Showing posts with label இஸ்லாமி செய்திகள். Show all posts
Showing posts with label இஸ்லாமி செய்திகள். Show all posts

Saturday, 10 September 2016

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.

அரஃபா நாள் நோன்பு

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.
அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
துல்ஹஜ் ஒன்பதாவது நாள்(அரஃபா) அன்று நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டிற்கும், அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர் பார்க்கிறேன் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)
நூல் : முஸ்லிம் 2151
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977
அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 1722
அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதை நடை முறைப் படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடை முறைப்படுத்த வேண்டும்.
அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்பு நோற்றார்கள். மக்காவில் பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.
எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள், நாம் பிறை பார்த்த கணக்குப்படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்றத் தேவையில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நாம் பிறை பார்த்த கணக்குப்படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்க வேண்டும்.
எனவே இந்த அரிய வாய்ப்பை இழந்து விடாமல் குறிப்பிட்ட அந்த நாளில் நோன்பு நோற்று இறை திருப்தியைப் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்....
குறிப்பு - வளைகுடா நாடுகளில் பிறை பார்த்ததன் அடிப்படையில் அரஃபா நாள் நோன்பு 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை நோன்பு வைத்திருக்க வேண்டும்,இன்ஷா அல்லாஹ் திங்கள் கிழமை 12-09-2016 ஹஜ் பெருநாள் ஆகும்
அதேபோல் தாயகத்தில் பிறை பார்த்ததன் அடிப்படையில் அரஃபா நாள்  நோன்பு 12-09-2016 திங்கள் கிழமை வைத்திருக்க வேண்டும்,இன்ஷா அல்லாஹ் செவ்வாய்க் கிழமை 13-09-2016 ஹஜ் பெருநாள் ஆகும்

Friday, 24 June 2016

புதுப்பட்டினம் பைத்துல்மால் ( துபாய் மண்டலம் ) இப்தார் நிகழ்ச்சி



அஸ்ஸலாமு அலைக்கும் ,

புதுப்பட்டினம் பைத்துல்மால் ( துபாய் மண்டலம் ) இப்தார் நிகழ்ச்சி.

இன்று 24/06/2016 வெள்ளி கிழமை மாலை இப்தார் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது .இதில் நமது ஊர் சகோதர்கள் அனைவரும் கலந்துகொண்டனர் .
நமது ஊர் சகோதர்கள் அனைவருக்கும் புதுப்பட்டினம் எஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களும் ! நன்றிகளும் ! 










Friday, 17 June 2016

இப்தார் நிகழ்ச்சி புதுப்பட்டினம் பைதுலமால் ( ஜித்தா மண்டலம்) படங்கள் இணைப்பு!!!

அஸ்ஸலாமு அலைக்கும்,

இப்தார் நிகழ்ச்சி புதுப்பட்டினம் பைதுலமால் ( ஜித்தா மண்டலம்)
          ஜித்தா மண்டலம் சார்பாக இப்தார் நிகழ்ச்சி இன்று 17/06/2016 வெள்ளி கிழமை சிறப்பாக நடைபெற்று.இதில் நமது ஊர் சகோதர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர் .
  
     எங்களின் அழைப்பே ஏற்று வந்த உங்கள் அனைவருக்கும் புதுப்பட்டினம் பைதுலமால் ( ஜித்தா மண்டலம்) நிர்வாகிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கறோம்.
         இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு நிதி உதவி அளித்த நம்  சகோதர்களுக்கு வாழ்த்துகளையும்,நன்றிகளையும் தெறிவித்து கொள்கிறோம்.
          இதுபோன்று நிகழ்ச்சிகள் பைத்துல்மால் மூலம் இப்தார் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .

இப்படிக்கு ,
ஜித்தா மண்டலம் நிர்வாகிகள்.














Wednesday, 15 June 2016

புதுப்பட்டினம் பைத்துல்மால் இப்தார் நிகழ்ச்சி . ஜித்தா மண்டலம்.


அஸ்ஸலாமு அலைக்கும்,
புதுப்பட்டினம் பைத்துல்மால்
           இப்தார் நிகழ்ச்சி .
          ஜித்தா மண்டலம்
 
வருகின்ற 17/06/2016 அன்று வெள்ளிகிழமை மாலை 6.மணி அளவில்
ஜித்தா மண்டலம் பைத்துல்மால் சார்பாக  இப்தார் நிகழ்ச்சி நடத்த
இருக்கிறோம் .இதில்
ஜித்தா மண்டல சகோதர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் .
             இப்படிக்கு,
ஜித்தா மண்டல பைத்துல்மால்
             நிர்வாகிகள்.

Sunday, 12 June 2016

ஜனாஸா தொழுகையை தெரிந்து கொள்வோம் ! !


📕ஜனாஸா தொழுகையை தெரிந்து கொள்வோம் ! !
✔ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது ?
✔முதல் தக்பீருக்குப் பின்,
✔முதல் தக்பீர் கூறிய பின்.,
✔ஸூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும்.
✔ஆதாரம் :- புகாரி 1335
✔ இரண்டாம் தக்பீருக்கு பின்,
✔ இரண்டாம் தக்பீர் கூறிய பின்.,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
✔ஆதாரம்  நூல் :- பைஹகி 4 - 39
✔மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்.,
இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி (ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.
اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ
وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْب
َ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ
وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر
 
அல்லாஹும்மபிர் லஹு வர்ஹம்ஹு வஆபிஹி வபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்னத்த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி.
✔ஆதாரம் :- முஸ்லிம் 1600.
✔பொருள் :-  இறைவா !
இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக !
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக !
இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக ! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக ! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக !
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக !
இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக !
இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக..!
இதை மற்றவர்களும் படித்து பயன் பெற அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்  அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உதவி செய்வானாக.,
✔ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
↔ ஜஸாக்கல்லாஹ் கைர்.,
↔ என்றும் மார்க்கப்பணியில் ...,
தொழுகையை நிலைநாட்டுவோம் ! ! !

Saturday, 30 January 2016

தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்     புதுப்பட்டினம் கிளை - தஞ்சை தெற்கு மாவட்டம் .




தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்     புதுப்பட்டினம் கிளை - தஞ்சை தெற்கு மாவட்டம் .
       திருச்சில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு எங்கள் ஊரில் இருந்து கிளம்பும் 2 பஸ்கள் மற்றும் 2 வேன்களும்
இவர்களின்  பயணம் வெற்றி பெற அல்லாஹ்விடம் து ஆ செய்வோம்.
      - புதுப்பட்டினம் எக்ஸ்பிரஸ்.

Friday, 22 January 2016

இறைதூதர் முஹம்மது நபி உலகில் மிகச் சிறந்த இராணுவ தளபதி -ஆய்வில் தகவல்




இறைதூதர் முஹம்மது நபி உலகில் மிகச் சிறந்த இராணுவ தளபதி -ஆய்வில் தகவல்
அமெரிக்க அரச பணி மற்றும் உளவு நிறுவனங்களில் கடமையாற்றிய அமெரிக்க முக்கியஸ்தர் ரிச்சர்ஸ் என்பவர் உலகில் சிறந்த இராணுவத்தளபதிகள் தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தார்.
சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் குறித்த ஆய்வு முடிவுகளின் படி
இறைதூதர் முஹம்மது நபி உலகில் மிகச் சிறந்த இராணுவ தளபதி என்று தெரிவித்துள்ளார்

Friday, 11 December 2015

திருக்குர்ஆன் மாநாடு - 2


திருக்குர்ஆன் மாநாடு புதுப்பட்டினம்                    Part - 2 (6,7 / NOV / 2015 ).




Wednesday, 9 December 2015

திருக்குர்ஆன் மாநாடு - 1

திருக்குர்ஆன் மாநாடு புதுப்பட்டினம்

Part - 1 (6,7 / NOV / 2015 ).



திருக்குர்ஆன் மாநாடு - 3


திருக்குர்ஆன் மாநாடு புதுப்பட்டினம் 

Part - 3 (6,7 / NOV / 2015 ).




திருக்குர்ஆன் மாநாடு - 4

திருக்குர்ஆன் மாநாடு புதுப்பட்டினம் 

Part - 4 (6,7 / NOV / 2015 ).




திருக்குர்ஆன் மாநாடு - 5


திருக்குர்ஆன் மாநாடு புதுப்பட்டினம்
Part - 5 ( 6,7 NOV 2015 )



      

       






திருக்குர்ஆன் மாநாடு - 6


திருக்குர்ஆன் மாநாடு புதுப்பட்டினம்

Part - 6 (6,7 / NOV / 2015 ).