Sunday, 27 March 2016

இனி ஒரே தொலைபேசி அழைப்பின் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்யலாம்.


ரெயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்ய கடைசி நேரத்தில் கவுண்ட்டர்களை தேடிச் செல்லும் பொதுமக்களின் அலைச்சலை தவிர்க்கும் வகையில் இதற்கென புதிய தொலைபேசி சேவையை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்தவுள்ளது.
‘139’ என்ற எண்ணுக்கு போன்செய்து, முன்பதிவு செய்யப்பட்ட நமது பயணச்சீட்டு தொடர்பான தகவல்களை எதிர் முனையில் இருப்பவரிடம் தெரிவித்து விட்டால், உடனடியாக நமக்கு ஒரு கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) வழங்கப்படும். பின்னர், அதேநாளில் நமக்கு வசதியான நேரத்தில் அருகாமையில் இருக்கும் ரெயில்வே முன்பதிவு அலுவலகத்துக்கு சென்று, தங்களுக்கு அளிக்கப்பட்ட கடவுச்சொல்லை காட்டி, டிக்கெட்டுக்கான ரீபன்ட் தொகையை திரும்பப் பெறலாம்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இந்த வசதியை பெறலாம். அடுத்த (ஏப்ரல்) மாதத்தில் இருந்து நாடு முழுவதும் இந்த புதிய வசதி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment