Saturday, 20 February 2016

எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரட்டை கோரிக்கை பொதுக்கூட்டம்! 


தமிழகத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும், அவர்களின் ஜாதி, மதம் பாராமல் விடுதலை செய்ய வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நேற்று (பிப்.19), சென்னை மிண்ட் தங்க சாலையில் மாபெரும் இரட்டை கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரபீக் அகமது, தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் தலைவர் தோழர் தியாகு, பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தனது உரையின் போது; பூரண மதுவிலக்கு கோரிக்கையும், 10 ஆண்டுகள் சிறை அனுபவித்த அனைத்து ஆயுள் கைதிகள் விடுதலை கோரிக்கையும் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து போராடிவருகிறது. இதேப்போன்று பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், பெண்கள் அமைப்பினரும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணமுள்ளனர். இதனை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. மாநில அரசு நினைத்தால் தனக்கு இருக்கும் அதிகாரத்தின் மூலம் இந்த இரண்டு கோரிக்கையையும் நிறைவேற்ற முடியும். ஆனால், தமிழக அரசு முரட்டு மவுனம், பிடிவாதம் காட்டி வருகின்றது. இந்த அரசின் ஆயுட்காலம் இன்னும் இரண்டொரு மாதங்களில் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால், மேற்சொன்ன இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் தமிழக அரசு இனிமேலும் செவிமடுக்க மறுத்தால், அதற்கான விடையை மக்கள் எதிர்வரும் தேர்தலில் எதிரொலிப்பாளர்கள் என்றார். 
முன்னதாக இந்த பொதுக்கூட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் ரத்தினம், உஸ்மான் கான், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், சாமுவேல் பால், வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன், விமன் இந்தியா அமைப்பின் தேசிய செயலாளர் வழக்கறிஞர் சாகிரா, வழக்கறிஞர் அணியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜா முகமது, எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் பூட்டோ சாகுல், மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சென்னை மண்டல நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த இரட்டைக் கோரிக்கை பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.’’
நன்றி : நக்கீரன்

மது அருந்தி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவிகள்... புதுச்சேரி அவலம்!


புதுச்சேரி: அரசு பள்ளி மாணவிகள் குளிர் பானத்தில் மதுவை கலந்து குடித்து வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவம் புதுச்சேரியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள், வகுப்பு நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த குளிர்பான பாட்டிலை எடுத்து அருந்தியது மட்டுமல்லாமல் வகுப்பில் இருந்த சக மாணவிகளுக்கும் குடிக்கக் கொடுத்துள்ளனர். குளிர்பானத்தை குடித்த மாணவிகள், அடுத்த சில நிமிடங்களில் போதை தலைக்கு ஏற, வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளனர்.
இதை கண்ட வகுப்பு ஆசிரியர் பதறிப்போய் சக மாணவியரிடம் விசாரித்ததில்,  மது போதை மயக்கத்தில் அம்மாணவிகள் மயங்கி விழுந்துள்ளதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனே இச்சம்பவம் பற்றி அந்த ஆசிரியர், பள்ளி முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்.
முதல்வர், சில ஆசிரியர்களுடன் சேர்ந்து அந்த மாணவிகளின் மயக்கத்தை தெளிய வைத்து இருக்கின்றனர். அதன்பின் அந்த மாணவிகளை அவர்கள் தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
அப்போது, ஐந்து மாணவியர் குளிர்பானத்தில் மது கலந்து அருந்தியது தெரியவந்திருக்கிறது. உடனே பள்ளி முதல்வர், அந்த மாணவிகளின் பெற்றோர்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்து, உடனே பள்ளிக்கு வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல சொல்லி இருக்கின்றனர்.
தற்போது, இந்தச் சம்பவம் தொடர்பாக, கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பள்ளி மாணவியர்களுக்கு மது எங்கிருந்து கிடைத்தது? அவர்களுக்கு மதுவை வாங்கி கொடுத்தது  யார்? என்றெல்லாம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களிடம் பரவி வந்த இக்கொடிய பழக்கம், தற்போது மாணவிகளிடமும் பரவி வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
சு.கற்பகம்
(மாணவப் பத்திரிகையாளர்)

எச்சரிக்கை!! Dubsmash பயங்கர ஆபத்தான ஒரு அப்ளிகேசன் (விழிப்புணர்வு பதிவு)!


இளசுகளிடையே வேகமாக பரவும் Dubsmash அப்ளிகேசன் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி அப்படியே,
உங்க அனுமதி இல்லாமலே அந்த ஆப் உங்க இணைய பயன்பாட்டை செயல்படுத்தும் !!
உங்க மொபலில் இருக்கும் தரவுகளை உங்க அனுமதி இல்லாம டவுன்லோட் செய்யும் !!!
வைப்ரேசன்களை அதுவாகவே நிர்வகிக்கும் !!
உங்கள் நெட்வொர்க் கனெக்சன்களை உங்கள் அனுமதியின்றி தெரிந்துகொள்ளும் !!
உங்க STORAGEல இருக்கும் தரவுகளை DELETE மற்றும் MODIFY உங்கள் அனுமதியின்றி செய்யும்
அதே போல sticky broadcast வாயிலாக உங்க போன் ஒரு லைவ் கேமராவாக செயல்படும் !!! – அந்நேரம் நீங்கள் உடை மாற்றினாலோ இல்ல வேற ஏதும் விளையாட்டில் ஈடுபட்டாலோ அம்புட்டையும் நேரலையாக ஒளிபரப்பும் உங்கள் அனுமதியின்றி !!!
நீங்க அந்த அப்ளிகேஷனை INSTALL செய்யும் முன் கவனித்து பாருங்க …அவன் உங்ககிட்ட அனுமதி வாங்கிட்டு தான் இம்புட்டையும் செய்றான் !!!
The device also allows the Dubsmash application to use the following permissions:
View identity
Find accounts on the device
Photos / media / files
Modify or delete the contents of your USB storage
Test access to protected storage
Camera / microphone
Take pictures and videos
Information about device ID and calls
Read phone state and identity
Dubsmash espionage
அடுத்தவன் செய்றான்னு ஆசைப்பட்டு இந்த Dubsmash அப்ளிகேசன இன்ஸ்டால் செய்தால் உங்கள் அந்தரங்கம் உங்களுக்கே தெரியாம ஊர் முழுக்க பரவும் !!!
இந்த பதிவை அதிகம் ஷேர் பண்ணி மற்றவர்களுக்கு தெரியவைய்யிங்க 

செம ஜோரா இணைந்து பறக்கும் திமுக - தேமுதிக கொடிகள்.


சென்னை: சென்னையில் திமுக - தேமுதிக ஆகிய இரு கட்சிகளின் கொடிகளும் ஒன்றாக இணைந்து பறந்து கொண்டிருப்பது 'சிக்னல் வந்துருச்சு போல... கூட்டணி உறுதியாகிடுச்சோ' என பேசவைத்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த தேர்தலில் கணிசமான ஓட்டுக்களையும் வாங்கியது. அதேபோல் தற்போது நடைபெற உள்ள தேர்தல் தேமுகவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதனால் இந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கணிசமாக தொகுதிகளை தன்வசப்படுத்தினால் மட்டுமே அரசியலில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்பது தேமுதிகவின் கணக்கு.
இந்நிலையில் தேமுதிக திருப்புமுனை மாநாடு காஞ்சிபுரம் வேடலில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை ஸ்டாலின் முடித்துள்ளார். இதன் நிறைவு விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை காஞ்சிபுரம் அருகே உள்ள ஆப்பூரில் நடைபெறுகிறது. இதில், மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதனால் திமுக மற்றும் தேமுதிக நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெறுவதால் தாம்பரம் முதலே இரண்டு கட்சியின் கொடிகள், பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் கொடிகம்பங்கள் நடும் பணிகளில் இருகட்சிகளின் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலைகளில் சில கிலோமீட்டர் தூரம் திமுக மற்றும் தேமுதிகவின் கட்சி கொடிகள் இரண்டும் இணைந்த படி பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கின்றன. இதனால் திமுக, தேமுதிக கூட்டணி பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Thursday, 18 February 2016

மரண அறிவிப்பு

19/02/2016 காலை
புதுப்பட்டினம் இப்ராஹிம்சாஹிப், ஆமீனா அம்மாள், ஜல்ஹா அம்மாள், காதர், சுல்தான் பீவி இவர்களின் தாயார் மற்றும் ஜியாவுதீன் உடைய பாட்டி மரணமடைந்தார்.
இன்னாலில்ஹீ வா இன்னிலஹீ ராஜூவூன்

பாஜக வைத்த பெரிய ஆப்பு : ரூ.251 ஸமார்ட் போன் தளம் முடங்கியது -முன் பதிவு செய்த அனைவரும் பாஜக உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.


ஃப்ரீடம் 251 ஸ்மார்ட் போனில் ‘தூய்மை இந்தியா‘ திட்டம் உள்ளிட்ட 9 ஆப்புகள் ஏற்கனவே ஏற்கனவே இந்த செல்போனில் ப்ரீலோட் செய்யப்பட்டே இருக்கும் என்று சொல்லப்பட்டது. இதில்  ஐ-கான்கள் அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஐஓஎஸ் ஐகான்களை அப்படியே சுட்டு அது மாதிரியே ஃப்ரீடம் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காப்புரிமை விதிமுறை மீறல் சட்டப்படி தவறாகும். 
இது குறித்து ரிங்கிங்பெல் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் விகாஷ் சர்மாவிடம் பேசுகையில், ”ஆப்பிள் நிறுவனம் தனது பொருட்கள் மற்றும் அதன் டிசைன்கள் மீது எந்த காப்புரிமையும் பெறவில்லை” என பதில் அளித்துள்ளார்.
ஆனால் இது முற்றிலும் தவறானது ஆகும். ஆப்பிள் நிறுவனத்தில் ஆப்புகளில் இருந்து ஐபேட் வரை அனைத்துமே காப்புறுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை. 
ஆப்பிள் நிறுவனம் தனது இணையதளத்தில் ”எந்த ஒரு வகையிலும் எங்கள் நிறுவனத்தின் பெயரையோ லோகோ அல்லது ஐகான் உள்ளிட்ட எதனை  பயன்படுத்த வேண்டுமென்றாலும் முறையான லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டுமென தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
 ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் எந்த லைசென்சும் ஆப்பிள் நிறுவனததிடம் இருந்து பெறவில்லை என்றேத் தெரிகிறது.
எப்படியோ போன் வித்தமோ இல்லையோ முன்பதிவு செய்த அனைவருக்கும் பாஜக உறுப்பினர் அட்டை அனுப்பிவைக்கப்படும்

Wednesday, 17 February 2016

ரூ.251 – மொபைல் உடனே வாங்க ஒரே வழி



251 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனை இன்று காலை 6 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
“ரிங்கிங் பெல்ஸ்” நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து “FREEDOM 251″ என்ற பெயரில் குறைந்த விலை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. இன்று காலை 6 மணிக்கு இந்த ஸ்மார்ட் போன் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போனை வாங்க ஓரே நேரத்தில் www.freedom251.com என்ற இணையதள முகவரியில் லட்சக்கணக்கானோர் திரண்டதால், அந்த இணையதளம் முடங்கியது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். 
தற்போது மீண்டும் அந்த தளம் செயல்படத் துவங்கியது.வாடிக்கையாளர்கள் உடன் முன்பதிவு செய்யலாம்.

தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்க சவுதியில் நடந்த 10 மணிநேர ஆபரேஷன் வெற்றி


தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்க சவுதியில் நடந்த 10 மணிநேர ஆபரேஷன் வெற்றி
சிரியாவைச் சேர்ந்த தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை பிரிப்பதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற சிக்கலான ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவைச் சேர்ந்த டுக்யா மற்றும் யாகீன் அல் காதர் என்ற இந்த பெண் குழந்தைகள் பிறக்கும்போதே தலைகள் ஒட்டியபடி பிறந்திருந்தன. இத்தகைய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் ஆஸ்பத்திரியில் இலவசமாக ஆபரேஷன் செய்யப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆபரேஷனின் மூலம் தனது மகள்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு சவுதி மன்னருக்கு இந்தக் குழந்தைகளின் தந்தை கடந்த 2013-ம் ஆண்டு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மன்னரும் ஒப்புதல் அளித்தார்.
பின்னர், சிரியாவில் இருந்து சவுதிக்கு அழைத்துவரப்பட்ட டுக்யா மற்றும் யாகீனுக்கு முதலில் இரண்டுகட்ட ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.
முதல்கட்டமாக கடந்த 2014-ம் ஆண்டு இரண்டு தலைகளின் மூளைப்பகுதியையும் இணைக்கும் ரத்த நாளங்கள் துண்டிக்கப்பட்டு, இரண்டுக்கும் இடையில் சிலிக்கான் துண்டு பொருத்தப்பட்டது. பின்னர், மேலும் சில நரம்புகள் துண்டிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டது. மூன்றாவது கட்டமாக தலைகளை துண்டித்து, பிரிப்பதற்கான இதர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இறுதிக்கட்ட ஆபரேஷனில் 60 சதவீதம் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற நிலையில் 22 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சேர்ந்து சுமார் பத்து மணி நேரம் நடத்திய ஆபரேஷன் மூலம் இரு குழந்தைகளின் தலைகளையும் வெற்றிகரமாக பிரித்துள்ளனர்.
 தற்போது தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ள அந்த சிறுமிகள் மேலும் இருகட்ட ஆபரேஷன்கள் முடிந்து, பூரண நலம் பெற்று சொந்த நாட்டுக்கு திரும்ப அனைவரும் வேண்டிக் கொள்வோம்.

பொது தேர்வில் விடைகளை கோடிட்டு அடித்தால் 2 பருவங்களுக்கு தேர்வு எழுதமுடியாது


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் விடைத்தாளில்மாணவ-மாணவிகள் எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டுஅடித்தால் அவர்கள் 2 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாதுஎன்று அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்து புதிய உத்தரவைபிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக் குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும்,மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

அதிரையில் கல்லூரி மாணவன் தாக்கப்பட்டார்.


அதிரை காதர் முகைதீன் கல்லூரி மாணவனை மர்ம நபர்கள் தாக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது .இது குறித்து விசாரித்த வகையில் கல்லூரி மாணவன் கல்லூரி நுழைவு வாயிலில் இருந்து சாலையை கடந்த பொழுது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் மாணவனை இடிப்பதை போன்று வாகனத்தை ஓட்டியதால் தகராறு ஏற்ப்பட்டது .இது குறித்து மாணவன் கேட்டபொழுது வாகன ஓட்டி மாணவனை அடித்து விட்டார் .இதனால் சக மாணவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர் .இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது .

தமிழக இடைக்கால பட்ஜெட் 2016: முக்கிய அம்சங்கள்!



தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகக் கூறினார். 
தமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: 
இடைக்கால பட்ஜெட்டுகாக ரூ.60,610 கோடி நிதி ஒதுக்கீடு.
* காவல்துறைக்கு ரூ.6099 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 
* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 
* மாநில பேரிடர் நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* தீயணைப்பு துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுக்கீடு. 
* சிறைச்சாலை துறைக்கு ரூ.281 கோடி நிதி ஒதுக்கீடு. 
* வேளாண்துறைக்கு ரூ.6938.57 கோடி நிதி ஒதுக்கீடு. 
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.8,486.26 கோடி ஒதுக்கீடு. 
* மின்சாரதுறைக்கு ரூ.13,819.03 கோடி நிதி ஒதுக்கீடு. 
* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1590 கோடி நிதி ஒதுக்கீடு. 
* குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.348 கோடி நிதி ஒதுக்கீடு. 
* அனைவருக்கும் கல்வி திட்டத்துக்காக ரூ.2329.15 கோடி நிதி ஒதுக்கீடு. 
* சுகாதாரத்துறைக்கு ரூ.9350.66 கோடி நிதி ஒதுக்கீடு. 
* விளையாட்டுத் துறைக்கு ரூ.142.88 கோடி நிதி ஒதுக்கீடு. 
* ஆதிதிராவிடர் நலனுக்கு ரூ.2702 கோடி நிதி ஒதுக்கீடு 
* உணவு மானியத்துக்கு ரூ.5500 கோடி நிதி ஒதுக்கீடு. 
* அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் நலனுக்காக ரூ.19,841 கோடி 
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.391.93 கோடி நிதி ஒதுக்கீடு 
* சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு ரூ.677.93 கோடி நிதி ஒதுக்கீடு. 
* சாலை திட்டங்களுக்கு ரூ.2013 கோடி நிதி ஒதுக்கீடு 
* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.152 கோடி நிதி ஒதுக்கீடு. 
* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு. கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.86,193 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.688 கோடி நிதி ஒதுக்கீடு. 
* உயர்கல்வித்துறைக்கு ரூ.3,821 கோடி நிதி ஒதுக்கீடு.
* சுற்றுலாத்துறை ரூ.84.66 கோடி நிதி ஒதுக்கீடு. 
* மீனவர் நலனுக்காக ரூ.742 கோடி நிதி ஒதுக்கீடு. 
வெள்ள மீட்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட மீனவர்களுக்கு பாராட்டு 
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் அறிவிப்பு:
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு திருத்திய கருத்து அனுப்பப்படும். திட்டத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என பன்னீர்செல்வம் அறிவித்தார். 
மேகேதாட்டு அணை கட்டும் திட்டம் தடுப்பு:
மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி தமிழக அரசால் தடுக்கப்பட்டது. 
வருவாய், பற்றாக்குறை, இழப்பு மதிப்பீடுகளும், கணிப்புகளும்: 
* மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு ரூ.23,688.11 கோடி என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விற்பனை வரியால் கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான விற்பனை வரி குறைந்துள்ளது. இதனால், தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. 
* அரசின் நிதிப்பற்றாக்குறை அடுத்த நிதியாண்டில் ரூ.9000 கோடியாக இருக்கும் என கணிப்பு. 
* 2016-17ல் மாநில சொந்த வரி வருவாய் ரூ.96,531.41 கோடியாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 
* 2016- 17ல் முத்திரைத் தாள், பதிவுக்கட்டணமாக ரூ.10,548 கோடி ரூபாய் கிடைக்கும்.
* ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.7,101.81 கோடியை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. 
* வாகனங்கள் மீதான வரி வருவாய் ரூ.4,925.05 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
* 2016 - 17 ஆண்டில் தமிழக அரசின் கடன் 2,47,031 கோடியாக இருக்கும்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது. பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடந்தது. விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா 22-ம் தேதி உரையாற்றினார். அத்துடன் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 
வழக்கமாக, ஆளுநர் உரையைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால், பொதுத் தேர்தல் நடக்கவுள்ளதால் இப்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரையிலான அரசின் செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் வகையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்து அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

UAE டூரிஸ்டுகளுக்கு விசா சம்பந்தமான முக்கிய விதிகள் அறிவிப்பு


கடந்த ஆறு மாதத்திற்குள் யாரெல்லாம் விசா மற்றும் நேக்கும் மற்றும் இதர காரணத்திற்காக ஈரான் நட்டிற்கு பயணம் சென்றார்களோ அவர்களுக்கு U A E டூரிஸ்ட் விசா கொடுக்கப்பட மாட்டார்கள்  தற்போது ஈரான் நாட்டில் உள்ளவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

Tuesday, 16 February 2016

5ஆண்டுகளில் தமிழகத்தில் 8.01% பொருளாதார வளர்ச்சி; புதிய அறிவிப்புகள் இல்லை: ஓ.பன்னீர் செல்வம்.

Posted by: Tue, Feb 16, 2016, 

சென்னை: கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 8.01 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
2016-2017-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் என்பதால் புதிய அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாது என்றும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஒ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் உரையில் அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி சாதனை படைத்தது.
5 ஆண்டுகளில் அமைதியை நிலைநாட்டி வளர்ச்சிக்கு வித்திட்டது அஇஅதிமுக அரசு.
உணவு பாதுகாப்பில் உறுதி செய்ய திட்டங்கள். உணவு பாதுகாப்பை உறுதி செய்ய விலையில்லா அரிசி.
விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட திட்டங்கள்.
மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள்.
ஈழத்தில் போர்க்குற்றம் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை- ஓபிஎஸ்
மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை விலையில்லா புத்தகங்கள்.
மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
மின்மிகை மாநிலமாக மாற்றிய பெருமை முதலமைச்சரையே சேரும்.
இலங்கை பிரச்னையில் சர்வதேச கவனத்தை ஈர்த்தவர் முதலமைச்சர்.
மாநிலமே மகிழும் வண்ணம் வளர்ச்சி தந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா.
புதுமைகள் பல படைத்து பெருமை பெற்றவர் முதலமைச்சர் ஜெயலலிதா.
எதிரிகளால் வெல்ல முடியாத மக்கள் சக்தியாக விளங்குகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு சீராக உள்ளது: ஓபிஎஸ்
நில அபகரிப்பு சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளனர்- பட்ஜெட்டில் ஓபிஎஸ்
இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ6,938.57 கோடி நிதி ஒதுக்கீடு
மகாமகம் சிறப்பாக நடைபெற ரூ135 கோடி நிதி ஒதுக்கீடு
5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8.01% பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது
நாட்டில் 2-வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது: ஓபிஎஸ்
மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் ரூ100 கோடி ஒதுக்கீடு
வனத்துறைக்கு ரூ677.93 கோடி நிதி ஒதுக்கீடு
10,000க்கும் மேலான இசேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்க சாதனை
அம்மா திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் 50.50 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை
மின்சார துறைக்கு ரூ13,819 கோடி நிதி ஒதுக்கீடு
போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட

ரிங்கிங் பெல் என்ற நிறுவனம் நாளை (17-ம் தேதி) 500 ரூபாய் விலையில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது.


ஒரு காலத்தில் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியலில் இருந்த செல்போன் இருந்தது. தற்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை எனச் சொல்லுமளவிற்கு அனைவரும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும், தற்போதைய தலைமுறையினர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் கம்ப்யூட்டருக்கு பதிலாக, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களையும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன்களில் விலை அதிகமாக இருப்பதால், சாதாரண மக்களால் அதை வாங்க முடியவில்லை. இந்த குறையைப் போக்குவதற்காக, இந்திய அரசின் ஆதரவுடன் ரிங்கிங் பெல் என்ற இந்திய நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரித்துள்ளது. ப்ரீடம் 251 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகக் குறைந்த விலைக்கொண்ட இந்த ஸ்மார்ட்போன் நாளை (17-ம் தேதி) வெளியிடப்படுகிறது. ஆனால், இதன் தொழில்நுட்ப விவரங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியின்போதுதான் அறிவிக்கப்படும் என்று ரிங்கிங் பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது

20000 கிருத்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவினர் – வைரலாக பரவும் வீடியோ


அமெரிக்காவில் 20000 கிருத்தவர்கள்‬ இஸ்லாத்தை தழுவியதாக அமெரிக்க செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது
ஒவ்வொரு நாளும் அதிகப்படியான கிரிஸ்த்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்.
‎குர்ஆனைக்‬ கொண்டு ஆராயும் மக்கள் அதிகரிப்பதே இதற்குக் காரணம்.
 பார்க்க வீடியோ
20000 Amarican Accept Islam by RTnews channal convert to islam new islamic video

Monday, 15 February 2016

குவைத்திற்கு வேலைக்கு சென்ற மகளை மீட்டு தாருங்கள்

Updated on February 15, 2016


​“குவைத்திற்கு வேலைக்கு சென்ற மகளை மீட்டு தாருங்கள்”
குவைத்திற்கு வேலைக்கு சென்று கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தகவலும் இல்லாமல் இருக்கும் மகளை மீட்க வேண்டும் என்று திருச்சியில் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே விஜயபுரத்தைச் சேர்ந்த நாகூர் கனி என்பவரின் மகள் சபியா, கடந்த 2004ம் ஆண்டு, முகவர் ஒருவர் மூலம்  குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
மூன்று ஆண்டுகள் வரை சபியா, மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை வீட்டிற்கு அனுப்பி  வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அவரிடம் இருந்து எந்தவித தொடர்பும் இல்லை என பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் சபியாவை அனுப்பிய ஏஜெண்டையும் தொடர்பு கொள்ள முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம்  உறவினர்கள், இன்று மீண்டும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலும் குவைத்தில் உள்ள மகளை கண்டறிந்து பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. தீர்மானம்.

பதிவு செய்த நாள் : 15, பிப்ரவரி 2016

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் இன்று (பிப்.14) நடைபெற்றது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அஃப்சர் பாஷா கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கட்சியின் கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி, தேர்தலில் போட்டியிடுவதற்கான தயாரிப்புகள், போட்டியிட வேண்டிய தொகுதிகள் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. 
மாநில செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1. தமிழகத்தில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் சிறை கைதிகள் கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. ஆயுள் தண்டனை கைதிகளை குறிப்பிட்ட ஆண்டுகள் தனிமைக் காலம் முடிந்த பின் விடுதலை செய்வதை கடந்த காலங்களில் தமிழக அரசு வழமையாக கொண்டுள்ளது. ஆனால் தற்போது அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் ஆயுள் சிறை தண்டனை கைதிகளை விடுதலை செய்ய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது. அபுதாஹிர் உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழக முஸ்லிம்களின் விடுதலை கோரிக்கையும் கனவாகவே தொடர்கிறது.
ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அரசியல் சாசன சட்டம் உறுபு 161 மாநில அரசுக்கு அதிகாரம் தருகிறது. எனவே இதை பயன்படுத்தி மேற்கண்ட கைதிகள் உட்பட 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அனைத்து ஆயுள் சிறை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
2. தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் புகார் சுமத்தப்பட்டால் அதுகுறித்து விசாரிப்பதற்கு தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும் என்கிற விதியை எதிர்த்து அனைவரும் குரல் கொடுத்து வரும் சூழ்நிலையில், தற்போது கீழ் நிலையில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அதனை நீட்டித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை, அரசு நிர்வாகத்தில் லஞ்சமும், ஊழலும் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே தமிழக அரசு இந்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும்.
3. மத்திய அரசு கடந்த ஜனவரி 28-ந் தேதியன்று 76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரி சலுகையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மருந்துகளின் விலை கட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்து வரும் சூழ்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு மத்திய தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பேரிடியாக அமையும் என்பதால் மத்திய அரசு உடனடியாக இத்தகைய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
4. சமீபத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு, திட்டமிடாத நகர விரிவாக்கம் மற்றும் நீர் நிலைகள் அருகே மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளும் முக்கிய காரணங்களாக அமைந்தது. பிற மாநிலங்களில் உள்ளது போல் நீர் நிலைகள் அருகே 100 மீட்டர் தூரத்திற்கு எவ்வித கட்டிடமும் கட்டக் கூடாது என்கிற விதிமுறை ஏற்படுத்தப்பட்டு, அவற்றை கண்டிப்புடன் அமல்படுத்த தேவையான விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும்.
5. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் தொடர்ச்சியாக இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்து, ஒட்டுமொத்த சமூகத்தை குற்றப் பரம்பரையாக்க காவல் துறையில் உள்ள சில கருப்பாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக இவ்விசயத்தில் நேரடி கவனம் செலுத்தி அப்பாவிகள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவதோடு தவறு இழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
6. தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் மற்றும் தொகுதி இவற்றை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில நிர்வாக குழுவிற்கு இச்செயற்குழு வழங்குகிறது.
7. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக் குழுவை நியமிக்க இச்செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

திமுகவுக்கு 'நோ'... பா.ஜ. வுக்கு 'எஸ்'? கூட்டணிக்கு பிரேமலதா அடித்த டிக்!

Posted Date : 12:15 (15/02/2016)

காஞ்சிபுரம்: திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஊழலில் ஊறிய கட்சிகள் எனபிரேமலதா விஜயகாந்த் கடுமையாக சாடியுள்ளதன் மூலம்,  கூட்டணிக்கு வருமாறு திமுக விடுத்துள்ள கோரிக்கையை தேமுதிக நிராகரித்துவிட்டது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமத்தில்,  தே.மு.தி.க. மாநில மாநாடு,  வருகின்ற 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ''தே.மு.தி.க.வின் தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூட்டணி குறித்த அறிவிப்பை மாநாட்டின்போதோ, மாநாடு முடிந்த ஒரு வாரத்திலோ கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.
மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி என்று பல்வேறு அணிகள் தற்போது தேர்தல் களத்தில் உள்ளன. பலரும் தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைத்துள்ளனர். தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு தொண்டர்கள் ஆற்றிய அயராத பணியே இதற்குக் காரணம். யாருடன் கூட்டணி என்பதையும், அந்தக் கூட்டணி தே.மு.தி.க. தலைமையில் இருக்குமா என்பதையும் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.
தி.மு.க -  காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்ட 30 நிமிடங்களிலேயே வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஊழலில் ஊறிய, கடந்த காலங்களில் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமான இரு கட்சிகளும் இணைந்துள்ளதாகவே பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
அண்ணா பிறந்த மண்ணில் நடைபெறும் இம் மாநாடு, தமிழக அரசியலில் அவர் ஏற்படுத்தியது போன்ற திருப்புமுனையை மீண்டும் ஏற்படுத்தும். அதற்காகவே இம் மாநாட்டுக்கு 'அரசியல் திருப்புமுனை மாநாடு' என்று பெயர் வைத்துள்ளோம். மாநாட்டில் பிற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கிறீர்கள். யார் யார் பங்கேற்கிறார்கள் என்பதை மாநாட்டின்போது நீங்களே நேரில் பார்க்கலாம்.
தமிழக அரசு அறிக்கை அரசியலை நடத்தி வருகிறது. மத்திய அரசு அளித்த நிதியில் பொதுமக்களுக்கு ரூ.5,000 அளித்துவிட்டு தாங்கள் அளித்ததுபோல மாநில அரசு காட்டி வருகிறது. மாநில அரசின் மெத்தனத்தால்தான் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்" என்றார்.
திமுக கூட்டணிக்கு 'நோ'... பா.ஜ. கூட்டணிக்கு 'எஸ்'?
தமிழக அரசியல் கட்சிகளில் தற்போது தேமுதிகவுக்குதான் ஏக கிராக்கி. பா.ஜனதா, திமுக, மக்கள் நலக்கூட்டணி என மூன்று தரப்புமே அக்கட்சியை தங்களுடன் கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்து வரும் நிலையில், தங்களது நிலை என்ன என்பதை விஜயகாந்த் வெளியிடாமல் கையை மூடியே வைத்துள்ளார். இதனால் அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் தேமுதிகவை கூட்டணிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும்விதமாக, தி.மு.க -  காங்கிரஸ் கூட்டணி ஊழலில் ஊறிய கட்சிகள் என பிரேமலதா கடுமையாக சாடி இருப்பதன் மூலம், திமுக தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த் இடம்பெறப்போவதில்லை என்பது ஏறக்குறைய உறுதியாகவிட்டதாகவே தெரிகிறது.
எனவே மீதமுள்ள பா.ஜனதா அல்லது மக்கள் நலக்கூட்டணி உடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்க முடியும். இந்நிலையில் பா.ஜனதா உடன் கூட்டணி அமைக்கவே அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த சில தினங்களாக பா.ஜனதா தலைவர்கள், விஜயகாந்தை தொடர்ந்து சந்தித்துப்பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருப்பினும் இன்னொருபுறம் அதிமுகவுடனும்  இன்னொரு 'சேனல்' மூலம் பா.ஜனதா பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கடைசி வாய்ப்பாக மட்டுமே மக்கள் நலக்கூட்டனியை விஜயகாந்த் பயன்படுத்துவார் எனத்தெரிகிறது.

நன்றி : விகடன் 

புதுப்பட்டினம் ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிக்கு ₹5 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட விடுதியை திறந்துவைத்தார் தமிழகமுதல்வர் ஜெயலலிதா :: கல்லூரி மாணவர்கள் நன்றி.


புதுப்பட்டினம் அடுத்த ராஜாமடத்தில் உள்ள அண்ணாபல்கலைக்கழகத்திற்காக ₹5 கோடி செலவில் தமிழக அரசால் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விடுதிக்கட்டிடத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து திறந்துவைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கல்வி மேம்பாட்டு திட்டத்தின்படி புதுப்பட்டினம் அடுத்த ராஜாமடம் அண்ணா பல்கலைகழகத்திற்க்கு ஆண்கள் தங்கும் விடுதி வசதிக்காக கட்டிடம் கட்டுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ₹ 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த
கட்டிட பணிகள் விரைவாக நடைபெற்று சகல வசதிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டதையடுத்து, மாண்புமிகு  தமிழக
முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால்
காணொளி முலம் திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதியானது  சுமார் 700 பேர் தங்கும் வசதியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 36 அறைகள்  கொண்ட இக்கட்டிடம்  சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக  சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு விழாவின் போது கல்லூரி வளாகத்தில் ராஜாமடம் அண்ணாபல்கலைக்கழக கல்லூரி முதல்வர் திரு.இளங்கோவன்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர்.
இது போன்ற பிரம்மாண்ட கட்டிடத்தை ₹5 கோடி செலவில் கட்டிக்கொடுத்த தமிழக அரசிற்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் மனமார்நத நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

தொழுகைக்கு முஸ்லீம்களை அழைக்கும் பாங்கை கூறவிடாமல் நிறுத்திக் காட்டுவேன் சபதமேற்ற போலீஸ் அதிகாரி சஸ்பண்ட்


     ஃபேஸ்புக்கில் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கார்பி அங்லோங் மாவட்ட துணை எஸ்.பி. அஞ்சன் போரா. அவர் ஜனவரி மாதம் 28ம் தேதி முதல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்துள்ளார். அவரின் கருத்துகளுக்கு அவரது நண்பர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
வதாக அவர் ஃபேஸ்புக்கில் சபதம் எடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் உறுப்பினரும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவருமான ரபிக்குல் இஸ்லாம் உள்ளிட்ட பல சிறுபான்மையினரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெய் ஸ்ரீராம், ஜெய் இந்துஸ்தான், ஜெய் ஜெய் ஸ்ரீராம், ஜெய் இந்துபூமி. முஸ்லீம்கள் இல்லாத இந்துஸ்தான் என்று எல்லாம் அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது கருத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. அவரை கைது செய்யவும், காவல் துறையில் இருந்து நீக்குமாறும் கோரிக்கை எழுந்தது. அவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக அஞ்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அஞ்சன் ஃபேஸ்புக்கில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை தற்போது நீக்கிவிட்டார். தனது ஃபேஸ்புக் கணக்கை யாரோ ஹேக் செய்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளதாகவும் அஞ்சன் போரா தெரிவித்துள்ளார்.
நன்றி : காலைமலர்.

சாதிவெறி பிடித்த நாடு இந்தியா – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் ஆவேசம்


“சாதிவெறி பிடித்த நாடு இந்தியா… அந்த நாட்டில் நான் இருக்க கொஞ்சமும் விரும்பவில்லை..!” என்று சொல்லி அதிர்ச்சிகிளப்பியிருக்கிறார்  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன்.
சமீபத்தில் கர்ணனை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி வெளியிட்ட உத்தரவின் மீது  நீதிபதி கர்ணன் தடை விதித்தார். அத்தோடு நீதி பரிபாலனத்தில் யாரும் தலையிடக் கூடாது என்றும்,  பணியிட மாற்றம் தொடர்பான ஆவணங்களுடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதிலளிக்க வேண்டும் என்றும்  அவருக்கு கர்ணன் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த சம்பவம் இந்திய அளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து இன்று பிற்பகல் பத்திரிகையாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன், தன் மீதான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இங்கே ஆதிக்க சாதியினர் அனைத்துத் துறையினிலும் அமர்ந்து கொண்டு சாதிய ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா சாதிவெறி பிடித்த நாடாக மாறிக் கொண்டு வருகிறது. இந்த சாதி வெறி பிடித்த நாட்டில் நான் இருக்க விரும்பவில்லை!” என்று கூறினார்.
நீதிமன்றப் பணிகள் எதையும் நீதிபதி கர்ணனுக்குத் தரவேண்டாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் ஆர்டர் சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் கர்ணண் தரப்பில் ஆஜராகி வாதாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 



இந்துவை காதல் திருமணம் செய்து அனுபவித்த கொடுமை – முஸ்லீம் பெண் கதறல்

முஸ்லீம் பெண் இந்துவை காதல் திருமணம் செய்து அனுபவித்த கொடுமை
முஸ்லீம் பெண் இந்துவை காதல் திருமணம் செய்து அனுபவித்த கொடுமை பாரீர்!
இன்று சில முஸ்லிம் பெண்கள் பிற மதத்தினருடன் காதல் என்ற போர்வையில் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். அவர்கள் படும் படும் அவலங்கள் கீழ் காணும் வீடியோவை பிளே செய்து பார்க்கவும்!
காதல் திருமணம் – இந்த காணொளி நல்லதொரு படிப்பினையை கொடுக்கும்
பொதுவாக இந்து மதத்தில் உள்ளவர் முஸ்லிம் பெண்ணை முடிப்பதும் முஸ்லிம் மதத்தில் உள்ளவர் இந்துமதப் பெண்ணை மணமுடிப்பதும் குடும்பவாழ்வில் கொள்கை முரன்பாட்டுப் போராகவே அமையும்.
இருவரும் ஏதோ ஒரு மதத்திற்கு மாறிவிட்டால் இந்த அவலம் வராது.





Saturday, 13 February 2016

பாங்கு’ சத்தத்தால் ஈர்க்கப்பட்டு, இஸ்லாத்தை ஏற்ற ‘ஸ்காட்லாந்து’ பிரஜை!


பாங்கு சத்தத்தால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்ற ‘ஸ்காட்லாந்து’ பிரஜை
தனது வாழ்நாளில் எந்த முஸ்லிமிடமும் நட்பு கொண்டிராத, யாராலும் அழைக்கப்படாத நிலையில் தானே முயற்சித்து இஸ்லாத்தை ஏற்ற மனிதர்!
அல்லாஹ் மிகப்பெரியவன்
ஸ்காட்லாந்தில் ரூனி என்ற இந்த சகோதரர் பாங்கு சப்தத்தை கேட்டு இஸ்லாத்தை ஏற்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது !விடுமுறைக்காக துருக்கிக்கு சுற்றுலா சென்ற ரூனி கடற்கறையின் பக்கத்தில் ஒரு சப்தம் ஒன்றை கேட்க அது என்ன சப்தம் என ஆராய்வதற்காக விசாரித்துவிட்டு வீடுதிரும்பிய அவர் அருகில் உள்ள புத்தக கடையில் குர்ஆனை வாங்கி படிக்க ஆரம்பித்துள்ளார்.பிறகு அது அவருக்கு இறைவனை நெருங்கும் வழியை ஏற்படுத்துவதாக உணர்ந்த அவர் மீண்டும் மீண்டும் குர்ஆனை படித்து ஆராய்ந்தார்.அவரது ஆய்வு அவரை தற்போது இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்துள்து.தற்போது தூய மார்க்கமாம் இஸ்லாத்தை தனது வாவழ்க்கைநெறியாக பின்பற்றுவதாக அறிவித்துள்ளார்.திருக்குர் ஆன் வன்முறையை தூண்டுவதாக வெளியிட்ட தின வதந்திக்கு பலத்த செருப்படி…

Friday, 12 February 2016

சவூதி அரேபியாவில் 2 பெண், குழந்தைகளின் தலை பிரிக்கப்படவுள்ளது!


சவூதி அரேபியா தலைநகர் ரியாத்திலுள்ள கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் வரக்கூடிய ஞாயிற்றுகிழமை 14.02.2016 சிரியாவை சேர்ந்த துகா, யகீன் என்ற இரண்டு பெண் குழந்தைகளின் தலை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்படுகிறது துஆ செய்யுங்கள்!

சவுதியில் செல்போன் சிம்கார்டு பயன்படுத்த கடும் கட்டுப்பாடு அமுலுக்கு வருகிறது.


சவுதியில் செல்போன் சிம்கார்டு பயன்படுத்த கடும் கட்டுப்பாடு அமுலுக்கு வருகிறது.
ஃபிங்கர் ப்ரிண்ட் பதிவு செய்தால் தான் இனி உங்கள் சிம் பயன்படும், இல்லை என்றால் கனெக்‌ஷன் துண்டிக்கப்படும்.
இதனால் உள்நாட்டு பாதுகாப்பு மேம்படும் என்றாலும், கடும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.
சிம் கார்டு தொலைந்து விட்டால் உடனே போய் அதை ரத்து செய்ய வேண்டும், இல்லை என்றால் அந்த நம்பரை வைத்து வேறு வகையில் தவறான காரியங்களுக்கு யாரேனும் பயன்படுத்தினால், சிம்முக்குறிய நபர் தான் தண்டிக்கப்படுவார்.
அதே போல் இனி நெட் சிம் கார்டு பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.. ஏனெனில் அதற்கும் கை ரேகை அவசியம் என மெசேஜ் வந்திருக்கு.சாதாரணமாக சவுதியில் ரீசார்ஜ் செய்வது கூட சுலபமில்லை, ஏன்னில் நம்ம ஊரில் பயன்படுத்துவது போல் கார்டை சுரண்டி ரகசிய நம்பரை பதிவேற்றினால் ரீசார்ஜ் ஆகிவிடுது போல் சுலபான காரியம் அல்ல, இங்கே ரீசார்ஜ் ரகசிய நம்பருடன் சவுதி அரசால் கொடுக்கப்பட்டு இருக்கும் இகாமா ஐடியின் நம்பரையும் பதிவு செய்தால் தான் ரீசார்ஜ் ஆகும்.
ஒருவர் சிம்மில் இன்னொருவர் ஐடி நம்பர் போட்டு ரீசார்ஜ் கூட செய்ய முடியாதளவுக்கு கடும் கட்டுப்பாடு உள்ளது.
அப்படி இருக்கும் போது தற்போது கைரேகை பதிவு செய்ய சொல்வது இன்னும் கடுமையான விதிமுறைகளை தொலைதொடர்பு துறை விதித்துள்ளதை காட்டுகிறது.
நம்ம ஊர்ல ஒரு சிம் கார்டு இல்லை பத்து சிம் கார்டு கூட யாரோ ஒருத்தரின் ஜெராக்ஸ் ஐடி இருந்தால் கூட வாங்கிடலாம், இங்கேயும் அப்படி தான் இருந்தது, ஆனால் பாதுக்காப்பை பலப்படுத்த நினைத்து பார்க்க முடியாதளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கு என்பது தான் ஆச்சரியம்,அதை விட ஆச்சரியம் அதை செயல்படுத்தி காட்டுகிறார்கள் என்பது தான்.
கைரேகை பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள சிம் நிறுவனத்தின் கிளைகளை தொடர்பு கொண்டு கைரேகை பதித்து விடுங்கள், இல்லை எனில் விரைவில் தொடர்பு துண்டிக்கப்படும்

வன்முறை வார்த்தைகள் அதிகமுள்ள புனித நூல் எது? "பைபிள்" ஆய்வில் சுவாரசிய தகவல்!!



