Showing posts with label பொதுவான செய்திகள். Show all posts
Showing posts with label பொதுவான செய்திகள். Show all posts

Saturday, 22 October 2016

விரைவில் வருகிறது 2,000 நோட்டு

மும்பை: 

ரிசர்வ் வங்கி விரைவில் 2,000 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளது. தற்போது அதிகபட்ச மதிப்பாக ஆயிரம் ரூபாய் நோட்டும், இதற்கு அடுத்து 500 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் உள்ளது. கருப்பு பண புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு கருப்பு பண பதுக்கலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.
இதற்கேற்ப, ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு புழக்கத்தை தடுக்க வேண்டும், இவற்றை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி 2,000 நோட்டை வெளியிட உள்ளது.
மைசூருவில் உள்ள அச்சகத்தில் இந்த நோட்டுக்கள் அச்சிட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் புழக்கத்தில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 
1938 மற்றும் 1954ம் ஆண்டுகளில் 10,000 மதிப்பிலான ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிட்டது. ஆனால், இவை முறையே 1946 மற்றும் 1978ம் ஆண்டுகளில் வாபஸ் பெறப்பட்டன.

Wednesday, 19 October 2016

வரும் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ்..? கொண்டாடத் தயாராகும் அதிமுக தொண்டர்கள்..!!


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 26 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு லண்டன் சிறப்பு டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் சிங்கப்பூர் டாக்டர்கள் என தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளை பரவிவரும் நிலையில், பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்து பேசும்போது புகைப்படங்களை வெளியிட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியது.
மேலும், சிங்கப்பூரிலிருந்து வந்த பெண் டாக்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை சிங்கபூரில் வைத்து சிகிச்சை அளித்தால் பூரண குணமடைய முடியும் என தெரிவித்த நிலையில், அதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்ததாகவும், முதல்வர் ஜெயலலிதா கடல் கடந்து செல்ல விரும்பாதவர் எனவும், அவர் தீபாவளிக்கு வீட்டில் இருந்தால் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறிறித்து அப்போலோ மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவக்குமாரிடம் ஆலோசித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், முதல்வரின் வீட்டில் லிப்ட் அமைக்கும் பணியும், அங்கு வைத்து சிகிச்சை அளிக்க ஏதுவாக அப்போலோ மருத்துவமனையிலிருந்து சிகிச்சை கருவிகள் போயஸ் தோட்டத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தீபாவளிக்கு முன் வரும் 27ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தெரிகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் கொண்டாட தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Topics: Online Tamil News

டேட்டா செலவை குறைக்கும் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் குறித்த தகவல்கள்:


உலகில் இன்று அதிக நபர்கள் உபயோகப்படுத்தும் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது பல புதிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சீனா, இந்தியாவை அடுத்து அதிக நபர்கள் வாழும் நாடு ஃபேஸ்புக் நாடு தான் என்று கூறப்படும் அளவுக்கு அதன் பயனாளர்கள் நாளுக்கு நாள் மில்லியன் கணக்கில் அதிகமாகி வருகின்றனர்.
இதேபோல் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனமும் அவ்வப்போது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள ஒரு புதிய வசதிதான் மெசஞ்சர் லைட். 
ஃபேஸ்புக் உபயோகப்படுத்த இண்டர்நெட் தேவை என்றாலும் டெக்ஸ்டாப்பில் அல்லது ஸ்மார்ட்போனில் இதை பயன்படுத்த கண்டிப்பாக ஓரளவுக்கு ஸ்பீடான நெட்வொர்க் தேவை. ஆனால் ஒருசில நிறுவனங்களில் இது கிடைக்காது. மேலும் பழைய மாடல் போன்களில் என்னதான் ஸ்பீடான நெட்வொர்க் சிம்-ஐ போட்டாலும் ஸ்பீடு கிடைக்காது.
வேகமில்லாத இண்டர்நெட்டில் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட். இந்த மெசஞ்சர் லைட் குறித்த விபரங்க்ளை தற்போது பார்ப்போம்
1. எதை எதை ஷேர் பண்ணலாம்
இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் புகைப்படங்கள், டெக்ஸ்ட் வரிகள் மற்றும் இணையதள லிங்குகளை மட்டுமே ஷேர் செய்ய அனுமதிக்கும். வேறு எதையும் நீங்கள் இதில் ஷேர் செய்ய முடியாது.
2. வாய்ஸ் கால் வசதி இல்லை
ஃபேஸ்புக்கில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வாய்ஸ் கால் வசதி அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில் இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சேட் மட்டுமே செய்ய முடியும். வீடியோ கால் அல்லது வாய்ஸ் கால் இதில் அனுமதி இல்லை. இதனால்தான் குறைந்த வேக இண்டர்நெட் கனெக்ஷனிலும் இது வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
3. பிசினஸ் மெசஞ்சரும் இல்லை:
கடந்த ஆண்டு ஃபேஸ்புக் பிசினஸ் மெசஞ்சரை அறிமுகம் செய்தது. இந்த வசதி தொழிலதிபர்களுக்கும் பிசினஸ் செய்பவர்களுக்கு மிகுந்த உதவியாக இருந்த நிலையில் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட்-ல் இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. 
4. ஆண்ட்ராய்டு போனுக்கு மட்டுமே பயன்படும்:
உலகில் உள்ள பெரும்பாலானோர் ஃபேஸ்புக்கை ஆண்ட்ராய்டு ஆப் மூலமே பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் வெளிவந்த சர்வே ஒன்று தெளிவாக கூறியுள்ளது. எனவே ஃபேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் பயன்பாட்டை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மட்டுமே முதல்கட்டமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. போக போக இனி வேறு மாடல்களிலும் இது அறிமுகப்படுத்தப்படலாம்
5. இந்தியர்கள் பயன்படுத்த முடியுமா? 
சரி, இந்தியாவில் தான் ஸ்லோவான இண்டர்நெட் கனெக்ஷன் அதிகம் உள்ள இடம். ஆனால் இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் வசதியை இப்போதைக்கு இந்தியர்கள் பயன்படுத்த முடியாது. கென்யா, துனிஷியா, மலேசியா, இலங்கை மற்றும் வெனின்சுலா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டுமே தற்போது ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எப்போது ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த சரியான தகவல் இதுவரை இல்லை எனினும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா - ஏர்டெல் கூட்டணி: சிக்களில் ஜியோ!!



இந்தியாவின் மிகப்பெரிய 
தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்டெல் மீண்டும் தொலைதொடர்பு சாதனங்கள் நிறுவனமான நோக்கியாவுடன் கூட்டணி வைக்கிறது.
சமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அடுத்த 20 வருடங்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான 173.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை ஏர்டெல் கைப்பற்றியுள்ளது.
இப்போது ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டியில் கடினமான தன்மையை கொடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக ஏர்டெல்- நோக்கியா கூட்டணி நிகழ்த்தப்பட்டுள்ளது. 
புதிய சேவை வட்டங்கள்:
ஏற்கனவே சேவைகளை வழங்கும் ஆறு வட்டங்களை (மும்பை, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப், கேரளா) தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் குஜராத், பீகார், மற்றும் உ.பி. கிழக்கு ஆகிய 3 புதிய வட்டங்களில் அதன் சேவைகளை விரிவடைய செய்கிறது.
கவரேஜ்:
நாட்டில் இணைய தரவு பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் திருப்தியை மேம்படுத்த கவரேஜ் அனுமதிக்கும் 4ஜி தொழில்நுட்ப விரிவாக்கத்தை நிகழ்த்தி வருகிறது.
வேகமான மொபைல் இணையம்:
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய பயன்படுத்தல் சேவையானது நம் அனைவருக்கும் ஒரு சமமான வேகத்திலான மொபைல் இணைய அணுகலை வழங்க அனுமதிக்கும்.
2ஜி, 3ஜி வலையமைப்பு விரிவாக்கம்: 
மரபுவழி 2ஜி அடிப்படை நிலையங்கள் உட்பட ஏர்டெல் நிறுவனத்தின் எட்டு 3ஜி பிரதேசங்கள் நவீனமயமாக்கப்படும் என்று நோக்கியா குறிப்பிட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம்: 
பார்தி ஏர்டெல் நாட்டில் அதன் ஸ்பெக்ட்ரம் தடத்தை விரிவாக்கும் 173.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை கைப்பற்றியுள்ளது. அதன் இருப்பை அதிகமாக்க உதவும் 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 230 மெகாஹெர்ட்ஸை முழுவதும் பெற மொத்தம் ரூ.14,244 கோடி செலவு செய்துள்ளது.

Tuesday, 18 October 2016

முதல்வர் குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு 3 நாள் நோன்பு :


முதல்வர் குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுகவினர் 3 நாட்கள் நோன்பு மேற்கொண்டுள்ளனர்.
அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் 25 பேர் இன்று முதல் 3 நாட்கள் நோன்பு இருந்து வருகின்றனர். மேலும், அப்போலோ மருத்துவமனை முன்பு 20 பள்ளி மாணவர்கள் முதல்வர் குணமடைய வேண்டி திருக்குரான் ஓதி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முதல்வர் குணமடைய வேண்டி அதிமுக மகளிரணி சார்பில் அப்போலோ மருத்துவமனை முன் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல முதல்வர் குணமடையவேண்டி திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் 20க்கும் மேற்பட்டோர்  அப்பல்லோ மருத்துவமனை முன்பு தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடத்தினர்.

Friday, 14 October 2016

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!


    இலங்கையில் காலநிலையில் இன்று தொடக்கம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை வரட்சியை தோற்றுவித்த காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இடைப்பருவ பெயர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நாட்டில் பரவலாக மழைபெய்யக்கூடும் என்றும் திடீரென காற்று வீசி இடி, மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.
இவ்வாறு ஏற்பட்டுள்ள திடீர் மற்றத்தினால் பொதுமக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் பொதுமக்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வீடுகளுக்கு அருகில் இருக்கும் பெரியமரங்களில் உள்ள பட்ட மரக்கொப்புகளை அகற்றுவதன் மூலமும் பாதுகாப்பை உறுதிப்படுத்திகொள்ள முடியும் என்றும் இடிமின்னல் தாக்கத்தின் வெற்று பிரதேசங்களில் நிற்பதை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடும் வரட்சிக்குப் பின்னர் நேற்று பொலநறுவையில் கன மழை பெய்துள்ளது. அதேவேளை இன்று அதிகாலையிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, 13 October 2016

திருமண சட்டத்தில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொதுசட்டமாக அமல்படுத்த வேண்டும் - விஜயதரணி MLA கோரிக்கை.....!!

திருமண சட்டத்தில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொதுசட்டமாக அமல்படுத்த வேண்டும் - விஜயதரணி MLA கோரிக்கை.....!!

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவானாக மகிளா காங்கிரஸின் அகில இந்திய பொதுச்செயலாளர் விஜயதரணி எம்.எல்.ஏ திருமண சட்டத்தில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொதுசட்டமாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது...
இஸ்லாமிய இளம் பெண்களின் மணவாழ்க்கை பிடிக்காதபோது விரைவில் தலாக் பெற்று மறுமணம் செய்து கொள்ள முடிகிறது.
இந்து இளம் பெண்களின் மணவாழ்க்கை பிடிக்காதபோது விவாகரத்திற்காக நீதிமன்றம் அலைந்தே சீரழிந்து போய்விடுகிறது.
எனவே திருமண சட்டத்தில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொதுசட்டமாக அமல்படுத்த வேண்டும்.

ரேஷன் - புகார் எண் அறிவிப்பு!!!

ரேஷன்  - புகார் எண் அறிவிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உணவுத் துறையின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் பொது விநியோகத்திட்டத்திற்கு 3 தேவைக்கான அரிசி கையில் இருப்பதாகவும், தீபாவளி பண்டிகை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், தேவைப்படும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் நியாய விலை அங்காடிகளுக்கு உடனுக்குடன் நகர்வு செய்ய வேண்டுமெனவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
மேலும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் புகார் அளிக்க வேண்டிய எண்களையும்  அறிவித்துள்ளார்.
044 28592828 , 9445190660, 944519061, 944519062

விரைவில் உங்கள் செல்போன் எண் மாற உள்ளது?


விரைவில் உங்கள் செல்போன் எண் மாற உள்ளது?
➖➖➖➖➖➖➖➖➖➖➖
இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்கங்களைக் கொண்ட செல்போன் எண்கள், விரைவில் 11 இலக்கங்களைக் கொண்டதாக மாற்ற மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் செல்போன் சேவை அறிமுகம் செய்யப்பட்ட போது, 2003ம் ஆண்டில் 10 இலக்க எண்களைக் கொண்ட செல்போன் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
செல்போன் வாடிக்கையாளர்களின் அடிப்படையில் அப்போதைய கணிப்பின்படி இந்த 10 இலக்க எண் என்பதை அடுத்து 30 ஆண்டுகளுக்கு பராமரிக்க முடிவும் செய்யப்பட்டது.
ஆனால், இந்தியாவில் செல்போன்  சேவையின் அசுர வளர்ச்சியும், வாடிக்கையாளர்களின் அதீத பயன்பாடு காரணமாக, பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் மீறி செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதோடு, ஒருவரே பல எண்களைப் பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது.
இதனால், செல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாக உள்ளது. இந்த சிக்கலுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்போன் எண்களை 11 இலக்கங்கள் கொண்டதாக மாற்ற தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
➖தினமனி

Wednesday, 12 October 2016

அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு !

அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு !

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் மீது  IPC153 (a) மத வேற்றுமை உணர்வை தூண்டும் விதத்தில் செயல்படுதல் , 25(1)(a) ஆயுத சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு...
துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பூஜை நடத்திய படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் அளித்த புகாரில் கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை..

Tuesday, 11 October 2016

முதலமைச்சராக ஜெயலலிதா நீடிப்பார்..துறைகள் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாற்றம் !


முதலமைச்சர் #ஜெயலலிதா பொறுப்பில் இருந்த துறைகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கீடு செய்து ஆளுநர் அறிவிப்பு..
மேலும், ஜெயலலிதா முதலமைச்சராக நீடிப்பார் என்றும், அவர் பொறுப்பில் இருந்த காவல்துறை, உள்துறை உள்ளிட்டவைகள் கூடுதலாக ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடுகள் தொடரும் என்றும், முதலமைச்சரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அமைச்சரவை கூட்டங்களுக்கு இனி ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்   என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Jayalalithaa | #OPanneerselvam

Monday, 10 October 2016

குழந்தைகள் அறிவாளிகளாக வளர்வதற்கு தாயின் மரபணு தான் காரணம்: ஆய்வில் தகவல்.


குழந்தைகள் பிறந்தது முதல் அறிவாளிகளாக வளர்வதும் அல்லது அறிவு குறைந்தவர்களாக மாறுவதும் அவர்களுடைய தாயாரின் மரபணுவை பொருத்துள்ளதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாயாருக்கு X வகை குரோமோசோம் இரண்டு உள்ளதால் அவர்கள் எளிதில் அறிவை உற்பத்தி செய்யும் மரபணுக்களை தங்களுடைய குழந்தைகளுக்கு அனுப்புகின்றனர்.
ஆனால், இந்த X வகை குரோமோசோம் தந்தைக்கு ஒன்று மட்டுமே இருப்பதால் அவர்களால் அறிவை உற்பத்தி செய்யும் மரபணுக்களை குழந்தைகளுக்கு அனுப்ப முடியாது.
அதாவது, குழந்தை அறிவாளியாக வளர்வதும் அல்லது அறிவு குறைந்தவர்களாக வளர்வதும் தாயின் மரபணுவை பொருத்து தான் உள்ளது.
இதில், தந்தை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.
எனினும், தந்தை மூலம் அறிவு மரபணுக்கள் குழந்தைகளுக்கு அனுப்பப்பட்டாலும் அவை குழந்தைகள் வளர்ச்சி அடையும்போது தானாக செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதேசமயம், குழந்தைகள் அறிவாளிகளாக வளர்வதற்கு சுமார் 60 சதவிகிதம் தாயாரின் மரபணு காரணமாக இருந்தாலும் கூட, எஞ்சிய 40 சதவிகிதம் குழந்தை எந்த சூழலில் வளர்கிறது என்பது பொருத்து அமையும் எனவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Saturday, 8 October 2016

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்மாநில தலைமையின் முக்கிய அறிவிப்பு:


தனியார் சட்டத்திற்குள் தலையிட வேண்டாம்!
பாஜகவுக்கு முஸ்லிம்கள் எச்சரிக்கை!!
சிறுபான்மை சமுதாயத்தில் பெரும்பான்மை சமூகமாக முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மதச்சார்பற்ற நம் நாட்டில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுமானவையாக உள்ளன. ஆயினும் சில சட்டங்கள் மட்டும் மத நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால் அனைத்து மதத்தினருக்கும் விதி விலக்காக அவர்களின் மத நம்பிக்கை படி செய்து கொள்ள மிகச்சில சட்டங்களில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிவிலக்கின் படி முஸ்லிம்கள் தங்களின் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை போன்ற விஷயங்களில் இஸ்லாமியச் சட்டத்தின் படி செய்து கொள்ள அனுமதிப்பது தான் முஸ்லிம் தனியார் சட்டமாகும்.
முஸ்லிம்கள் தங்களின் மத நம்பிக்கைப் படி இதனைச் செய்வதில் மற்ற எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இருப்பினும் முஸ்லிம்களின் இந்த உரிமையைப் பறித்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பாஜக, ஆர்.எஸ்.எஸ்  போன்ற சங்பரிவார அமைப்புகள் துடித்து கொண்டிருக்கின்றன.
சங்பரிவாரத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் உச்சநீதிமன்றத்தில் தலாக் (விவாகரத்து) வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இஸ்லாமியச் சட்டத்திற்குள் நுழைவது முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பதாக ஆகுமா? என்ற கேள்வியோடு மத்திய அரசின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
உடனே பரிந்துரை என்கிற பெயரில் பாஜக அரசு முஸ்லிம் விரோதப் போக்கைக் காட்டும் விதமான அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையைப் பார்க்கின்ற போது  ‘ஆடு நனையுதே என்று ஓநாய் அழுகின்ற” பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
முத்தலாக் என்பது சமத்துவத்திற்கு எதிரானது, பெண்களின் சுயமரியாதையைப் பாதிக்கக்கூடியது என்பதாக தனது அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமியப் பெண்களின் நலனில் பாஜகவிற்கு உதித்திருக்கிற அக்கறையை இங்கு கவனிக்க வேண்டும்.
குஜராத், முஸாஃபர்  நகர் உட்பட பல்வேறு கலவரங்களில் ஆயிரக்கணக்கான பெண்களைக் கருவறுத்தவர்கள், அகதிகளாக ஊரை விட்டே ஓட ஓட விரட்டியவர்கள் இன்று தலாக் பற்றி கவலை கொள்வது அப்பட்டமான அயோக்கியத்தனாமாகும்.
ஒரு நேரத்தில் முத்தலாக என்பது இல்லை என்பது உண்மைதான். சவூதி எகிப்து உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்ல அனுமதியில்லை. நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய வழியிலும் இதற்கு அனுமதி இல்லை. முஸ்லிம் தனியார் சட்டத்தில் தவறுதலாக இடம்பெற்ற இச்சட்டத்தை முஸ்லிம் சமுதாயத்தின் ஒப்புதலோடு மாற்றியமைத்தால் அதில் முஸ்லிம்களுக்கு மறுப்பு இல்லை.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள விவாகரத்து உரிமையை ஒட்டு மொத்தமாகப் பறிக்க பாஜக அரசும் நீதிமன்றமும் முயல்வதை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது. இது அரசியல் சாசனம் வழங்கிய உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்பதுதான் முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தாகும்.
மற்ற சமுதாயம் போல் விவாகரத்து வழக்குக்கு ஐந்து பத்து ஆண்டுகள் அலைவது போல் முஸ்லிம்கள் அலைய தயாரில்லை.
விவாகரத்து தாமதம் ஆவதால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதையும், தவறான செயல்களில் ஈடுபடுவதையும் சிந்திக்கும் யாரும் இஸ்லாம் கூறும் விவாகரத்து முறைதான் சரியானது என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.
மேலும் போகிற போக்கில் தலாக் சொல்வது இஸ்லாத்தில் இல்லை.
கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை எனில் இரு வீட்டாரும் இணைந்து அவர்களை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களால் முடியாத நிலையில் ஜமாத்தார்கள் தலையிட்டு இணைத்து வைக்க முயற்சி செய்ய வேண்டும். அதுவும் பயனளிக்கவில்லை எனில் நல்ல முறையில் பிரிந்து விட வேண்டும்.
இருவரும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டால் இரு சாட்சிகள் முன்னிலையில் விவாக ரத்து செய்ய வேண்டும். அதன் பின்னர் ஜமாஅத்தார்கள் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு கணவனிடமிருந்து கணவனின் வசதிக்கு ஏற்ப பாதுகாப்புத் தொகை பெற்றுத்தர வேண்டும்.
குழந்தைகள் இருந்தால் அதன் பராமரிப்புச் செலவு முழுவதும் கணவனைச் சேர்ந்ததாகும். குழந்தைக்கு பாலூட்டுவதற்காகக் கூட மனைவிக்கு தக்க சன்மானம் வழங்க வேண்டும். இன்னும் பல விஷயங்கள் இதன் பின்னணியில் உள்ளன.
இது தான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டமாகும்.
இவற்றில் எதையும் கவனிக்காமல் முஸ்லிம்களிடம் கருத்தும் கேட்காமல் அவசர அவசரமாக இந்த அறிக்கையைச் சமர்ப்பித்து பாஜக தனது ஃபாஸிச சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக முஸ்லிம்களின் மத உரிமையைப் பறித்து பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவை நிறைவேற்ற பாஜக முயல்கிறது என்பது தான் உண்மை.
எனவே பாஜக தனது அத்துமீறலை நிறுத்திக் கொள்ள வேண்டும், அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளில் கைவைக்கக் கூடாது என இஸ்லாமிய சமுதாயம் எச்சரிக்கிறது.
முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தைப் பெற்று முத்தலாக் முறையை நீக்க முன்வந்தால், நபிகள் நாயகத்தின் வழிமுறைக்கு மாற்றமான இந்த முத்தலாக்கை நீக்குவதை முஸ்லிம்கள் மறுக்க மாட்டார்கள்   என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவண்,
M.முஹம்மது யூசுப்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Thursday, 6 October 2016

