அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலைநாட்டும் விதமாக நடத்தப்படும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை கொச்சைப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றிய ஜமாஅத்துல் உலமா சபையின் கூற்றுக்கு உரிய பதிலை முகநூல் முஸ்லிம் மீடியா சார்பாக நேற்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்த பதிவு தமுமுக, PFI, முஸ்லிம் லீக் சகோதரர்களுக்காக வெளியிடப்படுகிறது.
பொதுவாக எந்த ஒரு இயக்கமும் மாநாடு அறிவித்தால் மாநாட்டை தான் பிரம்மாண்டமாக நடத்துவார்கள். ஆனால் TNTJ நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு தொடர்பாக கடந்த இரண்டு மாதமாக தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள், சிறுமிகள் என்று ஒட்டுமொத்த நிர்வாகமும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் எதற்கு ? என்றும் ஷிர்க் என்றால் என்னவென்றும், எதற்காக ஷிர்கை ஒழிக்க வேண்டுமென்றும் மிக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்களே....
இதுவெல்லாம் எதற்காக என்று சிந்தித்தீர்களா ?
இதற்கெல்லாம் TNTJ தலைமை சம்பளம் கொடுக்கும் என்று நினைக்கிறீர்களா ?
எந்தவித சம்பளமும் இல்லாமல், இரவு பகல் பாராமல், வெயிலிலும், மழையிலும், குளிரிலும், தூக்கமிழந்து, பசியை இழந்து வீதி வீதியாக, தெரு தெருவாக, வீடு வீடாக கதவை தட்டி ஷிர்கை பற்றி பிரச்சாரம் செய்யும் நோக்கம் என்னவென்று தெரியுமா ?
யார் ஷிர்க் வைக்கிறாரோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தை தடை செய்து விட்டதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான், நம்முடைய உறவுகள் நரகம் சென்று விடக்கூடாது, அவர்களை சொர்க்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக....
அடி, உதை, வெட்டு, குத்து, இரத்தம் சிந்தி, ஊர் நீக்கம் செய்யப்பட்டும், ஜனாஸாவை அடக்க மறுத்தும் நீங்கள் நரகத்திற்கு போய் விடக்கூடாது, நமக்கு கிடைத்த தூய இஸ்லாம் நம் உறவுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தான்....
இரத்தம் சொட்ட சொட்ட அடி வாங்கியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்த மூன்றாவது நாளில் மீண்டும் மார்க்கத்தை சொல்ல புறப்பட்டுள்ள தவ்ஹீத் சகோதரரை பாருங்கள், உடல் ஊனமுற்ற நிலையிலும் ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தவ்ஹீத் சகோதரரை பாருங்கள்.
வீடு வீடாக கதவை கட்டி நம் சகோதரிகளுக்கு ஷிர்கை பற்றி போதிக்கும் தவ்ஹீத் சகோதரிகளை பாருங்கள்...
இவ்வளவு மக்களின் தியாகத்தையும் ஒரே வார்த்தையில் தேர்தல் நாடகம் என்று கொச்சைப்படுத்துகிறீர்கள்.
தமிழகத்திலுள்ள முஸ்லிம் இயக்கங்களில் தேர்தலில் போட்டியிடாத ஒரே தூய்மையான இயக்கம் TNTJ மட்டுமே, மீதமுள்ள அனைத்து இயக்கங்களும் தேர்தல் அரசியலில் போட்டியிடக்கூடிய அரசியல் கட்சிகளாக மாறி விட்டன.
தேர்தலில் போட்டியேயிடாத TNTJ மாநாடு நடத்தினால் தேர்தலுக்காக நடத்தப்படும் மாநாடு என்று மனசாட்சியே இல்லாமல் எழுதுகிறீர்களே அப்படியென்றால்....
தேர்தலில் போட்டியிடக்கூடிய தமுமுகவும், PFI யும் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் சிறைவாசிகள் விடுதலைக்காக போராட்டம் அறிவித்துள்ளதே....
இந்த போராட்டமும் தேர்தல் நாடகமா ? தேர்தல் நாடகம் இல்லையென்றால் கடந்த 5 ஆண்டுகளில் சிறைவாசிகளின் விடுதலைக்காக எத்தனை முறை போராட்டம் நடத்தியுள்ளீர்கள் ?
தேர்தல் வாடையே படாத TNTJ மாநாடு நடத்தினால் அது தேர்தல் நாடகம் என்று சொல்லும் நீங்கள், தேர்தலில் போட்டியிடும் உங்களது இயக்கங்கள் நடத்தக்கூடிய போராட்டங்கள் தேர்தல் நாடகம் என்று நாங்கள் சொல்லலாமா ?
இப்பொழுதும் நம்புகிறோம் ஷிர்கை ஆதரிக்கக்கூடிய 90 சதவீத மக்கள் ஷிர்க்கின் விபரீதம் புரியாமல் தர்கா, மௌலூது போன்றவைகள் மார்க்கத்தில் உள்ளது என்ற நம்பிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மார்க்கம் முழுமையடைந்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பிறகு மனிதர்களால் சுயநலனுக்காக வியாபார ரீதியாக உருவாக்கப்பட்டதே தர்கா வழிபாடும், மௌலூதுகளும்....
தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினர்களாக உள்ள 95 சதவீத உறுப்பினர்கள் தவ்ஹீத் ஜமாஅத் தந்தைக்கு பிறந்தவர்கள் அல்ல, சுன்னத் ஜமாஅத் தந்தைக்கு பிறந்து தர்கா வழிபாடு, மௌலூது போன்ற அனைத்து ஷிர்கிலும் ஈடுபட்டு பின்னர் மார்க்கத்தை விளங்கி தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சென்றவர்கள் தான் 95 சதவீத உறுப்பினர்கள்.
சுன்னத் ஜமாஅத், ஜமாஅத்துல் உலமா சபை, தமுமுக, PFI, SDPI, முஸ்லிம்லீக் என்று ஒட்டுமொத்த சமூகமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டு நடத்தும் இம்மாநாடு ஓர் இறைக்கொள்கையை நிலைநாட்டுவதற்காக என்பதை புரிந்து கொள்ளுங்கள்....
https://m.facebook.com/story.php?story_fbid=586048378220983&substory_index=0&id=318795831612907
No comments:
Post a Comment