துணை முதல்வர் பதவி மீது தமக்கு துளிகூட விருப்பமில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தே.மு.தி.க–மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய வைகோ, சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் உணர்ச்சிவசப்பட்டு பதவிகளை அறிவித்துவிட்டதாகவும், தமக்கு பதவியின் மேல் விருப்பமில்லை என்றும் வைகோ கூறினார்.
முன்னதாக பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி எண்ணிக்கைக் கூட இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று விமர்சனம் செய்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment