Wednesday, 23 March 2016

துபாயில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் !!


துபாய்: துபாயில் உள்ள கிரசண்ட் ஆங்கிலப் பள்ளியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்கள்.  
 
துபாயில் உள்ள கிரசண்ட் ஆங்கிலப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வினை தமிழக மாணவ, மாணவியர் எழுதி வருகின்றனர்.
            
 இந்த பள்ளியில் மட்டுமே தமிழக அரசு பாடத்திட்டம் இருந்து வருகிறது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வுகளை எழுதி வருகின்றனர். 
             
  ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டுதல் தாங்கள் தேர்வினை சிறந்த முறையில் எழுத உதவியாக இருப்பதாக மாணவ, மாணவியர் தெரிவித்துள்ளனர். தேர்வில் யாரும் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
             
TN students appear for SSLC exams in Dubai 
அவர்கள் அவ்வப்போது தேர்வு நடக்கும் அறைகளில் வந்து கண்காணிக்கிறார்கள். பறக்கும் படையினரும், இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் தேர்வு நடக்கும் அறைகளில் கண்காணித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment