Sunday, 27 March 2016

கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை – விவசாயிகளுக்கு கடும் இழப்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய் 40 காசுகள் விற்கப்படுவதால், விவசாயிகளும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
சூளகிரி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில், சாகுபடி செய்யப்படும் தக்காளி, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அதிகளவில் எற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு நாட்டு தக்காளியை காட்டிலும், வீரிய ஒட்டுரக தக்காளி அதிக அளவில் விளைச்சல் செய்யப்படுகிறது. 
இதனால் பெரும்பாலான விவசாயிகள் வீரிய ஒட்டுரக தக்காளியை, பெருமளவில் சாகுபடி செய்கின்றனர். 3 மாதங்களுக்கு முன்பு, இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 
மேலும் 25 கிலோ பெட்டி தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது, ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதனால் உற்பத்தி செலவிற்கே போதிய விலை கிடைக்காததால், தக்காளிகளை பறிக்காமல் செடியிலே விவசாயிகள் விட்டு வைத்து உள்ளனர். 
மேலும் கால்நடைகளை விட்டு தக்காளி செடிகளை மேய்த்து வருவதால், விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment