கெய்ரோ சென்ற எகிப்து ஏர் பயணிகள் விமானத்தை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலெக்சாண்டிரியாவில் இருந்து விமானம் கெய்ரோவிற்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட விமானத்ததில் 80 பயணிகள் இருந்தனர். . விமானத்திற்குள் இருந்த தீவிரவாதி பைலட்டை மிரட்டி பயணிகள் விமானத்தை சைப்ரஸ் நாட்டின் லர்நாகா விமான நிலையத்தில் தரையிறக்கினர். காலை 6.28க்கு அலெக்சாண்டிரியாவில் புறப்பட்ட விமானம் 7.45க்கு கெய்ரோ வந்திருக்க வேண்டும். மேலும் விமானத்தை கடத்திய தீவிரவாதியிடம் வெடிகுண்டுகள் இருப்பதாக தெரிகிறது. விமானத்திற்குள் இருக்கும் தீவிரவாதி வெடிகுண்டை தனது உடலில் கட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தை கடத்தியவனின் பெயர் இப்ராஹிம் சமஹா என தெரிய வந்துள்ளது.
கடத்தப்பட்ட விமானத்திலிருந்து முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் சில வெளிநாட்டு பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை தவிர அனைத்து பயணிகளும் பத்திரமாக விடுவிக்கப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தியது யார்?
பயணிகள் விமானத்தை கடத்திச் சென்றதற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. I.S தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி இருக்கலாம் என எகிப்து அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் எகிப்துக்குள் செயல்படும் தீவிரவாத அமைப்பும் கடத்தியிருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. கடத்தப்பட்ட விமானம் எகிப்து ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது
No comments:
Post a Comment