Tuesday, 26 January 2016

புறக்கணிக்கப்பட்ட தமிழிசை அக்கா!




இன்று குடியரசு தினம். வழக்கமாக குடியரசு தினத்தில் வீர தீரச்செயல் புரிந்த 4 பேருக்கு அவர்களின் வீரத்தைப் பாராட்டி வருடா வருடம் தமிழக அரசின் உயரிய விருதான அண்ணா விருது சாகசம் புரிந்த 4 பேருக்கு வழங்கப்படுவது வழக்கம்.
சென்ற டிசம்பர் மாதம் சென்னையில் மழைவெள்ளத்தில் தத்தளித்த சகோதரி.சித்ரா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை மீட்டு காப்பாற்றிய சகோ.யூனுஸ் உள்ளிட்ட 4 பேர்களுக்கு இன்றைக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.
ஆனால் இவர்களையெல்லாம் விட தன் உயிரைப் பணயம் வைத்து ஈக்காட்டுத்தாங்கலில் காலை 6 மணிக்கு என் உதவி யாருக்காவது வேண்டுமா? என்று வெங்கலக்குரலில் கத்திக் கொண்டே சென்று அங்கே ஒரு கர்ப்பிணிப் பெண் எவ்வித ஆதரவும் இன்றி தத்தளித்தவரை அவசரமாக ஒரு படகில் ஏற்றி அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்துக் காப்பாற்றி அவருக்கு பிரசவமும் பார்த்து அந்தக் குழந்தைக்கு தமிழிசை என்று பெயரும் வைத்த ஒரு வரலாற்று சம்பவம் நிகழ்ந்துள்ளதை தமிழக அரசு கண்டு கொள்ளாதது ஏனோ?
அதுமட்டுமின்றி இப்போது அந்தக் குழந்தையை தமிழிசை அவர்கள் தன் சொந்த செலவில் ரஷ்யாவிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க வைத்துள்ள செய்திகளும் பிபிசி தமிழோசையில் வந்ததைக் கூட கண்டு கொள்ளாமல் இவ்வருட அண்ணா விருது பட்டியலில் அக்கா. தமிழிசையை சேர்க்காதது வருத்தத்தை தருகின்றது.
எனவே இதுபற்றி நடுநிலை ஊடகவியலாளர் நீதிமான் பாண்டே அவர்கள் தந்தி டிவி வாயிலாக அக்காவைப் பேட்டி எடுத்து தமிழக அரசின் புறக்கணிப்பை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment