Showing posts with label இந்திய அடிப்படை சட்டம். Show all posts
Showing posts with label இந்திய அடிப்படை சட்டம். Show all posts

Monday, 18 January 2016

இந்திய தண்டனை சட்டம்



***************************
தயவுசெய்து சிந்தனை வேண்டும்
பிரிவு 153A(1): பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுமடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படு

Monday, 11 January 2016

ஆம், வாரண்ட் இல்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியும்"?


ரிமாண்ட் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று காவலில் வை, சிறைப்படுத்து. மற்றொன்று ஒரு வழக்கை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அல்லது அதற்கு கீழுள்ள நீதிமன்றத்துக்குத் திருப்பி அனுப்பி மறு விசாரணைக்கு உத்தரவிடு என்பது. வாரண்ட் என்றால் பிடி ஆணை. ஒருவரைக் கைது செய்ய நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு தான் வாரண்ட்.
குற்றமிழைத்தவர்களை விசாரித்து தண்டிக்க வேண்டிய அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. குற்றத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காவல் துறை தன் புலனாய்வின் போது குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் ஏற்படும் தருவாயில் அவரைக் கைது செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களை கலைத்து விடக் கூடாது என்ற காரணத்தாலும் கைது செய்யப்படுவதுண்டு.
அதே போல் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை முடிந்து தண்டிக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.அவர் தப்பித்து ஓடி விடக் கூடாது. அதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவதுண்டு. எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், முன் எச்சரிக்கை காரணமாக ஒருவர் கைது செய்யப்படலாம். இருப்பினும் சுதந்தர நாட்டில் யாரை வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் கைது செய்து விடமுடியாது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன் இந்திய ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம். இது அந்த குடிமகனின் அடிப்படை உரிமை (Fundamental Right under Article 19(1)(d) of the Constitution of India). ஒருவரைக் கைது செய்தல் அவரது அடிப்படை உரிமைக்கு எதிரான செயலாகும். தகுந்த காரணம் இல்லாமல் ஒருவர் கைது செய்யப்படக்கூடாது.
காவல் துறையினரேகூட எல்லா விதமான வழக்குகளிலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியாது. Cognizable offence அதாவது புலன் கொள் குற்றம்/பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் நடைபெற்றால் ஒழிய காவல் துறையால் சம்மந்தப்பட்ட குற்றாவாளியை வாரண்ட் இல்லாமல் கைது செய்யமுடியாது. இதுவே Non-cognizable offence, அதாவது புலன் கொள்ளா குற்றம்/பிடி ஆணை தேவைப்படும் குற்றம் நடைபெற்றால் காவல்துறை அதிகார வரம்பு கொண்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் (Jurisdictional Magistrate) சென்று வாரண்ட் பெற்ற பிறகே ஒருவரைக் கைது செய்யமுடியும்.
எதுவெல்லாம் பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் அல்லது பிடி ஆணை தேவைப்படுகின்ற குற்றம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Criminal Procedure Code) முதல் அட்டவணையில் வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அந்த அட்டவணையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி என்னென்ன குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது, அவற்றில் எது புலன் கொள் குற்றம், எது புலன் கொள்ளா குற்றம் என்பதும், எது ஜாமீனில் விடக்கூடியக் குற்றம் அல்லது எது ஜாமீனில் விட முடியாத குற்றம் என்பதும் விவரிக்கப்பட்டிருக்கும்.
இந்திய தண்டனைச் சட்டம் மட்டுமல்லாமல் ஏனைய சட்டங்களிலும் பெரிய குற்றங்கள் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு அல்லது அதற்கும் மேலாக சிறை தண்டனை வழங்கப்படக்கூடிய (மரண தண்டனை உட்பட) குற்றங்கள் எல்லாம் cognizable offence என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு கீழ் தண்டனை கொண்ட குற்றங்கள் non-cognizable offence என்று அழைக்கப்படுகிறது.
மேற்சொன்ன விதிமுறையில் விதிவிலக்குகளும் உண்டு. உதாரணத்துக்கு, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் குற்றத்துக்கு மூன்றாண்டுகளுக்குக் குறைவாகத்தான் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அந்தக் குற்றம் cognizable குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு நேர்மாறாக இருதாரம் செய்து கொண்டவர்கள், அடல்ட்ரி போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கும் மேலான சிறை தண்டனை வழங்கப்படும். ஆனால் இது போன்ற குற்றங்களை Non- cognizable குற்றம் என்று சட்டம் வரையறை செய்திருக்கிறது.
இன்னொன்று தெரியுமா? காவல் துறையினர்தான் குற்றவாளியைக் கைது செய்யவேண்டும் என்பதில்லை.பொதுமக்களில் யாரேனும் ஒருவரோஅல்லது பலரோ சேர்ந்தும்கூட, குற்றம் நடந்த சமயத்தில் அல்லது குற்றம் நடக்கவிருக்கின்ற சமயத்தில் (காவலர்கள் யாரும் இல்லாத நிலையில்) குற்றவாளியைக் கைது செய்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். ஆக, கைது என்பது ஒரு குற்றவாளியைச் சுதந்திரமாக நகர விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருப்பதே ஆகும்.
குற்றவாளியைக் கைது செய்கிறேன் பேர்வழி என்று குற்றவாளியின் உயிரை மாய்த்துவிடக் கூடாது. இது பொது மக்களுக்கு மட்டுமல்ல, காவல் துறைக்கும் பொருந்தும். ஒரு குற்றவாளியைக் கைது செய்வதற்கு எவ்வளவு பலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு பலத்தைதான் பிரயோகிக்கவேண்டும். யாரேனும் ஒருவரைத் தகுந்த காரணமில்ல பொது மக்கள் கைது செய்து வைத்திருந்தால், முறையின்றி சிறை வைத்ததற்காக அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும். ஜாக்கிரதை!
காவல் துறையினர் வாரண்ட்டை நிறைவேற்றும் போது (குற்றவாளியைக் கைது செய்யும் பொழுது) குற்றம் சாட்டப்பட்டவரோ அல்லது பொதுமக்களோ காவல் துறையினருக்கு ஒத்தழைப்பு வழங்கவேண்டும். வாரண்டை நிறைவேற்ற விடாமல் காவல் துறையினருக்கு இடையூறு செய்தால் அதுவும் குற்றமாகும்.

வரதட்சிணை கொடுமை" எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு திட்டம்.

இந்திய தண்டனைவியல் சட்டத்தில் 498ஏ பிரிவு சேர்க்கப்பட்டது ...

************************************************************************************
வரதட்சிணை கொடுமையை சமரசத்துக்குள்பட்ட குற்றமாக்கும் வகையில், இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 498ஏ பிரிவில் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 498ஏ பிரிவில், கணவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிராக பெண் அல்லது அவரது குடும்பத்தினர் வரதட்சிணை கொடுமை தொடர்பாக புகார் அளித்தால், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு ஜாமீனும் அளிக்கப்படுவதில்லை. இருதரப்பினரும் சமரசம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்படவில்லை.
இந்த வழக்கில், நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமிழைக்காதவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் குற்றவாளிகளாகவேகருதப்படுவர். அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.
இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக இந்த சட்டத்தை பெண்கள், தங்களது கணவர், அவரது குடும்பத்தினருக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
"சமரசம் செய்து கொள்ளலாம்': இதுதொடர்பாக மத்திய சட்ட ஆணையம், நீதிபதி மாலிமாத் குழு ஆகியவை மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அளித்துள்ளன. அந்தப் பரிந்துரைகளின்படி, நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் புகார்தாரரும், குற்றம்சாட்டப்பட்டவரும் வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அதை சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
இந்திய தண்டனைவியல் சட்டத்தின் (ஐ.பி.சி.) 498ஏ பிரிவை, சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்வதற்கான மத்திய அமைச்சரவையின் வரைவு, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,வரைவு மசோதாவை சட்ட அமைச்சகம் தயாரிக்கும்.
தற்போதைய சட்டத்தில், பொய்யான புகார் அளிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவர்களுக்கு ரூ.1,000 மட்டுமே அபராதம் விதிக்க முடியும். இந்தத் தொகையை ரூ.15,000 ஆக அதிகரிக்கும் வகையில் அரசு திருத்தம் செய்ய இருக்கிறது. அத்துடன், தண்டனை விதிக்கப்படுபவர்கள் இழப்பீடு வழங்கும்பட்சத்தில் அவர்களுக்கு சிறைத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்ப்பு: வரதட்சிணை கொடுமை எதிர்ப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய இருப்பதற்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
தற்போதைய சட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு நிவாரணமும், பாதுகாப்பும் கிடைக்கிறது.
இதுவே தொடர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றம் என்பது மனித உரிமை மீறலாகும். இதில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. மத்திய அரசின் முடிவை எதிர்க்கிறேன் என்றார்.
பின்னணி: தில்லியில் 1980ஆம் ஆண்டு காலகட்டத்தில், வரதட்சினண கொடுமை காரணமாக தொடர்ந்து புது மணப்பெண்கள் உயிரிழந்ததை அடுத்து, தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், இந்திய தண்டனைவியல் சட்டத்தில் 498ஏ பிரிவு
சேர்க்கப்பட்டது ...

மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும்.





இந்திய சட்டப் பிரிவு

பிரிவு 153A(1): பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுமடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்


பிரிவு 153B(1): A பேச்சு எழுத்து அல்லது சைகை அல்லது காணத்தகும் பொருள்களின் மூலமாகவாவது அல்லது வேறெந்த விதத்திலாவது

அ. ஒரு சமய இன மொழி அல்லது சாதி சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கின்ற காரணம் காட்டி எவரேனும் சட்ட ரீதியாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசிடம் உண்மையான நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும்இருக்க முடியாது அல்லது இந்திய அரசாட்சியின் உரிமையும் முழுமையாக நிலை நிறுத்த முடியாது என்கிற வகையில் குற்றச்சாட்டை செய்தாலும் சுமத்தினாலும்

B) சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி, சமூகம் அல்லது பிரிவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எவருக்கேனும் இந்தியாவின் குடிமக்கள் என்ற முறையில் அவர்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் பறிக்கப்பட வேண்டும் என்று உரைக்கிற அல்லது ஆலோசனை சொல்கின்ற பிரசாரம் செய்கின்ற அல்லது வெளியிடுகின்ற

C) சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி, சமூகம் அல்லது பிரிசவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எந்த ஓர் உறுப்பினருக்குரிய கட்டுப்பாடு பற்றி உரைத்தல், ஆலோசனை, கோரிக்கை அல்லது வேண்டுகோள் எதையேனும்வெளியிடுதல் ஆகியவற்றால் அந்த வகுப்பினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒற்றுமையின்மை பகை உணர்ச்சி அல்லது குரோதம் அல்லது வெறுப்பை உண்டாக்கும் விதத்தில் கோரிக்கை வேண்டுகோள், ஆலோசனை அறிவிப்பு வெளியிடுதல் போன்றவை குற்றமாகும்
மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு, 498-ஏ-யின் கீழ் குற்றம்.. சாட்டப்பட்டவர்,



வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு, 498-ஏ-யின் கீழ் குற்றம்.. சாட்டப்பட்டவர், உடனடியாக கைது செய்யப்படுவார்; அவருக்கு ஜாமின் கிடையாது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மூன்றாண்டு வரை சிறைத் தண்டனையும் கிடைக்கும்.இந்தவழக்கில், நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமிழைக்காதவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் குற்றவாளிகளாகவேகருதப்படுவர்.


இதற்கிடையில் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை, பெண்களில் சிலர் தவறாக பயன்படுத்துவதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது. அதாவது, தங்களுக்கு பிடிக்காத கணவரையும், அவரின் குடும்பத்தினரையும் பழிவாங்க, இந்த சட்ட விதிகளில், தங்களுக்கு சாதகமான பிரிவுகளை பயன்படுத்தி, பொய் புகார் கொடுக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.


கணவருடன் வாழப் பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் பெண்கள், இந்த சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது.


இந்தநிலையில் இந்த சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக மத்திய சட்ட ஆணையம், நீதிபதி மாலிமாத் குழு ஆகியவை மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அளித்துள்ளன. அந்தப் பரிந்துரைகளின்படி, நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் புகார்தாரரும், குற்றம்சாட்டப்பட்டவரும் வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அதை சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,"


இந்திய தண்டனைவியல் சட்டத்தின் (ஐ.பி.சி.) 498ஏ பிரிவை, சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்வதற்கான மத்திய அமைச்சரவையின் வரைவு, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,வரைவு மசோதாவை சட்ட அமைச்சகம் தயாரிக்கும்.தற்போதைய சட்டத்தில், பொய்யான புகார் அளிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவர்களுக்கு ரூ.1,000 மட்டுமே அபராதம் விதிக்க முடியும். இந்தத் தொகையை ரூ.15,000 ஆக அதிகரிக்கும் வகையில் அரசு திருத்தம் செய்ய இருக்கிறது. அத்துடன், தண்டனை விதிக்கப்படுபவர்கள் இழப்பீடு வழங்கும்பட்சத்தில் அவர்களுக்கு சிறைத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ,"என்று தெரிவித்தன.


வரதட்சிணை கொடுமை எதிர்ப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய இருப்பதற்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,"தற்போதைய சட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு நிவாரணமும், பாதுகாப்பும் கிடைக்கிறது.இதுவே தொடர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றம் என்பது மனித உரிமை மீறலாகும். இதில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. மத்திய அரசின் முடிவை எதிர்க்கிறேன் என்றார்.


சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன? கடந்த, 2010ல், வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கு ஒன்றில்,அம்சங்கள்: *ஆதாரமின்றி, வரதட்சணை கொடுமை வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது. *வரதட்சணை கொடுமை வழக்கில், சம்பந்தபட்ட பெண்ணின் கணவர் மட்டுமல்லாமல் அவரின் உறவினர்கள், தாத்தா, பாட்டி, வெளிநாடுகளில் இருக்கும் சகோதர, சகோதரிகள் கூட கைது செய்யப்படுகின்றனர்; இது, கண்டிக்கத்தக்கது