சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பமாக விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
Rediff.com இணையதளத்திற்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதை உறுதி செய்துள்ளார். தற்போது வரை பிரேமலதா விஜயகாந்திடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பாஜக - தேமுதிக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து பேச பிரேமலதா விஜயகாந்த் விரைவில் டெல்லி வரவுள்ளதாகவும் ஜவடேகர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளை பாஜக.,வும், தேமுதிகவும் சரிபாதியாக பங்கிட்டு கொள்வது தொடர்பான ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றதை போல், பாஜகவும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக, மக்கள் நல கூட்டணி போன்றவை தேமுதிக வருகைக்காக காத்திருக்கும் நிலையில் பாஜக வின் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment