தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள ஆர்வமுள்ள ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் பங்கேற்கலாம் என அறிவிப்பு.
தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள மருதுபாண்டியர் கல்லூரி வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை (மார்ச் 23) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் சு.பிரசாத் தெரிவித்திருப்பது:
சென்னை திருவல்லிகேனியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் 108 அவசர கால சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்துக்குத் தேவைப்படும் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மருதுபாண்டியர் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பணியமர்த்தப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பணி நியமன ஆணை முகாம் நடைபெறும் அன்றே வழங்கப்படும். மேலும், இந்தப் பணிகள் குறித்த விபரம் அறிய 044-288880607577, 7092489093 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment