Thursday, 11 February 2016

காதலர் தினம் கொண்டாட தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு



இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதே போல பாகிஸ்தானிலும் காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  காதலர் தினத்தன்று ஒவ்வொரு தடவையும் அங்கு காதலர் தினம் கொண்டாட்டம் நடக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பினர் காதலர் தினம் கொண்டாடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதாவது காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் செயலாகும் என்று அவர் கூறியுள்ளார். இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான அறிக்கையை பாகிஸ்தான் உள்துறை செயலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி உத்தரவு பிறப்பித்து அவர்கள் மூலம் தடை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும். என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment