Thursday, 31 March 2016

நாசாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க செல்லும் தமிழக மாணவர்கள்.


நாசாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க செல்லும் தமிழக மாணவர்கள்
நாசாவில் நடைபெறும் ரோவர் சேலஞ்ச் எனும் போட்டியில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 7 மாணவர்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளனர்.
விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கோள்கள், நிலவுகள், நட்சத்திரங்கள் மற்றும் வால்மீன்களை ஆராயும் திட்டங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இதன் ஒரு பிரிவு, கோள்களில் ஆராய்ச்சிப்பணிக்கு பயன்படும் ரோவர்களை, மனித சக்திகள் மூலம் இயக்கும் ரோவர் சேலஞ்ச் என்ற போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது.
ஜூலை 7ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட ரோவர்களை மாணவர்களே தயாரித்து கொண்டுவந்து காட்சிப்படுத்துவர். இந்த போட்டிக்காக உலகெங்கும் உள்ள தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுவர்.
இதில் தற்போது தமிழகத்தை சேர்ந்த 7 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்கள் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு


கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவின் மத்திய பகுதியில் படாபஜார் என்னும் இடத்தில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்ட வருகிறது. இதற்கான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானோர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டனர். முதற்கட்ட தகவலில் 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் போலீஸார் மற்றம் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். பால இடிபாடுகளுக்கிடையே லாரி மற்றம் கார் போன்ற வாகனங்களும் சிக்கியுள்ளன. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இரவு நேரத்தில் செல் போனை நீண்ட நேரம் பயன்படுத்த கூடாது!


இரவு நேரத்தில் செல் போனை நீண்ட நேரம் பயன்படுத்த கூடாது!
அப்படி பயன்படுத்தினால் இரவு விளக்கை கண்டிப்பாக ஏறியவிட வேண்டும் !!!
இரவு விளக்கை அனைத்து விட்டு செல் போன் பயன்படுத்தினால் கண்களில் கேன்சர் நோய்
கண்டிப்பாக வரும் என்று
மருத்துவர்கள் கூறுகின்றனர் !!!
சமீபத்தில மலேசியாவை சேர்ந்த ஒருவருக்கு கண்ணில் கேன்சர் எற்பட்டு
உள்ளது !!!

நாம் கவனமுடன் இருப்போம் வருமுன் காப்போம் !!!
உங்களால் முடிந்தால் அனைவருக்கும் தெரியபடுத்துஙகள்.

உலகில் அதிகம் வாசிக்கப்படுவது குர்ஆன், பைபிள் வாசிப்பு குறைகிறது - யுனெஸ்கோ தகவல்..!


கடந்த 20 வருடங்களாக மேற்குலகம் பைபிள் வாசிப்பதை புறக்கணித்து வருவதாக 'யுனெஸ்கோ' உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் கூறியுள்ளன.
இன்றைய உலகில் அதிகம் வாசிக்கப்படும் நூலாக திருக்'குர்ஆன்' இருப்பதாகவும், அதே வேளையில், உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
'யுனெஸ்கோ' வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 20, 25 ஆண்டுகளாக மேற்குலக கிருஸ்தவர்களிடம் 'பைபிள்' வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து வருவதே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில் திருக்'குர்ஆன்' வாசிக்கும் பழக்கம் முஸ்லிம், முஸ்லிம் அல்லாத மக்கள் என அனைவரிடமும் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட 158 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள குர்ஆன் அதிகம் வாசிக்கப்படும் நூலாக இருக்கிறது.
இஸ்லாமிய வழிபாடுகள் அதிகரித்து வரும் வேளையில், கிறிஸ்தவர்களின் வழிபாடுகள் மிகவும் குறைந்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் சர்ச்சுகளுக்கு மக்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்படும் சூழல் இருப்பதாகவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

Wednesday, 30 March 2016

சுதிஷ் உணர்ச்சிவசப்பட்டு பதவிகளை அறிவித்துவிட்டார்-வைகோ விளக்கம்!


துணை முதல்வர் பதவி மீது தமக்கு துளிகூட விருப்பமில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தே.மு.தி.க–மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய வைகோ, சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 
தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் உணர்ச்சிவசப்பட்டு பதவிகளை அறிவித்துவிட்டதாகவும், தமக்கு பதவியின் மேல் விருப்பமில்லை என்றும் வைகோ கூறினார்.
முன்னதாக பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி எண்ணிக்கைக் கூட இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று விமர்சனம் செய்தார். 
சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியை எதிர்கட்சிகள்  விமர்சனம் செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு மட்டும்தான் ; கூட்டணி இல்லை : குழப்பும் திருமாவளவன்


தேமுதிகவுடன் கூட்டணி இல்லை, வெறும் தொகுதி பங்கீடு மட்டும்தான் வைத்திருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தை நிறுவனரும், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான திருமாவளவன் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து பிறகு, இரு கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளும் முதல் பொதுக்கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன்  “தேமுதிகவுடன் கூட்டணி இல்லை. மாறாக தொகுதி பங்கீடுதான் வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.  
கூட்டணியில்லாமல் என்ன தொகுதி பங்கீடு என்றும், ஏன் இப்படி திருமாவளவன் பேசுகிறார் என்றும் தேமுதிக நிர்வாகிகள் குழம்பியுள்ளனர்.

http://kaalaimalar.net/seat-escalator-no-coalition-confuse-herein/

இன்வர்ட்டர் பற்றிய சில முக்கிய குறிப்புகள்!! புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?


மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று 500க்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது. பல இடங்களில் ஸ்டாக் இல்லை.
இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
”இன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர் வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250 வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு.
200 வாட்ஸில் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.
இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர் கள்தான்.
இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும்.
850 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும், சிறுதொழில் செய்பவர்களுக்கும் அதிகம் பயன் படும். இன்றைய நிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான்.
இதில் 5 விளக்குகள், 4 ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம்.
பொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்து விடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று விடும்.
இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத்திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்”
இன்வெர்ட்டரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும்.
4 மணி நேரம் முதல் 8 மணி நேரத்திற்கும் மேல் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார் போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.
இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம்.
நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.
இன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது. ஏனெனில், சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக்குத் தேவையான அளவு மின்சாரத்தை முழுமையாகத் தரும். இதனால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது.
ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம் வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.
பராமரிப்பது எப்படி:
இப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம் என்று சொல்கிரார்கள்.! அந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது.
மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும்.
பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது.
பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகை இருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்” என்றார்.
இன்வெர்ட்டர் பற்றிய அடிப்படை விஷயங்களைச் சொல்லிவிட்டோம். இனி இதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்!

அமீரகத்தின் அரசு தொலைதொடர்பு நிறுவனமான எடிசலாத் வழங்கும் பிரிபெய்டு சந்தாதாரர்களுக்கு மாதம் 1திர்கத்திக்கு விபத்து காப்பீட்டு திட்டம்!


ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு நிறுவனமான எடிசலாட் தொலைதொடர்பு சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
தற்போது இந்நிறுவனம் தகாபுஃள் எனப்படும் இஸ்லாமிய ஷரியதுக்குட்பட்ட விபத்து காப்பீட்டு திட்டத்தை 8/3/2016 அன்று அறிவித்து அதன்படி ப்ரீபெய்டு (செல்) நம்பர் வைத்துள்ளவர்கள் மாதம் 1 திர்ஹம் செலுத்தினால், விபத்தில் மரணமடைந்தாலோ,நிரந்தர ஊனமுற்றாலோ 20,000 திர்கம்ஸ் (தற்போதைய இந்திய மதிப்பில் 3,70,000) வழங்கப்படுமென அறிவித்துள்ளது.
தொழிற்சாலை,வாகன இன்னும் பல அனைத்து விபத்துகளுக்கும் இத்திட்டம் பொருந்தும். இயற்கை மரணங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
இதில் பயனடைய மாதம் ஒரு திர்ஹம் உங்கள் அலைபேசி கணக்கிலிருந்து பிடிக்கப்படும்.வயது வரம்பு 18 முதல் 64 வரை. ஒரு நபர் ஒரு மொபைல் எண்ணில் மட்டும் பயன்பெறலாம்.ஒவ்வொரு வருடமும் இதனை புதுப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் சேர விரும்பும் எடிசலாத் பிரிபெய்டு சந்தாதாரர்கள் TAK என்று டைப் செய்து 1012 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்,அல்லது 101 என்ற கஸ்டமர் கேர் நம்பரை தொடர்பு கொள்ளவும்!
இத்திட்டம் ஆக்டிவேட் செய்யப்பட்ட உடன் உங்கள் பாலிசி ரெஃபரன்ஸ் நம்பர் உதாரணமாக பின்வருமாறு TAKXXXXXX உங்கள் மொபைலுக்கு வரும்.அதனை கவனமாக சேமித்து வைக்கவும்.இந்த நம்பரைக் கொண்டே கிளைம் பண்ண முடியும் என்பதால், இப்பாலிசியைப் பற்றி உங்களது உறவினர்கள், தெரிந்தவர்களிடம் முன்பே கூறிவிடுங்கள்.
முழுமையான தகவல்களுக்கு:http://www.etisalat.ae/nrd/en/personal/mobile/prepaid_mobile/takaful_offer.jsp
Ensure your family's well-being
Now with Wasel or Five Prepaid, for the first time in the UAE, get exceptional benefits covering Life's misfortunes for just AED 1 per month, with our TAKAFUL offer. 
A Unique offer from Etisalat. TAKAFUL Personal Accident Cover to ensure your family's well-being for as little as AED 1 per month.
Coverage benefits:
- Death due to accident - in the event of death by accident, the TAKAFUL company will pay benefits up to AED 20,000 
- Permanent Total Disablement due to accident (PTD) - in the event of PTD due to an accident, the TAKAFUL company will pay benefits of AED 20,000
Charges:
AED 1 per month.
How to Subscribe:
Subscribe today by sending TAK to 1012 or dial *101#
Terms & Conditions:
- For detailed terms & conditions, please click on one of the following: for English, Arabic, Urdu or Bengali 
- One Policy per mobile number and Customer 
- Minimum: 18 completed years & Maximum: 64 completed years 
- Maximum Coverage Age: 65 completed years 
- Period of Coverage :The cover is valid for a period of 30 days for that particular month during the policy year (12 months) for which the Contribution is paid by the Policyholder

