Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts
Tuesday, 9 August 2016
Wednesday, 27 July 2016
உடற்பயிற்சியில் நடைபயிற்சி சிறந்தது.
உடற்பயிற்சிகளில் நடைப்பயிற்சி மிகவும் சிறந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
1. நடக்கும் போது, ஒரு பக்கம் தலைய சாச்சி கிட்டு, செல்போன்ல பேசிகிட்டு நடக்க வேண்டாம். முடிந்தால் செல்போனை வீட்டுல வச்சிட்டு வாங்க. தலையை உயர்த்தி, வயிற்றின் தசைகளை மென்மையாக உள்ளிழுத்து, கைவீசம்மா கைவீசு என்று நடக்க வேண்டும்.
2. சரியான நடைப்பயிற்சியில் வியர்ப்பது இயல்பு. எனவே இறுக்கமான, பாலியெஸ்டர் ஆடைகளைத் தவிர்க்கவும். உடல் சோர்ந்து போகாமல், வியர்வையை உறிஞ்ச ஏதுவாக, தளர்வான காட்டன் ஆடைகளை அணியவும்.
3. கால்களை மூடும் விதமாக, மென்மையாக பாதங்களை இறுக்காமல் ஷீ அணிந்து கொள்வது நல்லது.
4. மூளையில் ஏற்படும் செரோடினின் பகிர்ந்தளிப்பு, உடலில் என்சைம்களின் சுரப்பு…உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இதயத் துடிப்பு சீராகி, ப்ரோஸ்டோகிளான்டின்களின் சுரப்பு மூலம், மூட்டுகளுக்கு தேவையான லூப்ரிகேஷன் கிடைத்து, தசைகளின் இலகுவாகி, உடலுக்கு தேவையான சக்தி சேமித்து வைக்கப்பட்டுள்ள கார்போஹைட்ரேட்டிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
5. பிரிஸ்க் வாக் மூலம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரித்து, ரத்த ஓட்டம் மூலம் ஆக்சிஜன் சுழற்சி ஏற்பட்டு, சுமார் 6 கலோரிகள் செலவழிக்கப்படுகிறது.
6. முதல் 5 நிமிடங்களில் உடலுக்கு உற்சாகம், 10 முதல் 20 நிமிடங்களில் உடல் வெப்பமடைதல், தோலுடன் சேர்ந்துள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து வெப்பம் வெளியேறி, உடல் வியர்க்க துவங்கும். சக்தியளிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு, சுவாசம் அதிகரிப்பு நடைபெறும்.
7. சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் உடல் லேசாகி, கொழுப்பு சத்து எரிந்து, இன்சுலின் சுரப்பு சீராகும்.
8. ஒரு மணி நேரத்தில், நமது நடையின் வேகத்தை குறைக்க, இதயத் துடிப்பு சீராகி, வியர்வைகள் அடங்கி, அதன் பின்னரும் ஒருமணி நேரம் கலோரிகள் செலவாகும் என்பது மருத்துவ ரீதியான உண்மை.
9. அதிக பருமனானவர்கள், இதயம் பலகீனமானவர்கள், ஆஸ்துமா பிரச்சினைகள் உள்ளவர்கள், எலும்பு மற்றும் மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்….அதற்கேற்ப மருத்துவ ஆலோசனை பெற்று நடைபயிற்சியை தொடரலாம்.
Thursday, 2 June 2016
2017-ம் ஆண்டு சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2017-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறு கிறது. இன்னும் ஒருவருட காலம் உள்ள நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன.
2015-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்கின்றன. இதன்படி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு முதல் நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு 2-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சாம்பியன் டிராபி தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவது இது 3-வது முறையாகும். 2004 மற்றும் 2013-ம் ஆண்டுகளிலும் போட்டியை இங்கிலாந்தே நடத்தியது. இரு முறையும் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடரில் கலந்து கொள்ளும் 8 அணி களும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட் டுள்ளது. போட்டியை நடத்தும் இங்கி லாந்து ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸி லாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளும் உள்ளன. பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.
18 நாட்கள் நடத்தப்படும் இந்த தொடரில் மொத்தம் 15 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கார்டிப், ஓவல், எட்ஜ்பஸ்டன் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி ஜூன் 18-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரின் முதல் ஆட்டத்தில் ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்து-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட் டத்தில் 4-ம் தேதி பாகிஸ்தானுடன் மோது கிறது. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணி களுடன் தலா ஒரு முறை மோதும்.
புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் இருந்து தலா இரு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் 14 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 19-ம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18-ம் தேதி நடத்தப்படும் இறுதிப்போட்டி ஒருவேளை மழை காரணமாக பாதிக்கப்பட்டால் 19-ம் தேதி நடைபெறும்.
இதுவரை
1998 முதல் ஐசிசி சாம்பியன் டிராபி நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் தொடரை தென் ஆப்ரிக்கா வென்றது. 2000-ம் ஆண்டு நியூஸிலாந்து பட்டம் வென்றது. 2002-ல், இந்தியா, இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. 2004-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணி மகுடம் சூடியது. 2006, 2009-ல் ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டிச்சென்றது. 2013-ல் இந்தியா கோப்பை வென்றது
Friday, 25 March 2016
Monday, 11 January 2016
பெர்த்தில் நாளை முதல் ஒன்டே: ஆஸி. சவாலை எதிர்கொள்ளுமா இந்தியா?
பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 5 ஒருநாள் மற்றும் 3 டி.20 போட்டி நடைபெற உள்ளன. இதன் முதல் ஒரு நாள் டி.20 போட்டி பெர்த் மைதானத்தில் நாளை நடக்கிறது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு துவங்குகிறது. டோனி தலைமையிலான இந்திய அணியில் புதுமுக வீரர்களாக மணிஷ்பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் சரண் ஆகியோர் களம் இறங்குகின்றனர். 2 பயிற்சி போட்டிகளிலும் சரண் அற்புதமாக பந்து வீசி கவனத்தை ஈர்த்துள்ளார். 6 பேஸ்ட்மேன், 3 வேகம், ஒரு சுழற்பந்து வீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் என இந்தியா களம் இறங்குகிறது. வேகத்தில் இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சரண் ஆகியோருக்கும் இடம் கிடைக்கும்.
சுழற்பந்து வீச்சில் அஸ்வினுடன், ஆல்ரவுண்டர் ஜடேஜாவா அல்லது அக்ஷர்பட்டேலா என்பதில் இழுபறி உள்ளது. பயிற்சி போட்டியில் ஜடேஜாவை விட பட்டேல் சிறப்பாக பந்து வீசி உள்ளார். இருப்பினும் ஜடேஜாவுக்குதான் வாய்ப்பு கிடைக்கலாம். விராட்கோஹ்லி, ரோகித், தவான், ரகானே ஆகியோர் நல்ல பார்ம்மில் உள்ளதால் இந்தியா கடும் சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்னா நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தில் மணிஷ்பாண்டே களம் இறங்குவதால் அவர் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் ஆஸி. சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. உலக கோப்பை போட்டிக்கு பின்னர் சொந்த மண்ணில் ஆஸி. ஒருநாள் போட்டியில் களம் இறங்குகிறது.
வார்னர், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், பாக்னர் என அதிரடி ஆட்டக்காரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள். ஸ்டார்க், ஜான்சன் இல்லாத நிலையில், இளம்வேகப்பந்து வீச்சாளர் பாரிஸ், போலன்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வேகத்துக்கு சாதகமான பெர்த் மைதானத்தில் பவுன்சர்களால் இந்திய வீரர்களை மிரட்ட காத்திருக்கின்றனர். கடைசியாக இரு அணிகள் மோதிய உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணியை, ஆஸி. 95 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. சொந்த மண்ணில் ஆஸி.யை வீழ்த்துவது இந்திய அணிக்கு கடும் சவால்தான். ஐசிசி தரவரிசையில் முதல் இரு இடத்தில் உள்ள அணிகள் மோதுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. வெற்றியுடன் தொடரை தொடங்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தரிவரிசை எப்படி?
தற்போது 114 புள்ளிகளுடன் தரிவரிசையில் 2வது இடத்தில் உள்ள இந்தியா, ஆஸி.யுடன் அனைத்து போட்டிகளிலும் தோற்றால் 111 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு சரியும். ஒருபோட்டியில் வென்றாலும் 2வது இடத்தில் நீடிக்கலாம். ஆஸி. அனைத்து போட்டியில் தோற்றாலும் 120 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கும்.
மெக்ராத்தின் ஜெர்சியில் ஜோயல்
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் மைதானத்தில், புதுமுக வீரர் ஜோயல் பாரிஸ் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. இதில், அவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கிளென் மெக்ராத்தின் 11ம் எண்ணிட்ட ஜெர்சியை அணிவார் என தெரிகிறது. 23 வயதில் ஜோயல் பாரிஸ் சர்வதேச போட்டிகளில் களமிறங்க உள்ளார். மெக்ராத்தும் தனது 23வது வயதில்தான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சிறப்பான கேரியரில் மெக்ராத், 381 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜோயல் பாரிஸ் 13 முதல் தர போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணி: டோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, ரகானே, மணிஷ் பாண்டே, அஷ்வின், ஜடேஜா, புவனேஸ்வர்குமார், அக்சர் பட்டேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குர்கீரத் சிங் மான், ரிஷி தவான், பிரெய்ண்டர் சரண்.
ஆஸி. அணி : ஸ்டீவன் ஸ்மித்(கேப்டன்), ஜார்ஜ் பெய்லி, ஸ்காட் போலன்ட்,ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பிஞ்ச். ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜோயல் பாரிஸ், ரிச்சர்ட்சன், மத்தேயூ வேட் (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர்.
இந்தியாவில் வருகிற மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது
இந்தியாவில் வருகிற மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற்று மீண்டும் டி20 உலகக்கோப்பையை வெல்லும் என்று ஜாகீர்கான் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை குறித்து கூறுகையில் ‘‘இந்திய துணைக்கண்டத்தில் சுழற்பந்து வீச்சு பெரிய காரணியாக இருக்கும். போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் இந்தியா மற்றும் துணைக்கண்ட அணிகள் பெரிய சவாலாக இருக்கும். இந்தியா இந்த தொடரில் வெற்றி பெற்று இந்திய கொடி பறக்கும் என்பது உறுதி.
டி20 கிரிக்கெட் மிகவும் அற்புதமானது. இது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை கூடுதலாக கொடுக்கிறது. டி20 கிரிக்கெட் வந்தபின் நாம் ஏராளமான மாற்றங்களை பார்க்க முடிகிறது. பேட்ஸ்மேன்கள் மாறுபட்ட அதிரடியாக விளையாட முயற்சிக்கிறார்கள். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச முயற்சிக்கிறார்கள். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது” என்றார்.
Friday, 8 January 2016
இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
2:14 PM | ஜனவரி 08, 2016

அனந்தபூர்,கடந்த 2013ம் ஆண்டு வெளியான பிசினஸ் மாத இதழ் ஒன்றில் தோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபாரப் பொருளை வைத்திருப்பது போலவும் அட்டைப் படம் இருந்தது. இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது. ‘God of Big Deals’ என்று கட்டுரைக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.இந்த அட்டைப்படத்தை பார்த்த இந்து அமைப்புகள் கொந்தளித்தன. இந்த விளம்பரம் இந்து கடவுளை அவமதிப்பது போல இருக்கிறது என்று சிவசேனா இந்துஸ்தான் அமைப்பை சேர்ந்த ராஜிந்தர் சிங் ராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தோனி மற்றும் பத்திரிகை வெளியிட்டாளர் ஆகியோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே வழக்கு ஐதராபாத் மாநிலம் அனந்தபூர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அனந்தபூர் நீதிமன்றம் தோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிடித்துள்ளது. வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தோனி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. தோனி தற்போது 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இந்த கிரிக்கெட் தொடர் ஜனவரி 21 ஆம் தேதி முடிவு பெறுகிறது.
Thursday, 7 January 2016
சையத் முஸ்தாக் அலி டி20 லீக்: அபினவ் முகுந்த் அதிரடியால் தமி்ழ்நாடு எளிதில் வெற்றி
பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஜனவரி 07, 9:53 PM IST
சையத் முஸ்தாக் அலி டி20 லீக் தொடரில் இன்றைய லீக் போட்டிகளில் ஒன்றில் தமிழ்நாடு- குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக பார்தீவ் பட்டேல், பன்சால் ஆகியோர் களம் இறங்கினார்கள். பன்சால் ரன்ஏதும் எடுக்காமல் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். பட்டேல் 4 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் வந்த ஜூனெஜா 13 ரன்னிலும், பாத் 8 ரன்னிலும், காந்தி 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
6-வது வீரராக களம் இறங்கிய டெய்லர் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவருக்குப்பின் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணில் வெளியேற குஜராத் அணி 105 ரன்னில் சுருண்டது. தமிழ்நாடு அணி சார்பில் சதீஷ், ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுக்களும், அந்தோணி தாஸ் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு களம் இறங்கியது. தொடக்க வீரர் தினேஷ் கார்த்திக் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால், மற்றொரு தொடக்க வீரர் அபினவ் முகுந்தும், அடுத்து வந்த அபரஜித்தும் அதிரடியாக விளையாடினார்கள். இதனால் தமிழ்நாடு அணி 12.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபினவ் முகுந்த் 36 பந்தில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 67 ரன்களுடனும், அபரஜித் 31 பந்தில் 30 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்
Tuesday, 5 January 2016
"1000' ரன்கள் அடித்து மும்பை பள்ளி மாணவர் உலக சாதனை: ஆட்டோ ஓட்டுநரின் மகன் அபாரம்
By மும்பை,
First Published : 06 January 2016 12:50 AM IST

மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே (15) பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் செவ்வாய்க்கிழமை 1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் 117 ஆண்டுகால சாதனையையும் முறியடித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே (15) பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் செவ்வாய்க்கிழமை 1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் 117 ஆண்டுகால சாதனையையும் முறியடித்துள்ளார்.
பண்டாரி கோப்பைக்காக பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ஆர்யா குருகுல பள்ளிக்கு எதிராக, கே.சி.காந்தி உயர்நிலைப் பள்ளி சார்பில் விளையாடினார் 10ஆம் வகுப்பு மாணவர் பிரணவ். இதில் அவர் 323 பந்துகளில் 59 சிக்ஸர்கள், 129 பவுண்டரிகள் விளாசி இந்த சாதனை ரன்களை சொந்தமாக்கினார்.
117 ஆண்டு சாதனை முறியடிப்பு: இதற்கு முன்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஏ.இ.ஜே.காலின்ஸ் என்ற வீரர் கடந்த 1899-ஆம் ஆண்டு அடித்திருந்த 628 ரன்களே உலக அளவில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராக இருந்தது.
இந்நிலையில், 117 ஆண்டுகள் கழித்து 1,009 ரன்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்தார் பிரணவ்.
அத்துடன், இந்திய பள்ளிகளிடையேயான கிரிக்கெட்டில், மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா என்ற மற்றொரு மாணவரின் 546 ரன்களையும் பிரணவ் முறியடித்துள்ளார்.
அணி அளவிலும் சாதனை: பிரணவின் ரன் குவிப்பானது, அவரது பள்ளி அணியும் உலக சாதனை படைக்க சாதகமாக அமைந்தது.
பிரணவின் கே.சி.காந்தி உயர் நிலைப் பள்ளி அணியானது, 3 விக்கெட் இழப்புக்கு 1, 465 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து சாதனை படைத்தது. முன்னதாக, அதன் எதிரணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது.
இதற்கு முன்பாக, 1926ஆம் ஆண்டு நியூ செளத் வேல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் விக்டோரியா அணி அடித்திருந்த 1,107 ரன்களே உலக சாதனையாக இருந்தது.
அபார சாதனை படைத்த பிரணவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுட்டுரையில் வாழ்த்து
சச்சின்: "ஒரு இன்னிங்ஸில் 1000 ரன்களை குவித்து சாதனை படைத்த முதல் வீரரானதற்கு வாழ்த்துக்கள் பிரணவ். கடின உழைப்புடன் இன்னும் புதிய உச்சங்களைத் தொட வேண்டும்'.
ஹர்பஜன் சிங்: "நன்றாக விளையாடினாய் பிரணவ். எந்த கிரிக்கெட்டில் விளையாடினாய் என்பது முக்கியமல்ல. உனது ரன்கள் நம்பமுடியாதது. இன்னொரு சச்சின் உருவாகிறாரா?'
117 ஆண்டு சாதனை முறியடிப்பு: இதற்கு முன்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஏ.இ.ஜே.காலின்ஸ் என்ற வீரர் கடந்த 1899-ஆம் ஆண்டு அடித்திருந்த 628 ரன்களே உலக அளவில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராக இருந்தது.
இந்நிலையில், 117 ஆண்டுகள் கழித்து 1,009 ரன்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்தார் பிரணவ்.
அத்துடன், இந்திய பள்ளிகளிடையேயான கிரிக்கெட்டில், மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா என்ற மற்றொரு மாணவரின் 546 ரன்களையும் பிரணவ் முறியடித்துள்ளார்.
அணி அளவிலும் சாதனை: பிரணவின் ரன் குவிப்பானது, அவரது பள்ளி அணியும் உலக சாதனை படைக்க சாதகமாக அமைந்தது.
பிரணவின் கே.சி.காந்தி உயர் நிலைப் பள்ளி அணியானது, 3 விக்கெட் இழப்புக்கு 1, 465 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து சாதனை படைத்தது. முன்னதாக, அதன் எதிரணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது.
இதற்கு முன்பாக, 1926ஆம் ஆண்டு நியூ செளத் வேல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் விக்டோரியா அணி அடித்திருந்த 1,107 ரன்களே உலக சாதனையாக இருந்தது.
அபார சாதனை படைத்த பிரணவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுட்டுரையில் வாழ்த்து
சச்சின்: "ஒரு இன்னிங்ஸில் 1000 ரன்களை குவித்து சாதனை படைத்த முதல் வீரரானதற்கு வாழ்த்துக்கள் பிரணவ். கடின உழைப்புடன் இன்னும் புதிய உச்சங்களைத் தொட வேண்டும்'.
ஹர்பஜன் சிங்: "நன்றாக விளையாடினாய் பிரணவ். எந்த கிரிக்கெட்டில் விளையாடினாய் என்பது முக்கியமல்ல. உனது ரன்கள் நம்பமுடியாதது. இன்னொரு சச்சின் உருவாகிறாரா?'
Subscribe to:
Posts (Atom)




