Sunday, 31 January 2016

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டும்: தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கோரிக்கை



முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் ஷிர்க் ஒழிப்பு (மூடநம்பிக்கை எதிர்ப்பு) மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் முகமது யூசுப் தலைமை வகித்தார். நிறுவனர் ஜெய்னுல் ஆபிதீன், மாநில உயர்நிலைக் குழுத் தலைவர் சம்சுல் லுஹா, செயலாளர்கள் அப்துல் ரகுமான், தொண்டி சிராஜுதீன், தலைவர் அல்தாபி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பேசினர். இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் தவ்பீக் தீர்மானங்களை வாசித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முஸ்லிம்களுக்கு 6.1 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதாக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடி யாக அமல்படுத்த வேண்டும். சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையங்களின் பரிந்துரைப்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். நாடு முழுவதும் புதிதாக மத்திய பல் கலைக்கழகங்களை சிறுபான்மை யினருக்காக ஏற்படுத்த வேண்டும். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய் யும் முடிவைக் கைவிட வேண்டும்.
தீபாவளி, பொங்கல் பண்டிகைக ளின்போது பொதுமக்களுக்கு அரசு சலுகைகள் வழங்குவதுபோல, முஸ்லிம் பண்டிகைகளின்போதும் சலுகைகளை வழங்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை களில் அடைக்கப்பட்டுள்ள கைதி களை விடுதலை செய்ய வேண்டும்.
கடந்த சட்டப்பேரவைத் தேர் தலின்போது அளித்த வாக்குறுதி களை, வரும் தேர்தலுக்குள் நிறை வேற்ற தமிழக முதல்வர் ஜெய லலிதா முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தித் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மூடநம்பிக்கைகளை விளக் கும் வகையில் மாநாட்டுத் திடலில் கண்காட்சியும் நடைபெற்றது

கண்பார்வை அதிகரிக்க எளிய டிப்ஸ்



கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அன்னாசிப் பழம் அடிக்கடிசாப்பிட்டு வந்தால் குணமாகும். கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.
சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும். சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். பாகல் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகைச் சேர்த்து மைப் போல அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு குறையும்.
ஒரு மலைவாழைப்பழம், நான்கு ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். முருங்கைக்கீரை, துவரம் பருப்பு இரண்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்

பேஸ்புக் வாட்ஸ் ஆப் ஜோடி... புது வசதி அறிமுகம்



தகவல் அனுப்ப உதவும், ‘ஆப்’களால் எழுந்துள்ள கடும் போட்டியை சமாளிக்க, முன்னணி சமூக வலைதளமான, ‘பேஸ்புக்’ உடன் இணைந்து, தகவல்கள், ஆவணங்கள் பரிமாற்றம், ‘வீடியோ’ அழைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகளை, ‘வாட்ஸ் ஆப்’ ஏற்படுத்தித் தர உள்ளது. மொபைல் போனில் உலகளவில் தகவல் அனுப்ப உதவும், ‘வாட்ஸ் ஆப்’புக்கு போட்டியாக, ‘லைன், வைபர், மெஸேஜ்மீ, வாக்ஸர், ஹேடெல், டெக்ஸ்ட்நவ், டாக்கடோன், கீக்’ என, ஏராளமான, ‘ஆப்’ கள், மக்களிடையே பயன்பாட்டில் உள்ளன. ஆனால், இந்தியாவில் வாட்ஸ் ஆப் தான் முன்னணியில் உள்ளது.
புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனக்கு தெரிந்தவர்களுடன், உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள, ‘வாட்ஸ் ஆப்’ பயன்படுகிறது. இந்தியாவில், பெரும்பாலானோர் பயன்படுத்தும், ‘ஆப்’ பாக வாட்ஸ் ஆப் திகழ்கிறது. இதன் மூலம், படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோக்கள் பகிரப்பட்டு, சில நிமிடங்களில் மக்களிடையே பரபரப்பாக பேசப்படும் விஷயங்களாக உருமாறுவது, சமீபத்திய, ‘டிரெண்ட்’ ஆக உள்ளது.
சமூக வலைதளங்களில் ஜாம்பவானாக திகழும், பேஸ்புக், ‘வாட்ஸ் ஆப்’பை, பெருந்தொகைக்கு விலைக்கு வாங்கியது. அதைத் தொடர்ந்து, வாட்ஸ் ஆப்பில் பல்வேறு மாற்றங்களை, பேஸ்புக் புகுத்தி வருகிறது. தற்போது, பிற, ‘ஆப்’ களால் எழும் போட்டியை சமாளிக்கும் நோக்கில், ‘வாட்ஸ் ஆப்’ பில் புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
‘வீடி யோ’ அழைப்பு, பேஸ்புக்குடன், தகவல் மற்றும் ஆவணங்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல வசதிகள், வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி பயனாளிகள் மேற்கொள்ளும் அழைப்புகள் மற்றும் ‘சாட்டிங்’ பதிவுகளை, ‘வாட்ஸ் ஆப்’போ, வேறு மூன்றாம் நபரோ, பயன்படுத்த முடியாத படி, தடுக்கும், ‘எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் இண்டிகேட்டர்’ வசதியும், புதிய அம்சமாக இணைக்கப்படுகிறது. இதில் வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் அனைத்தையும், பேஸ்புக்கிலும் பகிரும் வசதி சேர்க்கப்படுவதால், பிற, ‘ஆப்’ களை, ஓரங்கட்ட முடியும் என, பேஸ்புக் நிறுவனம் கருதுகிறது

தவ்ஹீத் ஜமாஅத் வழக்கறிங்கர் விஜந்திரன்..!


தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிரான வழக்குகளை பார்த்து கொண்டு நமது ஜமாத்திற்க்கு சட்ட ரீதியாக உதவிய வழக்கரஞர் சகோ. விஜந்திரன்.
சென்னையில் நடந்த போராட்டத்திற்க்கும் இன்று நடந்த மாநாடுட்டிற்க்கும் சட்டரீதியாக உதவி செய்த வக்கீல் சகோ விஜந்திரன் அவர்களுக்கு மாநாட்டில் அறிமுகப்படுத்தி நன்றியே தெரிவித்துக் கொள்கிறோம்.

திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 






தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் ஷிர்க் எனப்படும் இஸ்லாம் மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் ஒழிக்கும் மாநாடு திருச்சியில் உள்ள பிராட்டியூரில் நடைபெற்று வருகிறது. இதில் உயிருள்ளவர்கள் மற்றும் இறந்தவர்களை வணங்க வேண்டாம், பில்லி , சூனியம், ஜோதிடம் உள்ளிட்டவைகளை நம்ப வேண்டாம், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மேலும் 12 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. 

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்று வரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடியுள்ளனர்.

மத்திய தமிழகத்தில் மையம்கொண்டது மனிதப்புயல்....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் மத்திய தமிழகமான திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்று வரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடியுள்ளனர்.
இன்னும் லட்சோபலட்ச மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து சாலைகளும்
மத்திய தமிழகமான திருச்சியை நோக்கி இருந்ததால் திருச்சியின் அனைத்து வழி சாலைகளும் ஸ்தம்பித்துள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மாநாட்டை வெற்றிகரமாக ஆக்கிவிட்டான்.
முஸ்லிம் சமுதாயம் TNTJ பின்னால் தான் இருப்பது நிரூபணம் ஆகிவிட்டது.
மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு எதிர்ப்பு





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்படும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு, இந்து அமைப்புகள் மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. 
இதில், இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் மன உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் வாசகங்கள் மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். 
மேலும், நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், திருச்சி மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி வழங்கியது தவறு என்றும் அர்ஜூன் சம்பத் புகார் தெரிவித்துள்ளார். 
எனவே இந்த மாநாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யவேண்டும் எனவும் புகார் மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.  
அதேபோல், சில இஸ்லாமிய அமைப்புகளும், இந்த மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன

முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா பால்டிமோர் மசூதிக்கு வருகை

நியூயார்க்,

அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் மசூதிக்கு முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தர உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அருகே மேரிலாந்தில் உள்ள பால்டிமோர் மசுதிக்கு முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தருகிறார். அங்கு முஸ்லிம்களுடன் உரையாடுகிறார்.

மேலும் அமெரிக்கர்கள் மத சுதந்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்று வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து தெரிவிக்கபட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியை அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேலும் கடந்த 2010-ம் ஆண்டு சென்றது குறிப்பிடத்தக்கது

முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா பால்டிமோர் மசூதிக்கு வருகை



நியூயார்க்,
அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் மசூதிக்கு முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தர உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அருகே மேரிலாந்தில் உள்ள பால்டிமோர் மசுதிக்கு முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தருகிறார். அங்கு முஸ்லிம்களுடன் உரையாடுகிறார்.
மேலும் அமெரிக்கர்கள் மத சுதந்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்று வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து தெரிவிக்கபட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியை அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேலும் கடந்த 2010-ம் ஆண்டு சென்றது குறிப்பிடத்தக்கது

Saturday, 30 January 2016

தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்     புதுப்பட்டினம் கிளை - தஞ்சை தெற்கு மாவட்டம் .




தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்     புதுப்பட்டினம் கிளை - தஞ்சை தெற்கு மாவட்டம் .
       திருச்சில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு எங்கள் ஊரில் இருந்து கிளம்பும் 2 பஸ்கள் மற்றும் 2 வேன்களும்
இவர்களின்  பயணம் வெற்றி பெற அல்லாஹ்விடம் து ஆ செய்வோம்.
      - புதுப்பட்டினம் எக்ஸ்பிரஸ்.

எந்தப் (கட்சி/இயக்கங்கள்) பொதுக்குழுவில் எந்தத் தீர்மானம் விவாதிக்கப்படுகிறது?



  எல்லாம் ஏக மனதாகத்தானே நிறைவேற்றம் நடக்கிறது. புருசன் பொண்டாட்டியே ஒத்துப்போகாத காலத்தில், இத்தனை பேர் எப்படி ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்?
அதனால்தான், நாட்டில் வளர்ச்சி இல்லை. எந்தக் கருத்தும் எதிர் கருத்தால்தான் வளர்ச்சி பெறும். முதல் கருத்தும், எதிர் கருத்தும் மோதும்போது புதிய கருத்து பிறக்கும்.
அந்தப் புதிய கருத்துக்கும் எதிர் கருத்து உருவாகி, மீண்டும் புதிய கருத்து உருவாகும். இதுதான் வளர்ச்சி.
ஆனால், இங்கு எதிர் கருத்து என்பதே கிடையாது. இங்கு எந்த அரசியல் கட்சியின் பொதுக்குழுவிலும் தீர்மானத்தை விவாதிப்பது இல்லை.
தீர்மானத்தைப் படிக்கிறார்கள். பிறகு எதற்கு ஜனநாயகம்? ஒரு குடைக்குள் ஆளும் மன்னர்களாகத்தான் எல்லாக் கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள்

ஷிர்க்கு ஒழிப்பு மாநாட்டிற்கு ஆம்புலன்சை கொண்டு செல்லும் வழியில் ராஜ சேகரன் என்ற சகோதரர் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.



ஷிர்க்கு ஒழிப்பு மாநாட்டிற்கு ஆம்புலன்சை கொண்டு செல்லும் வழியில் ராஜ சேகரன் என்ற சகோதரர் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை மீட்டு முதலுதவி செய்து, தஞ்சை மருத்துவ மனையில் கொண்டு சேர்த்து விட்டு மீண்டும் மாநாட்டு திடலை நோக்கி புறப்பட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ்.
ஷிர்க் ஒழிப்பு மாநாடு இந்துக்களுக்கு எதிரானது என்று ஒருபுறம் இந்துத்வா அமைப்புகள் மதவெறியை தூண்டுகின்றன. மறுபுறம் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு செல்லும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ் ஒரு இந்துவின் உயிரை காப்பாற்றி இருக்கிறது. இனியும் பல இந்துக்களின் உயிர்களை காப்பாற்றும்.

Friday, 29 January 2016

இந்த உலகத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் செய்தி என்ன ? பிறமத மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஷிர்க் ஒழிப்பு மாநாடு....!!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு TNTJ யின் எல்லையை தாண்டி, இஸ்லாமிய சமூகத்தின் எல்லையை தாண்டி, பிறமத மக்களின் கவனத்தையும் ஈர்த்து ஷிர்க் என்றால் என்ன ? எதற்காக ஷிர்கை ஒழிக்க வேண்டும் ? பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மட்டுமின்றி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஜமாஅத்துக்களும்எதிர்க்க வேண்டிய காரணம் என்ன ?
இரத்ததானம் முதல் இயற்கை சீற்றம் வரை அனைத்திலும் மனிதநேய பணியில் தனி முத்திரை பதித்து வரும் தவ்ஹீத் ஜமாஅத் இந்த அளவுக்கு எதிர்க்கப்பட காரணம் என்ன ? 
இந்த உலகத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சொல்லவரும் செய்தி என்ன ? 
இதுதான் பிறமத சகோதரர்களின் கேள்வியாக அமைந்துள்ளது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை இந்த உலகுக்கு உரக்க சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாமாகும்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையான இஸ்லாமிய கொள்கையை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் இந்தியாவில் சிலர் திருக்குர்ஆனை சரியாக விளங்காமல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கைக்கு மாற்றமாக செயல்பட்டு ஓர் இறைவனுக்கு இணையாக தர்காவை வணங்குகிறார்கள்.
இவ்வாறு தர்காவை வணங்கி வழிபடுவது ஓர் இறைக்கொள்கைக்குமாற்றமானது, ஓர் இறைக்கொள்கையை நிலைநாட்டுங்கள், ஓர் இறைக்கு இணை கற்பிக்காதீர்கள் என்பதை பிரகடனம் செய்யவே ஷிர்க் ஒழிப்பு மாநாடு.
முஸ்லிம் என்றால் பெயரளவில் வாழாமல் உண்மையான முஸ்லிமாக வாழுங்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்று சொன்னார்களே அப்படி வாழுங்கள் என்கிறது தவ்ஹீத் ஜமாஅத் 
ஒன்றே குலம் ஒருவனே தேவன் - இதுதான் தவ்ஹீத் ஜமாஅத் இந்த உலகத்திற்கு சொல்லும் செய்தி....

தவ்ஹீத் ஜமாஅத் கார் பறிமுதல் உண்மை நிலை என்ன ? ( கள்ள நோட்டு கடத்தி வரப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியின் கார் பறிமுதல் )



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகியின் கார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அனைத்து மாலை பத்திரிக்கைகளும் கள்ள நோட்டு கடத்தி வரப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியின் கார் பறிமுதல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
வெறும் வாயிக்கு சோழ பொறி கிடைத்தாற்போல் தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகளுக்கு இந்த செய்தி லட்டு மாதிரி கிடைத்ததாக நினைத்து முகநூல் முழுவதும் பரப்பி புழங்காகிதம் அடைந்தனர்.
இவையனைத்தும் இன்று நடந்தது.
கேள்விப்பட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் இந்த செய்தியின் உண்மைநிலை அறியாமல் பரப்பியவர்கள் பொய்யர்கள் என்பதை கூறிக்கொண்டு அந்த செய்தியின் உண்மை தகவலுக்கு வருகிறோம்.
புதுக்கோட்டை மாவட்ட TNTJ நிர்வாகியின் காரை மதுரையிலுள்ள மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு செல்வதாக கூறி காரை இரவலாக வாங்கியுள்ளனர்.
ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் பரபரப்பான சூழலிலும் மனிதநேய அடிப்படையில் காரை நோயாளிக்காக கொடுத்தார் TNTJ மாவட்ட நிர்வாகி,
இதுதான் நடந்த சம்பவம், இந்த சம்பவத்திற்கும் TNTJ வுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை,
சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் கும்பகோணத்தில் TNTJ நடத்திய முதல் மாநில மாநாட்டின் போதும் அன்றைய தினம் ரயில் நிலையத்தை தகர்க்க TNTJ சதி என்று அன்றைய மாநில துணைப்பொதுச்செயலாளர் A.S.அலாவுதீன் கடிதம் எழுதியதாக சன் டீவி பொய் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ?
அந்த சம்பவத்தை வைத்து அவதூறு பரப்பினார்கள் நினைவிருக்கிறதா ?
அதேப்போன்று இந்த சம்பவத்தையும் வைத்து மாநாட்டை சீர்குலைக்க அயோக்கியர்கள் முகநூலில் அவதூறு பரப்புகிறார்கள்.
அயோக்கியர்களின் அவதூறை அடுத்த சில மணிநேரத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தவிடு பொடியாக்கி அயோக்கியர்களின்முகத்தை தலைகுனிய வைத்து விட்டான்.
யா ரப்பே நீயே நீதியாளன் !!

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டைத் தடுக்க முடியாது – நியாயத் தீர்ப்பு வழங்கிய சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெறவிருக்கும் எதிர் வரும் ஜன 31 ஷிர்க் ஒழிப்பு  மாநாட்டை தடை விதிக்கக் கோரி தர்கா ஜமாஅத் மற்றும் இந்து மகா சபை சார்பில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இரு உயர்நீதிமன்ற நீதிபதிகளும் முஸ்லிம்களின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடை செய்ய இயலாது எனவும் தடை கோரிய மனுவை டிஸ்மிஸ் செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பால் முஸ்லிம்கள் மிகுந்த மகிழ்ச்சியும் மாநாட்டுக்குச் செல்லும் குதூகலத்துடன் இருக்கின்றனர்.
இதே செய்தியை நமது மலரில் கடந்த 5 நாட்களுக்கு முன்னரெ சொன்னதை நினைவு படுத்துகிறோம்.எமது கூற்றை உண்மைப்படுத்திய சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி.

Thursday, 28 January 2016

ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் பெறலாம்: விதிகளை தளர்த்தியது மத்திய அரசு




விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்களாக இருந்தது. 2014-ல் 42 நாட்களாகவும் 2015-ல் 21 நாட்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதற்கான நோட்டரி அபிடவிட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் எண் அட்டை ஆகிய 4 ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பாஸ்போர்ட் பெறலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் வழங்கிய பிறகு வழக்கமான போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய நடைமுறை குறித்து சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராகேஷ் அகர்வால் கூறியபோது, இனிமேல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். ஒருவேளை ஆதார்- வாக்காளர்- பான் அடையாள அட்டைகள் இல்லை என்றால் வழக்கமான போலீஸ் விசாரணை நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்

ஷிர்க் ஒழிப்பு மாநாடு தடை கோரிய மனு – தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெற இருந்தது,  அம்மாநாட்டை தடுத்து நிறுத்த நீதிமன்றத்தில் ஒற்றுமையை விரும்பாத சிலரால் வழக்கு கொடுக்கப்பட்டது.  
வழக்கை விசாரித்த நீதிபதி,
* இம்மாநாடு மத துவேசத்தையோ, மத கலவரத்தை தூன்டும் விதமாகவோ நஞைபெற கூடிய மாநாடு அல்ல.
* சில இஸ்லாமியர்களிடத்திலே இருக்க கூடிய பினவழிபாடு, தர்கா, தகடு போன்ற மூட நம்பிக்கைகளை விட்டு விலக்குவதற்க்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார் .
* இம்மாநாட்டில் முழுக்க முழுக்க முஸ்லிம்களின் இணைவைப்பு காரியங்களையும்,  அவர்களின் அறியாமை செயல்களையும் விளக்குவதற்க்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்த மாநாட்டை தடை செய்ய இயலாது என மதுரை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தவ்ஹீத் ஜமாத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
* மாநாட்டை எதிர்த்த சிலருக்கு கண்ணத்தில் அரைந்தார்போல் இத்தீர்ப்பு உள்ளது.


Wednesday, 27 January 2016

குழந்தைகளை தாக்கும் ஜிக்கா வைரஸ்: இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்



புதுடெல்லி: கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் ஜிக்கா எனும் கொடிய வைரஸ் நோய் 25 நாடுகளில் பரவி இருப்பதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசு மூலமே ஜிக்கா கிருமிகளும் பரவுகிறது. கனடாவை தவிர அமெரிக்க கண்டத்தில் அனைத்து நாடுகளிலும் இது கிருமியின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கர்ப்பிணி தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தையின் தலை சிறியதாக காணப்படும் என்றும் மரபணு மற்றும் நரம்பியல் உள்ளிட்ட நோய்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு உருவாகும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரேசில் உள்ளிட்ட 25 நாடுகளில் இந்த கொடிய வைரஸ் பரவி இருக்கிறது.
இந்த நோய்க்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை இந்தியாவில் துறை ஜிக்கா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசு மூலம் ஜிக்கா வைரசும் பரவும் என்பதால் இந்த கொசுக்கள் அதிகம் காணப்படும் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜிக்கா வைரஸை கண்டறிவதற்கான ஆய்வக கருவிகளை தயார் நிலையில் வைக்க மத்திய அரசு உத்தரவிட்-டுள்ளது. மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஆய்வகமும் தயார் நிலையில் உள்ளது. துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் சுகாதாரக் குழுவினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

தர்க்காக்களை இடிக்கச் சொல்வது ஏன்? ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடக்குமா? தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பேட்டி



தமிழ்நாட்டின் திருச்சியில் வரும் 31 ஆம் தேதியன்று மாநில அளவிலான ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ ஒன்றை நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இறைவன் ஒருவனே என்கிற முழக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ நடத்த தடை விதிக்க வேண்டுமென, தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும், அதன் அமைப்பாளரான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைவர் பக்கிர் முஹம்மத் இந்த மாநாட்டை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கு அவர் தரப்பின் பதில் என்ன என்பது குறித்தும், தமிழ்நாட்டின் தர்காக்களை இடிக்கச் சொல்லி தாங்கள் பிரச்சாரம் மேற்கொள்வது ஏன் என்பது குறித்தும் விரிவாக விளக்கியிருக்கிறார்.
அவரது செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.


ஷிர்க் ஒழிப்பு மாநாடு சிறப்பு இரத்ததானம் முகாம்



குடியரசு தினத்தன்று மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மானில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.
* எங்களுக்கு தேசிய கொடியை சட்டையில் குத்திக்கொண்டு தேசபக்தியை நிரூபிக்க தெரியாது.
* சினிமா தியேட்டரில் போடப்படும் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று தேசபக்தியை நிரூபிக்க தெரியாது.
சுதந்திரத்திற்கு முன்பு இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்தினோம். சுதந்திரத்திற்கு பிறகும் இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்துகிறோம். இயற்க்கை பேரிடரால் தேசத்தின் மக்கள் பாதிக்கப்படும்போது உடலாலும், பொருளாலும் எங்களின் சக்திக்கும் மீறி சாதி மதம் பாராமல் உதவி செய்கிறோம்.
தேச மக்களின் நலன் காக்க தீவிரமாக இருப்பதனால் தானோ என்னவோ எங்களுக்கு "தீவிரவாதிகள்" என்கிற பட்டம் தந்து மகிழ்கிறார்கள் ஆட்சியாளர்களும், ஊடகவியளார்களும்.

பாகிஸ்தானில் 4 லட்சம் ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.....



பாகிஸ்தானில் 4 லட்சம் ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் இதற்கான தடை உத்தரவைபிறப்பித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் தொலை தொடர்பு ஆணையம் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  பாகிஸ்தான் இளைஞர்கள் இணையத்தில் பரவும் இதுபோன்ற ஆபாச தளங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பாலியல் குற்றங்களுக்கு தூண்டப்படுகின்றனர். எனவே இதுபோன்று ஆபாச தளங்களை தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு பஸ்களில் பொருத்தியாச்சு கேமரா… சில்மிஷ ஆசாமிகளுக்கு ‘செக்’




சென்னையில் அரசு பஸ் பயணம் என்றாலே மக்களுக்கு ஒரு திகல் பயணமாகவே இருப்பதாக பயணிகள் தரப்பில் சொல்கிறார்கள். ஏனெனில் நிறைமாத கர்ப்பிணி போல கூட்ட நெரிசலில் சிக்கி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் பீக்அவர்ஸில் சொல்லவே வேண்டாம். பஸிசில் ஏறவே முடியாது. குறிப்பாக பெண்களின் நிலைமை அந்தோ பரிதாபம்.கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பிக்பாக்கெட் திருட்டு சம்பவங்கள், பெண்களைத் தொந்தரவு செய்யும் இடிமன்னர்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதைவிட பஸ்சில் ‘ரூட் தல’ பிரச்னையால் மோதல் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகம் நடக்கின்றன. கல்லூரி மாணவர்களுக்கு இடையே அரங்கேறும் இந்த ‘ரூட் தல’ பிரச்னையில் புத்தகம் ஏந்தும் கைகளில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அலையும் நிலைக்கு சில மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதோடு கண்டக்டர், டிரைவர்களுடன் பயணிகளுக்கு இடையே மோதல் சம்பவங்களும் நடக்கின்றன. இதுபோன்று அரசு பஸ் பயணத்தின் போது நடைபெறும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழகத்திலிருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அயனாவரத்திலிருந்து பெசன்ட்நகர் செல்லும் பஸ் (வழித்தடம் எண் 23சி), அடையாறிலிருந்து தரமணி செல்லும் பஸ் (5சி) மற்றும் பிராட்வேயிலிருந்து பூந்தமல்லி செல்லும் அரசு பஸ் ஆகியவை உள்பட 20 பஸ்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்களில்தான் அதிகளவில் பிரச்னை இருந்து வந்தன என்பதால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இதுகுறித்து சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழக வட்டாரங்கள் கூறுகையில், “சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 806 வழித்தடங்களில் 3,798 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். பயணிகள் தரப்பிலிருந்து நாள் தோறும் எங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் தொடர்பான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதைத்தடுக்க பிரச்னைக்குரிய வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளன. டிரைவரின் சீட்டின் பின் புறத்திலும், பஸ்சில் கடைசி இருக்கையிலும், பஸ்சின் இரண்டு நுழைவு வாயில்கள் என ஒரு பஸ்சில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைகள் மூலம் பஸ்சுக்குள் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் ஓரளவு பார்க்க முடியும். பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டால் கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகள் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும். தொடர்ந்து அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.


Tuesday, 26 January 2016

புறக்கணிக்கப்பட்ட தமிழிசை அக்கா!




இன்று குடியரசு தினம். வழக்கமாக குடியரசு தினத்தில் வீர தீரச்செயல் புரிந்த 4 பேருக்கு அவர்களின் வீரத்தைப் பாராட்டி வருடா வருடம் தமிழக அரசின் உயரிய விருதான அண்ணா விருது சாகசம் புரிந்த 4 பேருக்கு வழங்கப்படுவது வழக்கம்.
சென்ற டிசம்பர் மாதம் சென்னையில் மழைவெள்ளத்தில் தத்தளித்த சகோதரி.சித்ரா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை மீட்டு காப்பாற்றிய சகோ.யூனுஸ் உள்ளிட்ட 4 பேர்களுக்கு இன்றைக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.
ஆனால் இவர்களையெல்லாம் விட தன் உயிரைப் பணயம் வைத்து ஈக்காட்டுத்தாங்கலில் காலை 6 மணிக்கு என் உதவி யாருக்காவது வேண்டுமா? என்று வெங்கலக்குரலில் கத்திக் கொண்டே சென்று அங்கே ஒரு கர்ப்பிணிப் பெண் எவ்வித ஆதரவும் இன்றி தத்தளித்தவரை அவசரமாக ஒரு படகில் ஏற்றி அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்துக் காப்பாற்றி அவருக்கு பிரசவமும் பார்த்து அந்தக் குழந்தைக்கு தமிழிசை என்று பெயரும் வைத்த ஒரு வரலாற்று சம்பவம் நிகழ்ந்துள்ளதை தமிழக அரசு கண்டு கொள்ளாதது ஏனோ?
அதுமட்டுமின்றி இப்போது அந்தக் குழந்தையை தமிழிசை அவர்கள் தன் சொந்த செலவில் ரஷ்யாவிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க வைத்துள்ள செய்திகளும் பிபிசி தமிழோசையில் வந்ததைக் கூட கண்டு கொள்ளாமல் இவ்வருட அண்ணா விருது பட்டியலில் அக்கா. தமிழிசையை சேர்க்காதது வருத்தத்தை தருகின்றது.
எனவே இதுபற்றி நடுநிலை ஊடகவியலாளர் நீதிமான் பாண்டே அவர்கள் தந்தி டிவி வாயிலாக அக்காவைப் பேட்டி எடுத்து தமிழக அரசின் புறக்கணிப்பை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

பெண்ணியவாதிகளுக்கு .!!



முதல் படம் : மகாராஷ்டிர மாநிலம் அஹமத் நகரில் உள்ள சனி பகவான் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (26.01.2016) கோவில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளனர்.
இரண்டாவது படம் : 200 கோடி முஸ்லிம்களின் புனித தளமான மக்காவின் உள்ளே முஸ்லிம் பெண்கள். இது பெண்கள் போராடி பெற்ற அனுமதியில்லை. 1450 வருடங்களுக்கு முன்பாக நபிகள் நாயகம் காலத்திலேயே வழங்கப்பட்ட அனுமதி.
அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துது அவ்வளவு தான் - பெண்ணியவாதிகள்

தேர்தல் நாடகமா ? TMMK, PFI, முஸ்லிம் லீக் சகோதரர்களின் கவனத்திற்கு.....!! 




அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலைநாட்டும் விதமாக நடத்தப்படும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை கொச்சைப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றிய ஜமாஅத்துல் உலமா சபையின் கூற்றுக்கு உரிய பதிலை முகநூல் முஸ்லிம் மீடியா சார்பாக நேற்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்த பதிவு தமுமுக, PFI, முஸ்லிம் லீக் சகோதரர்களுக்காக வெளியிடப்படுகிறது.
பொதுவாக எந்த ஒரு இயக்கமும் மாநாடு அறிவித்தால் மாநாட்டை தான் பிரம்மாண்டமாக நடத்துவார்கள். ஆனால் TNTJ நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு தொடர்பாக கடந்த இரண்டு மாதமாக தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள், சிறுமிகள் என்று ஒட்டுமொத்த நிர்வாகமும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் எதற்கு ? என்றும் ஷிர்க் என்றால் என்னவென்றும், எதற்காக ஷிர்கை ஒழிக்க வேண்டுமென்றும் மிக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்களே....
இதுவெல்லாம் எதற்காக என்று சிந்தித்தீர்களா ?
இதற்கெல்லாம் TNTJ தலைமை சம்பளம் கொடுக்கும் என்று நினைக்கிறீர்களா ? 
எந்தவித சம்பளமும் இல்லாமல், இரவு பகல் பாராமல், வெயிலிலும், மழையிலும், குளிரிலும், தூக்கமிழந்து, பசியை இழந்து வீதி வீதியாக, தெரு தெருவாக, வீடு வீடாக கதவை தட்டி ஷிர்கை பற்றி பிரச்சாரம் செய்யும் நோக்கம் என்னவென்று தெரியுமா ?
யார் ஷிர்க் வைக்கிறாரோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தை தடை செய்து விட்டதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான், நம்முடைய உறவுகள் நரகம் சென்று விடக்கூடாது, அவர்களை சொர்க்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக....
அடி, உதை, வெட்டு, குத்து, இரத்தம் சிந்தி, ஊர் நீக்கம் செய்யப்பட்டும், ஜனாஸாவை அடக்க மறுத்தும் நீங்கள் நரகத்திற்கு போய் விடக்கூடாது, நமக்கு கிடைத்த தூய இஸ்லாம் நம் உறவுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தான்....
இரத்தம் சொட்ட சொட்ட அடி வாங்கியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்த மூன்றாவது நாளில் மீண்டும் மார்க்கத்தை சொல்ல புறப்பட்டுள்ள தவ்ஹீத் சகோதரரை பாருங்கள், உடல் ஊனமுற்ற நிலையிலும் ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தவ்ஹீத் சகோதரரை பாருங்கள்.
வீடு வீடாக கதவை கட்டி நம் சகோதரிகளுக்கு ஷிர்கை பற்றி போதிக்கும் தவ்ஹீத் சகோதரிகளை பாருங்கள்...
இவ்வளவு மக்களின் தியாகத்தையும் ஒரே வார்த்தையில் தேர்தல் நாடகம் என்று கொச்சைப்படுத்துகிறீர்கள்.
தமிழகத்திலுள்ள முஸ்லிம் இயக்கங்களில் தேர்தலில் போட்டியிடாத ஒரே தூய்மையான இயக்கம் TNTJ மட்டுமே, மீதமுள்ள அனைத்து இயக்கங்களும் தேர்தல் அரசியலில் போட்டியிடக்கூடிய அரசியல் கட்சிகளாக மாறி விட்டன.
தேர்தலில் போட்டியேயிடாத TNTJ மாநாடு நடத்தினால் தேர்தலுக்காக நடத்தப்படும் மாநாடு என்று மனசாட்சியே இல்லாமல் எழுதுகிறீர்களே அப்படியென்றால்.... 
தேர்தலில் போட்டியிடக்கூடிய தமுமுகவும், PFI யும் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் சிறைவாசிகள் விடுதலைக்காக போராட்டம் அறிவித்துள்ளதே....
இந்த போராட்டமும் தேர்தல் நாடகமா ? தேர்தல் நாடகம் இல்லையென்றால் கடந்த 5 ஆண்டுகளில் சிறைவாசிகளின் விடுதலைக்காக எத்தனை முறை போராட்டம் நடத்தியுள்ளீர்கள் ?
தேர்தல் வாடையே படாத TNTJ மாநாடு நடத்தினால் அது தேர்தல் நாடகம் என்று சொல்லும் நீங்கள், தேர்தலில் போட்டியிடும் உங்களது இயக்கங்கள் நடத்தக்கூடிய போராட்டங்கள் தேர்தல் நாடகம் என்று நாங்கள் சொல்லலாமா ?
இப்பொழுதும் நம்புகிறோம் ஷிர்கை ஆதரிக்கக்கூடிய 90 சதவீத மக்கள் ஷிர்க்கின் விபரீதம் புரியாமல் தர்கா, மௌலூது போன்றவைகள் மார்க்கத்தில் உள்ளது என்ற நம்பிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மார்க்கம் முழுமையடைந்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பிறகு மனிதர்களால் சுயநலனுக்காக வியாபார ரீதியாக உருவாக்கப்பட்டதே தர்கா வழிபாடும், மௌலூதுகளும்....
தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினர்களாக உள்ள 95 சதவீத உறுப்பினர்கள் தவ்ஹீத் ஜமாஅத் தந்தைக்கு பிறந்தவர்கள் அல்ல, சுன்னத் ஜமாஅத் தந்தைக்கு பிறந்து தர்கா வழிபாடு, மௌலூது போன்ற அனைத்து ஷிர்கிலும் ஈடுபட்டு பின்னர் மார்க்கத்தை விளங்கி தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சென்றவர்கள் தான் 95 சதவீத உறுப்பினர்கள். 
சுன்னத் ஜமாஅத், ஜமாஅத்துல் உலமா சபை, தமுமுக, PFI, SDPI, முஸ்லிம்லீக் என்று ஒட்டுமொத்த சமூகமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டு நடத்தும் இம்மாநாடு ஓர் இறைக்கொள்கையை நிலைநாட்டுவதற்காக என்பதை புரிந்து கொள்ளுங்கள்....
https://m.facebook.com/story.php?story_fbid=586048378220983&substory_index=0&id=318795831612907

வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய முஸ்லிம் சகோதரருக்கு விருது



சென்னை மழைவெள்ளத்தின்போது சகோதரர் முஹம்மது யூனுஸ் செய்த அரிய சேவையை உலகமே பாராட்டியது. கடும் மழையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு இந்து சகோதரியைக் காப்பாற்றினார்.அந்த அரிய சேவையை மதித்துப் போற்றும் வகையில்  இன்று குடியரசு தின விழாவில், வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா யூனுஸ் அவர்களுக்கு வழங்கினார்.

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை




இந்திய குடியரசு தினமான இன்று காலை அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுகொண்டிருக்கும் பொது  B.sc Cmputer Science படிக்கும் முதல் வருட மாணவி தூக்கில் தொங்கியபடி
உயிரிழந்து இருந்தார்...
இதனை தொடர்ந்து கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது..
கல்லூரி முதல்வர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அதிரை காவல் ஆய்வாளர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்...
எந்த காரணமும் இல்லாமல் ஒரு மாணவி தூக்கில் தொங்கியது மர்மாக இருப்பதால் இது தற்கொலையா இல்லை கொலையா என பலரால் சந்தேகிக்கப்படுகிறது...
இதனால் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி வருகிற ஞாயிறு அன்று துவக்கப்படும் எனவும் அதுவரை கல்லூரி விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது...

Monday, 25 January 2016

நாங்கள் இந்தக் கல்லூரியில் படித்ததை விட வேலை பார்த்ததே அதிகம்.


நாங்கள் இந்தக் கல்லூரியில் படித்ததை விட வேலை பார்த்ததே அதிகம். இதுவரை 2வது வருடம் கூட பாஸ் ஆகவில்லை. ஆனால் அதற்குள் ரூ. 6 லட்சம் வரை பீஸ் வாங்கி விட்டனர்.
இந்தக் கல்லூரி மீது இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்கொலை செய்து கொள்கிறோம்
என்று தற்கொலை செய்து கொண்ட விழுப்புரம் மாவட்டம் எஸ்.விஎஸ். நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரும் கடிதம் எழுதி வைத்துள்ளனர்.
அதில் அவர்கள் எழுதியிருப்பது
சரண்யா, மோனிஷா, பிரியங்கா. நாங்க svs naturopathy medical college-ல் படிக்கிறோம்.
இந்த காலேஜ்ல நிறைய fees வாங்குறாங்க. கட்டுன எந்த fees-க்கும் பில் தர மாட்டேங்குறாங்க. கோச்சிங் இல்லை கோச்சிங் இல்லை இந்த காலேஜ்ல் பீஸ் வாங்குற அளவுக்கு coaching இல்லை.
staffs யாரும் இல்லை. இதை நிறையப் பேர் complaint பண்ணியும் எந்த step-ம் எடுக்கலை. படித்ததை விட வேலை பார்த்ததே அதிகம் படித்ததை விட வேலை பார்த்ததே அதிகம்...
இங்கு படிக்கிறதுனால எங்களுக்கும், எங்க வீட்டுக்கும் stress அதிகமாயிட்டே இருக்கு.
‪#‎கிரிமினல்_எனத்_திட்டும்_சேர்மன்_வாசுகி‬
இந்த காலேஜ் சேர்மன் வாசுகி அவர்கள் இங்கு படிக்கும் மாணவர்களை criminal என்று சொல்லித் திட்டுவார்கள்.
இந்த காலேஜ்ல நாங்க நிறைய கஷ்டப்பட்டிருக்கோம். இனிமேலாவது இந்த காலேஜ் மேல ஆக்ஷன் எடுங்க.
இனியாவது நடவடிக்கை எடுங்க இந்தக் காரணத்தால நாங்க தற்கொலை பண்ணிக்கிறோம்.
ஆனால் இதை chairman வாசுகி நாங்க 3 பேரும் charector lessன்னு சொல்லுவாங்க. நாங்க தற்கொலை பண்ணிக்கிறதே இந்த காலேஜ் மேல ஆக்ஷன் எடுக்கனும்தான்.
தயவு செஞ்சு அவங்க எங்களைப் பத்தி தப்பா சொன்னா நம்பிடாதீங்க. சுய நினைவுடன் சுய நினைவுடன் நாங்க இதுவரைக்கும் II year இயர் பாஸ் பண்ணல.
ஆனால் இதுவரைக்கும் 6 lakhs பீஸ் வாங்கிருக்காங்க. இதை நாங்கள் சுய நினைவுடன் எழுதிக் கொள்கிறோம் என்று கூறி மூன்று பேரும் கையெழுத்திடுள்ளனர்

சீமான் அறைகூவலை ஏற்றது TNTJ : விவாதத்திற்கு தயார் - TNTJ அதிரடி அறிவிப்பு.....!!


எந்த மதத்தின் நூல்களையும் விட திருக்குறளே உலக பொதுமறை என்றும் இதற்காக தாம் எந்த மதத்தினருடனும் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பகிரங்க அறைகூவல் விடுத்திருந்தார்.
சீமானின் அறைகூவலை ஏற்று விவாதத்திற்கு தாம் தயாராக இருப்பதாகவும், திருக்குறளில் நல்ல கருத்துக்கள் இருப்பதுப்போல் காலத்துக்கு ஒவ்வாத, அறிவுக்கு பொருந்தாத, நடைமுறைப்படுத்தமுடியாத, சீமானே எதிர்க்கிற பல்வேறு கருத்துக்கள் அடங்கியுள்ளதை தக்க ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக சீமானுக்கு விவாதத்திற்கான ஒப்பந்தம் போடுவதற்கு TNTJ அழைப்பு விடுத்துள்ளது.
TNTJ யின் அறிவிப்பை ஏற்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விவாதத்திற்கு முன் வர வேண்டும்.
கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுடன் விவாதம் செய்து வெற்றி, கிறித்தவர்களுடன் விவாதம் செய்து வெற்றி, இந்து முன்னணிக்கு விவாதத்திற்கு அழைப்பு விடுத்து TNTJ நிறுவனர் பி.ஜைனுல் ஆபிதீன் விவாதத்திற்கு வருவார் என்றால் தாம் விவாதத்திற்கு வரமாட்டேன் என்று இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலனை தலைதெறிக்க ஓட விட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சீமானின் அறைகூவலை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரதட்சனை வாங்கமாட்டொம்! 3500 ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் சபதம்

January 25, 2016
 

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் கைக்கூலி கைவிட்டோர் சங்கம் 31 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இக்கழகத்தின் மூலம் வரதட்சனைக்குஎதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இக்கல்லூரியை சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரதட்சனை வாங்கமாட்டோம் என்று தங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.
கழகத்தின் தலைவர் நூர்தீன், செயலர் மோரிஸ் முஹம்மது அஸ்லம், பொருளாலர் அமீர் சொஹைல், உதவும் இதயங்கள் செயலர் ஜஹபர் சாதிக் ராஜா ஆகியோர் தலைமையில் கடந்த 12 மற்று 22ஆம் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு ஒரே வழி – அவசியம் படிங்கள்



முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு தேர்தலை முன்னிட்டு போராடுவதால் ஏற்படும் இழப்பு:
போராட்டத்திற்காக மக்களின் நிதி , உழைப்பு அனைத்தும் வீனாகும்.அதையும் தாண்டி போராடினால் அரசியல்வாதிகள் தேர்தலை முன்னிட்டு விடுதலை செய்வதால் அரசுக்கு சாதகத்தை விட பாதகமே மிஞ்சும்.
இப்போது சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டால் ஆளுங்கட்சிக்கு எதிராக இந்துத்துவா வேலை பார்க்கும் என்பதால் ஆளுங்கட்சி தற்போது விடுதலை செய்ய எத்தனிக்கமாட்டார்கள்.
அதற்கு பதிலாக தேர்தல் முடிந்த பின் யார் ஆட்சியில் அமர்கிறார்களோ அந்த துவக்கத்தில் போராட்டம் நடத்தினால் அதில் விடுதலைக்கு 100 சதம் சாதகம் உள்ளது.
1. ஆட்சியாளர்கள் விடுதலை செய்ய ஆணையிடுவார்கள்.
2.எதிர்கட்சி தரப்பில் என்னதான் எதிர்ப்பு வந்தாலும் அது பாராளுமன்ற தேர்தல் வரை எதிர்கட்சிகள் ஞாபகம் வைத்திருக்காது.
எனவே சிறைவாசிகளின் விடுதலைக்குப் போராடுபவர்கள் கவனமாக செயல்படுங்கள்தேர்தல் நேரத்தில் போராட்டத்தை நடத்தி இயக்கத்தை வளர்ப்பதைவிட தேர்தல் முடிந்த உடன் போராட்டம் நடத்தி சிறைவாசிகளை மீட்டெடுங்கள்

தமிழக சட்டப் பேரவைக்கு மே8ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு



புதுதில்லி,

 தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்கள், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின்சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமைதேர்தல் ஆணையர் திரு பி பி டாண்டன் புதுதில்லியில் இன்று மாலை செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
 தமிழகத் தேர்தல்
 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே மாதம் 8�ம் தேதி நடைபெறும். சட்டப் பேரவைக்கானஅனைத்து 234 தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 
 தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் அட்டவணை வருமாறு:
 தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் நாள் : ஏப்ரல் 13
 வேட்பு மனு தாக்கல் துவக்கம் : ஏப்ரல் 13
 வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் : ஏப்ரல் 20
 வேட்பு மனு பரிசீலனை : ஏப்ரல் 21
 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் : ஏப்ரல் 24
 வாக்குப் பதிவு நடைபெறும் நாள் : மே 8
 வாக்கு எண்ணிக்கை : மே 11
 தேர்தல் நடைமுறை முடிவடைய கடைசி நாள் : மே 20

முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது – அதிமுக திட்டவட்டம்





தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நூற்றாண்டையொட்டி தமிழக சிறைகளில் 10ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலைச் செய்ய கோரி தமுமுக , எஸ்டிபிஐ உள்ளிட்ட பல கட்சிகள் ஆர்ப்பாட்டக்களத்தை அறிவித்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புடனும் பொருட்செலவுடனும் நடைபெறவிருக்கும் இப்போராட்டத்திற்கு நீதி கிடைக்குமா ?
கிடைக்கவே கிடைக்காது என்று பதிலை படிக்கும் போது சற்று நிதானமாக அதற்கான சான்றுகளையும் கவனியுங்கள்.
1.அதிமுக கைவிரிக்கும்
சிறைவாசிகள் விடுதலை தமுமுகவுக்கு புதுசல்ல.இதே போராட்டத்தை கடந்த 2005 ல் அதிமுக ஆட்சியில் தேர்தல் நேரத்தில் போராடியது – விளைவு ஏமாற்றம்.
2.திமுகவும் கைவிரிக்கும்
அதிமுக இப்படியென்றால் திமுகாவாவது சிறைவாசிகளை விடுவித்ததா என்றால் 2006ல் ஆட்சியைப் பிடித்த திமுகவும் அதை செய்யவில்லை. – விளைவு ஏமாற்றம்.
எதிர்காலத்தில் எப்படி ?
சிறைவாசிகளை விடுவித்தால் பாஜக தரப்பு இதை பெரிய பிரச்சனையாக்கும் என்பதால் அதிமுக வாய்மூடும்.
திமுகவைப் பொருத்தவரை சிறைவாசிகளை விடுவிப்பதாக இருந்தால் ஆட்சிக்கு வரவேண்டும் .ஆட்சிக்கு வந்தாலும் சாந்தன் , முருகன் உள்ளிட்டவர்களை விடுவித்தால் மட்டுமே முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க இயலும்.ஆனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாவதால் சாந்தனும் வெளியேறப்போவதில்லை. முஸ்லிம் சிறைவாசிகளும் வெளியேறப்போவதில்லை.
அப்ப சிறைவாசிகளின் விடுதலை என்னதான் வழி ?
ஒரே வழி இருக்கு அதை நாளை சொல்கிறோம்.யோசித்து செயல்படுங்கள்.

Sunday, 24 January 2016

சவூதியில் தமிழக சமூக நல அமைப்பின் சார்பில் கருத்தரங்கம்( SDPI )




தம்மாம்.சவூதி அரேபியா - கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி தெஹலான் பாகவிவிக்கு இந்தியன் சோஷியல் ஃபோரம் - தமிழ் கமிட்டி சார்பில்  வரவேற்பு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தம்மாம் பகுதியிலும் கருத்தரங்கம் நடைபெற்றது.14-ஜனவரி, 2016 அன்று இரவு 8:30 மணிக்கு அல் கோபர் - ரஃபா மெடிக்கல் சென்டர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தமிழக தலைவர் காயல் அபூபக்கர் தலைமை வகித்தார்.இந்த நிகழ்ச்சியை இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தமிழக பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா தொகுத்து வழங்கினார்.தம்மாம் கிளைத் தலைவர் நல்லூர் சைபுல்லாஹ்  வரவேற்புரை நிகழ்த்தினார்.தொடர்ந்து கிழக்கு மாகாணத் துணைத் தலைவர் மௌலவி இக்பால் மன்பஈ அறிமுக உரை ஆற்றினார். மாநிலத் தலைவர் மௌலவி தெஹலான் பாகவிக்கு தம்மாம், கோபர், சிஹாத், ஜூபைல், அல்ஹஸா கிளைகளின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்கள்.நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் சோசியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய தலைவர் .வசீம்(கர்நாடகா)மற்றும் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் தலைவர்  சாதிக் மீரான் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் மௌலவி தெஹ்லான் பாகவி  'நிமிர்ந்து நில், மண்டியிடாதே!' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.அவர் தமது உரையில் இந்திய தேசிய அளவில் கட்சியின் அவசியத்தையும் அது முன்னெடுத்துச் செல்லும் நேர்மறை அரசியலையும், சமகால அளவில் அனைத்து சமூகத்தினருக்குமான பொதுவான பிரச்சனைகளை அணுகும் முறைகளையும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாநிலங்களுக்கான தலைவர் வசீம்  தலைவருக்கு நினைவுப் பரிசினை வழங்கி கவுரவித்தார்.அல்கோபர் கிளைத் தலைவர் அதிரை அபுபக்கர்  நன்றியுரை கூறினார்.நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday, 23 January 2016

சீட் மாறி அமர்ந்ததில் தகராறு : 70 பயணிகளை இறக்கி விட்டு சென்றது விமானம்




ஹைதராபாத்: ராய்ப்பூர் செல்லும் விமானத்தில் குழுவாக வந்த 70 பயணிகள் இருக்கைகளில் இஷ்டத்துக்கு அமர்ந்ததால் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். ஐதராபாத் ராஜிவ்காந்தி விமானநிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர், செல்வதற்காக இன்டிகோ விமானம் தயாராக இருந்தது. அதில் ஒரே குழுவாக டிக்கெட் எடுத்திருந்த 70 பயணிகள் ஏறினர்.
அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல், இஷ்டத்துக்கு இருக்கையை மாற்றிக் கொண்டனர். அவரவருக்கு ஒதுக்கிய சீட்டில் அமரும்படி விமான ஊழியர்கள் கூறினர். ஆனால் குழுவாக வந்திருந்த 70 பயணிகள் கேட்காமல் விமான ஊழியர்களுடன் தகராறு செய்தனர். ஒருவர் தனது பையால் விமான ஊழியரை தாக்க முயன்றுள்ளார். இதுகுறித்து உடனடியாக விமான நிலையத்தில் இருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீசாருடன் வந்து, குழுவாக ஏறிய 70 பயணிகளையும் விமானத்தை விட்டு இறக்கினர்.
அதன்பின் அந்த விமானம் ராய்ப்பூர் புறப்பட்டு சென்றது. ஆனால் சோதனையை முடித்து விமானத்தில் ஏற்றப்பட்ட அவர்களின் லக்கேஜ்கள் விமானத்தில் இருந்து இறக்கப்படவில்லை. இது குறித்து விமானநிலைய போலீசாரிடம் குழுவாக வந்திருந்த 70 பயணிகள் புகார் செய்தனர். அதில், விமானத்தின் ஊழியர்களால் தாங்கள்  அலைக்கழிக்கப்பட்டதாகவும், தங்களது உடமைகளை ஒப்படைக்காமல் விமானம்  புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இன்டிகோ நிறுவனம் விடுத்துள்ள செய்தியில், ‘‘முறைகேடாக நடந்து கொண்டதால், 70 பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். விமான பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு பயணிகளை, நிலைய ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதனை ஏற்க மறுத்து கூச்சலிட்டதோடு விமான பணியாளர்களை அவர்கள் மிரட்டி தாக்க முயன்றனர். அவர்களை இறக்கிவிடும்படி  மற்ற பயணிகளும் கூறியதால், குழுவாக வந்த 70 பேரையும் இறக்கிவிட்டோம்.’’ என கூறியுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் ஜவாஹிருல்லா, அஸ்லம்பாஷா கட்சியில் இருந்து நீக்கம் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி பேட்டி

ஜனவரி 23,2016, 11:56 PM


சென்னை,
மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் ஜவாருல்லா, அஸ்லம் பாஷா நீக்கப்பட்டுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.
செயற்குழு கூட்டம்
சென்னையில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில், தமீமுன் அன்சாரி உள்பட சிலரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஜவாருல்லா எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். ஆனால், தமீமுன் அன்சாரி அந்த உத்தரவு செல்லாது, என்னை நீக்குவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, போட்டி பொதுக்குழுவை கூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, இருவரும் மாறி மாறி மனிதநேய மக்கள் கட்சி பெயரில் அறிக்கைகள் வெளியிட்டு வந்தனர். இந்தநிலையில், நேற்று தமீமுன் அன்சாரி தலைமையில் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது.
கட்சி அலுவலகம் சூறை
இதற்கிடையில், மதியம் 1.30 மணியளவில் சென்னை புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் உள்ள தமீமுன் அன்சாரி கட்சி அலுவலகத்தில் 50 பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டது. அலுவலகத்தை சூறையாடிய பின்னர் தப்பி ஓடிவிட்டனர்.
ஜவாருல்லா தரப்பினர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அந்த அலுவலகம் உள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திருவல்லிக்கேணியில் நடந்த செயற்குழு கூட்டத்திலும் யாரும் தாக்குல் நடத்தாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போக்குவரத்தும் வேறு பாதைக்கு திருப்பிவிடப்பட்டது.
தமீமுன் அன்சாரி நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜவாருல்லா நீக்கம்
செயற்குழு கூட்டம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க தலைமை நிர்வாகத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும். எங்களுக்கு மதிப்பளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்.
கட்சியின் கட்டுக்கோப்புக்கும், சட்டவிதிகளுக்கும் எதிராக ஈடுபட்டு வந்த பேராசிரியர் ஜவாருல்லா எம்.எல்.ஏ.வையும், அவருடன் இணைந்து செயல்பட்ட அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ.வையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கடந்த மாதம் நீக்கியது. அதை இந்த செயற்குழு கூட்டம் ஒருமனதாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியது.
அலுவலகத்தில் தாக்குதல்
செயற்குழு கூட்டம் அமைதியாக நடைபெறுவதை ஜீரணிக்க முடியாத ஜவாருல்லா, தனது ஆதரவாளர்கள் 50 பேரை தூண்டிவிட்டு கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். வன்முறை மிரட்டலுக்கு துவண்டுவிட மாட்டேன்.
எங்களுடைய அரசியல் பணி ஜனநாயக வழியில் தொடர்ந்து நடைபெறும். எங்கள் கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு எந்த ஒரு ஆபத்து ஏற்பட்டாலும், அதற்கு முழு பொறுப்பு ஜவாருல்லா தான்.
இவ்வாறு அவர் கூறினார்

என்னை நீக்க தமீமுன் அன்சாரிக்கு எந்த தகுதியும் இல்லை ஜவாருல்லா எம்.எல்.ஏ. பேட்டி


ஜனவரி 23,2016, 11:58 PM


மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தமீமுன் அன்சாரி அறிவித்துள்ளது குறித்து ஜவாருல்லாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
எந்த தகுதியும் இல்லை
மனிதநேய மக்கள் கட்சியின் பெயரையோ, கட்சியின் கொடியையோ தமீமுன் அன்சாரி பயன்படுத்த எந்த தகுதியும் இல்லை. தமீமுன் அன்சாரி பதவிக்காலம் கடந்த ஆண்டோடு முடிந்துவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி நடைபெற்ற தலைமை பொதுக்குழு கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
கட்சியின் கட்டுப்பாடு, விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக 2 முறை அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
எனது தலைமையில்
தற்போது எனது தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி முழு கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. நாங்கள் தான் தொடர்ந்து கட்சி பெயரில் போராட்டம், பொதுக்குழு கூட்டம் நடத்தி இருக்கிறோம். வெறும் விளம்பரத்துக்காக இதை அவர் செய்கிறார். இவர்களுக்கு ஆதரவாளர்கள் யாரும் கிடையாது. இவர்களுக்கு மக்களிடமும் செல்வாக்கு இல்லை. என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த தகுதியும் அவருக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

மனித நேய மக்கள் கட்சி தமிமூன் அன்சாரி அலுவலகம் சூறை




சென்னை: மனித நேய மக்கள் கட்சியில் கோஷ்டிப் பூசலின் உச்சகட்டமாக சென்னையில் தமிமூன் அன்சாரியின் தலைமை அலுவலகத்தை இன்று மர்ம நபர்கள் சூறையாடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினர் அரசியல் நிலைப்பாட்டிற்காக ‘மனிதநேய மக்கள் கட்சி’ என்ற புதிய அரசியல் அமைப்பை கடந்த தேர்தலின் போது துவக்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றிபெற்றது.
கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது. இதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தில் இணைந்தது மமக. மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக மாறும் என்று வைகோ அறிவித்ததும், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
மூன்றாவது அணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறிய அவர், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரு கட்சி கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். இதனால் மனித நேய மக்கள் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும், பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு கட்சி இரண்டாக உடையும் சூழல் உருவாகியது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தமிமூன் அன்சாரி பிரிவின் அமைப்பு செயலாளர் தைமியா நேற்று தாக்குதலுக்கு ஆளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில், மனித நேயக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், ஜவாஹிருல்லாவை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, புதுப்பேட்டையில் உள்ள தமிமூன் அன்சாரியின் கட்சி அலுவலகத்தில் மர்மநபர்கள் புகுந்துத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு, ஜவாஹிருல்லாவின் ஆதரவாளர்கள் தான் காரணம் என்று, தமிமூன் அன்சாரியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, தமிமூன் அன்சாரி தரப்பினர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இரு அணியினரும் அடிக்கடி பிரச்சினையில் ஈடுபடுவது கட்சியின் வளர்ச்சி தடையாக உள்ளதாகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது கட்சியினரின் விருப்பமாக உள்ளது.


இந்திய முஸ்லிம்களுக்கு மகிழ்சியான செய்தி! வருகிறது இஸ்லாமிய வங்கி திட்டம்! நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

January 22, 2016
இஸ்லாமிய மார்க்கத்தில் வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் வட்டியை அடிப்படையாக வைத்து இயங்கும் வங்கிகளை விடுத்து தாங்களாக பண பரிவற்த்தனைகளை செய்கின்றனர். இதன் காரணமாக உலகிலேயே அதிக அளவில் இஸ்லாமிய மக்களை கொண்டுள்ள இந்தியாவின் வங்கிகளுக்கு பல்லாயிரக்கணக்கில் இழப்பு ஏற்படுகின்றது. இதனை எவ்வாறு சரிகட்டுவது என்பதை இந்திய வங்கிகள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வாணியம்பாடியை சேர்ந்த ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவர் ரிசெர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மேலதிகாரிகள் மற்றும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்க் ஆகியோரை சந்தித்து இஸ்லாமிய் வட்டியில்லா வங்கி திட்டம் குறித்து எடுத்துரைத்து அதனை அமல் செய்யுமாறு வலியுறுத்தினார்.
இதனை சில ஆண்டுகளாக பரிசீலித்து வந்த ரிசெர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது இது குறித்து அமல் படுத்தும் முனைப்பில் இஸ்லாமியர்களுக்கான வட்டியில்லா வங்கி சேவை திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இது குறித்து கடந்த டிசெம்பர் மாதம் 28 ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க RBI ஒரு ஈ-மெயில் ஐடி யை அறிமுகம் செய்துள்ளது. அதில் நீங்கள் உங்களுடைய கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது உங்களுக்கான வாய்ப்பு….உங்கள் கருத்தை தயங்காமல் கீழே உள்ள ஐடி க்கு மெயில் செய்யுங்கள்…
cgmincfidd@rbi.org.in
cmpfi@rbi.org.in
 இஸ்லாமிய வங்கி திட்ட குறித்த விரிவான தகவலுக்கு கீழே உள்ள் இணைய தள முகவரியை கிளிக் செய்யவும்
www.aaoifi.com

கிரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள் இதை படிங்க முதல்ல

தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடனும், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்படும்போதே நாவில் எச்சில் ஊறும். 

 தந்தூரி ரொட்டி, சிக்கன் மட்டும் அல்ல. இப்போது, பல்வேறு கிரில்டு உணவுகள் எல்லா நகரங்களிலும் கிடைக்கன்றன. எண்ணெயில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில், இது சரியா? இறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கின்றனர். இதனுடன், சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேகவைக்கின்றனர். தீயில் 20 நிமிடங்களாவது சுட்டுஎடுக்கின்றனர். 
இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால், மோசமான விளைவுகள் அதிகம் இருக்காது. இறைச்சியுடன் எண்ணெய், மசாலா பொருட்கள், சுவை மற்றும் நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நெருப்பில் வாட்டப்படும்போது, பாதிப்பை ஏற்படுத்துகின்றன. முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அசைவ ஹோட்டல்களில் முழுக் கோழிகள் கம்பியில் குத்தப்பட்டு கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. தவிர, மசாலாக்கள் தடவப்பட்ட நிலையில் இன்னும் நிறையக் கோழிகள்,  உள்ளே ஃப்ரீஸரில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே நாளில் தீர்ந்துவிடுவது இல்லை. 

எப்போது வெட்டப்பட்டது எனத் தெரியாத இறைச்சியைத்தான், நாம் வாங்கிச் சாப்பிடுகிறோம். இத்தகைய உணவுகள் முழுக்க முழுக்க சுவைக்காக உடலுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை உப்பு மற்றும் நிறங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதைச் சாப்பிடுவதால், முதலில் அல்சர் வரும். ரசாயனங்கள் கலக்கப்பட்டு பழைய இறைச்சியை சாப்பிடும்போது வயிறு தொடர்பான புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எப்போதேனும் ஓரிரு முறை சாப்பிட்டால், பிரச்சனை இல்லை. தொடர்ந்து ஆண்டுக்கணக்காக சாப்பிடும் பழக்கம்இருந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வரலாம். இதயம், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம்.

Friday, 22 January 2016

சென்னை விமான நிலையத்தில் இன்று பரபரப்பு !



சென்னை, 

சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் இன்று மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து உயரக்கிளம்ப முடியாமல் திணறியதால் பயணிகள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்த சம்பவம் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழில்நுட்பக் கோளாறு என தெரிவிக்கப்பட்டுள்ள இந்தகுறை நிவர்த்தி செய்யப்பட்டதும் அதே விமானம் நாளை சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், மேற்படி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட 160 பயணிகளும் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

2 முஸ்லிம் பல்கலைக்கழக விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தது

9:22 PM | ஜனவரி 22, 2016


புதுடெல்லி, 

2 முஸ்லிம் பல்கலைக்கழகங்களை சிறுபான்மை கல்வி நிலையங்கள் என்ற தகுதியில் இருந்து நீக்குவது தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளது. டெல்லியில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றை சிறுபான்மை கல்வி நிலையங்கள் என்ற தகுதியில் இருந்து நீக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்டது. சட்ட அமைச்சகம் அட்டார்னி ஜெனரலிடம் கருத்து கேட்டது. அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, அந்த பல்கலைக்கழகங்கள் சிறுபான்மை கல்வி நிலையங்கள் அல்ல என்று கூறினார்.இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ராஷ்டிரீய ஜனதாதளம், ஆம் ஆத்மி ஆகிய 8 கட்சி எம்.பி.க்கள் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டனர்.‘‘மத்திய அரசின் இந்த மோசமான நடவடிக்கைக்கும், அட்டார்னி ஜெனரல் கருத்துக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இது மத்திய அரசின் சிறுபான்மை விரோத நடவடிக்கை. இது இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை குலைப்பதாக உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு கொடுக்க இருக்கிறோம். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இந்த பிரச்சினையை எழுப்புவோம்’’ என்று கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த எட்டு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கவும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கவும் முடிவு செய்து உள்ளனர். இப்பிரச்சனையை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பவும் முடிவு செய்து உள்ளனர்.

ஓமனில் எலட்க்ரிகல் டெக்னீஷியன்களுக்கு வேலைவாய்ப்பு



Updated: January 22, 2016

ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு எலக்ட்ரிகல் டெக்னீஷியன்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 21 முதல் 35 வயதிற்குட்பட்ட டிப்ளமோ / ஐடிஐ தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் மேலும் டவர் (Tower) மற்றும் போல் (Pole) தொடர்பில் அனுபவம் உள்ள எலக்ட்ரிகல் டெக்னீஷியன்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.
தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச இருப்பிடம், மருத்துவம் மற்றும் காப்பீடு முதலியவை வேலையளிப்போரால் வழங்கப்படும்.
எனவே, மேற்குறிப்பிட்ட தகுதியுள்ளவர்கள், தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய சுயவிபரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் omcresum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு 044-22505886/22502267/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவோ அல்லது omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்திலும் அறிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.