வாஷிங்டன்: வன்முறையை தூண்டும் வார்த்தைகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலா அல்லது அல்லது கிறித்தவர்களின் புனித நூலான பைபிளிலா என்று நடத்தப்பட்ட ஆய்வில் சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, கோபம், அருவருப்பு, வருத்தம், ஆச்சரியம், பயம், கவலை மற்றும் நம்பிக்கை ஆகிய 8 மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகள் இஸ்லாமியர்களின் குர்ஆன் நூலில் அதிகமாக உள்ளதா அல்லது கிறித்தவர்களின் பைபிள் நூலில் உள்ளதா என டாம் ஆண்டர்சன் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் பொறியாளர் ஒரு ஆய்வு மேற்கொண்டார். Bible has more violent content than Quran, reveals text analysis இந்த ஆய்வை விரைவாக மேற்கொள்ள நவீன மின்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 2 நூல்களையும் வெறும் 2 நிமிடங்களில் ஆய்வு செய்து முடித்துள்ளார். இந்த ஆய்வின் முடிவில், 'கொல்லுதல், அழித்தல் உள்ளிட்ட வன்முறைக்கு தூண்டும் வார்த்தைகள் அதிகளவில், அதாவது 5.3 சதவிகிதம் கிறித்துவர்களின் பழைய பைபிளிலும், 2.8 சதவிகித வன்முறை வார்த்தைகள் புதிய பைபிளிலும் அடங்கியுள்ளன. ஆனால், இஸ்லாமியர்களின் புனித நூலில் 2.1 சதவிகித வன்முறை வார்த்தைகள் மட்டுமே அடங்கியுள்ளதாக டாம் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் பள்ளி அலுவலகத்தில், நுழைந்து 6 பேரை சுட்டுக்கொன்ற ஆசிரியர்!



சவுதி அரேபியாவில் பள்ளி அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி ஜாசன் மாகாணத்தில் உள்ள Al-Dayer நகரில் உள்ள பள்ளி அலுவலகத்திற்கு சற்று முன்னர் ஆயுதம் ஏந்திய ஆசிரியர் ஒருவர் நுழைந்துள்ளார்.
பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
இதில், 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதியின் உள்துறை அமைச்சரான மான்சூர் துர்கி இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய ஆண் ஆசிரியரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கான அதிகாரப்பூர்வமான காரணங்கள் வெளியாகாத நிலையில், பள்ளியின் முதல்வர் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியருக்கு முன் விரோதம் இருந்ததாகவும் அல்லது அவர் மனநல நோய் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பேனரை அகற்றிய இன்ஸ்பெக்டரை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி



நாகர்கோவில்: களியக்காவிளை பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அதிமுக பேனரை அகற்றிய இன்ஸ்பெக்டரை அதிமுக ஒன்றிய செயலாளர் செல்போனில் மிரட்டிய உரையாடல் வாட்ஸ் அப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொது செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தனது 68வது பிறந்தநாள் விழாவை வருகிற 24ம்தேதி கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் விதிமுறைகளுக்கு மாறாக கட் அவுட், பேனர்கள் வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் விதிமுறைகளுக்கு மாறாக பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பேனர்கள் வைத்துள்ளனர்.
இதில் குமரி மாவட்டம் களியக்காவிளை பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிமுகவினர் மெகா சைஸ் பேனர் வைத்து இருந்தனர். இதனால் அருகில் உள்ள பயணிகள் நிழற்குடையில் பயணிகள் நிற்க முடியாத நிலையும் இருந்தது. இது பற்றி காவல் துறைக்கும் பல்வேறு புகார்கள் வந்தன.
பேனர் வைத்து இருந்த அதிமுக நிர்வாகிகளிடம் அதை மாற்று இடத்தில் வைக்குமாறு களியக்காவிளை இன்ஸ்பெக்டர் சாம்சன் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அதிமுகவினர் அந்த பேனரை அகற்ற முடியாது என கூறி விட்டனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் இருந்த போது, இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையிலான போலீசார் அந்த பேனரை அகற்றினர். பின்னர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகிக்கும் தகவல் தெரிவித்து, பேனரை பத்திரமாக இறக்கி வைத்து இருக்கிறோம்.
நீங்கள் வந்து வாங்கி கொள்ளுங்கள் என கூறி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில், மேல்புறம் ஒன்றிய அதிமுக செயலாளர் உதயகுமார், இன்ஸ்பெக்டர் சாம்சனுக்கு செல்போனில் பேசி உள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் என்று கூட பாராமல், எங்கள் அம்மா பேனரை நீ எப்படி அகற்றுவாய் என கூறி இன்ஸ்பெக்டரை கண்டபடி ஒருமையில் பேசி திட்டினார். அம்மா பேனரை அகற்றி விட்டாய். எனக்கு ரத்தம் கொதிக்கிறது. நேரில் வந்தால் உன்னை என்ன செய்வேன் என தெரியுமா?
எனது பேரூராட்சிக்குள் பேனரை வைக்க நான் யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றெல்லாம் தாறுமாறாக போனில் உதயகுமார் மிரட்டுகிறார். இன்ஸ்பெக்டரும் முதலில் பொறுமையாக தனது பதிலை கூறினார். ஆனால் உதயகுமார் ஒருமையில் பேசியதால் ஆத்திரம் அடைந்து அவரும் பதிலுக்கு பதில் பேசி, உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என கூறி உள்ளார். பின்னர் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன் நேற்று தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்னை சென்று இருந்தார்.
இதனால் அவரின் உத்தரவுக்காக போலீசார் காத்து இருக்கிறார்கள். இதற்கிடையே உதயகுமார், இன்ஸ்பெக்டர் சாம்சனை போனில் மிரட்டி ஆபாசமாக பேசிய உரையாடல் விவகாரம் வாட்ஸ் அப்பில் நேற்று மாலை முதல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதயகுமாரின் மனைவி ஆஷா டயானா, களியக்காவிளை பேரூராட்சி தலைவியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் தரப்பில் கேட்ட போது, களியக்காவிளை பஸ் நிலையத்துக்குள் திரும்பும் இடத்தில் பேனர் வைத்துள்ளார்கள். இதனால் பஸ்கள் வந்து செல்ல முடிய வில்லை. பயணிகளும் பெரும் பாதிப்படைகிறார்கள். இதனால் தான் அந்த பேனரை அகற்ற வேண்டிய நிைல வந்தது. மற்றபடி அவர்கள் களியக்காவிளை பேரூராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் வைத்துள்ள பேனர்களை நாங்கள் எதுவும் செய்ய வில்லை என்றனர்

Thursday, 11 February 2016

கும்பகோணம் மகாமக விழாவின் அன்னதானத்திற்கு 1100 அரிசி மூட்டை, 1 லட்சம் தண்ணீர் பாட்டில் வழங்கிய இஸ்லாமியர் :: மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துபவர்களுக்கு சவுக்கடி என பொதுமக்கள் பாராட்டு.


தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தனியொரு புகழ் சேர்த்துவரும் மகாமக விழாவின் அன்னதானத்துக்காக இஸ்லாமிய தொழிலதிபர் வழங்கிய 1100 அரிசி மூட்டைகளையும், 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களையும் அவர் சார்பில் தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார் பல்வேறு அமைப்புகளுக்கு சனிக்கிழமை வழங்கினார்.
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில், கும்பகோணத்தைச் சேர்ந்தவரும், தொழில் அதிபருமான ஒயிட் ஹவுஸ் அப்துல்பாரி இலவசமாக 1,100 அரிசி மூட்டைகளையும், 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களையும் வழங்க முடிவு செய்தார்.
இந்நிலையில் மகாமகவிழாவின் போது அன்னதானம் செய்பவர்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் மகாமகக் குளம் ராயாகிராண்ட் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவையாறு தியாகபிரம்ம மகோத்சவசபா தலைவரும், தமாகா மாநிலசெயற்குழு உறுப்பினருமான ஜி.ஆர்.மூப்பனார் தலைமை வகித்தார். தொழிலதிபர் அப்துல்பாரி, ஜி.சந்திரசேகரமூப்பனார், ராயாகோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் உரிமையாளர் அப்துல்பாரி வழங்கிய 1100 அரிசி மூட்டைகளையும், 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களையும் அவரின் சார்பில், மாநிலசெயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார், தமிழ்நாடு பிராமணர் சங்கத்துக்கு 500 அரிசி மூட்டைகளையும், 20 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களையும், இஸ்கான் அமைப்புக்கு 300 அரிசி மூட்டைகளையும், 50 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களையும் என பல்வேறு அமைப்புகளுக்கு அரிசி மூட்டைகளும், தண்ணீர் பாட்டில்களையும் பிரித்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமாகா நகரத்தலைவர் பி.எஸ்.சங்கர், மாநிலசெயலர் அசோக்குமார், இணைச் செயலர் சாதிக்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேராவூரணி வட்டத்தில் ஆண்டிக்காட்டில் வரும் 13ஆம் தேதி பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம் :: பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தல்.


வருகிற 13ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோக  திட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
பொதுவிநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின்
குறைகளைக்  கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய மாதந்தோறும் அனைத்து வட்டங்களில் குறிப்பிட்ட
கிராமத்தில் குறைத்தீர் கூட்டம் நடைபெறும்.
அதன்படி, இம்மாதத்திற்கான பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 13ம் தேதி பட்டுக்கோட்டையில்
கொள்ளுக்காடு, பேராவூரணியில் ஆணைக்காடு ஆகிய கிராமங்களில் நடைபெறஉள்ளது.
பொதுமக்கள் அந்தந்த நியாய  விலைக்கடைகளுக்கு சென்று தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம்  மனுக்களை அளித்து தீர்வு கண்டு பயன்பெறுமாறு கலெக்டர்
அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு இலவசமாக கச்சா எண்ணெய் கொடுக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்


டெல்லி: இந்தியாவில் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கவும் அதில் 3-ல் 2 பங்கை இந்தியா இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய எண்ணெய் நிறுவனமான "அட்னாக்" ஒப்புதல் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் 50 நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்யவும் அமீரகம் விருப்பம் தெரிவித்துள்ளது.அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீது அல் நக்யான் 3 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். இந்தியாவுக்கு முதன் முறையாக வருகை தந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார்.
அபுதாபி இளவரசரின் இந்த பயணத்தில் இருதரப்பு தொழில் முதலீடுகள், ஐஎஸ் பயங்கரவாதம் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இதன் ஒருபகுதியாக அமீரகத்தின் தேசிய எண்ணெ நிறுவனமான அட்னாக் (அபுதாபி நேஷனல் ஆயில் கார்ப்பரேஷன்), இந்தியாவில் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்கவும் அதில் 3-ல் 2 பங்கை இந்தியா அவசரகாலத்துக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரையில் 79% அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதை சேமித்து வைக்கப்பதற்காக பாதாள சேமிப்பு கிடங்குகள் ஆந்திராவின் விசாகப்பட்டினம், கர்நாடகாவின் மங்களூர், படூரில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 53 லட்சம் டன் கச்சா எண்ணெய் சேமிக்க முடியும்.
இதில் மங்களூர் சேமிப்பு கிடங்கில் 15 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை தன்னுடைய வர்த்தக பயன்பாட்டுக்காக சேமித்து வைக்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வைந்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அப்படி சேமித்து வைக்கும் கச்சா எண்ணெய்யை இந்தியா அவசர தேவைகளுக்கு 3-ல் 2 பங்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் அமீரக எண்ணெய் நிறுவனமான அட்னாக் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.இதேபோல் இந்தியாவின் 50 நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்யவும் அமீரகம் விருப்பம் தெரிவித்துள்ளது

ஜால்ரா மண்ணர்கள் 5 பேர் -முதலிடத்தில் யார் ? கலக்கல் காமெடி.




    
     காசுக்காக ஈன மாணத்தை இழந்து கட்சித்தலைவர்களுக்கு ஜால்ரா தட்டுவதைப் பார்த்தால் சிலருக்கு விருதே கொடுக்கலாம் போல் தெரிகிறது.
அதில்
ஒருவர் அதிமுக வுக்கு ஆதரவு கொடுத்து தனது 18 ஆண்டுகால கொள்கையை இழந்தவர்.
மற்றொருவர் ஜெயலலிதாவுக்காக கண்ணீர் வடிப்பவர்
மற்றொருவர் ஜெயலலிதா வெற்றிபெற முஸ்லிம்களை வைத்து போராட்டம் நடத்தியவர்
மற்றொருவர் கலைஞருக்காக தனது இஸ்லாத்தை தாரை வார்த்தவர்
மற்றொருவர் கேப்டனுக்காக வாங்கிய காசை விட ஜாஸ்தி கூவியவர்.
இதில் யாருக்கும் முதல் பரிசு கொடுக்கலாம்னும் வாசகர்களே வீடியோவைப்பார்த்து முடிவெடுங்கள்.
நன்றி: காலைமலர்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


சென்னை: கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (தொழில்நுட்பம்) காலியாக உள்ள காவலர் பணியிடம், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடம் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 01.01.2016 அன்று 30 வயதிற்கு உட்பட்ட தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் 35 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்தவர்கள் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள்  தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில்நுட்பம்), கிண்டி தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் அறிவித்துள்ளார்

காதலர் தினம் கொண்டாட தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு



இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதே போல பாகிஸ்தானிலும் காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  காதலர் தினத்தன்று ஒவ்வொரு தடவையும் அங்கு காதலர் தினம் கொண்டாட்டம் நடக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பினர் காதலர் தினம் கொண்டாடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதாவது காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் செயலாகும் என்று அவர் கூறியுள்ளார். இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான அறிக்கையை பாகிஸ்தான் உள்துறை செயலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி உத்தரவு பிறப்பித்து அவர்கள் மூலம் தடை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும். என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார்

மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது: மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்



சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜ அரசு நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான முயற்சியில் மீண்டும் இறங்கி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் இந்திய மருத்துவக் கழகத்தின் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த வழக்குகளை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில், இரண்டு நீதிபதிகள் இந்திய மருத்துவக் கழகம் பொது நுழைவுத் தேர்வு நடத்தத் தேவையில்லை என்று தீர்ப்பு அளித்தனர்.இந்நிலையில் மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. பாஜ அரசு சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் கேரளாவில் பஸ் கட்டணம் ஒரு ரூபாய் குறைப்பு: முதல்வர் உம்மன்சாண்டி அறிவிப்பு


திருவனந்தபுரம்: டீசல் விலை குறைந்துள்ளதால், கேரளாவில் டவுன் பஸ்களில் கட்டணம் குறைக்கப்படும் என்று முதல்வர் உம்மன்சாண்டி கூறினார். திருவனந்தபுரத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு முதல்வர் உம்மன்சாண்டி கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலை குறைந்ததால் கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் டவுன் பஸ்களில் கட்டணம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்ச கட்டணம் 7 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக குறைக்கப்படும். சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ் போன்ற சொகுசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்படாது.இதேபோல், தனியார் பஸ்களிலும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பஸ் உரிமையாளர்களிடம் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார். இதனால் தனியார் பஸ்களிலும் கட்டணம் குறையும். இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்.

Wednesday, 10 February 2016

பதிலடி கொடுத்த முஸ்லிம் பெண்கள்




இங்கிலாந்து பிரதமர் அண்மையில் 20 மில்லியன் பவுண்ட்களை இஸ்லாமிய பெண்களின் ஆங்கில கல்விக்காக ஒதுக்கியிருந்தார்.
22% இங்கிலாந்தில் வாழும் இஸ்லாமிய பெண்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்கள் நல்லபடியாக வாழ்வதற்கு உதவுவதற்கும் ஆங்கிலம் படிப்பதற்கும் இந்த பணத்தை பயன்படுத்த இருப்பதாக பி.பி.சி-க்கு தெரிவித்தது இங்கிலாந்து அரசு. இங்கிலாந்தில் வாழும் இஸ்லாமிய பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. மேலும் அவர்கள் அதிகம் பேசாமல் இருப்பதால் சில இஸ்லாமிய ஆண்கள் ஐஎஸ் மாதிரியான தீவிரவாத அமைப்புகளில் இணைவதற்கான சூழ்நிலை உருவாகிறதாக டேவிட் கேமரூன் கூறியிருந்தார். அதை டெலெகிராப் பத்திரிக்கை பதிவு செய்தது.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து முப்பதாயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமிய பெண்கள் #traditionallysubmissive என்கிற ஹேஷ்டேக்கில் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

Tuesday, 9 February 2016

கருனாநிதி – காங்கிரஸ் .விஜயகாந்த் – பாஜக – கலைகட்டும் தேர்தல் பேரம்


தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் நாளை மறுநாள் சென்னை வந்து அக்கட்சித் தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ்- தேமுதிக கூட்டணி அமையும் என முதலில் கூறப்பட்டது. இதனிடையே திடீரென திமுக- பாஜக- தேமுதிக கூட்டணி அமையக் கூடும் என செய்திகள் வெளியாகின.
இதனை திமுகவில் ஒரு தரப்பினர் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி அமையும் எனவும் கூறி வருகின்றனர்.
காங். கூட்டணி1/5 காங். கூட்டணி கடந்த 2004 லோக்சபா தேர்தலில் இருந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து 2013-ல் திமுக வெளியேறியது.
சென்னை: தேமுதிகவுடனான கூட்டணியை உறுதி செய்வதற்காக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க பாஜக பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் ஓரிருநாட்களில் சென்னை வருகை தர உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான யூகங்கள் முடிவடையும் தருணம் வந்துவிட்டது.. அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னை வருகை தர உள்ளார். இதன்பின்னர் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட உள்ளது. இதேபோல் தேமுதிக-
பாஜக கூட்டணியை உறுதி செய்ய மத்திய அமைச்சர்கள் பிரகா ஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் ஓரிருநாட்களில் சென்னை வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே தொலைபேசியில் ஆலோசனை நடத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின்னர் தேமுதிக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. பாஜகவைப் பொறுத்தவரையில் மார்ச் முதல் வாரத்தில் பிரசார களத்தில் இறங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.
ஆகையால் அதற்கு முன்னதாக கூட்டணி தொடர்பான அனைத்து பணிகளையும் முடிப்பதில் அக்கட்சி முனைப்புடன் உள்ளது. தமிழகத்துக்கு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் இருந்து அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து வருகை தர உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Monday, 8 February 2016

