இந்தியாவில் நடந்த சில மோசமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக சொல்ல முடியாது என வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கருத்து தெரிவித்துள்ளார்.
தஸ்லிமா நஸ்ரின் டெல்லியில் ‘சி.ஐ.ஐ. யங் இந்தியா’ நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியவை பின்வருமாறு:-
இந்திய சட்டங்களும், அரசியலமைப்பும் சகிப்புத்தன்மை கொண்டவை. சிலர் சகிப்புத்தன்மை இன்றி இருக்கிறார்கள் என்பதற்காக இந்தியாவில் வாழும் 1.24 பில்லியன் மக்களும் சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஒரு சில மோசமான சம்பவங்களை மட்டும் அடிப்படையாக வைத்து இப்படி நாம் சொல்லிவிட முடியாது. ஒரு சிலர் சகிப்புத்தன்மையின்றி இருப்பது இந்தியாவில் புதிதல்ல. சகிப்புத்தன்மை குறைவாக இருக்கும் சிலர் இந்தியாவில் மட்டுமல்ல. எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment