின், ”மக்கள் ஒருநாளைக்கு 50 முறை தொழுகை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சிறகுடைய குதிரையில் நபி சொர்க்கம் சென்று கடவுளை சந்தித்தார், அப்போது 50 முறை தொழுகையை 5 ஆக குறைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டாரம். இப்போது 5 முறையை ஒன்றாக குறைக்க வேண்டிய காலம் ஆகும்.” என்று கூறிஉள்ளார். 
கடந்த வருடம் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்து பேசிய தஸ்லிமாவிடம், இஸ்லாமியத்தின் மீதான உங்களது விமர்சனம் ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பட்டது. தஸ்லிமா பதில் அளிக்கையில் மதம் பெண்களை துன்புறுத்துகின்றது. சட்டங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது. கல்வி, திருமணம், குழந்தை வளர்ப்பு மற்றும் சொத்துரிமை ஆகியவற்றில் பெண்களுக்கு சம உரிமை தேவை. மத்தின் பேரில் பெண்கள் மீது கல்லெறிவதை நிறுத்த வேண்டும் என்று நான் கூறுகிறேன். இது யாரை ஆத்திரமூட்டுகிறது.
நாகரீகமடையும் நாடுகள் அனைத்தும் மத்தையும் நாட்டையும் பிரித்தே பார்க்கின்றது. மற்ற மதங்களுக்கு இருக்கும் இதே நிலை இஸ்லாமியத்துக்கு மட்டும் விதிவிலக்கானது அல்ல. மதசார்பற்ற மனிதாபிமானத்தை வலியுறுத்தும் எனது கருத்து ஆத்திரமூட்டுவதாக இருந்தாலும் அதில் தவறில்லை என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Saturday, 12 March 2016

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்க மறுக்கும் நீதிபதி!

காவி விசுவாசமா?? காவி பயமா???

(மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க நீதிபதி #கோபால_கவுடா மறுத்துள்ளார். அதற்கான காரணம் எதையும் நீதிபதி கோபால கவுடா கூறவில்லை)
❌ 24 ஆண்டுகள் ஓடி விட்டன. உலகையே குலை நடுங்க வைத்த பாபர் மசூதி இடிப்பைச் செய்தவர்கள் யார் என்பது -கோவணம் கட்டாத கோலி விளையாடும் சிறுவன் கூட அறிந்த சேதியாகும். ஆனால், நம் நாட்டு நீதிமன்றங்களுக்கு மட்டும் தெரியாமல் போனது தான் (#கேவளம்) ஆச்சரியம்.
💥 ஒன்று மட்டும் உண்மை; இந்தப் பிரச்சினையில் குற்றவாளிகள் மட்டும் உரிய தண்டனைக்கு ஆளாகாமல் தப்ப விடப்பட்டு விடுவார்களேயானால், நீதிமன்றத்தின் மீதே மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது முற்றாகவே சீர்குலைந்து போகும்.
✔ இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சாதாரண மானவையல்ல. இந்திய குற்றவியல் சட்டம் 147, 153ஏ, 153பி, 295ஏ, 505, 120பி என்று நினைக்கவே கேவலமான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
☝ குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் சாதாரணமானவர்களுமல்ல; பிஜேபியின் உயர் மட்டத் தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 48 பேர்கள் மீது ரேபரேலி சி.பி.அய். நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வன்முறையின் எதிர் விளைவாக மும்பையில் நடைபெற்ற கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 247 பேர். இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு விட்டனர்.
💥 ஆனால் இந்த எதிர் விளைவுகள் கலவரத்திற்கு மூல காரணமாக இருந்த #பாபர்_மசூதி இடிப்புக் #குற்றவாளிகள் மட்டும் #தண்டிக்கப்படவில்லை என்பது கடைந்தெடுத்த மோசடியல்லவா! மும்பைக் கலவரத்திற்கு காரணம் என்று சொல்லி #யாகூப்மேனன் அவசர கதியில் #தூக்கிலிடப்பட்டு விட்டார். அது இன்னும் சர்ச்சையில் தான் இருந்து வருகிறது.
❌ ஆனால், பாபர் மசூதி இடிப்பில், கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட் எல்.கே. அத்வானியோ இந்தியாவின் துணைப் பிரதமராகி விட்டார் முரளி மனோகர் ஜோஷியோ மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக அலங்கரித்தார். உமாபாரதியும் மத்திய அமைச்சராகவும் ஆக்கப்பட்டு விட்டார்.
📌 நீதிபதி லிபரான் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை பாபர் மசூதியில் குற்றவாளிகள் என்று 68 பேர்களைப் பட்டியலிட்டது. அதில் ம
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயியும் இடம் பெற்றிருந்தார்.
❌ அடேயப்பா, நாடாளுமன்றத்தையே நிலை குலைய வைத்து விட்டனர் பிஜேபி உறுப்பினர்கள்; இத்தகைய #சிகாமணிகள் தான் நாடாளுமன்றத்தை #முடக்கலாமா?, ஜனநாயகக் கடமையை மறக்கலாமா என்று #நீலிக்_கண்ணீர் வடிக்கின்றனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து விட்டு வாஜ்பேயியை எப்படி குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கலாம் என்று இதோபதேசக் கேள்வியை எழுப்புகிறார்கள்???
💥 இந்த வழக்கை விசாரிப்பதில் நீதிபதிகள் தயக்கம் காட்டுகிறார்கள் - நான் விசாரிக்க மாட்டேன்; வேறு அமர்வுக்கு நகர்த்திடுக என்பதெல்லாம், நீதியின் உயர்ந்த தன்மைக்கு உகந்தது தானா?
💥 இப்படி பட்டவர்களை நீதிதுறையில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வேண்டும்.
நன்றி : விடுதலை நாளிதழ்

Wednesday, 9 March 2016

கடத்தல்காரர்களிடம் இருந்து வகுப்புத்தோழியை காப்பாற்றிய பெண்ணிற்கு வீரதீர விருது.


ஆக்ரா: இந்து மதத்தை சேர்ந்த சிறுமியை கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்றியதற்காக ராணி லக்ஷ்மிபாய் தைரிய விருது 15 வயதான நசியா என்ற முஸ்லிம் பெண்ணிற்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் வழங்கினார். கடந்த ஆகஸ்ட் மாதம் கடத்தல்காரர்கள் இருந்து 6 வயது இந்து மதத்தை சேர்ந்த டிம்பி என்ற சிறுமியை நசியா காப்பற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
சக்ஹிர் பாதிமா முஹம்மாடிய பெண்கள் கல்லூரியை சேர்ந்த நசியா வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது காப்பாத்துங்கள் என்று சிறுமி கதறிய சத்தம் கேட்டு அந்த இடந்திற்கு சென்றார். அங்கு டிம்பியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முயற்சி செய்துள்ளனர். நசியா தனது உயிரை பற்றி கவலைப்படமால் அவர்களின் கைகளை தட்டி விட்டார். அவர் தொடர்ந்து கூச்சலிட பொதுமக்கள் வருவதை கண்ட கடத்தல் காரர்கள் தப்பி சென்றனர்.
சிறுமியை காப்பற்றி அவரது பெற்றோரிடம் நசியா ஒப்படைத்தார். அவரை காப்பாற்றிய பிறகு தான் டிம்பி அவரது பள்ளி ஜூனியர் என்பது தெரிய வந்ததாக கூறினார்.ஆக்ராவில் முஸ்லிம் இந்து இடையிலான பதற்றம் நிலவும் போது கடத்தல்காரர்கள் பிடியில் இருந்து தங்கள் குழந்தையை காப்பாற்றிய நசியாவை டிம்பியின் பெற்றோர்கள தங்கள் சொந்த மகள் போன்று பாவித்து வருகின்றனர்.

Thursday, 3 March 2016

IMO வின் ஆபத்து...! imo உபயோகிப்போர் கவனத்திற்கு...!


தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சில தீய செயல்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன...
அந்த வரிசையில் உள்ள ஒன்று தான் imo இதன் மூலம் நாம் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்ய முடியும்...
இதில் என்ன ஆபத்து உள்ளது என்றால் நாம் நம்முடைய சொந்த உறவினர்களுடன் பேசுவதற்கே இது போன்ற அப்ளிகேசன்களை பயன்படுத்துகின்றோம் ஆனால் நம்முடைய நம்பர் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கும் நாம் imo வில் உள்ளோம் என்பதை தெளிவாக காட்டிவிடும்...
உதாரணமாக நாம் சவாரிக்கு உபயோகிக்கும் ஆட்டோ டிரைவர்களின் நம்பர்களை நம் குடும்ப பெண்கள் மொபைல் ஃபோனில் save செய்து வைத்திருந்தால் நம்முடைய தகவல்கள் அனைத்தும் எதிர் தரப்பில் உள்ள நபருக்கு தெரியும் அதாவது நாம் imo உபயோகிக்கின்றோம் என்பதை தெளிவாக அவர்களுக்கு காட்டிவிடும் இதன் மூலம் சில தவறான நபர்கள் இதை தவறான முறைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் ...
எப்படி என்றால் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் கையில் மொபைல் ஃபோன்களை கொடுப்பது என்பது இப்போது சர்வ சாதாரணமாக உள்ளது...
குழந்தைகள் தெரியாமல் imo open செய்து அதில் உள்ள ஃபோன் சிம்பலை தவறுதலாக இலேசாக கையை வைத்தாலே போதும் உடனே கால் சென்றுவிடும் இது எதிர்தரப்பில் உள்ளவருக்கு தெரியாது குழந்தை தான் தவறாக கால் செய்துவிட்டது என்று மீண்டும் அதே நம்பருக்கு இந்த நபர் கால் செய்ய முயற்ச்சிக்க பிரச்சனை இங்கு தான் தொடங்குகின்றது ...
எனவே உங்கள்வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் ஃபோன்களில் தேவையற்ற நம்பர்களை save செய்ய வேண்டாம் என வழியுறுத்துங்கள்...
சவாரிக்கு எடுக்கும் ஆட்டோ,கார் டிரைவர்களின் நம்பர்களை வீட்டில் உள்ள ஆண்களின் மொபைல் ஃபோனில் மட்டும் save செய்து கொள்ளுங்கள்...
சைத்தான் எவர் மூலமாகவும் வழிகெடுப்பான் எனவே பெண்கள் தங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத நம்பர்களை உடனே அழித்துவிடுங்கள்...
இன்னொரு விஷயம் imo வில் invite friends என்ற ஒரு option உள்ளது இதன் மூலம் imo வில் இல்லாத சில நபர்களை நாம் மெசேஜ் மூலம் imo விற்கு அழைப்பதே இதன் பொருள் விவரம் தெரியாத சிலர் இதனை தவறுதலாக உபயோகிக்கின்றனர் invite friends சென்று select all கொடுத்தால் போதும் நமது மொபைலில் உள்ள அனைத்து நம்பருக்கும் அதாவது அவர் Nokia 1100 உபயோகித்தாலும் சரி அவருக்கும் நம்முடைய invite msg சென்று விடும் இதற்கு imo ஒன்றும் Free option ஒன்றும் கொடுக்கவில்லை நாம் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்க்கும் நமது இருப்புத் தொகையிலிருந்தே
(BALANCE) பணம் வசூலிக்கப்படும் விவரம் தெரியாத சிலர் இதனை தவறாக உபயோகித்து தனது மொபைலில் உள்ள அனைத்து பேலன்சையும் இழப்பதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம் எனவே இந்த விஷயத்தை ஆண் பெண் இருபாலரும் கவனமாக கையாள வேண்டும் என்பதே நமது கோரிக்கை ...!!!