Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Tuesday, 18 October 2016

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது முன்னாள் பிரதமர் தேவகவுடா.


மங்களூர், அக்.17 பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என்று மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவகவுடா தெரிவித்தார்.
இதுகுறித்து மங்களூரில் சனிக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நமதுநாட்டில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டுள்ளனர். எனவே, பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும். நான் பிரதமராக இருந்தபோது, மக்களின் குறைகளைத் தீர்ப்பதில்தான் அதிக கவனம் செலுத்தினேன். விவசாயிகள் வஞ்சிக்கப்பட் டுள்ளனர்.
விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு மக்களிடையே எழுச்சியை உருவாக்க விரைவில் பிரசாரப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
ஜம்மு-காஷ்மீரில் பிரச்சினை கைமீறிச் சென்று கொண் டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக அமைதி சீர்குலைந்துள்ளது. அங்கு அமைதி திரும்ப வேண் டியது அவசியமாகும். அதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்றார் அவர்

Wednesday, 12 October 2016

ஹிஜாப் பெண்களின் முன்னேற்றத்தை தடுத்ததா ?

ஹிஜாப் பெண்களின் முன்னேற்றத்தை தடுத்ததா ?

முகம், கைகளை தவிர உடலின் மற்ற பாகங்களை மறைக்க வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டத்தின்படி ஆடை அணிந்துள்ள இந்த சகோதரி நீதித்துறையில் முதல் தரத்தில் வெற்றிப்பெற்று தெலுங்கானா மாநில நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் அணிந்துள்ள ஹிஜாப் இவருடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததா ?
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தன்னுடைய வீட்டில் இருக்கும்போது என்ன மாதிரியான ஆடை அணிய வேண்டும் என்பதில் அவர்களின் விருப்பம் ஆகும்.
ஆண் வீட்டை விட்டு வெளியில் வந்து சமூகத்துடன் கலக்கும் போது அடையாளம் காண்பதற்காக அந்த ஆணின் முகம் வெளியில் தெரியவேண்டியது அவசியமான ஒன்றாகும்.
முகம் வெளியில் தெரிய வேண்டும் என்பது அவசியமான ஒன்று என்பதால் ஆண்கள் அனைவரும் முகம் தெரியும் விதமாகவே வெளியில் வருகிறார்கள்.
அதே அந்த ஆணின் வயிறு வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொடை வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
வயிறு, தொடை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அனைத்து மத ஆண்களும் அந்த பகுதிகளை மறைத்தே வெளியில் வருகிறார்கள்.
ஆண்கள் வயிறு, தொடை, தொப்புள் தெரியும் விதமாக வெளியில் வந்தால் அவர்களை சமூகம் பைத்தியக்காரர்கள் என்று அழைக்கும்.
ஒருவேளை ஆண்கள் அந்த பகுதிகளை வெளியில் தெரியும் விதமாக வந்தால் கூட ஆண்களுக்கு வன்புணர்வு போன்ற கொடுமைகள் நிகழாது.
அதேப்போல் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியில் வந்து சமூகத்துடன் கலக்கும் போது அவரை அடையாளம் காண்பதற்காக அவருடைய முகம் தெரியவேண்டியது  அவசியமான ஒன்று...
முகம் வெளியில் தெரிய வேண்டியது அவசியம் என்பதால் முகம் தெரியும் விதமாக வெளியில் வரலாம். இஸ்லாம் அதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை.
அதே பெண்ணின் வயிறு வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொடை வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை,
வயிறு, தொடை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை எனும்போது அதை மூடி வருவது தானே சரியான ஒன்றாக இருக்க முடியும் ?
சரியான ஒன்றை முஸ்லிம் பெண்கள் செய்யும்போது அவர்களை ஊக்குவிக்க வேண்டிய சமூகம் இழிவாக பேசுகிறது.
ஆண்கள் அரைகுறையாக வந்தால் பைத்தியக்காரர்கள் எனும் சமூகம் பெண்கள் அரைகுறையாக வந்தால் சூப்பர் என்கிறது. மேலும் பெண்கள் பாலியல் ரீதியாக எண்ணற்ற துன்பங்களை சந்திப்பதையும் காண முடிகிறது.
அதுமட்டுமில்லாமல் பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால் அது அவர்களுக்கான சுதந்திரம் என்று வக்காலத்து வாங்குபவர்கள் முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து வெளியில் வருவதும் அது அவர்களுக்கான சுதந்திரம் என்று வக்காலத்து வாங்க மறுப்பது ஏன் ?
முஸ்லிம் ஆண்களாகிய நாங்கள் முஸ்லிம் பெண்களை ஹிஜாப் அணிய வேண்டும் என்று அடிமைப்படுத்துவதாக சில பெண்ணிய அமைப்புகள் கூறுகிறார்கள்.
நாங்கள் எங்களுடைய குடும்ப பெண்களை ஹிஜாப் இல்லாமல் வெளியில் வாருங்கள் என்றாலும் அவர்கள் ஹிஜாப்புடன் தான் வெளியில் வருவார்களே தவிர ஹிஜாப்  இல்லாமல் வெளியில் வரமாட்டார்கள்.
ஏனென்றால் ஹிஜாப் அணியாத பெண்களை விட ஹிஜாப் அணிந்த பெண்கள் சமூகத்தில் கலக்கும்போது 100 சதவீதம் பாதுகாப்பாகவும், சௌகரியமாக கருதுகிறார்கள்.
அதனால் தான் சில ஐரோப்பிய நாடுகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டவுடன் முஸ்லிம் பெண்கள் பிரம்மாண்டமான தொடர் போராட்டங்களை நடத்தி தடையை ரத்து செய்ய வைத்தனர்.
முகம் தெரியும் அளவுக்கு வெளியில் வரும் ஒரு ஆணால் வெற்றியும், சாதனையும் படைக்க முடியும் என்றால் அதே முகம் தெரியும் அளவுக்கு வெளியில் வரும் ஒரு பெண்ணால் ஏன் வெற்றியும் சாதனையும் படைக்க முடியாது ?
வெற்றி, சாதனை என்பது அறிவு, திறமை, உழைப்பை வைத்து கிடைக்கக்கூடியது. இதற்கும் தொப்புளுக்கும் என்ன சம்பந்தம் ? பைத்தியக்காரத்தனமாக ஆடை அணியக்கூடியவர்கள் முஸ்லிம்களை பார்த்து பைத்தியக்காரர்கள் என்கிறார்கள்.
ஹிஜாப் எந்த வகையிலும் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கவில்லை. மாறாக பெண்களின் பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது.
நல்லவர்களுக்கு நல்லுபதேசம் பயனளிக்கும்.

Monday, 10 October 2016

குடும்ப வன்முறை - உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.


குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், 'வயதுக்கு வந்த ஆண்கள்' மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற சொல் உள்ளதால், பெண்களும், வயதுக்கு வராதவர்களும் தப்பித்து  வருவதாகவும், எனவே  குடும்ப வன்முறை தொடர்பாக யார் யார் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் இடம் பெற்றுள்ள, 'வயதுக்கு வந்த ஆண்கள்' என்ற வார்த்தை நீக்கப்படுவதாக  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பெண்களை, அவர்களுடைய கணவர் வீட்டில் உள்ள பெண்களும், வயதுக்கு வராதவர்களும் கொடுமைப்படுத்தினால், இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இதுவரை ஆண்கள் தண்டிக்கப்பட்டு வந்த நிலையில் மருமகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.
பெண்களை குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள பிரத்யேக அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு !


நீதிபதிகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள பிரத்யேக அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு !
நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளின் தீர்ப்பு, விசாரணை குறித்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக அவர்களுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், நீதிபதிகளின் தீர்ப்புகள், ஒத்திவைப்புகள், வழக்குகளை விசாரிக்கும் காலம், உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.
இது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கும் பொருந்தும்.

Tuesday, 4 October 2016

சமையல் சிலிண்டர் மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயம்!


சமையல் சிலிண்டர் மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயம்!
சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அரசின் மானியங்களைப் பெற ஆதார் அட்டை அவசியமில்லை  என அறிவித்த மத்திய அரசு, பின்பு சமையல்  எரிவாயு மானியம் பெற ஆதார் அவசியம் எனக் கூறியது.
ஆதார் எண்ணை பதிவு செய்யாதவர்களுக்கு மானியம் நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
எனவே, செப்டம்பர் இறுதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசு காலக்கெடு விதித்திருந்தது.
இந்நிலையில் சமையல் எரிவாயு மானியத்திற்கு ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அதன்படி, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, அதற்குள் ஆதார் எண்ணை பதிவு செய்து, அரசின் மானியத்தை பெறலாம் என்றும் அறிவித்துள்ளது.

நொடிக்கு 24 எம்பி வேகமளிக்கும் டாப் 10 அன்லிமிட்டெட் பிஎஸ்என்எல் திட்டங்கள்..


பிஎஸ்என்எல் அதிவேக டேட்டா திட்டங்களை நாடு முழுக்க பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ரிலையனஸ் ஜியோ அறிமுகத்திற்குப் பின் பிஎஸ்என்எல் தனது சேவைக் கட்டணங்களை குறைத்து வருகின்றன.
பல்வேறு திட்டங்களில் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகின்றது. பிஎஸ்என்எல் அதிவேக இண்டர்நெட் திட்டங்களைப் பொருத்த வரை அதிகபட்சமாக நொடிக்கு 24 எம்பி வரை வேகம் கிடைக்கின்றது. மேலும் இத்துடன் இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் அழைப்புகளும் வழங்கப்படுகின்றது.
பயனர்கள் இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மேலும் போஸ்ட்பெயிட் பிராட்பேண்ட் திட்டங்களைப் பயன்படுத்துவோர் மாதம் முழுக்க 1000 இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். பிஎஸ்என்எல் ULD 1891, BBG ULD 2641, BBG காம்போ மற்றும் ULD 2799 போன்ற பிராட்பேண்ட் திட்டங்களின் வேகம் நொடிக்கு 4 முதல் 24 எம்பி வரை வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் டாப் 10 தலைசிறந்த அன்லிமிட்டெட் வேகம் கொண்ட பிஎஸ்என்எல் திட்டங்கள் சார்ந்த தகவல்களை இங்குப் பார்ப்போமா.
BBG Combo ULD 999 மாதம் ரூ.999 செலுத்தும் போது நொடிக்கு 4 எம்பி என்ற வேகம் பெற முடியும். இதில் அதிகபட்சம் 10 ஜிபி வரை பயன்படுத்த முடியும். 10 ஜிபி அளவைக் கடந்த பின் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பி எனக் குறையும்.
இத்துடன் 400 இலவச பிஎஸ்என்எல் அழைப்புகளையும் இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை இலவச அழைப்புகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை அனைத்து நெட்வர்க் கால்களும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
BBG ULD 1275 இந்த பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்தில் நொடிக்கு 4 எம்பி என்ற வேகத்தில் சுமார் 30 ஜிபி இண்டர்நெட் பயன்படுத்த முடியும். 30 ஜிபி பயன்படுத்தியதும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பி என்ற வேகத்திற்கு மாறி விடும்.
ரூ.1,275 மதிப்புள்ள இந்தத் திட்டத்தில் இரவு அழைப்புகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச அழைப்புகளும் வழங்கப்படுகின்றது. மற்ற அழைப்புகளுக்கு சாதாரண கட்டணம் வசூலிக்கப்படுகின்றது
BBG Combo ULD 1441 பிஎஸ்என்எல் BBG Combo ULD 1441 திட்டத்தில் நொடிக்கு 8 எம்பி என்ற வேகத்தினை பெற முடியும். இதில் மாதம் ஒன்றிற்கு 25 ஜிபி இண்டர்நெட் வழங்கப்படுகின்றது, இந்த வரம்பு நிறைவுற்றதும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பியாக குறைந்து விடும். மேலும் அனைத்து பிஎஸ்என்எல் எண்களுக்கும் 500 நிமிடங்கள் இலவச அழைப்புகள் வழங்கப்படுகின்றது.
BBG Super Speed Combo 1745 VDSL மாதம் ரூ.1,745 கட்டணம் வசூலிக்கப்படும் இந்தத் திட்டத்தில் பயனர்கள் நொடிக்கு 8எம்பி என்ற வேகத்தில் சுமார் 40 ஜிபி இண்டர்நெட் பெற முடியும்.
இந்த வரம்பு நிறைவுற்றதும் இண்டர்நெட் வேகம் 1 எம்பியாக குறைந்து விடும். இந்த அன்லிமிட்டெட் திட்டத்தில் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர அழைப்புகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச அழைப்புகள் வழங்கப்படுகின்றது
BBG Speed Combo ULD 2295 இந்தத் திட்டத்தில் நொடிக்கு 8 எம்பி என்ற வேகத்தில் 80 ஜிபி இண்டர்நெட் வழங்கப்படுகின்றது. இதன் பின் வேகம் 1 எம்பியாகக் குறைக்கப்படும். ரூ.2,295 வசூலிக்கப்படும் இந்தத் திட்டத்தில் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர அழைப்புகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச அழைப்புகள் கிடைக்கின்றது
BBG ULD 2645 இந்தத் திட்டத்தில் அதிகபட்சம் 175 ஜிபி இண்டர்நெட் நொடிக்கு 8 எம்பி என்ற வேகத்தில் வழங்கப்படுகின்றது. பின் இண்டர்நெட் வேகம் நொடிகத்கு 1 எம்பியாக மாற்றப்படும். இந்தத் திட்டத்தில் எவ்வித அழைப்புச் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.
BBG Combo ULD 2799 இந்தத் திட்டத்தில் நொடிக்கு 4 எம்பி என்ற வேகத்தில் இண்டர்நெட் சேவையினை 80 ஜிபி வரை வழங்கப்படுகின்றது. பின் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 2 எம்பியாக மாறிவிடும். இதில் 250 பிஎஸ்என்எல் அழைப்புகள் வழங்கப்படுகின்றது. இத்துடன் வாடிக்கைாயன இலவச அழைப்புகளும் பொருந்தும்
BBG Speed Combo ULD 2841 ரூ.2,841 செலுத்தி இந்தத் திட்டத்தை ஆக்டிவேட் செய்யும் போது மாதம் ஒன்றிற்கு 175 ஜிபி இண்டர்நெட் நொடிக்கு 8எம்பி என்ற வேகத்தில் வழங்கப்படுகின்றது. அதன் பின் வேகம் 1 எம்பியாகக் குறைக்கப்படும். இத்துடன் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றது
BBG Super Speed Combo 2845 VDSL சூப்பர் பிராட்பேண்ட் திட்டத்தில் 80 ஜிபி இண்டர்நெட் நொடிக்கு 16 எம்பி என்ற வேகத்தில் பெற முடியும். பின் வேகம் நொடிக்கு 1 எம்பியாக மாறிவிடும். இத்துடன் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றது.
BBG Super Speed Combo 3445 VDSL இந்தத் திட்டத்தில் நொடிக்கு 24 எம்பி என்ற வேகத்தில் மாதம் முழுக்க சுமார் 80 ஜிபி இண்டர்நெட் வழங்கப்படுகின்றது. இதன் பின் வேகம் 1 எம்பியாக குறைந்து விடும். மேலும் 1000 பிஎஸ்என்எல் அழைப்புகள், இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றது
 

Saturday, 24 September 2016

வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்புகள்,. ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் அதிரடி.


ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம், தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியதால் பல தனியார் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், ஜியோவுக்கு கடும் சவாலை கொடுத்து வருகிறது.
 ஜியோவுக்கு போட்டியாக BSNL நிறுவனம் பல திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில், வரும் புத்தாண்டு முதல் வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்புகள் உட்பட பல திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் கூறி உள்ளார். 
இந்த திட்டங்கள் ஜியோவை விட மிக குறைவான விலையாக இருக்கும் என்றும் பி.எஸ்.என்.எல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Wednesday, 21 September 2016

முஹம்மத் நபி முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தமானவர் : ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன்.....!!

   
    முஹம்மத் நபி முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தமானவர் என்று ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது...
மகாத்மா காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,
இந்திரா காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,
ராஜீவ் காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,
பகவத் சிங்கை தூக்கில் ஏற்றியது முஸ்லிம்கள் இல்லை,
சுதந்திரத்திற்கு பாடுபட்ட எந்த தலைவர்களையும் முஸ்லிம்கள் கொள்ளவில்லை, மாறாக இந்திய விடுதலைக்கு தனது சமூகத்தின் பெரும் பங்களிப்பை அளித்தவர்கள் முஸ்லிம்கள். அப்படியிருக்கையில் அவர்களை எப்படி தீவிரவாதி என்று அழைக்கிறார்கள்.
தாகித்தவருக்கு தண்ணீர் தருவது இஸ்லாம், இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு உதவுவது இஸ்லாம், பசித்தவருக்கு உணவளிப்பது இஸ்லாம், அன்பு, தியாகத்தை போதிப்பது இஸ்லாம், சுயநலத்தோடு இருக்காதே என்று சொல்வது இஸ்லாம்,
அப்பாவிகளை கொள்வது இஸ்லாத்திற்கு எதிரானது.
இந்த நாடு பகத்சிங்கின் நாடு, இது காந்திஜியின் நாடு, இது அசரப்குல்லாவின் நாடு, இது வீரன் அப்துல் ஹமீதின் நாடு.
நாம் அசரப்குல்லா மற்றும் மாவீரன் அப்துல் ஹமீதின் தியாகத்தை புறம்தள்ளிவிட முடியுமா ? முடியாது இது அனைவருக்குமான நாடு.
இஸ்லாமியர்களை பாகிஸ்தான் போக சொல்லும் மூடர்களிடம் இஸ்லாமியர்கள் தங்கள் நாட்டுபற்றை நிருப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு முஸ்லிம் நிச்சியமாக தனது இந்திய திருநாட்டை நேசிக்கும் தேசபற்றாளனாகதான் இருப்பான்.
இந்த உலகமும் அனைவருக்குமானது. கங்கை நதி அனைவருக்குமானது, முஹம்மது நபியும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தமானவர்.
இறுதியாக இந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் மூடர்களுக்கு சொல்லிகொள்கிறேன், இந்திய இஸ்லாமியர்களை பாக்கிஸ்தான் போக சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை, அப்படி பாகிஸ்தான் போக வேண்டும் என்றால் நீங்கள் செல்லுங்கள்.
மேற்கண்டவாறு ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

Sunday, 18 September 2016

பக்ரித் பண்டிகையின் போது ஒட்டகம் அறுப்பதை தடை செய்ய வேண்டும் என உத்திரபிரதேசத்தை சேர்ந்த காவி சிந்தனை கொண்ட வக்கீல் ரஞ்சனா அஹ்ரி கோத்ரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

மதவழிபாட்டு உரிமையை தடுக்க இயலாது...!

பக்ரித் பண்டிகையின் போது ஒட்டகம் அறுப்பதை தடை செய்ய வேண்டும் என உத்திரபிரதேசத்தை சேர்ந்த காவி சிந்தனை கொண்ட வக்கீல் ரஞ்சனா அஹ்ரி கோத்ரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மதவழிபாட்டு உரிமையை தடுக்க சட்டத்தில் இடமில்லை என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஆனால் தமிழகத்தில் ஒட்டகம் அறுக்க தடை...!
நீதி சட்டத்தின் அடிப்படையிலா அல்லது கூட்டு மனசாட்சியின் அடிப்படையிலா?
தமிழக காவல்துறையினரின் கவனத்திற்கு...
ஒட்டக அறுப்பு சம்பந்தமாக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மதவழிபாட்டு உரிமையை தடுக்க சட்டத்தில் இடமில்லை என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஆனால் தமிழகத்தில் ஒட்டகம் அறுக்க தடை...!
நீதி சட்டத்தின் அடிப்படையிலா அல்லது கூட்டு மனசாட்சியின் அடிப்படையிலா?
தமிழக காவல்துறையினரின் கவனத்திற்கு...
ஒட்டக அறுப்பு சம்பந்தமாக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

Friday, 16 September 2016

*காவிரி 10 உண்மைகள்*

*காவிரி 10 உண்மைகள்*

உண்மை 1: தமிழகத்தின் நெல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியைத் தரவல்லது காவிரிப் படுகை. குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று பருவச் சாகுபடி. இதில் குறுவை 4 லட்சம் ஏக்கர்; சம்பா 8 லட்சம் ஏக்கர்; தாளடி 4 லட்சம் ஏக்கர் சாகுபடியாகும். இந்த மூன்று பருவங்களில் குறுவைப் பருவம்தான் நல்ல விளைச்சல் தரும். தவிர, குறுவைச் சாகுபடி இல்லாமல் போனால், 17.36 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வீட்டில் முடங்கிப்போவார்கள். 
உண்மை 2: காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது. ஆனால், அதைவைத்து 2,000 ஆண்டுகளுக்கு மேலாக நெல் சாகுபடி செய்து வருவது தமிழக விவசாயிகள்தான். நதி நீர் உரிமையைப் பொறுத்த அளவில், அது உற்பத்தியாகும் இடத்தை வைத்துத் தீர்மானிக்கப்படுவது இல்லை. பாரம்பரியமாக அதைப் பயன்படுத்தி வருவோருக்கே முதல் உரிமை. இது சர்வதேச அளவிலான நடைமுறை. 
உண்மை 3: தமிழகத்தில் கரிகாலன் கட்டிய கல்லணை, அதற்குப் பின் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மேலணை, கீழணை நீங்கலாக, காவிரியில் 1924 வரை அணைகள் எதுவும் கிடையாது. இங்கு மேட்டூர் அணையைக் கட்டும்போது, இன்றைய கர்நாடகத்தின் முதல் அணையான கிருஷ்ணராஜசாகர் அணையைக் கட்டிக்கொள்ள மைசூர் மன்னருக்கு ஆங்கிலேய அரசு அனுமதி அளித்தது. கர்நாடகம் நெல் சாகுபடியை ஆரம்பித்ததும் காவிரி அரசியலை ஆரம்பித்ததும் இதற்குப் பிறகுதான். கிருஷ்ணராஜசாகர் அணை நீங்கலாக கர்நாடகம் காவிரியில் கட்டிய அனைத்து அணைகளும் சட்டத்துக்குப் புறம்பானவை. அதாவது, மத்திய அரசின் அனுமதி பெறாதவை. ஒரு மாநில அரசு இப்படி முறைகேடாக நடந்துகொண்டால், அந்த அரசைக் கலைக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. கர்நாடகத்தின் இந்த முறைகேடு அரசியலை முதலில் தொடக்கிவைத்தது காங்கிரஸ் அரசு. 
உண்மை 4: 1901-ல் அன்றைய மைசூர் மாகாணத்தின் சாகுபடிப் பரப்பு - 1.11 லட்சம் ஏக்கர். 1970-ல் கர்நாடகத்தின் சாகுபடிப் பரப்பு - 6.83 லட்சம் ஏக்கர். 1991-ல் நடுவர் மன்றத்தில் தன்னுடைய சாகுபடிப் பரப்பு 11.2 லட்சம் ஏக்கர் என்று சொன்னது கர்நாடக அரசு. இதற்கு மேல் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கக் கூடாது; தண்ணீர்ப் பற்றாக்குறை மேலும் தீவிரமாகும் என்று கர்நாடகத்துக்குக் கட்டுப்பாடு விதித்தது நடுவர் மன்றம். ஆனால், இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்துக்கு அதே நடுவர் மன்றம் 18.85 லட்சம் ஏக்கருக்குத் தண்ணீர் ஒதுக்கியது. இப்போது தன்னுடைய பாசனப் பரப்பை 23.85 லட்சம் ஏக்கராக விரிவாக்கியுள்ளது கர்நாடகம். மேட்டூர் அணை பயன்பாட்டுக்கு வந்த 1934-ல் தொடங்கி 1970 வரை ஆண்டு தோறும் அணைக்கு வந்த சராசரி நீரின் அளவு 378 டி.எம்.சி. காவிரி நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பு இதை 205 டி.எம்.சி. ஆக்கியது; இறுதித் தீர்ப்பு 192 டி.எம்.சி. ஆக்கியது. 
உண்மை 5: காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசியல் கட்சிகள் எல்லாக் காலங்களிலும் சேர்ந்தே செயல்படுகின்றன. மாநில நலனே அங்கு பிரதானம். தமிழகத்திலோ நேர் எதிர்நிலை. காவிரிப் பிரச்னையில் ராஜதந்திரரீதியாக ஒரு வரலாற்றுத் தவறைத் தமிழகம் செய்தது. காவிரிப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோது, 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்திரா காந்தியுடன் கூட்டணி சேர்ந்த பிறகு, அவருடைய சமரசத்தை ஏற்று பேச்சுவார்த்தைக்காக அந்த வழக்கைத் திரும்பப் பெற்றார் கருணாநிதி. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா மூவருமே காவிரியை அரசியல்ரீதியாகவே அணுகினார்கள். 
உண்மை 6: இதற்கிடையே 1983-ல் காவிரி விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடித்து, 21 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தபோது, மீண்டும் உச்ச நீதிமன்றப் படியேறி தன்னையும் அந்த வழக்கில் இணைத்துக்கொண்டது தமிழகம். உச்ச நீதிமன்ற ஆணைப்படி, 1990-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 17 ஆண்டுகள், 568 அமர்வுகளுக்குப் பின் இறுதித் தீர்ப்பை வழங்கியது நடுவர் மன்றம். காவிரியின் ஒட்டுமொத்த நீரோட்டத்தை 740 டி.எம்.சி. எனக் கணக் கிட்டு அதில், தமிழகம் 562 டி.எம்.சி., கர்நாடகம் 465 டி.எம்.சி., கேரளம் 92.9 டி.எம்.சி., புதுவை 9.24 டி.எம்.சி. கேட்டன. இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு, 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி., சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 10 டி.எம்.சி., கடலில் கலக்கும் அளவு 4 டி.எம்.சி. என ஒதுக்கீடு செய்தது நடுவர் மன்றம். தமிழகத்துக்கு இது சேதம் தரும் தீர்ப்பு. எனினும், இரு தரப்பு விவசாயிகளின் நலன்களையும் ஒப்பிட்டு, அரை மனதோடு ஏற்க வேண்டிய நிலை. ஆனால், இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குப் போனது கர்நாடகம். வேறு வழி இல்லாமல் தமிழகமும் உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. இந்த முறையீடுகள் ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் முடங்கிக்கிடக்கின்றன. 
உண்மை 7: காவிரிப் படுகையில் ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள் இருந்தன. ஊருக்கு ஊர் கோட்டகம் எனப்படும் நீர்ப்பிடிப்புப் பகுதி இருந்தது. குடிமராமத்து முறை வழக்கொழிந்த பின், படிப்படியாக இவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்தன. அரசு ஆழ் குழாய் விவசாயத்தை ஆதரித்தது. இதனால், நாலைந்து அடிக்குள் பிள்ளைக்கேணி தோண்டி விவசாயம் செய்த இடங்களில், இன்றைக்கு நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழே போய்விட்டது. இந்த நீர்நிலைகளை மீட்டுருவாக்குவதுடன் காவிரி நீர்ப் பாதையைப் புனரமைத்துக் கட்டுக்கோப்பாக்கி, மழைக் காலங்களில் உபரியாகக் கிடைக்கும் நீரைத் தேக்கிவைக்க கதவணைகள் கட்டினால், சுமார் 50 டி.எம்.சி. வரை நீராதாரத்தை உருவாக்க முடியும். 1980-களில் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 1,000 கோடி ஆகலாம் என்று சொன்னது உலக வங்கி. இன்றைக்கு ரூ. 10,000 கோடி ஆகலாம். ஆனால், தமிழக அரசு அதை இன்றுவரை பொருட்படுத்தவே இல்லை. 
உண்மை 8: காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான ஆணையத்தின் வழிமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு... இப்படி எதையும் கர்நாடகம் இதுவரை மதித்தது இல்லை. தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது என்று கூறாத கர்நாடக முதல்வர்களே வரலாற்றில் இல்லை. மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனதா தளம் ஆகிய தேசியக் கட்சிகளே கர்நாடகத்தையும் ஆண்டன; ஆள்கின்றன. 
உண்மை 9: உலகில் எத்தனையோ நாடுகள் நதி நீரை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்கின்றன. தண்ணீருக்கு அலையும் சூழலில் உள்ள பரம்பரை வைரிகளான இஸ்ரேலும் பாலஸ்தீனமும்கூட நியாயமான முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்திய அரசால் பாகிஸ்தானுடன் சுமுகமான முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால், உள்நாட்டுக்குள் பகிர்ந்தளிக்க முடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் காவிரிப் படுகை மாவட்ட விவசாயிகள் பல முறை வறட்சியிலும் பஞ்சத்திலும் அடிபட்டனர். நாட்டுக்கே உணவு கொடுத்தவர்கள் கஞ்சித் தொட்டியில் கஞ்சி வாங்கிக் குடிக்கும் நிலைக்கும் வயல்களில் எலிகளைப் பிடித்துத் தின்னும் நிலைக்கும்கூடத் தள்ளப்பட்டனர். ஆனால், மத்திய அரசு துளியும் அலட்டிக்கொள்ள வில்லை. இயற்கைக்கு முரணான நதி நீர் இணைப்புபற்றி நம்முடைய ஆட்சியாளர் கள் நிறையப் பேசுகின்றனர். ஆனால், நதிகளை தேசிய உடைமையாக்கி - அதாவது, நதி நீர்ப் பங்கீடு உள்ளிட்ட சகல உரிமைகளையும் மத்திய அரசே நிர்வகிக்க - எவரும் குரல் கொடுக்கவில்லை. 
உண்மை 10: காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு... துரோகங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கின்றோம்..!
http://eluthu.com/kavithai/304934.html

