Friday, 25 March 2016

முஸ்லீம் அகதிகளின் காலைக் கழுவிய போப் பிரான்ஸிஸ்.

24 மார்ச் 2016

ரோம் நகரில் அகதிகள் முகாம் ஒன்றில், கத்தோலிக்க திருச்சபையின் ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் பிரார்த்தனை நிகழ்வு ஒன்றின் போது, போப் பிரான்ஸிஸ் முஸ்லீம் மற்றும் பிற குடியேறிகளின் கால்களைக் கழுவினார்.
Image AFP
கேஸ்டல்நுவோ டி போர்டோ என்ற இடத்தில் உள்ள , தஞ்சம் கோரிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முகாம் ஒன்றுக்கு அவர் விஜயம் செய்த போது இது நடந்தது.
பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் நகரங்களில் நடந்த தாக்குதல்களை அடுத்து எழுந்திருக்கும் கொந்தளிப்பான உணர்வுகள் நிலவும் சூழலில் இந்த விஜயம் வந்திருக்கிறது.
பிரார்த்தனை நிகழ்வின் போது அவர் ஆற்றிய உரையில், போப் பிரான்ஸிஸ் ,பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்களை ரத்த வெறி பிடித்தவர்கள் செய்யும், போருக்கான சமிக்ஞை என்று வர்ணித்தார்.
குண்டுத்தாக்குதல் நடத்தியவர்களின் உலகப் பார்வையை தனது கூட்டத்தில் கூடியிருந்தோரின் மனப்பாங்குடன் மாறுபடுத்தி ஒப்பிட்டு அவர் பேசினார்.
"எம்மிடம் பல கலாசாரங்களும், மதங்களும் இருக்கின்றன ஆனால் நாம் எல்லோரும் சகோதரர்கள் , அமைதியாக வாழவே விரும்புகிறோம்", என்றார் அவர்

No comments:

Post a Comment