திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் வேன் கவிழ்ந்து விராலிமலையைச் சேர்ந்த 29 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திமுக மகளிரணி கூட்டம் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அதில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள கல்குடி கிராமத்திலிருந்து 29 பெண்கள் ஒரு வேனில் வந்து கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பினர். அதே பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் வேனை ஓட்டினார்.
ஜங்ஷனிலிருந்து விராலிமலை சந்திப்பு பாலம் வழியாக மதுரை புறவழிச்சாலைக்கு சென்றபோது, புதிதாக பாலப்பணிகள் நடைபெறும் பகுதியில் (மன்னார்புரத்துக்கு முன்பாக) சென்று கொண்டிருந்த வேன் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் கல்குடியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (38), விஜயா (38), லட்சுமி (40), சுப்புலட்சுமி (25), ஓட்டுநர் பெரியண்ணன் உள்ளிட்ட 29 பேரும் காயமடைந்தனர். அனைவரையும் போலீஸôர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

No comments:
Post a Comment