நாடு முழுவதும் வரும் ஜனவரி முதல் பிறப்பு, இறப்பு சான்றுகள் ஆன்லைனில் பெறலாம்: அதிகாரிகள் தகவல்.


நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உள்ளது. இதில் தினமும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்காக  அலைந்து திரிகின்றனர். இதற்கென்று விடுமுறை எடுத்து வந்து காத்துகிடக்கின்றனர். இந்த சான்றுகள் பெறுவதற்குள் மாதங்கள் ஆகிவிடுவதாக பல்வேறு புகார்கள் உள்ளது. இதில் விதிவிலக்காக சென்னையில் மட்டும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மற்ற மாநகராட்சிகளில் ஆன்லைன் மயமாக்கப்பட்டாலும் சான்றுகள் பெறுவதற்கான விண்ணப்பங்களை நேரில் சென்றுதான் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றுகள் கணினி மூலமாகவும், தட்டச்சு செய்யப்பட்டும் வழங்கப்படுகிறது. இப்படி பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்த சிக்கல்களை போக்க மத்திய அரசு சார்பில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் சென்னையில் மட்டும் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவது ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மத்திய அரசு சார்பில் நாடுமுழுவதுமாக ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்கு டெல்லியை தலைமையிடமாகக்கொண்டு ஒரே கணினி மென்பொருள் மூலம் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும். இவ்வாறு கூறினர்

ரூ 2 லட்சம் அரசு மானியத்தில் வீடு கட்டவேண்டுமா..!! இதபடியுங்க முதலில்..!


