Wednesday, 23 March 2016

24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை பறக்கும் படைகள் :: தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்தும் தீவிர கண்காணிப்பு.


24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை பறக்கும் படைகள் :: தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்தும் தீவிர கண்காணிப்பு.
பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும்படை அதிகாரிகள் 24 மணி நேர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டையை பொறுத்தவரையில், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மாணிக்கவல்லி தலைமையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை சாந்தி தலைமையிலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை சிவகுமார் தலைமையிலும் தலா ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர், 2 தலைமைக்காவலர்கள் கொண்ட பறக்கும் படையினர் இரவு பகலாக 24 மணிநேர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் அரசுமணி, பூவந்திநாதன், கோபி ஆகியோர் தலைமையில் 3 பிரிவாக 24 மணி நேரவாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்க சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

No comments:

Post a Comment