நாசாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க செல்லும் தமிழக மாணவர்கள்
நாசாவில் நடைபெறும் ரோவர் சேலஞ்ச் எனும் போட்டியில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 7 மாணவர்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளனர்.
நாசாவில் நடைபெறும் ரோவர் சேலஞ்ச் எனும் போட்டியில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 7 மாணவர்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளனர்.
விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கோள்கள், நிலவுகள், நட்சத்திரங்கள் மற்றும் வால்மீன்களை ஆராயும் திட்டங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இதன் ஒரு பிரிவு, கோள்களில் ஆராய்ச்சிப்பணிக்கு பயன்படும் ரோவர்களை, மனித சக்திகள் மூலம் இயக்கும் ரோவர் சேலஞ்ச் என்ற போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது.
ஜூலை 7ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட ரோவர்களை மாணவர்களே தயாரித்து கொண்டுவந்து காட்சிப்படுத்துவர். இந்த போட்டிக்காக உலகெங்கும் உள்ள தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுவர்.
இதில் தற்போது தமிழகத்தை சேர்ந்த 7 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்கள் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.
No comments:
Post a Comment