தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்படும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு, இந்து அமைப்புகள் மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில், இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் மன உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் வாசகங்கள் மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், திருச்சி மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி வழங்கியது தவறு என்றும் அர்ஜூன் சம்பத் புகார் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த மாநாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யவேண்டும் எனவும் புகார் மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், சில இஸ்லாமிய அமைப்புகளும், இந்த மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன
No comments:
Post a Comment