கபடி விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோரைக் கொன்ற மகன்
மகாராஷ்டிராவில் கபடி விளையாட அனுமதிக்காததால் இளைஞர் ஒருவர் தனது பெற்றோரைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் கபடி விளையாட அனுமதிக்காததால் இளைஞர் ஒருவர் தனது பெற்றோரைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள கிராமத்தில் சாகர் என்கிற இளைஞர் தனது சகோதரருடன் உள்ளுரில் நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.
திரும்பி வந்தபோது கபடி விளையாடச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோருடன் சாகர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் ஆத்திரத்தில் தனது பெற்றோரை கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment