Saturday, 23 January 2016

என்னை நீக்க தமீமுன் அன்சாரிக்கு எந்த தகுதியும் இல்லை ஜவாருல்லா எம்.எல்.ஏ. பேட்டி


ஜனவரி 23,2016, 11:58 PM


மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தமீமுன் அன்சாரி அறிவித்துள்ளது குறித்து ஜவாருல்லாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
எந்த தகுதியும் இல்லை
மனிதநேய மக்கள் கட்சியின் பெயரையோ, கட்சியின் கொடியையோ தமீமுன் அன்சாரி பயன்படுத்த எந்த தகுதியும் இல்லை. தமீமுன் அன்சாரி பதவிக்காலம் கடந்த ஆண்டோடு முடிந்துவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி நடைபெற்ற தலைமை பொதுக்குழு கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
கட்சியின் கட்டுப்பாடு, விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக 2 முறை அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
எனது தலைமையில்
தற்போது எனது தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி முழு கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. நாங்கள் தான் தொடர்ந்து கட்சி பெயரில் போராட்டம், பொதுக்குழு கூட்டம் நடத்தி இருக்கிறோம். வெறும் விளம்பரத்துக்காக இதை அவர் செய்கிறார். இவர்களுக்கு ஆதரவாளர்கள் யாரும் கிடையாது. இவர்களுக்கு மக்களிடமும் செல்வாக்கு இல்லை. என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த தகுதியும் அவருக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment