Wednesday, 27 January 2016

குழந்தைகளை தாக்கும் ஜிக்கா வைரஸ்: இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்



புதுடெல்லி: கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் ஜிக்கா எனும் கொடிய வைரஸ் நோய் 25 நாடுகளில் பரவி இருப்பதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசு மூலமே ஜிக்கா கிருமிகளும் பரவுகிறது. கனடாவை தவிர அமெரிக்க கண்டத்தில் அனைத்து நாடுகளிலும் இது கிருமியின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கர்ப்பிணி தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தையின் தலை சிறியதாக காணப்படும் என்றும் மரபணு மற்றும் நரம்பியல் உள்ளிட்ட நோய்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு உருவாகும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரேசில் உள்ளிட்ட 25 நாடுகளில் இந்த கொடிய வைரஸ் பரவி இருக்கிறது.
இந்த நோய்க்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை இந்தியாவில் துறை ஜிக்கா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசு மூலம் ஜிக்கா வைரசும் பரவும் என்பதால் இந்த கொசுக்கள் அதிகம் காணப்படும் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜிக்கா வைரஸை கண்டறிவதற்கான ஆய்வக கருவிகளை தயார் நிலையில் வைக்க மத்திய அரசு உத்தரவிட்-டுள்ளது. மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஆய்வகமும் தயார் நிலையில் உள்ளது. துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் சுகாதாரக் குழுவினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment