Friday, 22 January 2016

2 முஸ்லிம் பல்கலைக்கழக விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தது

9:22 PM | ஜனவரி 22, 2016


புதுடெல்லி, 

2 முஸ்லிம் பல்கலைக்கழகங்களை சிறுபான்மை கல்வி நிலையங்கள் என்ற தகுதியில் இருந்து நீக்குவது தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளது. டெல்லியில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றை சிறுபான்மை கல்வி நிலையங்கள் என்ற தகுதியில் இருந்து நீக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்டது. சட்ட அமைச்சகம் அட்டார்னி ஜெனரலிடம் கருத்து கேட்டது. அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, அந்த பல்கலைக்கழகங்கள் சிறுபான்மை கல்வி நிலையங்கள் அல்ல என்று கூறினார்.இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ராஷ்டிரீய ஜனதாதளம், ஆம் ஆத்மி ஆகிய 8 கட்சி எம்.பி.க்கள் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டனர்.‘‘மத்திய அரசின் இந்த மோசமான நடவடிக்கைக்கும், அட்டார்னி ஜெனரல் கருத்துக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இது மத்திய அரசின் சிறுபான்மை விரோத நடவடிக்கை. இது இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை குலைப்பதாக உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு கொடுக்க இருக்கிறோம். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இந்த பிரச்சினையை எழுப்புவோம்’’ என்று கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த எட்டு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கவும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கவும் முடிவு செய்து உள்ளனர். இப்பிரச்சனையை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பவும் முடிவு செய்து உள்ளனர்.

No comments:

Post a Comment