Tuesday, 29 March 2016

எகிப்து விமானம் கடத்தல்- வெளிநாட்டு பயணிகள் சிலரை தவிர அனைத்து பயணிகளும் விடுவிப்பு


கெய்ரோ சென்ற எகிப்து ஏர் பயணிகள் விமானத்தை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலெக்சாண்டிரியாவில் இருந்து விமானம் கெய்ரோவிற்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடத்தப்பட்ட விமானத்ததில் 80 பயணிகள் இருந்தனர். . விமானத்திற்குள் இருந்த தீவிரவாதி பைலட்டை மிரட்டி பயணிகள் விமானத்தை சைப்ரஸ் நாட்டின் லர்நாகா விமான நிலையத்தில்  தரையிறக்கினர். காலை 6.28க்கு அலெக்சாண்டிரியாவில் புறப்பட்ட விமானம் 7.45க்கு கெய்ரோ வந்திருக்க வேண்டும். மேலும் விமானத்தை கடத்திய தீவிரவாதியிடம் வெடிகுண்டுகள் இருப்பதாக தெரிகிறது. விமானத்திற்குள் இருக்கும் தீவிரவாதி வெடிகுண்டை தனது உடலில் கட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தை கடத்தியவனின் பெயர் இப்ராஹிம் சமஹா என தெரிய வந்துள்ளது.
கடத்தப்பட்ட விமானத்திலிருந்து முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் சில வெளிநாட்டு பயணிகள்  மற்றும் விமான ஊழியர்களை தவிர அனைத்து பயணிகளும் பத்திரமாக விடுவிக்கப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தியது யார்?
பயணிகள் விமானத்தை கடத்திச் சென்றதற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. I.S தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி இருக்கலாம் என எகிப்து அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் எகிப்துக்குள் செயல்படும் தீவிரவாத அமைப்பும் கடத்தியிருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. கடத்தப்பட்ட விமானம் எகிப்து ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது

வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோன்களுக்கு பேசும் வசதி விரைவில் அறிமுகம்


தகவல் தொடர்பு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் செல்போன், இணையதளம், வாட்ஸ் அப், சாட்டிங், வீடியோ அழைப்பு போன்றவற்றால் ஒரு நொடியில் தொடர்பு கொண்டு பேசும் வசதி உள்ளது.
ஆரம்பத்தில் கம்ப்யூட்டர், லேப்–டாப் போன்றவற்றின் மூலம் பேசுபவர்களின் உருவத்தை பார்த்து கொண்டே பேசும் வசதி இருந்தது.
இப்போது செல்போன், ஐபோன், டேப் போன்ற சாதனங்கள் மூலமாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து பேசும் உணர்வை ஏற்படுத்தும் தகவல் தொழில்நுட்பம் பரிணாமம் பெற்றுள்ளது.
‘வாட்ஸ் அப்’ என்னும் நவீன தகவல் தொடர்பு சாதனம் தற்போது உலகம் முழுவதும் ஒரு குடைக்குள் கொண்டு வந்து விட்டது.
உலகின் எந்த பகுதியில் ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை படத்துடன் உடனே பரிமாறிக் கொள்ளும் இந்த வசதி நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை வெகுவாக சென்றடைந்துள்ளது.
செல்போன் மூலம் ‘வாட்ஸ் அப்’ வசதியை பயன்படுத்துவதற்கு தற்போது கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. முற்றிலும் இலவசமாக்கப்பட்ட இந்த வசதியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
வாட்ஸ் அப் வசதி தற்போது செல்போன்களுக்கு இடையே மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. விரைவில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் (டெலிபோன்) பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோனுக்கு பேசும் வசதியை செயல்படுத்த தீவிரம் காட்டுகிறார்.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘டிராய்’ முடிவு செய்து இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் டெலிபோன் சரண்டர்களை குறைப்பதோடு புதிய இணைப்புகளுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று பி.எஸ்.என்.எல். கருதுகிறது.

அவசரத் தேவைகளுக்கு ஒரே எண் '112': விரைவில் அறிமுகம்


அனைத்து அவசர தேவைகளுக்கும் 112 என்ற ஒரே தொலைதொடர்பு எண்ணை பயன்படுத்தும் சேவைக்கு அமைச்சகங்களுக்கு இடையேயான தொலைத்தொடர்பு குழு பரிந்துரைத்துள்ளது.
இதன்மூலம் பொதுமக்கள் அவசர தேவைகளான காவல்துறை உதவி, ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தீயணைப்பு துறைகளை 112 என்ற ஒரே எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
தொலைத் தொடர்பு கண்காணிப்பு ஆணை யமான டிராய்யின் இந்த பரிந்துரையை தொலைத்தொடர்பு குழு ஏற்றுக்கொண்டுள்ளது

Monday, 28 March 2016

துபாயில் தவிக்கும் மீனவருக்கு இந்திய தூதரகம் உதவவில்லை!வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு!


நாகர்கோவில்: துபாயில் தவிக்கும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் உதவவில்லை என்று அம்மீனவர்கள் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் அஜ்மான் என்ற இடத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 23 மீனவர்களும், அரேபிய மீனவர்கள் 2 பேர் என மொத்தம் 25 பேர், கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அரேபியாவை சேர்ந்த படகின் கேப்டன் கமிஸ் என்பவர் கடலில் தவறி விழுந்து இறந்தார். மீனவர்கள் வெகு நேரம் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் அங்குள்ள நீதிமன்றம் ஒரு மாத விசாரணைக்கு பிறகு அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மீனவர்களின் முதலாளிகள், சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களின் பாஸ்போர்ட்களை திரும்ப கொடுப்பதாக கூறினர். 
ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கவில்லை. மீனவர் காணாமல் போன வழக்கில் சாட்சிகள் என்ற பெயரில் இவர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வீட்டு சிறை போன்றுள்ள ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு உணவும் சீராக கிடைக்கவில்லை. மீனவர்களின் உறவினர்கள், மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அளித்து வந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக தற்போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் அங்குள்ள இந்திய தூதரகம் மீனவர்களுக்கு உதவிகள் செய்து வருவதாக பொய்யான தகவல்களை மத்திய அரசுக்கு கொடுத்து வருகிறது என்றும், நாங்கள் தினமும் உணவுக்கே கஷ்டப்படுகிறோம் என்றும், எங்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என்றும் வாட்ஸ் அப் வீடியோ மூலம் அஜ்மனில் உள்ள குமரி மாவட்ட மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முஸ்லிம் பெண்கள் பருவமடைந்தால் 15 வயதில் விரும்பியவரை மணக்கலாம்! டெல்லி உயர்நீதிமன்றம்!


ருவமடைந்திருந்தால் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
16 வயது மகளை பையன் வீட்டார் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும், தங்கள் மகளை தங்களுடனேயே அனுப்பி வைக்குமாறும் கோரி பெண்ணுடைய பெற்றோர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் எனும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் எஸ்.பி.கார்க் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் அவர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது, 
“இஸ்லாமிய சட்டப்படி ஒரு முஸ்லிம் பெண் பருவம் அடைந்துவிட்டால் பெற்றோரின் சம்மதம் இல்லாவிட்டாலும் அவர் தனது மனதிற்கு பிடித்தவரை மணக்கலாம் என்றும், 18 வயதிற்குட்பட்டவராக இருந்தாலும் அவர் தனது கணவர் வீட்டில் வசிக்கலாம் என்பதை இந்த நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. 
அதன்படி, “பருவமடைந்த ஒரு முஸ்லிம் பெண் அதாவது 15 வயது பெண், தான் விரும்பியவரை மணக்கலாம்” என்று தீர்ப்பளித்துள்ளனர். 
மேலும், “தான் விரும்பித்தான் அந்தப் பையனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதனால் அவர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது” என்றும் அந்தப் பெண் கேட்டுக் கொண்டதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். 
பருவமடைந்த பெண்கள் 15வயதில் திருமணம் முடிக்கலாம் என்று டெல்லிஹைகோர்ட் அளித்த இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல தீர்ப்பாகும். 
எல்லா பிரச்சனைகளுக்கும் இதுவே காரணம்: 
நாட்டில் நடக்கும் ஒழுக்க ரீதியான பல பிரச்சனைகளுக்கு, திருமணம் முடித்து வைக்க வேண்டிய வயதில் திருமணம் முடித்து வைக்காமல், தாமதமாக திருமணம் முடித்து வைப்பதுதான் காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 
தற்காலத்தில் குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து விடும் போது அவர்களுக்கு 20 – 25 வயதை தாண்டியவுடன் திருமணம் முடித்து வைப்பதென்பது அர்த்தமற்றதாகும். 
இப்போது உள்ள சினிமாக்களையும், சீரியல்களையும் பார்க்கக் கூடிய குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்துவிடும் நிலையில், அவர்களுக்கு திருமணம் முடித்து வைக்காமல் திருமணத்தை தள்ளிப்போட்டு இழுத்தடிப்பதென்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். 
ஐக்கிய நாடுகள் அமைப்பான யுனிசெஃப் நடத்திய ஆய்வு முடிவு: 
இந்தியாவில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களில், எட்டு சதவீதம் பேர், 15 வயதை அடைவதற்கு முன்பே, உடலுறவில் ஈடுபடுகின்றனர். ஆனால்,இதே பருவத்தில் உள்ள ஆண்களை பொறுத்தவரை, மூன்று சதவீதம் பேர் மட்டுமே, 15 வயதை அடைவதற்கு முன், உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்றும், 
பெரும்பாலான வளரும் நாடுகளிலும், கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், இதே போக்குதான் நிலவுகிறது என்றும், இளம் வயதிலேயே உடலுறவில் ஈடுபடுவதன் மூலம், இளம் வயதிலேயே கர்ப்பமடையும் போக்கும் அதிகரித்து உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, தாய்மை அடையும் ஒவ்வொரு 1,000 பெண்களிலும், 45 பேர், 15லிருந்து 19 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பான யுனிசெஃப்தனது ஆய்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டதை நாம் கண்டோம். 
மேற்கண்ட நிகழ்வுகள் பெண் குழ்ந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன என்பதை காட்டுகின்றதா? இல்லையா? அப்படியானால். அவர்கள் பருவமடைந்தவுடனே அவர்களுக்கு திருமணம் முடித்து வைப்பதுதானே சிறந்தது. 
அப்படி திருமணம் முடித்து வைப்பதன் மூலம் இளம் வயதிலேயே வீட்டை விட்டு ஓடிப்போகும் அவலம், இளம் வயதிலேயே விபச்சாரம், மற்றும் ஒழுக்கக்கேடு குறித்த விவகாரங்களை தவிர்க்கலாம் தானே! 
டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கூறிய மேற்கண்ட வழக்கில் கூட குறித்த நேரத்தில் திருமணம் செய்து வைக்காததால்தான் அந்தப் பெண் பிஞ்சிலேயே பழுத்து வீட்டைவிட்டு ஓடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. 
பெண்களுக்கு தாமதமாக திருமணம் முடிப்பதென்பது, ஒழுக்க ரீதியாக மட்டுமல்ல; உடல் ரீதியாகவும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. 
பெண்கள் மிக தாமதமாக திருமணம் செய்துகொள்வது மற்றும் 30வயதுக்கு மேல் முதல் குழந்தை பெற்றுக்கொள்ளுவது ஆகியவைதான் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வர முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன. 
தாமதமாக திருமணம் முடித்தல் என்பது உடல் ரீதியாகவும்,உளவியல் ரீதியாகவும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. 
தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. 
கருத்தரிக்க தாமதம் ஏற்படும் நிலை. 
அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.
காலதாமதமாக திருமணமானவர்களுகு அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது என்ற தகவல் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. 
வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்து கொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது. 
மேலும் இளவயதில் குழந்தை பெறும் போது நார்மல் டெலிவரியாகக்கூடிய பெண்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளும் போது அது சிசேரியனில் போய் முடிவதையும் காண்கின்றோம். 
தாமதமாக திருமணம் முடிப்பதனால், இப்படி ஏராளமான பிரச்சினைகளை பெண்கள் உடற்கூறு ரீதியாகவும் சந்திக்கின்றனர். 
அதுமட்டுமல்லாமல், சிறு வயதிலேயே திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் போது அந்தக் குழந்தைகளை பேணி வளர்ப்பதும் அவர்களது பெற்றோர்களுக்கு இலகுவாகின்றது. 
16 – 17 வயதில் ஒரு குழந்தையை ஒரு பெண் பெறும் போது, ஆண்குழந்தையாக இருந்தால் இவளது 40வது வயதில் அந்த ஆண்மகன் இவளுக்கு சம்பாதித்துக் கொடுக்க ஆரம்பித்துவிடுவான். 
அதே நேரத்தில் 35வயதில் ஒரு பெண் திருமணம் முடித்தால், அந்தப்பெண்ணின் 40வது வயதில் ஐந்து வயது பாலகனை பள்ளிக்கு அனுப்பிவிடும் அவல நிலையும், இவர்களுக்கு அவன் சேவை செய்ய வேண்டிய நேரத்தில், அவனுக்கு இவர்கள் சேவை செய்து கொடுக்க வேண்டிய அவல நிலையும் ஏற்படுவதற்கும் இந்த தாமத திருமணம் காரணமாக அமைகின்றதா? இல்லையா? 
உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் ஓட்டளிப்பதற்கு தகுதி பெறும் வயது 18 என்று நிர்ணயித்துள்ள போதிலும், அதை 14வயதாக குறைக்கச் சொல்லி இப்போது கோரிக்கைகள் எழ ஆரம்பித்துள்ளன. பிரிட்டன் எம்.பி ஆலன் மைக்கேல் என்பவர், ஓட்டளிக்கும் வயதை 14 ஆக குறைக்க வேண்டும் என்ற கருத்தை சென்ற மாதம் முன்வைத்திருந்தார். 
அதுமட்டுமல்லாமல், பிரேசில், கியூபா போன்ற நாடுகளில் 16வயதிலேயே ஓட்டளிக்க அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

Sunday, 27 March 2016

கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை – விவசாயிகளுக்கு கடும் இழப்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய் 40 காசுகள் விற்கப்படுவதால், விவசாயிகளும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
சூளகிரி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில், சாகுபடி செய்யப்படும் தக்காளி, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அதிகளவில் எற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு நாட்டு தக்காளியை காட்டிலும், வீரிய ஒட்டுரக தக்காளி அதிக அளவில் விளைச்சல் செய்யப்படுகிறது. 
இதனால் பெரும்பாலான விவசாயிகள் வீரிய ஒட்டுரக தக்காளியை, பெருமளவில் சாகுபடி செய்கின்றனர். 3 மாதங்களுக்கு முன்பு, இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 
மேலும் 25 கிலோ பெட்டி தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது, ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதனால் உற்பத்தி செலவிற்கே போதிய விலை கிடைக்காததால், தக்காளிகளை பறிக்காமல் செடியிலே விவசாயிகள் விட்டு வைத்து உள்ளனர். 
மேலும் கால்நடைகளை விட்டு தக்காளி செடிகளை மேய்த்து வருவதால், விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குவைத்தின் 6th Ring சாலையில் கோரவிபத்து 2 இந்தியர்கள் பலி: 5 பேர் படுகாயம்:

குவைத்:
Flash News. 

குவைத்தின் 6th Ring சாலையில் கோரவிபத்து 2 இந்தியர்கள் பலி: 5 பேர் படுகாயம்:
குவைத்தின் 6th Ring சாலையில் இன்று 3 மணியளவில் இரண்டு வாகனங்கள் மோதி ஏற்பட்ட கோரவிபத்தில் இரண்டு பேர் இறந்ததாக செய்தி பதிவு செய்திருந்தோம். இப்போது இறந்தவர்கள் இருவருமே இந்தியர்கள் என்ற சோகமான தகவல் வந்துள்ளது.
இவர்கள் பெயர்கள் விபரங்கள் முரளி 35 மற்றும் வர்கி செறியான் என்கிற (பைஜூ) கேரளா திருச்சூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த 5 நபர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் ஒன்று இவர்களில் ஒருவர் மனைவி மற்றொன்று இவருடைய நண்பர் மற்ற மூவர் பற்றி தகவல்கள் தெரியவில்லை.
இவர்கள் அனைவரும் மிகவும் கவலைக்கிடமாக 
நிலையில் al jahra hospital kuwait அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
News update:26:03:2016
News Source: Asainet news..

ஒரு சில சம்பவங்களை வைத்து இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக சொல்ல முடியாது: வங்கதேச எழுத்தாளர்


இந்தியாவில் நடந்த சில மோசமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக சொல்ல முடியாது என வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கருத்து தெரிவித்துள்ளார்.
தஸ்லிமா நஸ்ரின் டெல்லியில் ‘சி.ஐ.ஐ. யங் இந்தியா’ நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியவை பின்வருமாறு:-
இந்திய சட்டங்களும், அரசியலமைப்பும் சகிப்புத்தன்மை கொண்டவை. சிலர் சகிப்புத்தன்மை இன்றி இருக்கிறார்கள் என்பதற்காக இந்தியாவில் வாழும் 1.24 பில்லியன் மக்களும் சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஒரு சில மோசமான சம்பவங்களை மட்டும் அடிப்படையாக வைத்து இப்படி நாம் சொல்லிவிட முடியாது. ஒரு சிலர் சகிப்புத்தன்மையின்றி இருப்பது இந்தியாவில் புதிதல்ல. சகிப்புத்தன்மை குறைவாக இருக்கும் சிலர் இந்தியாவில் மட்டுமல்ல. எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

இனி ஒரே தொலைபேசி அழைப்பின் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்யலாம்.


ரெயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்ய கடைசி நேரத்தில் கவுண்ட்டர்களை தேடிச் செல்லும் பொதுமக்களின் அலைச்சலை தவிர்க்கும் வகையில் இதற்கென புதிய தொலைபேசி சேவையை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்தவுள்ளது.
‘139’ என்ற எண்ணுக்கு போன்செய்து, முன்பதிவு செய்யப்பட்ட நமது பயணச்சீட்டு தொடர்பான தகவல்களை எதிர் முனையில் இருப்பவரிடம் தெரிவித்து விட்டால், உடனடியாக நமக்கு ஒரு கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) வழங்கப்படும். பின்னர், அதேநாளில் நமக்கு வசதியான நேரத்தில் அருகாமையில் இருக்கும் ரெயில்வே முன்பதிவு அலுவலகத்துக்கு சென்று, தங்களுக்கு அளிக்கப்பட்ட கடவுச்சொல்லை காட்டி, டிக்கெட்டுக்கான ரீபன்ட் தொகையை திரும்பப் பெறலாம்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இந்த வசதியை பெறலாம். அடுத்த (ஏப்ரல்) மாதத்தில் இருந்து நாடு முழுவதும் இந்த புதிய வசதி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தாரில் வாழும் அனைவருக்கும் சம உரிமையுண்டு...!


கத்தார் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்
ளது அதில் கத்தார் குடிமக்கள் மற்றும் கத்தார் வாழ் வெளிநாட்டவர் அனைவரும்சம உரிமையுடையவர்கள் என பிரகடனம் செய்
யப்பட்டுள்ளது.
மேலும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் 
கூறும் போது வெளிநாட்டு தொழிலாளர் 
களை பாதுகாக்க அதன் சட்டங்களும், விதி
கள் மற்றும் முயற்சிகள் வலுப்படுத்தும் என
எமிர் ம ம ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி
மற்றும் கத்தார் நாட்டின் உறுதிபடுத்தி இருப்
பதாகவும் கூறுகிறார்.
இருப்பினும் விரும்பி வேலைகளை செய்வது,
ஓட்டுநர் உரிமம் மற்றும் கடன் போன்ற அடி
ப்படை விடயங்கள் அங்கு தொழிலாளர்களு
க்கு மறுக்கப்படுகிறது எனவும் குற்றச்சாட்டு
கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீங்கள் IMO உபயோகிப்போர்களா ?அப்படியாயின் இதனை கட்டாயம் படியுங்கள். .. !


இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன.இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது. போட்டித்தன்மை வாய்ந்த உலகில் மென்பொருளின் (Apps) வருகை அதிதீவிரம் பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்திற்கு போட்டியான இன்று பல மென்பொருள் சந்தையில் விடப்பட்டுள்ளன.
அவற்றில் தற்போது பலரின் கவனத்தை ஈர்ந்துள்ள முக்கிய மென்பொருளாக IMO மாற்றம் பெற்றுள்ளது. முகப்புத்தகம் (Face Book), ஸ்கைப் (Skype), டுவிட்டர் (Twitter), வாட்ஸ்அப் (Whatsapp), வைபர், (Viber) போன்று IMO மென்பொருளும் மிகவும் வேகமாகவும், பிரபலமாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது.
அத்துடன் IMO மென்பொருள் தற்போது இரண்டு வகையில் அறிமுகம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. IMO Beta (New version) 10 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. IMO (Old version) 100 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. இவ்வாறு இரண்டு வகையான IMO மென்பொருள்கள் உள்ளன. *IMO பயன்படுத்துவதன் நன்மைகள்
ஆரம்ப காலங்களில் ஸ்கைப் (Skype) மென்பொருளை பயன்படுத்தியவர்களுக்கு IMO பயன்படுத்துவது இலகுவாக உள்ளது. அத்துடன் இணையதளங்களை பயன்படுத்தும் போது செலவிடப்படும் டேட்டா (Data) குறைவாகவே காணப்படும் அதாவது ஸ்கைப்பிற்கு செலவிடப்படும் டேட்டாவை விடவும் IMOவுக்கு குறைந்த அளவிலான டேட்டாவே செலவாகிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மாட்போன்களின் தரைவிறக்கம் செய்து போது சிறியளவிலான கொள்ளளவையே IMO மென்பொருள் எடுத்துக் கொள்கிறது. அத்துடன் கையடக்க தொலைப்பேசியில் உரையாற்றும் போது வெளியாகும் தெளிவான ஒலியினை வாட்ஸ்அப் (Whats app) மற்றும் வைபர், (Viber) போன்ற வலைத்தளங்களில் பெற்றுகொள்ள முடியாது. எனினும் வாட்ஸ்அப் (Whats app), வைபர், (Viber) வலைத்தளங்களில் உரையாடும் போது தாமதமாகவே ஒளிகளை பெற்றுகொள்ள முடிகின்றது. ஆனால் அவ்விரண்டையும் விடவும் தெளிவான ஒலியினை பெற்றுகொள்ள IMO உதவுகின்றது. அத்துடன் தெளிவான காணொளி அழைப்புகளை (Video call) மேற்கொள்வதற்கு IMO உதவுகின்றது. குறைந்த செலவில் தெளிவாக காணொளி அழைப்புகளை பெற்றுகொள்வதற்கு IMO என்பது மிகவும் சிறந்த ஒரு தொடர்பாடல் மென்பொருளாகும்.
குறைந்த ஒளியில் துல்லியமான காணொளியை மற்றவருக்கும் வழங்கும் வகையில் இதன் கமரா கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆன்லைனில் அரட்டை அடிப்பவர்களுக்கு (Online chatting) நேரத்தை மகிழ்ச்சியாக போக்குவதற்கு வித்தியாசமான, ஏனைய தொடர்பாடல் வலைத்தளங்களை விடவும் அழகான ஸ்டிகர்ஸ்கள் (Stickers)வழங்கப்பட்டுள்ளன. கண்களை கவரும் நிறங்களில் ஸ்டிகர்களிலே உரையாடல்களை மேற்கொள்ளும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
IMO பயன்படுத்துவதன் போது அதிகளவு நன்மைகள் இருந்தாலும், அதற்கு இணையாக பல தீமைகளும் உள்ளமை மறுக்க முடியாத ஒன்றாகும்.
*IMO வின் தீமைகள்..* 
எவ்வளவு தான் நன்மையான ஒரு பக்கத்தை ஒரு சமூக வலைத்தளம் கொண்டிருந்தாலும் அது பல தீமையான விடயங்களை கொண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும்.
பொதுவாக தேவையற்ற ஒருவரின் தொலைபேசி இலக்கத்தை எமது ஸ்மாட்போனில் பதிவு செய்து வைத்திருந்தால், நாம் IMO மென்பொருளை தரவிறக்கம் செய்து செயற்படுத்தும் வேளையில், நாம் IMO பயன்படுத்துகின்றோம் என்பதை மற்றவர்களுக்கு தன்னிச்சையாக காட்டிக் கொடுக்கும். இதன் மூலம் தேவையற்றவர்கள் எம்மை தொடர்பு கொள்ள நாமே வாய்பை ஏற்படுத்திக் கொடுக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
IMOவில் காணொளி பயன்பாடு மிகவும் இலகுபடுத்தப்பட்டுள்ளமையால், சாதாரண தொடுகையின் மூலம் மற்றவருக்கு காணொளி அழைப்பு செல்லும் அவல நிலை ஏற்படலாம்.
இது பெண்களுக்கு பெரும் ஆபத்தான ஒன்றாகும். ஒரு ஆணோ பெண்ணோ தனக்கு நம்பிக்கையானவருக்கு ஒரு அந்தரங்கமான காணொளியை பகிரும் போது, அது தவறுதலாக அனைத்து நண்பர்களுக்கும் செல்லும் ஆபத்தான நிலையும் காணப்படுகிறது.
IMOவை முதன்முறையாக பயன்படுத்துவோர் இது தொடர்பில் அவதானமாக செயற்படுவது நல்லது. இன்றைய காலகட்டத்தில் காதல் எனும் பெயரில் லீலைகள் புரியும் இருபாலாருக்கும் IMO வரபிரசாதமாக அமைந்தாலும், அதுவே அவர்களின் வாழ்வின் முடிவுக்கான ஆரம்ப புள்ளியாகவும் அமைந்து விடுகிறது. 
IMO Beta பதிப்பினை பயன்படுத்துவோர் பகிரப்படும் காணொளிகள், புகைப்படங்களை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. அவ்வாறு பதிவு செய்யப்படும் அந்தரங்கமான பல விடயங்கள் மெமரிக் காட் மூலம் இன்னொருவரை சென்றடையக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.
முகவரியற்றவர்களை முகப்புத்தகம் ஊடாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் பல இளைஞர்கள், யுவதிகள் IMO எனும் மென்பொருள் ஊடாக அந்தரங்களை பகிர்ந்து அவமானங்களை சுமந்து, தற்கொலை எனும் முடிவை எடுக்கும் படுபயங்கரமான நிலையும் இதன் ஊடாக ஏற்படுகிறது. 
பொதுவாக நாம் IMO மற்றும் Whats app மென்பொருள்களில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் நேரடியாக நாம் அனுப்பு நபரின் தொலைப்பேசிக்கு அல்லது கணனிக்கு செல்வதில்லை. அவை அனைத்து சேவையகத்திற்கு (Server) சென்றதன் பின்னரே தொலைப்பேசி அல்லது கணனிக்கு செல்கின்றது. இன்று வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் காதலர் அல்லது வெளிநாட்டில் தொழில் செய்யும் தங்கள் கணவருக்கு பெண்கள் தங்களின் நிர்வாணப்படங்களை பகிர்கின்றார்கள். இது நேரடியாக அந்த நபருக்கு செல்லாதமையின் விளைவாக பல தற்கொலைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளது.
அத்துடன் இன்று IMOவில் ஒரு புதிய விடயம் ஒன்று உள்ளன. ஒரு நபருடைய கணக்கினை திறந்து பார்க்கும் போது கீழே ஒரு காணொளி குறியீடு காணப்படுகின்றது. அந்த காணொளியில் நமது விரல் தவறுதலாக பட்டாலும் குறுகிய காணொளி ஒன்று மற்றவருக்கு சென்றுவிடுகின்றது. அதனை அழிக்க முடியாது என்பது முக்கிய விடயமாகும்.
அத்துடன் நாம் ஒரு நபருடன் உரையாடல் மேற்கொண்டால் அதனையும் ஒரே நேரத்தில் அழித்து விட முடியாது. அதேபோல் நமது IMO கணக்கினை நாம் அழித்து விட்டாலும் நாம் அனுப்பிய தரவுகள் எதுவும் கணக்கில் இருந்து அழியாது. 
நாம் மீண்டு ஒரு கணக்கினை புதிதாக அதே இலக்கத்தில் திறந்தால் பழைய பதிவுகள் எதுவும் அழியாமல் அவ்வாறே இருக்கும். கணக்கினை அதாவது Uninstall செய்தாலும் அந்த கணக்கு அழியாது என்பது இன்று பலருக்கு தெரியாது. 
*பழைய பதிவுகளை எவ்வாறு அழிப்பது?* 
IMO settings என்றதை அழுத்தினால் அதில் Delete chat history யை பயன்படுத்தி அவசியமற்றவைகளை அழித்துகொள்ள முடியும். அதேபோல் IMO கணக்கினை அழிப்பதற்கு IMO account setting சென்று Delete your IMO account என்பதன் ஊடாக உங்கள் கணக்கினை அழித்து கொள்ள முடியும்.
அதேபோல் IMO பயன்படுத்திய அனைவருக்கும் நிச்சியமாக முகம் தெரியாத அழைப்புகள் (Wrong call) வருவது சகஜமான ஒரு விடயம் என்று தான் கூற முடியும். இந்த அழைப்புகள் 80 வீதம் பெண்களுக்கே வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது. எனவே தயவு செய்து அவ்வாறான அழைப்புகளுக்கு பதில் கொடுக்க வேண்டாம். தெரியாத இலக்கம் என்றால் மேல் உள்ள படத்தில் Blocked contacts என்ற ஒரு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குள் தெரியாத இலக்கத்தை பதிவு செய்து விடுங்கள். தயவு செய்து இணையதளங்களில் உங்கள் அந்தரங்கங்கள் பகிர்வதனை நிறுத்தினால் பாதிப்புகளில் இருந்து ஆரம்பத்திலே காப்பாற்றி கொள்ள முடியும். நன்மைக்காக மாத்திரம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பிரச்சினைகளை தவிர்த்துகொள்ளலாம். அழகு என்றால் ஆபத்துதான் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களும் பொருத்தும் என்பது உறுதியாகியுள்ளது.

இஸ்லாம் பற்றி தவறான பிரசாரம்செய்து, முஸ்லிம்களை வன்முறைக்கு திருப்ப IS முயற்சி


இஸ்லாமிய தேச பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அமெரிக்கவில் உள்ள முஸ்லிம்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறினார்.
நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை நிகழ்த்திய வானொலி உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
இஸ்லாமைப் பற்றிய தவறான பிரசாரத்தை நிகழ்த்தி முஸ்லிம் இளைஞர்களை வன்முறைப் பாதைக்குத் திருப்ப ஐ.ஸ். பயங்கரவாத இயக்கம் முயற்சிக்கிறது.
வன்முறையையும் வெறுப்பையும் தூண்டும் இஸ்லாமிய தேசத்தை ஒழிப்பதே நமது லட்சியம். ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரில் அமெரிக்க முஸ்லிம்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
அவர்களை வேறுபடுத்திப் பார்ப்பது அமெரிக்கப் பண்பாட்டுக்கு எதிரானது. மேலும் இது எதிர் விளைவையே ஏற்படுத்தும். நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தி நமக்குள்ளே சண்டை மூள வைக்கும். அதைத்தான் பயங்கரவாதிகள் விரும்புகிறார்கள்.
ஐ.எஸ்.ûஸ ஒழிப்பது நமது பிரதான லட்சியம். அதில் நாம் வெல்வோம். பயங்கரவாதிகள் வீழ்வது உறுதி. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நாம் உறுதியாக உள்ளோம் என்றார்.
ஐரோப்பாவில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து, அமெரிக்க வாழ் முஸ்லிம்களைக் கண்காணிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வில் போட்டியிடும் டெட் குரூஸ் கருத்து தெரிவித்திருந்தார்.
முன்னதாக, சிரியா, இராக் அகதிகளுக்கு அமெரிக்காவில் புகலிடம் அளிக்கக் கூடாது என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒபாமாவின் வானொலி உரை அமைந்ததாகக் கருதப்படுகிறது.

Saturday, 26 March 2016

முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்... கூட்டணிக்குள் வலுக்கும் எதிர்ப்புகள்!

சென்னை: 

ஒரு வேகத்தில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராகவும், மநகூ - தேமுதுக அணியை விஜயகாந்த் அணி என்றும் வைகோ சொல்லிவிட்டாலும், அதை முழுமையாக ஏற்க முடியாமல் தவிக்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணியின் பிற தலைவர்கள்.
தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக இரண்டில் ஏதோ ஒரு கட்சியுடன்தான் கூட்டணி என்ற சூழல் நிலவிக் கொண்டிருந்த நேரத்தில், துணிச்சலாக மூன்றாவது மாற்று அணியை உருவாக்கினார் வைகோ. அதுதான் மக்கள் நலக் கூட்டியக்கம். பின்னர் மக்கள் நலக் கூட்டணியாக மாறியது.
இந்த அணிக்கு எதிராக அத்தனை கிண்டல்கள், கேலிகள், கலாய்ப்புகள். ஆனாலும் வைகோ தலைமையில் மிகச் சிறப்பாக மக்களைச் சந்தித்து ஆதரவைப் பெருக்கி வந்தனர் மநகூ தலைவர்கள். அதிமுக, திமுக, பாஜக போன்றவை கூட்டணி பற்றியே பேசிக் கொண்டிருந்த நேரத்தில், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் நான்கு கட்ட பிரச்சாரத்தையே முடித்துவிட்டனர். குறிப்பாக மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் மநகூ தலைவர்கள் கூட்டத்துக்கு வரலாறு காணாத வரவேற்பு.
நடுநிலையாளர்கள் பலரும் இது உண்மையிலேயே மாற்று அரசியலுக்கான அணி என்று நினைக்க ஆரம்பித்த நேரத்தில், தேமுதிகவை அணிக்குள் கொண்டுவந்தார் வைகோ. இதில் அவருடைய பங்களிப்புதான் அதிகம்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் கடைசி நேரத்தில் ஏமாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருந்த வைகோ, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலின் மையப் புள்ளியாகிவிட்டார். குறிப்பாக அவர் தந்திருக்கும் அதிர்ச்சியில் திமுக உறைந்து போயிருக்கிறது.
எல்லாம் சரிதான்... ஆனால் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தா? இந்தக் கேள்விதான் மநகூ மற்றும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களை ஜீரணிக்க முடியாமல் தவிக்க வைத்துள்ளது.
முதல்வர் வேட்பாளருக்கு முதல் சாய்ஸ் வைகோ. இல்லாவிட்டால் முதல் முறையாக ஒரு தலித் முதல்வர் என்ற வகையில் திருமாவளவன். இந்த இருவருமே வேண்டாம் என்றால், பெரியவர் நல்லக்கண்ணு என்ற நிலைதான் மக்கள் நலக் கூட்டணியில் இருந்தது. ஆனால் வலுவான கூட்டணி அமைய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர் மநகூ தலைவர்கள்.
இந்த நிலைப்பாட்டை பொது வெளியிலும் இணைய வெளியிலும் கடுமையாக எதிர்த்துப் பேச ஆரம்பித்துள்ளனர் மநகூ ஆதரவாளர்கள்.
மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நான்கு பிரதான கட்சிகளின் இரண்டாம் மட்ட தலைவர்கள், நிர்வாகிகள் இந்த விஷயத்தில் கடும் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். கூட்டணியில் தேமுதிக வந்தது, அதிக தொகுதிகள் பெற்றதில் பிரச்சினையில்லை. ஆனால் முதல்வர் வேட்பாளராக வைகோ, திருமா அல்லது நல்லக்கண்ணுவை முன்னிறுத்தி இருந்தால் இந்தக் கூட்டணியின் மதிப்பும், வெற்றிக்கான வாய்ப்பும் மிகப் பிரகாசமாக இருந்திருக்கும் என பெரும்பான்மையானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேமுதிக இணைந்த மநகூவின் ஒருங்கிணைப்பாளர் வைகோவும், திருமாவளவனும் கூட இந்தக் கருத்தில் உடன்படுகின்றனர். 'ஆனால் வேறு வழியில்லை. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக இரண்டும் வரக்கூடாது. இந்த பொது இலக்கை நிறைவேற்ற சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் இதையெல்லாம் யோசிக்காமல் அதிகாரம் நம் கைக்கு வருவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட வேண்டும்," என்று வைகோ வேண்டுகோள் விடுத்திருப்பது, இந்த அதிருப்தியை சமாளிக்கவே.

Friday, 25 March 2016

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

பதிவு செய்த நேரம்:2016-03-25 18:20:39

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபின் மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்துள்ளார். தோழமை கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும். திமுக தலைவர் கருணாநிதி 6-வது முறையாக முதலமைச்சர் ஆவது உறுதி என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

ரத்த சோகை நீக்கும் மாங்காய்


பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவையும் ரத்த சோகையையும் நீக்கும் திறன் கொண்டது. பாத வெடிப்புகளுக்கு மாங்காயின் சாற்றைப் பூசினால் குணமாகும். காயின் தோலைக் கையளவு எடுத்து நெய்விட்டு வதக்கி, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். காயின் தோலை அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் ரத்த மூலமும் வயிற்றுப்போக்கும் தீரும்.

மருத்துவம்


சமுக வலைதளம்


விளையாட்டு


வேலைவாய்ப்பு,


சமையல்


கல்வி


உலக செய்திகள்


இந்தியா


முஸ்லீம் அகதிகளின் காலைக் கழுவிய போப் பிரான்ஸிஸ்.

24 மார்ச் 2016

ரோம் நகரில் அகதிகள் முகாம் ஒன்றில், கத்தோலிக்க திருச்சபையின் ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் பிரார்த்தனை நிகழ்வு ஒன்றின் போது, போப் பிரான்ஸிஸ் முஸ்லீம் மற்றும் பிற குடியேறிகளின் கால்களைக் கழுவினார்.
Image AFP
கேஸ்டல்நுவோ டி போர்டோ என்ற இடத்தில் உள்ள , தஞ்சம் கோரிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முகாம் ஒன்றுக்கு அவர் விஜயம் செய்த போது இது நடந்தது.
பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் நகரங்களில் நடந்த தாக்குதல்களை அடுத்து எழுந்திருக்கும் கொந்தளிப்பான உணர்வுகள் நிலவும் சூழலில் இந்த விஜயம் வந்திருக்கிறது.
பிரார்த்தனை நிகழ்வின் போது அவர் ஆற்றிய உரையில், போப் பிரான்ஸிஸ் ,பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்களை ரத்த வெறி பிடித்தவர்கள் செய்யும், போருக்கான சமிக்ஞை என்று வர்ணித்தார்.
குண்டுத்தாக்குதல் நடத்தியவர்களின் உலகப் பார்வையை தனது கூட்டத்தில் கூடியிருந்தோரின் மனப்பாங்குடன் மாறுபடுத்தி ஒப்பிட்டு அவர் பேசினார்.
"எம்மிடம் பல கலாசாரங்களும், மதங்களும் இருக்கின்றன ஆனால் நாம் எல்லோரும் சகோதரர்கள் , அமைதியாக வாழவே விரும்புகிறோம்", என்றார் அவர்

வளைகுடா நாடுகளில் ரோமிங் கட்டணம் 40 சதவீதம் குறைப்பு; வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது!

துபை, 

இண்டர்நெட், டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் செல்போன் அழைப்புகளுக்கான கட்டணங்களை 3 ஆண்டுகளுக்குள் குறைக்க போவதாக ஏற்கனவே, சென்ற ஆண்டு ஜூன் மாதம் வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில் தெரிவித்திருந்தது.
வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், ஓமன் நாடுகளில் தொலைபேசிகளுக்கான ரோமிங் கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கவுன்சிலின் துணை செயலாளர் அப்துல்லா பின் ஜூமா அல் சிப்லி தெரிவித்துள்ளார். 
சில வளைகுடா டெலிகாம் நிறுவனங்கள் சவூதி அரேபியா குவைத், பக்ரைன் மற்றும் ஓமனில் செயல்பட்டு வருகின்றன. சவூதி டெலிகாம் கம்பெனி குவைத், பக்ரைனில் இயங்கி வருகின்றன. அதேபோல், குவைத்தை சேர்ந்த செயின் நிறுவனம் பக்ரைன், சவூதி அரேபியாவில் உள்ளன. கத்தாரின் ஓரிடோ நிறுவனம் குவைத் மற்றும் ஓமனில் கிளைகளை கொண்டுள்ளது. 
எனினும், இந்த ரோமிங் கட்டண குறைப்பு முடிவில் இண்டர்நெட் டேட்டா கட்டணங்களை குறைப்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Thursday, 24 March 2016

முகப்பு


மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையக அறிவிப்பு :(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

#மார்ச்_26_அரசியல்_மறுமலர்ச்சி_மாநாடு

மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு இறையருளால் எதிர்வரும் மார்ச் 26 , 2016 சனிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் சென்னை OMR சாலையில் உள்ள YMCA  திடலில் நடைபெறவிருக்கிறது .
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார்கள் . ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூட மைதானங்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன .
இரவு புறப்பட்டு காலை வந்து சேரும் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த  மக்கள் தங்குவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன  . மாநாட்டு மைதானத்தில் புத்தக கடைகள் , வணிக வளாகங்கள் , உணவகங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன .
மாநாட்டு திடலுக்கு கலீபா உமர் அவர்களின் பெயரும் , மேடைக்கு காயிதே மில்லத் அவர்களின் பெயரும் ,  பெண்கள் பகுதிக்கு அன்னை . தெரஸா அவர்களின் பெயரும் , இரண்டு நுழைவுவாயில்களுக்கு ஒன்றுக்கு ஐயா பெரியார் அவர்களின் பெயரும் , இன்னொன்றுக்கு மாணவர் போராளி ரோஹித் வெமுலா அவர்களின் பெயரும் ,திடல் வரவேற்பு வளைவுக்கு மவ்லவி அப்துல் ரஹீம் அவர்களின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது .
இம்மாநாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகிகள் உரையாற்றுகிறார்கள் . மாவட்ட செயலாளர்கள் , அணிகளின் மாநில செயலாளர்கள் , செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றுகிறார்கள் .
இம்மாநாட்டில் அ.இ.அ.தி.மு.க வின் சார்பில் அனைத்துலக MGR நற்பணி மன்ற செயலாளரும் , தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான தமிழ்மகன் உசேன் , இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் , சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் R. சரத்குமார் , பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் P.V.கதிரவன் , தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல் முருகன் , கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் U. தனியரசு , இந்திய யூனியன் காயிதேமில்லத் லீக்கின் தலைவர் தாவூத் மியாகான் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர் .
இவண்
M.தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
24-03-2016

திக்குவாய் அகல…


குழந்தைகளுக்கு ஏற்படும் நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னைகள் குணமாக வேண்டும் எனில், விளக்குத் தீயில் சுட்ட வசம்பைத் தாய்ப்பால் விட்டு அரைத்து அந்தப் பசையை சிறிதளவு நாக்கில் தடவிவர வேண்டும்

ஃப்ரீட்ஜில் வைத்த பொருட்களை எப்படி உபயோகிப்பது?


ஃப்ரிட்ஜில் வைத்த குழம்பு, கறி போன்றவற்றை வெளியே எடுத்து அதன் குளிர்ச்சி மாறின பிறகு டபுள் பாயிலிங் முறையில் பாத்திரங்களை அதில் வைத்து கிளறி சுட வைக்க வேண்டும். டபுள் பாயிலிங் என்பது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைத்து அதன் உள்ளே குழம்பு பாத்திரத்தை வைத்து கிளறுவது

வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதால் எந்தப் பலனும் இல்லை


நம்ம தாத்தா பாட்டியெல்லாம், முருங்கைக்கீரையைச் சாப்பிடு, முளைக்கீரையைச் சாப்பிடுனு தன்னால சக்தி வந்துடும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஆனா, அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிட்டு, வைட்டமின் மாத்திரைகளா முழுங்கறதுலதான் நம்மள்ல பலருக்கும் ஆர்வம். இனியாச்சும் இயற்கையாவே, அதாவது உணவுப் பொருள் மூலமாகவே வைட்டமின் சக்தியை ஏத்திக்கற வழியைப் பார்த்தா, பர்ஸ் மிஞ்சும்

தனது சதையை வெட்டி எடுத்து சமைத்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்டவர்.


வலி என்று ஒன்று மட்டும் இல்லை என்றால் மனிதன் தனது சதையை தானே சாப்பிட்டு விடுவான் என்ற என்ற கூற்றுக்கு சான்றாக நிகழ்ந்த சம்பவம்தான் இது.  
பிபிசி டெலிவிஷனில் அறிவியல் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குபவர் ஹிரிக் புட். இவர் மனித மாமிசத்தின் சுவை எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக தனது  வலது கால் தொடை சதையினை வெட்டி எடுத்து ஆய்வுகூடத்தில் வைத்து சூடுபடுத்தி சாப்பிட்டு உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றினை அவர் வெளியிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக வெளியான அந்த வீடியோவில்
ஆய்வுகூடத்திற்குள் செல்லும் ஹிரிக் புட் அங்கு தனது வலது காலில் இருந்து சதையினை எடுத்து, அதனை ஆய்வு கூடத்தில் வைத்து சூடுபடுத்தி ஒரு சோதனை குழாயில் அடைத்து வைக்கிறார்.பின்னர் அதனை முகர்ந்து பார்க்கையில், அதன் வாசனை நன்றாக இருக்கிறது, மேலும் மாட்டிறைச்சியை ஒத்த வாசனை வருகிறது.
எனவே, இந்த அற்புதமான உணவினை நான் அன்றாடம் சாப்பிடப்போகிறேன் எனக்கூறியுள்ளார். மேலும், மனித மாமிசத்தை சாப்பிடுவது சட்டப்படி குற்றம் என்றாலும், இது எனது தனிப்பட்ட ஆய்வு என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சிலர், பலவேறு விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்

தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களில் வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் எப்ஐஆர் !

திருச்சி, மார்ச் 23: 

தமி ழ கம் முழு வ தும் உள்ள அனைத்து காவல் நி லை யங் க ளி லும் ஏப் ரல் 15ம் தேதி முதல் ஆன் லைனில் எப் ஐ ஆர் பதிவு செய் யும் முறை அம லுக்கு வரு கி றது. 
இந் தி யா வில் 16,000 காவல் நி லை யங் கள் உள் ளன. இதில் தமி ழ கத் தில் 1,482 காவல் நிலை யங் கள் உள் ளன. இவற் றில் முதல் தக வல் அறிக் கையை (எப் ஐ ஆர்) போலீ சார் கையால் எழுதி வழக்கு விசா ர ணைக் காக நீதி மன் றத் தில் சமர் பித்து வந் த னர். இந் நி லை யில் காவல் துறையை நவீ ன மாக்கி முக் கிய குற் ற வா ளி கள் குறித்து ஆன் லைன் மூலம் இந் தி யா வின் எந்த மூலை யி லும் உள்ள காவல் நிலை யங் க ளி லும் தெரிந்து கொள் ளும் வகை யில் மத் திய அர சின் உத் த ர வின் பேரில் ஒவ் வொரு மாநி லத் தி லும் உள்ள காவல் நிலை யங் களை குற் றம் மற் றும் குற் ற வா ளி கள் ஆவ ணம் குறித்து அறிந்து கொள் ளும் வசதி (சிசி டி என் எஸ்) ஏற் ப டுத் தப் பட்டு அதற் காக ரூ.2 ஆயி ரம் கோடி ஒதுக்கி அப் போ தைய காங் கி ரஸ் அரசு உத் த ர விட் டது. இதில் தமி ழ கத் திற் காக ரூ.113 கோடி ஒதுக் கீடு செய் யப் பட் டது. 
இதை ய டுத்து, தமி ழக காவல் துறை சார் பில், சிசி டி என் எஸ் திட் டத் தின் படி சிப் ரஸ் (Common Integrated Police Record System) எனும் ஆன் லைன் வசதி ஏற் ப டுத்தி அமல் ப டுத் து வது குறித்து சென்னை உயர் நீ தி மன் றத் தில் தன் னிலை விளக் கம் அளித்து இதற் காக கூடு த லாக தமி ழக அரசு சார் பில் ரூ.10 கோடி ஒதுக் கீடு செய் யப் பட் டது. இதனை ஏற்ற சென்னை உயர் நீ தி மன் றம் முதல் கட் ட மாக ஏதே னும் ஒரு மாவட் டத் தில் இந்த திட் டத் தினை செயல் ப டுத்தி, அதன் மூ லம் ஏற் ப டும் சாதக, பாத கங் களை அறிந்து அதற் கேற்ப மாற்றி அமைத்து கொள் ள லாம் என உத் த ர விட் டது. அதன் படி காஞ் சி பு ரம் மாவட் டத் தில் சிப் ரஸ் நெட் மூலம் அனைத்து காவல் நிலை யங் க ளும் கம்ப் யூட் டர் மூலம் எப் ஐ ஆர் பதிவு செய் யும் திட் டம் நடை மு றைப் ப டுத் தப் பட் டது. இந்த திட் டம் வெற்றி பெற் றதை அடுத்து தமி ழ கத் தில் உள்ள அனைத்து மாவட் டங் க ளி லும் இதனை அமல் ப டுத்த சென்னை உயர் நீ தி மன் றம் உத் த ர விட் டது. இதை ய டுத்து சென்னை, கோவை, திருச்சி உள் பட அனைத்து மாவட் டங் க ளில் உள்ள காவல் நிலை யங் க ளி லும் ஆன் லைன் வசதி ஏற் ப டுத் தப் பட் டது. 
தற் போது இந்த பணி கள் முழு வ தும் முடி வுற்ற நிலை யல் ஏப் ரல் 15ம் தேதி முதல் அனைத்து காவல் நிலை யங் க ளி லும் ஆன் லைன் மூலம் எப் ஐ ஆர் பதிவு ெசய் யும் திட் டம் துவங் கப் பட உள் ளது. 
இது கு றித்து போலீஸ் அதி காரி ஒரு வர் கூறு கை யில், ஆன் லைன் மூலம் எப் ஐ ஆர் பதிவு செய் யும் முறை, தமி ழ கம் முழு வ தும் ஏப் ரல் 15ம் தேதி முதல் துவங் கு கி றது. இதற் கான அனைத்து பணி க ளும் முடிந் துள் ளது. தமி ழ கத் தில் உள்ள அனைத்து காவல் நிலை யங் க ளில் உள்ள தலைமை எழுத் தர், ஏட்டு மற் றும் போலீ சா ருக்கு கம்ப் யூட் ட ரில் எப் ஐ ஆர் போடு வது குறித்து பயிற்சி அளிக் கப் பட் டது. கையால் எழு தும் எப் ஐ ஆ ருக்கு ஏ3 பேப் பர் உப யோ கப் ப டுத் தப் பட் டது. தற் போது ஆன் லைன் எப் ஐ ஆ ருக்கு தமி ழக அரசு முத் தி ரை யு டன் கூடிய பிரத் யே க மான ஏ4 பேப் ப ரில் பிரிண்ட் எடுத்து நீதி மன் றத் திற்கு வழங் கப் ப டும். இந்த திட் டம் வரும் காலங் க ளில் நேரி டை யாக சம் பந் தப் பட்ட காவல் நிலை யங் க ளின் வழக் கு களை விசா ரிக் கும் நீதி மன் றத் தில் உள்ள மாஜிஸ் தி ரேட் மற் றும் நீதி ப தி கள் அங் குள்ள கம்ப் யூட் ட ரில் பார்த்து வழக் கு களை தெரிந்து கொள் ளும் வகை யில் மாற்றி அமைக் கப் ப டும் என் றார். 
  
லஞ்ச ஒழிப்பு போலீ சா ருக்கு அனு மதி மறுப்பு 
ஆன் லைன் எப் ஐ ஆர் வச தியை சட் டம், ஒழுங்கு போலீஸ், கிரைம், சிபி சி ஐடி என வழக் கு களை பதிவு செய் யும் பொறுப் புள்ள காவல் நிலை யங் கள் மட் டும் இந்த திட் டம் மூலம் எப் ஐ ஆர் பதிவு செய்ய அனு ம திக் கப் பட் டுள் ளது. மேலும் வழக்கு பதிவு செய்ய முடி யாத எஸ் பி சி ஐடி, ஓசியூ ஆகிய யூனிட் போலீ சார் இந்த வச தியை பயன் ப டுத்த முடி யாது. தற் போது வழக்கு பதிவு செய் யும் லஞ்ச ஒழிப்பு போலீ சார் இந்த திட் டத்தை பயன் ப டுத்த அனு மதி மறுக் கப் பட் டுள் ளது. 

Wednesday, 23 March 2016

24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை பறக்கும் படைகள் :: தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்தும் தீவிர கண்காணிப்பு.


24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை பறக்கும் படைகள் :: தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்தும் தீவிர கண்காணிப்பு.
பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும்படை அதிகாரிகள் 24 மணி நேர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டையை பொறுத்தவரையில், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மாணிக்கவல்லி தலைமையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை சாந்தி தலைமையிலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை சிவகுமார் தலைமையிலும் தலா ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர், 2 தலைமைக்காவலர்கள் கொண்ட பறக்கும் படையினர் இரவு பகலாக 24 மணிநேர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் அரசுமணி, பூவந்திநாதன், கோபி ஆகியோர் தலைமையில் 3 பிரிவாக 24 மணி நேரவாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்க சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

திருச்சி -சென்னை உள்பட ,கூடுதலாக 5 விமானங்கள் இயக்க திட்டம்:திருச்சி விமான நிலைய புதிய இயக்குநர் பேட்டி!


திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இங்கு புதிதாக 5 விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்படவுள்ளது என்றார் நிலைய இயக்குநர் கே. குணசேகரன். 
திருச்சி விமான நிலையத்தின் புதிய இயக்குநராக கே. குணசேகரன் கடந்த சனிக்கிழமை பொறுப்பேற்றார். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: 
திருச்சியிலிருந்து சிங்கப்பூர், துபை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் அளவு இலக்கைதாண்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
கடந்த நிதியாண்டில் 4973 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், நிகழ் நிதியாண்டில் 6 ஆயிரம் மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 
ஆனால், பிப்ரவரி மாதம் வரையில் மட்டும் சுமார் 6.075 மெட்ரிக் டன் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது மார்ச் 31-ம் தேதியில் 6.500 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதேபோல், பயணிகள் போக்குவரத்திலும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
கடந்த ஜனவரி மாதத்திலேயே 10 லட்சம் பயணிகளுக்கும் (1.2 மில்லியன்) அதிகமான பயணிகள் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். மேலும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களை இயக்க ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. குறிப்பாக, திருச்சி-சென்னை இடையே 3-ஆக உள்ள விமான சேவையை 5 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். மார்ச் 28-ம் தேதி முதல் (கோடைகால அட்டவணைப்படி) இந்த புதிய சேவை தொடங்கும். இதில் இயக்கப்படும் 2 விமானங்களும் இரவு நேரத்தில் இயக்கப்படவுள்ளன. 
இதேபோல், சிங்கப்பூர்-திருச்சி இடேயே இயக்கப்படும் டைகர் ஏர்வேஸ் விமான நிறுவனமும் கூடுதலாக மேலும் இரு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளின் கோரிக்கையை ஏற்று புகைக்கும் அறை கூடுதலாக அமைக்கப்பட உள்ளது என்றார்.

துபாயில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் !!


துபாய்: துபாயில் உள்ள கிரசண்ட் ஆங்கிலப் பள்ளியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்கள்.  
 
துபாயில் உள்ள கிரசண்ட் ஆங்கிலப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வினை தமிழக மாணவ, மாணவியர் எழுதி வருகின்றனர்.
            
 இந்த பள்ளியில் மட்டுமே தமிழக அரசு பாடத்திட்டம் இருந்து வருகிறது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வுகளை எழுதி வருகின்றனர். 
             
  ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டுதல் தாங்கள் தேர்வினை சிறந்த முறையில் எழுத உதவியாக இருப்பதாக மாணவ, மாணவியர் தெரிவித்துள்ளனர். தேர்வில் யாரும் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
             
TN students appear for SSLC exams in Dubai 
அவர்கள் அவ்வப்போது தேர்வு நடக்கும் அறைகளில் வந்து கண்காணிக்கிறார்கள். பறக்கும் படையினரும், இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் தேர்வு நடக்கும் அறைகளில் கண்காணித்து வருகின்றனர்.

அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள வட்ட அலுவலகங்களில் வாக்காளர் சேவை மையம் :: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் வாக்காளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத்தேர்தல் நடத்தும் அலுவலருமான என்.சுப்பையன்.

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்காளர் சேவை மையத்தின் செயல்பாடுகளை திங்கள்கிழமை ஆய்வுசெய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவதற்காகவும், நூறு சதவீத வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பதற்காகவும், நூறு சதவீதம் வாக்குப்பதிவு நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு வட்ட அலுவலகத்திலும் வாக்காளர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் அடையாள அட்டை காணாமல் போனவர்கள் மாற்று அடையாள அட்டை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஒரு வாரத்தில் கொடுக்கப்படும். பிற சந்தேகங்களுக்கும் இம்மையத்தில் விளக்கம் அளிக்கப்படும். வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்றவை கோரி இணையவழி மூலம் 25,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தவிர நேரடியாக 22,000 பேர் மனு அளித்துள்ளனர். வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை மார்ச் 25-ம் தேதி இறுதி செய்யப்பட்டு, ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிக்கை செய்யப்படும்.
மேலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தனியாக இந்திய தகவல் சேவை அலுவலர் நார்சிங்தேவ் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏப்.9-ம் தேதி வருகிறார். இவர் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கடந்த தேர்தல்களில் எங்கெங்கு
வாக்குப்பதிவு குறைவாகப் பதிவானதோ அங்கெல்லாம் விழிப்புணர்வு பணி மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்வார் என்றார் ஆட்சியர்.

தஞ்சாவூரில் நாளை 108 அவசர ஊர்திக்கான ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு முகாம் ::


தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள ஆர்வமுள்ள ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் பங்கேற்கலாம் என அறிவிப்பு.
தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள மருதுபாண்டியர் கல்லூரி வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை (மார்ச் 23) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் சு.பிரசாத் தெரிவித்திருப்பது:
சென்னை திருவல்லிகேனியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் 108 அவசர கால சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்துக்குத் தேவைப்படும் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மருதுபாண்டியர் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பணியமர்த்தப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பணி நியமன ஆணை முகாம் நடைபெறும் அன்றே வழங்கப்படும். மேலும், இந்தப் பணிகள் குறித்த விபரம் அறிய 044-288880607577, 7092489093 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட சேவைக்காக திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு தேசிய விருது-குடியரசு தலைவர் வழங்கினார்!

திருச்சி 

சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட சேவைக்காக திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்காக இந்தியா முழுவதுமிருந்து 56 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் இம்முறை தமிழகத்தில் இருந்து இரண்டு விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறந்த சமூகத்தொண்டு புரிந்தமைக்காக மத்திய அரசால் சிறந்த கல்லூரியாக திருச்சி ஜமால் முகமது கல்லூரி தேர்வு செய்யப்பட்டது. கல்லூரிகளுக்கு இடையேயான ேபாட்டிகளில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேசிய விருது பெறுவது இதுவே முதன் முறையாகும். என்எஸ்எஸ் அலுவலர்களுக்கான தேசிய விருதை கல்லூரியின் ஆங்கில துறை பேராசிரியர் அப்துல்ஹக்கீம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதியால் அவர் கவுரவிக்கப்பட்டார். கல்லூரியின் என்எஸ்எஸ் சார்பாக மாணவர்களுக்கு மனம், உடல்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மரக்கன்று நடும் விழா முகாம் மூலம் 15 ஆயிரத்து 600 மரக்கன்று நடப்பட்டது. இந்த ஆண்டு 1,335 யூனிட் ரத்ததானம் மாணவர்கள் வழங்கி உள்ளனர். எய்ட்ஸ், சுற்றுப்புறச்சூழல், தூய்மை இந்தியா திட்டம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மண்ணச்சநல்லூர் தாலுகாவில் சிறுகுடி, வெங்கங்குடி, வீராணி, எஸ்.புதூர், ஈச்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை தத்தெடுத்து பல்வேறு பணிகளை செய்தது. கிராம மக்களுக்கு தேவையான குளங்கள் தூர்வாருதல், மருத்துவ முகாம், புத்தகம் வழங்குதல், தண்ணீர் வசதி, சாலை வசதி போன்றவை செய்து தருதல், பள்ளிகளை சீரமைத்தல், கண்தானம், போதை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டது. இப்பணியை பாராட்டியே தற்போது மத்திய அரசின் தேசிய விருது கிடைத்துள்ளது.
இவ்விருதை பாராட்டி மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் சுந்தர்ராஜன், கல்லூரி கல்வி இயக்குனர் சேகர் ஆகியோர் கல்லூரியை வாழ்த்தினர். இவ்விருது பெற்றதற்காக கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் காஜாநஜ்முதீன், பொருளாளர் கலீல் அகமது, உதவிசெயலாளர் ஜமால்முகமது, முதல்வர் முகமதுசாலிகு, துணைமுதல்வர் முகமதுஇப்ராகிம் உள்ளிட்டோர் என்எஸ்எஸ் அமைப்பை பாராட்டினர்.

சூஃபி மாநாடும் சில தீர்மானங்களும் ஓர் ஆலோசனையும்!


உலக அமைதிக்காகவும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும்
டெல்லியில் நடைபெற்ற நான்கு நாள் சர்வதேச சூஃபி மாநாடு
பல நல்ல கோரிக்கைகளை அரசுக்கும்
முஸ்லிம்களுக்கும் வைத்துள்ளது.
அச்சு ஊடகங்களிலும் மின்னணு ஊடகங்களிலும் வெளியாகும்
தலையங்கம், செய்திகள் போன்றவற்றைக்
கண்காணிக்க அரசு ஒரு குழு அமைக்க வேண்டும்;
அல்காயிதா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் குர்ஆனுக்கும்
நபிமொழிக்கும் தரும் தவறான விளக்கங்களை
முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்;
வகுப்புவாதிகளுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகள்
என்ன என்பதை உடனுக்குடன் தெளிவுபடுத்த வேண்டும்;
முஸ்லிம் பெண்களுக்கு குர்ஆன் தந்துள்ள உரிமைகளை
முஸ்லிம் சமுதாயம் பறிக்கக் கூடாது, அவை முழுமையாகப்
பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்;
மதச் சண்டைகள், மோதலுக்கு வலு சேர்க்கும் கருத்து வேறுபாடுகள்,
முஸ்லிம்களைக் காஃபிர் என்று அழைப்பது
போன்றவற்றையெல்லாம் கண்டிக்கிறோம்;
நபிவழியில் அமைந்த சூஃபித்துவக் கொள்கையை
மட்டும்தான் ஏற்றுக்கொள்வோம்-
என்பன போன்ற தீர்மானங்கள் எல்லாம் வரவேற்கத் தகுந்தவையே.
ஆனால், சூஃபித்துவக் கொள்கையையும் ஆய்வுகளையும் மட்டுமே
முதன்மை நோக்கமாய்க் கொண்டு “கரீப் நவாஸ் பல்கலைக்கழகம்”
உருவாக்க வேண்டும், எல்லா மதரசாக்களிலும்
சூஃபிப் பாடங்களைப் போதிக்க வேண்டும்
என்றும் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்
ஏற்கனவே பல அரபிக் கல்லூரிகளிலும் மதரசாக்களிலும்
சூஃபித்துவம் போதிக்கப்படுகிறது; பல்கலைக்கழகங்களில் உள்ள
அரபி மொழித் துறைகளின் ஆய்வுகளும்
பெரும்பாலும் சூஃபித்துவ ஆய்வுகள்தாம்.
ஆகவே சூஃபித்துவப் பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக
இஸ்லாமிய அறிவியல் ஆய்வுப் பல்கலைக்கழகம் ஒன்று தொடங்கப்பட்டு,
குர்ஆன்- ஹதீஸ் அடிப்படையிலான அறிவியல் ஆய்வுகளுக்கும்
கண்டுபிடிப்புகளுக்கும் வழி அமைக்க வேண்டும்.
மீண்டும் இப்னு ருஷ்தும்களும் இப்னு சீனாக்களும்,
அல் குவாரிஸ்ம்களும் இப்னு கல்தூன்களும் தோன்ற வேண்டும்.
-சிராஜுல்ஹஸன்

மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிப்பு! தே.மு.தி.க.வுடன் இன்று மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு:124 தொகுதி தேமுதிகவுக்கு ஒடுக்கிடு!



மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தனர். இதனிடையே, திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
This article will continue after this advertisement
ஏற்கனவே, விஜயகாந்த்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், விஜயகாந்த்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் விஜயகாந்த்துக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் விஜயகாந்த் காத்திருந்து திரும்பி சென்றதாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே தே.மு.தி.க.வுக்கு தலைவர் கலைஞர் அழைப்பு விடுத்து இருந்தார். அதனைத்தான் அவர் குறிப்பிட்டார். புதிதாக அழைப்பு எதுவும் விடுக்கபடவில்லை. கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று கூறினார். ஸ்டாலின் இந்த கருத்து தேமுதிக தலைமையை அதிர்ச்சியடைய செய்தது.
இந்தநிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த்தை சந்தித்து பேசினர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. தேமுதிக சார்பில் சுதீஷ், பிரேமலா ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 124 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Tuesday, 22 March 2016

சவூதி அரேபியாவில் சாலை விபத்தில் இறந்த மகனின் உடலை மீட் டுத் த ரக்கோரி பெரம்பலூர் கலெக் டரி டம் பெற்றோர் மனு!

பெரம் ப லூர், மார்ச் 22: 

வெளி நாட்டில்  சாலை விபத்தில் இறந்த மகனின் உடலை மீட் டுத் த ரக் கோரி பெரம்பலூர் கலெக் ட ரி டம் பெற் றோர் மனு கொடுத் த னர். 
பெரம்பலூர் மாவட் டம் குன் னம் தாலுகா பெரு மத் தூர் ஊராட்சி பள் ளக் காடு காட் டு கொட் ட கையை சேர்ந் த வர் ராஜாங் கம். இவ ரது மனைவி பச் சை யம் மாள். இவர் க ளது மகன் கள் ராஜ சே கர்(28), சின் ன துரை(23). விவ சா யி கள். 8ம் வகுப்பு வரை படித் துள்ள சின் ன துரை குடும்ப வறு மை யால் கடந்த 2 ஆண் டு க ளுக்கு முன் டிரா வல்ஸ் நிறு வ னம் மூலம் சவு திக்கு வேலைக்கு சென் றார். ரியாத் தில் வீட் டு வேலை மற் றும் டிரை வ ராக வேலை செய்து வந் தார். அங்கு சரி வர சம் ப ளம் தர வில் லை யாம். இத னால் பெற் றோ ருக்கு எப் போ தா வது பணம் அனுப் பு வா ராம். கடந்த மாதம் போனில் பேசிய அவர் அடுத்த மாதம் ஊருக்கு வரு வ தாக கூறி னார். 
இந் நி லை யில் ராஜாங் கத் துக்கு ரியாத் தி லி ருந்து ஒரு போன் கால் வந் தது. அதில் பேசி ய வர் கள் கடந்த 17ம் தேதி சாலை விபத் தில் சின் ன துரை 100அடி பள் ளத் தில் விழுந்து இறந் து விட் ட தாக கூறி னர். இத னால் அதிர்ச் சி யில் பெற் றோர் கத றி னர். 
தற் போது தேர் தல் பணி கள் மும் மு ர மாக இருப் ப தால் மக னின் உடலை மீட்க யாரை அணு கு வது என தெரி யா மல் தவித் து வ ரு வ தா க வும், மக னின் உடலை எப் ப டி யா வது மீட் டுத் தர வேண் டும் சின் ன து ரை யின் பெற் றோர் கலெக் ட ரி டம் மனு கொடுத் து னர். மனுவை அரசு துறை செய ல ருக் கும், இந் திய தூத ர கத் திற் கும் அனுப்பி வைத்து ந்ட வ டிக்கை எடுப் ப தாக தெரி விக் கப் பட் டது.