தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெறவிருக்கும் எதிர் வரும் ஜன 31 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடை விதிக்கக் கோரி தர்கா ஜமாஅத் மற்றும் இந்து மகா சபை சார்பில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இரு உயர்நீதிமன்ற நீதிபதிகளும் முஸ்லிம்களின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடை செய்ய இயலாது எனவும் தடை கோரிய மனுவை டிஸ்மிஸ் செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பால் முஸ்லிம்கள் மிகுந்த மகிழ்ச்சியும் மாநாட்டுக்குச் செல்லும் குதூகலத்துடன் இருக்கின்றனர்.
இதே செய்தியை நமது மலரில் கடந்த 5 நாட்களுக்கு முன்னரெ சொன்னதை நினைவு படுத்துகிறோம்.எமது கூற்றை உண்மைப்படுத்திய சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி.
No comments:
Post a Comment