பட்டுக்கோட்டையை சேர்ந்த மாலிக் அவர்களின் உயிர்காக்க உதவிடுவோம்


பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சகோதரர் மாலிக். இவருக்கு உடல்நிலை மிகவும் சரியில்லாத நிலையில் உள்ளதால் திருச்சி காவேரி மருத்துமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
அவருக்காக உதவி செய்ய விரும்பும் சகோதரர்கள். அவரது மனைவியின் வங்கி கணக்கு (இனைக்க பட்டுள்ளது) உதவும் மாறு கேட்டுகொள்கின்றோம். மேலும் உங்களது துவாவிலும் அவரை சேர்த்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானக.
சகோதரர்களே இந்த சகோதரருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
"பூமியில் உள்ள மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ள இறைவன் உங்களின் மீது இரக்கம் காட்டுவான்.

குடிகாரனுக்கு தவ்ஹீத் ஜமாத் டிசர்ட் – காவிகள் சூழ்ச்சி அம்பலம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகூர் கிளையின் T.Shirt அனிந்த ஒருவர் சாரயகடையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பரப்பி முஸ்லிம்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்திய காவிகளின் சூழ்ச்சி அம்பலம்.
மழை வெல்ல நிவாரன நேரத்தில் பலரிடம் செனற தவ்ஹீத் ஜமாஅத்தின் டிசர்டை வாங்கிவைத்து ஒரு குடிகாரனுக்கு போட்டிருக்கும் காவிகளின் நிலையைப் பாருங்கள்.
இந்த டிசர்டை போட்டவன் கண்டிப்பாக முஸ்லிமாக இருக்க முடியாது.தவ்ஹீத் ஜமாத் காரர்கள் நடத்திய மாநாட்டில் கலந்த லட்சக்கணக்கான மக்கள் ஒருவர்கூட மது குடிக்கவில்லை என்பது உலகிற்கே தெரியும் http://kaalaimalar.net/liquer-eradication/.அப்படிப்பட்ட தவ்ஹீத் காரன் டிசர்ட் அணிந்து குடிக்க வந்தான் என்றால் அவன் யார் ?
இவன் தவ்ஹீத் ஜமாத் மட்டுமல்ல.சராசரி முஸ்லிம் கூட கிடையாது. இவனும் முஸ்லிம் அல்ல.இவனை போட்டோ  போட்டோ எடுக்க வந்ததும் முஸ்லிம் அல்ல என்பது அப்பட்டமாக தெரியுது.
வேறு யார் ?
வழக்கம் போல் நம்ம கோட்சே பயலுவதான்.
இஸ்மாயில்னும் பச்ச குத்தி காந்திய சுட்டது
புர்கா அணிந்து சாராயக்கடைக்கு போனது
புர்கா அணிந்து சாமி கும்பிட்டது
தொப்பி , தாடி வைச்சு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் கல்ந்து கொள்ளும் கள்ள புத்திக்காரர்களின் சூழ்ச்சி மீண்டும் அம்பலமானது.
வழக்கம் போல கொண்டைய மறைக்க மறந்த வடிவெலுவைபோல் காவிகளும் தவ்ஹீத் டிசர்ட் போட்டவர்கள் காவி வேட்டியை மறைக்க மறந்துவிட்டனர்.
எனினும் , தவ்ஹீத் ஜமாஅத்காரர்களே ! நீங்கள் டி சர்ட் அணிந்து மதுக்கடையை உடைக்க்ப்போனாலும் நாங்கள் நம்புவோம்.குடிக்கப்போனாய் என்று எவன் சொன்னாலும் நம்ப மாட்டோம்.

Sunday, 7 February 2016

மரண அறிவவிப்பு



அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்று காலை 08/02/2016
நம் ஊரைச் சேர்ந்த ( புதுப்பட்டினம் )
HMS . சாகுல் ஹமீது அவர்களின் தம்பியும் ,ராஜா முஹம்மது ,நைனா முஹம்மது,மற்றும் தமிம் அன்சாரி அவர்களின் மச்சான்னுமாகிய அபூபக்கர் அவர்கள் இன்று மரணமடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வயிற்று வலி மருத்துவம்

வயிற்றுவலி

வலி என்று பொதுவாக எடுத்துக் கொண்டால் உடல் வலி, முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி, முழங்கால்வலி, வயிற்றுவலி, கண்வலி, காதுவலி என்ற எல்லா வலிகளையும் வலிகள் என்றுதான் கூறுவார்கள்.

அதில் வயிற்றுவலி என்பது வயிறு அல்லது உணவுக் குழலில் ஏற்படும் வலியைக் குறிக்கும். வயிற்றுவலி வந்தவுடன் கிராமப் புறத்தில் இருப்பவர்கள் உடனே டாக்டரிடம் ஓடமாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்த மண்வாசனை மருத்துவத்தை செய்து பார்ப்பார்கள். சாதாரண வலி என்றால் இந்த மருத்துவத்திற்கே கட்டுப்பட்டு விடும். கிராமப்புறத்தில் வயிற்று வலிக்கு என்னென்ன மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் உங்களுக்கும் அவசர காலத்தில் உதவும்தானே.

அதற்கு முன் எத்தனை வகையான வயிற்றுவலி உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்:

1. வயிற்றில் குடல்புண் இருந்தால் வயிறுவலிக்கும்.
2. உணவு செரிக்கவில்லை என்றால் வயிறுவலிக்கும்
3. காரம், புளி போன்றவை அதிகரித்தாலும் வயிறுவலிக்கும்.
4. அடிக்கடி தலைவலி வருகின்றவர்கள் அனாசின், சாரிடான் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதால் வயிறு வலிக்கும்.
5. கெட்டுப்போன உணவை உண்டதால் சிலருக்கு வலி ஏற்படும். இவற்றில் எது சரியான காரணம் என்பதைக் கண்டுபிடித்து மருத்துவம் செய்ய வேண்டும். காரணத்தைக் கண்டு பிடித்தவுடன் வயிற்றுப் புண் என்றால் புண்ணுக்குரிய மருந்து முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மருத்துவம்

மருந்து_1
நற்சீரகம் _ 100கிராம், ஓமம் _ 100கிராம், இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து கற்கண்டு _ 100கிராம் சேர்த்து மூன்று வேளையும் சுடுநீரில் குடித்து வரவேண்டும். வயிற்று வலி பூரண குணமாகி விடும்.

மருந்து _ 2
அதிமதுரம் _ 50கிராம், இந்துப்பு _ 50கிராம், நவாச்சாரம் _ 50கிராம் மூன்றையும் பொடியாக்கி 3கிராம் அளவு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட குணமாகும்.

எண்ணெய் குளியலால் ஏற்படும் மகத்துவங்கள்:



எண்ணெய் குளியலால் ஏற்படும் மகத்துவங்கள்:
இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல; நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன.
எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்:
இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை நீங்கும்.
ஐம்புலன்களுக்கும் பலம், தெளிவு உண்டாகும். தலை, முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளரும். தலைவலி, பல்வலி நீங்கும்.
தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும், உடல் பலமாகும், சோம்பல் நீங்கும், நல்ல குரல் வளம் உண்டாகும். சுவையின்மை நீங்கும்.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை:
நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தேய்க்கும் பொழுது, எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும், பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு, பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.
காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும், கண்களில் விடுவதினால் காதின் நோய்களும், உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண் நோய்களும், தலையில் தேய்த்து குளிப்பத்தினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் தேய்த்தவுடன் குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்; அவ்வாறு குளிப்பதினால் எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலினுள் உட்கிரகிக்கப்படும். ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி. நல்லெண்ணெய் தேவைப்படும்.
எண்ணெய் குளியலன்று செய்ய வேண்டியவை:
நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். அதிகாலையிலேயே (6.30 மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும்.
வாரமிருமுறை அதாவது, ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
எண்ணெய் குளியலன்று செய்யக்கூடாதவை:
அதிக வெயிலில் அலையக்கூடாது. குளிர்ந்த உணவுகள், பானங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலுறவு கொள்ளக் கூடாது. நண்டு, கோழி, மீன், செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.