Friday, 29 January 2016

இந்த உலகத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் செய்தி என்ன ? பிறமத மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஷிர்க் ஒழிப்பு மாநாடு....!!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு TNTJ யின் எல்லையை தாண்டி, இஸ்லாமிய சமூகத்தின் எல்லையை தாண்டி, பிறமத மக்களின் கவனத்தையும் ஈர்த்து ஷிர்க் என்றால் என்ன ? எதற்காக ஷிர்கை ஒழிக்க வேண்டும் ? பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மட்டுமின்றி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஜமாஅத்துக்களும்எதிர்க்க வேண்டிய காரணம் என்ன ?
இரத்ததானம் முதல் இயற்கை சீற்றம் வரை அனைத்திலும் மனிதநேய பணியில் தனி முத்திரை பதித்து வரும் தவ்ஹீத் ஜமாஅத் இந்த அளவுக்கு எதிர்க்கப்பட காரணம் என்ன ? 
இந்த உலகத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சொல்லவரும் செய்தி என்ன ? 
இதுதான் பிறமத சகோதரர்களின் கேள்வியாக அமைந்துள்ளது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை இந்த உலகுக்கு உரக்க சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாமாகும்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையான இஸ்லாமிய கொள்கையை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் இந்தியாவில் சிலர் திருக்குர்ஆனை சரியாக விளங்காமல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கைக்கு மாற்றமாக செயல்பட்டு ஓர் இறைவனுக்கு இணையாக தர்காவை வணங்குகிறார்கள்.
இவ்வாறு தர்காவை வணங்கி வழிபடுவது ஓர் இறைக்கொள்கைக்குமாற்றமானது, ஓர் இறைக்கொள்கையை நிலைநாட்டுங்கள், ஓர் இறைக்கு இணை கற்பிக்காதீர்கள் என்பதை பிரகடனம் செய்யவே ஷிர்க் ஒழிப்பு மாநாடு.
முஸ்லிம் என்றால் பெயரளவில் வாழாமல் உண்மையான முஸ்லிமாக வாழுங்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்று சொன்னார்களே அப்படி வாழுங்கள் என்கிறது தவ்ஹீத் ஜமாஅத் 
ஒன்றே குலம் ஒருவனே தேவன் - இதுதான் தவ்ஹீத் ஜமாஅத் இந்த உலகத்திற்கு சொல்லும் செய்தி....

No comments:

Post a Comment