பொது மத்திய அரசின் திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோசனா திட்டத்தில் கீழ் அனைவரும் சொந்த வீடு என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டம்.
இந்தத் திட்டத்தில் பெண்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர் அனைவரும் பயனடையலாம். வீட்டினைப் புதுப்பிக்கவும் இதன் மூலம் கடன் பெறலாம்.
இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் நகரம் மற்றும் சிறு நகரங்கள் என்ற வகையில் 721 பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும்போது 1 லட்சம் ரூபாயில் இருந்து 2.30 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஊரக வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் வீட்டுக் கடன் வாங்கினால் இந்த மானியம் கிடைக்கும்

Tuesday, 4 October 2016

ஐ.எஸ். தீவிரவாதி செய்தி விவகாரம். மன்னிப்பு கேட்குமா பாலிமர் டிவி?


நேற்று பாலிமர் டிவியில் கோவையில் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதி கைது என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈராக், சிரியாவில் உள்ள தீவிரவாத இயக்கம் தமிழகத்திலும் காலூன்றிவிட்டதோ என அனைவரும் அச்சப்பட்டு இருக்கும் நிலையில் இதுவொரு பொய்யான செய்தி என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோவை யூசூப் அவர்கள் இதுகுறித்து பாலிபர் நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது கடைசி வரை பாலிமர் நிர்வாகத்தினர் மழுப்பலாக பதில் கூறியதாக தெரிகிறது. 
உண்மையில் கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்கள், ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருக்கின்றார்களோ என்ற சந்தேகத்தில் விசாரணைக்காக மட்டுமே காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் அவர்கள் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் கைது என்ற செய்தியை கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஸ்குரோலில் ஓடவிட்ட பாலிமர் டிவி, விடுவிக்கப்பட்ட செய்தியை தெரிவிக்கவில்லை என்று கோவை யூசூப், பாலிமர் டிவி நிர்வாகத்திடம் கண்டனம் தெரிவித்த ஆடியோ ஒன்று வெகுவேகமாக தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த முஸ்லீம் சகோதரர் கேட்பது ஒன்றே ஒன்றுதான். உண்மையில் கைது செய்யப்பட்டவர் ஐ.எஸ்,தீவிரவாதிகள் என்றால் அதற்குரிய ஆதாரத்தை தெரிவியுங்கள். அல்லது. தவறுதலாக செய்தி வெளியிட்டதற்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் என்பதுதான். இதை பாலிமர் டிவி நிர்வாகம் செய்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.


தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இரு அரசாணைகள் பிறப்பித்தன. அதேபோல, சென்னை மாநகராட்சிகளும் அறிவிப்பாணை வெளியிட்டது.
முன்னதாக தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தவில்லை என்றும் எஸ்.டி. பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் ஒதுக்கவில்லை என்றும் எனவே, இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்யவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி என்.கிருபாகரன் நேற்று பிறப்பிப்பதாக இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (4–ந் தேதி) பிறப்பிப்பதாக நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டு இருந்தார். 
இந்த வழக்கில் இன்று  நீதிபதி என்.கிருபாகரன்  உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார்..   அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.டிசம்பர் 30 ந்தேதிக்குள் உள்ள்ளாட்சி தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார். மேலும் தேர்தலுக்காக புதிய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். எனவும் உத்தரவிட்டு உள்ளார்

Saturday, 1 October 2016

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.


      முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளதாக ஆளுநர்  வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22 ந்தேதி இரவு காய்ச்சல் காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரில் சென்றார்.
அப்போது, முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு சென்று பார்த்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் ஆளுநர் கேட்டறிந்தார்.
முதலமைச்சருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாகவும் , அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Wednesday, 28 September 2016

