கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவின் மத்திய பகுதியில் படாபஜார் என்னும் இடத்தில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்ட வருகிறது. இதற்கான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானோர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டனர். முதற்கட்ட தகவலில் 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் போலீஸார் மற்றம் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். பால இடிபாடுகளுக்கிடையே லாரி மற்றம் கார் போன்ற வாகனங்களும் சிக்கியுள்ளன. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
No comments:
Post a Comment