January 22, 2016

இஸ்லாமிய மார்க்கத்தில் வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் வட்டியை அடிப்படையாக வைத்து இயங்கும் வங்கிகளை விடுத்து தாங்களாக பண பரிவற்த்தனைகளை செய்கின்றனர். இதன் காரணமாக உலகிலேயே அதிக அளவில் இஸ்லாமிய மக்களை கொண்டுள்ள இந்தியாவின் வங்கிகளுக்கு பல்லாயிரக்கணக்கில் இழப்பு ஏற்படுகின்றது. இதனை எவ்வாறு சரிகட்டுவது என்பதை இந்திய வங்கிகள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வாணியம்பாடியை சேர்ந்த ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவர் ரிசெர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மேலதிகாரிகள் மற்றும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்க் ஆகியோரை சந்தித்து இஸ்லாமிய் வட்டியில்லா வங்கி திட்டம் குறித்து எடுத்துரைத்து அதனை அமல் செய்யுமாறு வலியுறுத்தினார்.
இதனை சில ஆண்டுகளாக பரிசீலித்து வந்த ரிசெர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது இது குறித்து அமல் படுத்தும் முனைப்பில் இஸ்லாமியர்களுக்கான வட்டியில்லா வங்கி சேவை திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இது குறித்து கடந்த டிசெம்பர் மாதம் 28 ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க RBI ஒரு ஈ-மெயில் ஐடி யை அறிமுகம் செய்துள்ளது. அதில் நீங்கள் உங்களுடைய கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது உங்களுக்கான வாய்ப்பு….உங்கள் கருத்தை தயங்காமல் கீழே உள்ள ஐடி க்கு மெயில் செய்யுங்கள்…
cgmincfidd@rbi.org.in
cmpfi@rbi.org.in
இஸ்லாமிய வங்கி திட்ட குறித்த விரிவான தகவலுக்கு கீழே உள்ள் இணைய தள முகவரியை கிளிக் செய்யவும்
www.aaoifi.com
No comments:
Post a Comment