Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Monday, 17 October 2016

நாம ருசித்து சாப்பிடும் ஹோட்டல்களில் இப்படிதான் சாம்பார் தயார் செய்கின்றனர்..!?


சிலர் வீட்டில் சாப்பிடுவதை விட ஹோட்டல் சாப்பாடுகளை விரும்பி சாப்பிடுவர்.
அவர்களை கவர்ந்து இழுப்பது ஹோட்டல் சாம்பார் தான். அந்த சாம்பார் எப்படி தயார் செய்கின்றனர் என பார்ப்போமா..!
1.துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.
2.வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
3.பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி+தக்காளி+பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4.பின் அரைத்த விழுது +உப்பு+1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
5.பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
6.தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி சேர்க்கவும்.
7.இந்த சாம்பார்இ ட்லி,தோசை,வெண்பொங்கல்,ஊத்தாப்பம் என அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.
குறிப்பு..!
1.சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
2.சாம்பார் இன்னும் வாசனையாக இருக்க தாளிப்பில் சீரகத்தை மறக்காமல் சேர்க்கவும்….! இவ்வளவுதாங்க..

Tuesday, 11 October 2016

ஆப்பிளில் பாயாசம் செய்யலாம். உங்களுக்கு தெரியுமா?


பாயாசத்தில் பழம் போட்டு செய்தால் சுவையாக இருக்கும். ஆப்பிள் கொண்டு பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 
ஆப்பிள் - 2
பால் - 4 கப்,
சர்க்கரை - ஒரு கப்,
கோவா - கால் கப் (உதிர்த்துக் கொள்ளவும்),
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
மில்க்மெய்ட் - கால் கப்,
முந்திரி -  தேவைக்கு
வெனிலா எசன்ஸ் -  ஒரு துளி.
செய்முறை : 
* ஆப்பிளை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
* வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய ஆப்பிளை லேசாக வதக்கி வைக்கவும். 
* பாலை நன்கு காய்ச்சி அதனுடன் உதிர்த்த கோவா, மில்க்மெய்ட், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். 
* நன்கு கொதித்ததும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு... பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
* இனிப்பான ஆப்பிள் பாயாசம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களைsamayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Tuesday, 4 October 2016

எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி.


தேவையான பொருட்கள்  :
இறால் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் நறுக்கியது - 1 கப்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - 1 மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை  :
* இறாலைத் தோல் நீக்கி, சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும். 
* சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
* பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். 
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயத்துடன், தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். 
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும். 
* பின் இதனுடன், அரைத்து வைத்த கலவையைப் போட்டு வதக்கவும். 
* மிளகாய்த்தூள், தனியாதூள் சேர்த்து கிளறவும். 
* இது நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே எலுமிச்சை சாறு ஊற்றி உப்பு போட்டு வதக்கவும். 
* இத்துடன் கழுவி வைத்த இறாலைப் போட்டு அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 
* மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிடவும். இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* அதிக கிரேவி பதம் வேண்டும் என்பவர்கள் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். 
* பத்து நிமிடத்தில் நாவில் நீர் ஊறச்செய்யும் இறால் தொக்கு தயார். 
* இதனை இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் எந்த சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். சாதத்தில் போட்டும் பிசைந்து உண்ணலாம்.

Saturday, 24 September 2016

சிக்கன் 65 தெரியும். முட்டை 65 செய்வது எப்படி தெரியுமா?


தேவையான பொருட்கள் :
முட்டை - 4
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 5
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
சோள மாவு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை :
* முட்டையை வேகவைத்து, சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். (ஒரு முட்டையை இரு பாதிகளாக வெட்டிக்கொள்ளலாம்)
* சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் தூள், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்சியில் போட்டு மையாக அரைத்துகொள்ளவும்.
* இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
* வேகவைத்த முட்டை துண்டுகளின் மீது இந்த மசாலா கலவையை பூசி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டையை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும். 
* சூப்பரான எக் 65 ரெடி.

Friday, 12 August 2016

சளி, இருமலை விரட்டும் தூதுவளை கூட்டு எப்படி செய்யணும் தெரியுமா?


   தேவையானவை: தூதுவளைக் கீரை - ஒரு கைப்பிடி அளவு, முளைகட்டிய பச்சைப் பயறு - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: தேங்காய்த் துருவல், தோல் சீவிய இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாயை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து நைஸான விழுதாக அரைக்கவும். தூதுவளைக்கீரையை ஆய்ந்து, முளைகட்டிய பச்சைப் பயறுடன் சேர்த்து, உப்பு போட்டு நன்கு வேகவிடவும். அரைத்த தேங்காய் விழுதை இதனுடன் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து, எல்லாம் ஒன்றாக கலந்து கொதி வந்ததும் இறக்கவும்.
இந்த தூதுவளை கூட்டை அவ்வபோது சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் நம்மை விட்டு ஓடியேவிடும்
 

Wednesday, 29 June 2016

வளரும் குழந்தைகளுக்கு நெய் சாதம் கொடுங்கள்! 


