Thursday, 24 March 2016

தனது சதையை வெட்டி எடுத்து சமைத்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்டவர்.


வலி என்று ஒன்று மட்டும் இல்லை என்றால் மனிதன் தனது சதையை தானே சாப்பிட்டு விடுவான் என்ற என்ற கூற்றுக்கு சான்றாக நிகழ்ந்த சம்பவம்தான் இது.  
பிபிசி டெலிவிஷனில் அறிவியல் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குபவர் ஹிரிக் புட். இவர் மனித மாமிசத்தின் சுவை எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக தனது  வலது கால் தொடை சதையினை வெட்டி எடுத்து ஆய்வுகூடத்தில் வைத்து சூடுபடுத்தி சாப்பிட்டு உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றினை அவர் வெளியிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக வெளியான அந்த வீடியோவில்
ஆய்வுகூடத்திற்குள் செல்லும் ஹிரிக் புட் அங்கு தனது வலது காலில் இருந்து சதையினை எடுத்து, அதனை ஆய்வு கூடத்தில் வைத்து சூடுபடுத்தி ஒரு சோதனை குழாயில் அடைத்து வைக்கிறார்.பின்னர் அதனை முகர்ந்து பார்க்கையில், அதன் வாசனை நன்றாக இருக்கிறது, மேலும் மாட்டிறைச்சியை ஒத்த வாசனை வருகிறது.
எனவே, இந்த அற்புதமான உணவினை நான் அன்றாடம் சாப்பிடப்போகிறேன் எனக்கூறியுள்ளார். மேலும், மனித மாமிசத்தை சாப்பிடுவது சட்டப்படி குற்றம் என்றாலும், இது எனது தனிப்பட்ட ஆய்வு என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சிலர், பலவேறு விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்

No comments:

Post a Comment