தேமுதிகவுடன் கூட்டணி இல்லை, வெறும் தொகுதி பங்கீடு மட்டும்தான் வைத்திருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தை நிறுவனரும், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான திருமாவளவன் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து பிறகு, இரு கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளும் முதல் பொதுக்கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன் “தேமுதிகவுடன் கூட்டணி இல்லை. மாறாக தொகுதி பங்கீடுதான் வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.
கூட்டணியில்லாமல் என்ன தொகுதி பங்கீடு என்றும், ஏன் இப்படி திருமாவளவன் பேசுகிறார் என்றும் தேமுதிக நிர்வாகிகள் குழம்பியுள்ளனர்.
http://kaalaimalar.net/seat-escalator-no-coalition-confuse-herein/
http://kaalaimalar.net/seat-escalator-no-coalition-confuse-herein/
No comments:
Post a Comment