வளரும் குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவுகளை கொடுக்க வேண்டும். நெய்சாதம் ஊட்டச்சத்து மிக்கது.
தேவையான பொருட்கள்
பொன்னி அரிசி - கால் கிலோ
நெய் - 100 கிராம்
பட்டை - 3 துண்டுகள் (சிறியது)
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பூண்டு - 7 பல்
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
முந்திரி, திராட்சை - தேவைக்கு
செய்முறை
அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வடித்து கொள்ளவும்.
பூண்டை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும். ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளித்த பின் முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
அடுத்து அதில் வடிகட்டிய அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறவும்.
இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கர் மூடி போடவும். விசில் போடாமல் மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும். பத்துநிமிடம் கழித்து சாதம் குழையும் முன் இறக்கி வைக்கவும்.
சுவையான நெய் சாதம் தயார்.
இதனுடன் சைடு டிஸ்சாக குருமா, ரைத்தா தொட்டுக்கொள்ளலாம்.

Friday, 24 June 2016

ரமலான் ஸ்பெஷல் : காஷ்மீரி மிர்ச்சி குருமா.

ரமலான் ஸ்பெஷல் : காஷ்மீரி மிர்ச்சி குருமா.


தேவையான பொருட்கள்: மட்டன் - 1 கிலோ வரமிளகாய் - 10 வெங்காயம் - 3 பட்டை - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் சோம்பு பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
செய்முறை: முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வாக்கி, பின் மட்டனை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் பட்டை, ஏலக்காய், சோம்பு பொடி, சீரகப் பொடி மற்றும் மட்டன் மசாலா சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி, அதில் விதைகளை நீக்கிய வரமிளகாய்களை போட்டு, மென்மையாக வேக வைத்து இறக்கி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, பின் மிளகாயை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பிறகு மிளகாய் பேஸ்ட் உடன் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, அதனை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து பிரட்டி, பச்சை வாசனை நீங்கி, மட்டனுடன் மசாலா அனைத்து ஒன்று சேர நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், காஷ்மீரி மிர்ச்சி குருமா ரெடி!!

Thursday, 24 March 2016

ஃப்ரீட்ஜில் வைத்த பொருட்களை எப்படி உபயோகிப்பது?


ஃப்ரிட்ஜில் வைத்த குழம்பு, கறி போன்றவற்றை வெளியே எடுத்து அதன் குளிர்ச்சி மாறின பிறகு டபுள் பாயிலிங் முறையில் பாத்திரங்களை அதில் வைத்து கிளறி சுட வைக்க வேண்டும். டபுள் பாயிலிங் என்பது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைத்து அதன் உள்ளே குழம்பு பாத்திரத்தை வைத்து கிளறுவது

Thursday, 17 December 2015

எலும்பு குழம்பு - அசைவம்,




எலும்பு குழம்பு

எலும்பு குழம்பு
தேவையான பொருட்கள்

எலும்பு கறி - அரைக்கிலோ

சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2
மல்லி தூள் – 3 ஸ்பூன்
மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2  ஸ்பூன்
மிளகு, சீரகம்,  அரைத்தது — 2 ஸ்பூன்
தேங்காய்  விழுது  — அரை மூடி
எண்ணைய் — 3  ஸ்பூன்
பட்டை —  சிறிய துண்டு
கிராம்பு — 4
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை


குக்கரில் எண்ணையை ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். நன்றாக வதக்கிய 


உடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். இத்துடன் கழுவி வைத்துள்ள எலும்பு கறியை போட்டு கிளறவும். உப்பு, மஞ்சள் தூள், 


இஞ்சி பூண்டு விழுது போட்டு சிறிது நேரம் குக்கரை மூடி வைத்து அடுப்பை  சிம்மில் வைத்து 5 நிமிடம் கிளரவும்


பின்னர் குக்கரை திறந்து அதில் அரைத்த சீரக விழுது மசாலா தூள்  அனைத்தையும்  சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் 


வரை வதக்கவும். இத்துடன்  அரைத்த   தேங்காய்  விழுது  ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை விசில் போட்டு மூடி  வைக்கவும்.


 4 விசில் வரை விடவும் அப்பொழுதுதான் எலும்பு நன்றாக வேகும். விசில் இறங்கிய உடன் சிறிது மல்லி தழை போட்டு ாரிமாறவும்.