Wednesday, 14 September 2016

ஜியோவுக்கு போட்டி: இணைகின்றன ரிலையன்ஸ் - ஏர்செல் நிறுவனங்கள்.


புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணையபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முகேஷ் அம்பானி அறிவித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ திட்டம் தொலை தொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. இது வோடோபோன், ஏர்டெல், ஏர்செல் உள்ளிட்ட பிற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி உள்ளது.
இந்நிலையில் இந்த சவாலை எதிர்கொள்ளும் விதமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமும் ஏர்செல் நிறுவனமும் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அளவில் ஏர்செல் நிறுவனம் முன்னிலையில் உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதன் மூலம் அந்நிறுவனங்களின் மொத்த மதிப்பு சுமார் 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அதேசமயம், இரு நிறுவனங்களுக்கும் சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இரு நிறுவனங்கள் இணைந்தால் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக மாறும். இது இந்திய தொலைதொடர்பு துறையில் மிகப்பெரிய ஒருங்கிணைப்பாகும்.
தற்போது வோடோபோன் நிறுவனத்திற்கு 20 கோடி வாடிக்கையாளர்களும் ஐடியா நிறுவனத்திற்கு 17.5 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஐடியா நிறுவனமும் வருங்காலத்தில் வேறு ஒரு நிறுவனத்துடன் இணைய போவதாகவும் சொல்லப்படுகிறது

கர்நாடகாவின் மாண்டியாவில் தருமபுரியை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சி!


கர்நடகா வன்முறையில் உயிர் பிழைத்து தப்பித்து வந்த தமிழக முஸ்லிம் குடும்பம் அவர்களது வாடகை ஓட்டும் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது . 
தருமபுரி: கர்நாடகாவின் மாண்டியாவில் தருமபுரியைச் சேர்ந்த நவாஸ்பாஷா என்பவர் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நவாஸ் பாஷா என்பவர் இன்று அம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் நவாஸ் பாஷா கூறியதாவது:
தம்பி மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊரான கர்நாடகாவின் மாண்டியாவிற்கு சென்றிருக்கிறார்.
அவரை பார்ப்பதற்காக கடந்த 11-ந் தேதி உறவினர்களுடன் நானும் சென்றிருந்தேன்.
மறுநாள் நாங்கள் காரில் தமிழகம் திரும்பி கொண்டிருந்தோம்.காரில் என்னுடன் சேர்த்து மொத்தமாக
3 ஆண்கள் 4 பெண்கள் 3 குழந்தைகள் இருந்னர்.
அப்போது மாண்டியாவின் எட்ஜிகரை என்ற புறநகர் பகுதியில் உள்ள நந்தினி பால் டிப்போ அருகில் எங்கள் காரான சுமோ வாகணம் மாலை 3:15 மணியளவில் வந்துகொண்டிருந்தது.
திடீரென ஒரு கும்பல் நாங்கள் வந்த காரின் தமிழக பதிவு எண்ணை
(வாகண எண் TN30 AQ5689) பார்த்துவிட்டு அப்படியே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்தனர்.இதனால் பதறியடித்து நாங்கள் வெளியேறி அருகே இருந்த காட்டுக்குள் ஓடினோம்.
பின்னர் பல்வேறு சிரமங்களுக்கு இடையே ரயில் மூலம் தப்பித்து சொந்த ஊர் திரும்பியுள்ளோம். நாங்கள் இழந்த கார் மற்றும் உடமைகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு நவாஸ் பாஷா கூறினார்.

Tuesday, 13 September 2016

உதவிக் கரம் நீட்டும் கர்நாடக தமிழ்ச்சங்கங்கள்..!

உதவிக் கரம் நீட்டும் கர்நாடக தமிழ்ச்சங்கங்கள்..!

கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களால் தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள தமிழர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் அங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் களம் இறங்கியுள்ளன.
வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும்,  ஆபத்து ஏற்பட்டாலும் அது எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் உடனே தொலைபேசி எண் 100-க்கு தொடர்பு கொள்ளவும் தமிழ்ச்சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.
அதேபோல், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தமிழ்ச்சங்க நிர்வாகிகளின் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
மைசூர் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர்
கு.புகழேந்தி
94480 54831
94489 05831
0821 2343426
பெங்களூர் தமிழ்ச் சங்கம்
லேண்ட் லைன் - 080 25510062
தலைவர், கோ.தாமோதரன் - 98450 33166
தி.கோ.தாமோதரன் - 94494 85903
சிக்கமகளூர் தமிழ்ச்சங்கம்
தலைவர், ஆறுமுகம் - 90364 74224
துணைத் தலைவர், குமார் - 99643 58993
ஹாசன் தமிழ்ச் சங்கம்
தேவசேனாதிபதி - 94488 45681
அனூர் தமிழ்ச் சங்கம்
தலைவர், அரசப்பன் - 99720 42935
கொள்ளேகால் தமிழ்ச் சங்கம்
நல்லசாமி - 98869 18029.
சதாசிவம் - 97319 35325.
கந்தசாமி - 96636 77655.
குண்டல் பேட்டைத் தமிழ்ச் சங்கம்
வீ.பாலகிருஷ்ணன் - 94801 69132.
கண்ணன்.[வேலுச்சாமி] 94491 77151.
சாமராஜ நகர் தாலுக்கா தமிழ்ச்சங்கம்
சின்னசாமி - 94485 95956.
ஜெகதீஷ் - 94491 61772.
ஆனந்த் - 90363 94238
தங்கவேல்- 94488 71818
உன்சூர் தமிழ்ச் சங்கம்
சின்னசாமி - 99450 46727.
வேலு - 96204 84120.
முருகன் - 94487 37069.
மணி- 94499 93229.
ஹெக்கட தேவன கோட்டை (ஹெச்டி கோட்) தமிழ்ச் சங்கம்
நகுல்சாமி - 94495 32255.
தேவராஜன் - 94490 02205.
பழனிச்சாமி - 97410 63117.
பெரியசாமி - 99863 30781.
நஞ்சன்கூடு தமிழ்ச் சங்கம்
தலைவர், சீனிவாசன் - 81055 17263

தங்கமகன் மாரியப்பனுக்கு மஹிந்திரா கார், ரூ. 10 லட்சம் பரிசு !டிவிட்டரில் எழுந்த கோரிக்கையை ஏற்றார் ஆனந்த் மஹிந்திரா


தங்கமகன் மாரியப்பனுக்கு மஹிந்திரா கார், ரூ. 10 லட்சம் பரிசு !
டிவிட்டரில் எழுந்த கோரிக்கையை ஏற்றார் ஆனந்த் மஹிந்திரா
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் ஜீப் ஒன்றை பரிசளித்துள்ளது. மேலும், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து மாரியப்பனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாக்‌ஷி மாலிக் ஆகியோருக்கு மாநில அரசுகளும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பரிசுத் தொகைகளை அறிவித்தன. மஹிந்திரா கார் நிறுவனம், இவர்கள் இருவருக்கும் Thar ஜீப்பை பரிசாக அளித்தது.
தமிழக வீரர் மாரியப்பன் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் அக்கவுண்ட்டில், 'சாக்‌ஷி மாலிக், பி.வி.சிந்து ஆகியோருக்கு கார் கொடுத்ததைப் போல, மாரியப்பனுக்கு ஏன் கொடுக்கவில்லை?' என ஏராளமானோர் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்காக #TharForMariyappan என்ற தனி ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான ட்விட்டுகள் எழுதப்பட்டன.
அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் மாரியப்பனுக்கும்  தார் ஜீப்பை பரிசளிப்பதாக அறிவித்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.
அதுமட்டுமின்றி,  தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து 10 லட்ச ரூபாய் தொகையை பரிசாக அளித்துள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, 'தனக்கு முன்னுள்ள பல்வேறு தடைகளை கடந்து தங்கம் வென்றுள்ளார் மாரியப்பன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

காவிரி விவகாரம் : தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அறிவுரை !


காவிரி விவகாரம் தொடர்பான போராட்டங்கள், வன்முறை காட்சிகளை செய்திகளில் பயன்படுத்தும்போது கட்டுப்பாடுடன் ஒளிபரப்ப தொலைக்காட்சி ஊடகங்களுக்கு  மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
உண்மை நிலவரத்தை சரிபார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், ஒளிபரப்பும் காட்சிகள் விரும்பத்தகாத செயல்களை தூண்டும் விதமாக அமைந்துவிட கூடாது என்றும்  மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வன்முறைகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் தூண்டுதலுக்கு காரணமாகி பதற்றம் அதிகரிக்கும் என்றும், இதனால், இருமாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை நேரலையாகவோ, கோப்புப் படங்களாகவோ ஒளிபரப்புவதை தவிர்த்து,  காவிரி ஆறு அல்லது பாதுகாப்பு படையினரின் காட்சிகளை ஒளிபரப்பலாம் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், வார்த்தைகளை பயன்படுத்தும்போது கவனமாக கையாள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Saturday, 10 September 2016

தொடரும் காஷ்மீர் கலவரம்..இரு இளைஞர்கள் உயிரிழப்பு


காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த கலவரத்தில் 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
காஷ்மீர் மாநிலத்துக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற முழுக்கத்துடன் சோப்பியான் மாவட்டத்தின் துக்ரோ பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஊர்வலமாக செல்ல முயன்ற ஆர்ப்பாட்டகாரர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.  அப்போது மூண்ட கலவரத்தில் சையார் அகமது சாஹீக் என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதே போல் அனந்த்நாக் மாவட்டத்தின் போடெங்கோ பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை, பாதுகாப்புப் படையினர் துரத்தி அடித்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில்  அகம்மது டார் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

மதபோதகர் ஜாகிர் நாயக்கிடமிருந்து நன்கொடை:பாஜக- காங்கிரஸ் மோதல் !

மதபோதகர் ஜாகிர் நாயக்கிடமிருந்து நன்கொடை:பாஜக- காங்கிரஸ் மோதல் !

சர்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிடமிருந்து நன்கொடை பெற்றது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜாகிர் நாயக்கின் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே காங்கிரஸ் நன்கொடை பெற்றதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி, ஜாகிர் நாயக் சர்சைக்குரியவர் என முன்கூட்டியே அறிய காங்கிரஸ் கட்சிக்கு ஜோசியமா தெரியும் என வினவியுள்ளார்.
ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஜாகிர் நாயக் 50 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், நன்கொடையை கடந்த 2011 ஆம் ஆண்டு திருப்பி அளித்துவிட்டதாக அக்கட்சி கூறியுள்ளது.
ஜாகிர் நாயக்கின் போதகத்தை கேட்ட நபர் ஒருவரே, வங்கதேசத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்வதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

Wednesday, 7 September 2016

மத்திய அரசு ஆப்சில் புதிய வசதி டிராபிக் போலீஸ் வழிமறித்தால் செல்போனை காட்டினால் போதும்.

புதுடெல்லி: 

     டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் கேட்டு டிராபிக் போலீஸ் வழிமறித்தால் இனி மொபைல் போனை காட்டிவிட்டு செல்ல வசதியாக மத்திய அரசு ஆப்சில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசாரின் சோதனையில் அடிக்கடி டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புத்தகம் எடுத்துச் செல்லாதவர்கள் சிக்கித் தவிப்பார்கள். இதனால் அபராதம் மற்றும் இன்னும் பிற அவஸ்தைகளை அவர்கள் அனுபவித்து வந்தனர். தற்போது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புத்தகத்தை எடுத்துச் செல்வதை தவிர்க்கும் வகையில் மத்தியஅரசின் ஆப்சில் புதியவசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. டிஜிலாக்கர்(DigiLocker) என்ற என்ற ஆப்சில் டிரைவிங் லைசென்சை இணைக்கும் நிகழ்ச்சி சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் நேற்று நடந்தது.

மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார். 
இந்த ஆப்சில் நாடு முழுவதும் உள்ள 19.5 கோடி வாகனங்களின் ஆர்சி எண் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதோடு 10 கோடி டிரைவிங் லைசென்ஸ்களும் இணைக்கப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொருவரும் இந்த ஆப்சை தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போக்குவரத்து போலீசார் வழிமறிக்கும் போது ஆப்சை காட்டி அதில் உள்ள நமது லைசென்ஸ் மற்றும் ஆர்சி எண்ணை காட்டிவிட்டு செல்லலாம். இதுபற்றி மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியதாவது: டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு ஆவணங்கள் அனைத்தும் டிஜிலாக்கர் ஆப்ஸ் மூலம் உங்கள் மொபைலில் காணலாம். இதை போக்குவரத்து போலீஸ், சட்ட அமலாக்க அதிகாரிகள் சோதனையின் போது காண்பிக்கலாம். உங்களை எந்த இடத்திலும் யாராவது தடுத்து நிறுத்தினால் அவர்களிடம் உங்கள் டிரைவிங் லைசென்சை உங்கள் மொபைல் மூலம் காண்பித்துவிட்டு செல்லலாம்.
ஊழலை ஒழிப்பதற்கு மட்டும் இந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை. பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும் இதை அடையாள சான்றாக பயன்படுத்தலாம். புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஆன்லைனில் லைசென்ஸ் வழங்கும் முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தகவல் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், ''டிஜிலாக்கர் மொபைல் ஆப்சை இதுவரை 21 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில் வாக்காளர் அடையாள அட்டையை கூட பதிவு செய்து கொள்ளலாம்'' என்றார்.

ரூ.249 க்கு 300 GP B.S.N.L. புதிய திட்டம் நாளை முதல்செயல்பாட்டுக்கு வருகிறது!

சென்னை, 

பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கம்பியில்லா அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையதள வசதியை சலுகை கட்டணத்தில் ‘எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பிபி 249’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மாதம் 300 ஜி.பி. வரை பதிவிறக்கம் செய்ய ரூ.249 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
அதாவது 1 ஜி.பி.க்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணமே வாடிக்கையாளர்களிடம் பெறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை பெற வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை அணுகலாம். அல்லது இலவச அழைப்பான
 1800 345 1500 என்ற எண்ணிலும்,www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை துணைபொதுமேலாளர் (நிர்வாகம்) எம்.எஸ்.திரிபுரசுந்தரி தெரிவித்து உள்ளார்.

இனி உங்கள் வீட்டில் இருந்து கொண்டே உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் ஆதார் கார்டுகளை சுலபமாக ரேசன் கார்டுடன் இனைக்கலாம்! இணைப்பது எப்படி?


Mobile App for Ration Card Holders in the State of Tamil Nadu (INDIA)
தற்போது நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு பதிவு செய்யப்பட்டுக்கொண்டு உள்ளது , . இதற்கு ரேசன் கடையில் கூட்டம் அலை மோதுகிறது.   அதை செய்யாதவர்கள். தங்கள் ஸ்மார்ட்போனில் Google app store ல் TNePDS என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை போட்டால் ஒரு முறை குறுஞ்செய்தி (one time password) வரும் அதை அந்த செயலியில் போட்டுக்கொண்டால் நமக்கு நம் பக்கம் திறக்கும் அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் பொருட்டு நம் ஆதார் அட்டையை. காட்டினால் barcode ஸ்கேன் செய்யும் , பிறகு அதே போல் எல்லா குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையும் பதிவு செய்யலாம் , , 
இளைஞர்கள் தாமும் பயன் பெற்று தெரிந்தவர்களுக்கும் பதிவு செய்து கொடுக்கவும் , அதிகம் இதை பகிரவும் .