 ' பணமே வேண்டாம்...போட்டி போட வாங்க...!'  -விஜயகாந்தின் வேட்டை


உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்திலேயே தே.மு.தி.க தொண்டர்கள் இல்லை. ஆனால், ' அனைத்து வேட்பாளர்களையும் தி.மு.க அறிவிப்பதற்குள், நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் விஜயகாந்த். 
தமிழக அரசியல் கட்சிகள் சுதாரித்து எழுவதற்குள், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டது தேர்தல் ஆணையம். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டது அ.தி.மு.க. இன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது தி.மு.க. அதேபோல், மக்கள் நலக் கூட்டணியின் முதல்கட்ட தொகுதிப் பங்கீடும் வெளியிடப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தல் களத்தில் தே.மு.தி.க என்ற கட்சியே இருப்பதுபோல் தெரியவில்லை. " கட்சித் தலைமை எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், போட்டியிடுங்கள் என்று வற்புறுத்தாமல் இருந்தால்போதும்" என ஆதங்கப்படுகிறார் கொங்கு மண்டல தே.மு.தி.க நிர்வாகி ஒருவர். அவர் நம்மிடம், 
" கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான ஓட்டுக்களை தே.மு.தி.க குவித்தது. கவுன்சிலர் இடங்களுக்குப் போட்டியிடுவதில் பெரிய தகராறே வெடித்தது. அந்தளவுக்குக் கட்சி பலமாக இருந்தது. ' தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜயகாந்த். ஆனால், அதற்குரிய வேட்பாளர்கள் கிடைக்காமல் தடுமாறி வருகிறோம். நேற்று தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எங்களிடம், ' நாளை மாலைக்குள் விருப்பமனு கொடுத்தவர்கள் பட்டியலை அனுப்பிவிடுங்கள். தி.மு.க முழுப் பட்டியலையும் வெளியிடுவதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும்' எனக் கட்டாயப்படுத்தினார். அதற்கு நாங்கள், ' மனு கொடுத்தவர்கள்கூட போட்டியிடத் தயங்குகிறார்கள். பலபேர் விருப்பமனுவுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்த முடியவில்லை' எனச் சொன்னோம். ' விருப்பமனுவுக்குப் பணமே வாங்க வேண்டாம். எப்படியாவது பட்டியலைத் தயாரித்து அனுப்பிவிடுங்கள். கேப்டன் அவசரப்படுத்துகிறார்' எனக் கேட்டுக் கொண்டார். 
இந்தளவுக்குக் கட்சியின் வளர்ச்சி அதல பாதாளத்திற்குப் போகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தி.மு.க கூடாரத்திற்குச் சென்றுவிட்டனர். இப்போது பார்த்தசாரதியும் இளங்கோவனும் மட்டுமே கட்சிப் பணியை கவனிக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கேப்டன் கவலைப்படுவதாக இல்லை. பிரேமலதாவோ, ' கட்சியை விட்டுப் போகிறவர்கள் போகட்டும். நம்மைச் சுற்றி நல்லவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது' என கேப்டனிடம் பேசியிருக்கிறார். அவரும், ' உண்மைதான். நாம் பதவியில் உட்கார்ந்துவிட்டால், நம்மைத் தேடி அனைவரும் வந்துவிடுவார்கள்' என விவரித்திருக்கிறார். உண்மையில், தமிழ்நாட்டில் நிலைமை தெரியாமல் இவர்கள் பேசிக் கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை. 
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா முப்பது பேர் மட்டுமே போட்டியிட மனு கொடுத்திருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் மனுவை வாபஸ் வாங்கிக் கொள்வார்களோ தெரியவில்லை. மாநகராட்சிகளின் 900 கவுன்சிலர் பதவிகளும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. இவற்றில், 25 சதவீத அளவுக்கு மட்டுமே, எங்களால் வேட்பாளர்களை அறிவிக்க முடியும். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சமபலத்தில் இருக்கின்றன. தே.மு.தி.க என்ற கட்சி இருப்பதையே மக்கள் மறந்து வருகிறார்கள். அதை உணர்ந்து கொண்டு கட்சியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளில் தலைமை ஈடுபடவில்லை. மாநகராட்சிகளின் அனைத்து வார்டுகளுக்கும் போட்டியிடுவதற்கு ஆட்கள் இல்லை. ' போட்டியிடுவற்கு யார் வந்தாலும் சீட் கொடுத்துவிடுங்கள்' என்கின்றனர். அப்படி யாராவது விருப்பப்பட்டு வருகிறார்களா எனத் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்றார் நொந்துபோய்.

உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.


உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
புகாரளிக்க  கீழ்காணும் தொலைபேசி எண்களில் தொடர்புக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1800 425 7072
1800 425 7073
1800 425 7074
044- 23635011
044- 23635010
ஃபேக்ஸ் எண்கள்
044- 23631014
044- 23631024
044- 23631074
#TNElection2016 | #தேர்தல்2016