Tuesday, 9 February 2016

கருனாநிதி – காங்கிரஸ் .விஜயகாந்த் – பாஜக – கலைகட்டும் தேர்தல் பேரம்


தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் நாளை மறுநாள் சென்னை வந்து அக்கட்சித் தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ்- தேமுதிக கூட்டணி அமையும் என முதலில் கூறப்பட்டது. இதனிடையே திடீரென திமுக- பாஜக- தேமுதிக கூட்டணி அமையக் கூடும் என செய்திகள் வெளியாகின.
இதனை திமுகவில் ஒரு தரப்பினர் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி அமையும் எனவும் கூறி வருகின்றனர்.
காங். கூட்டணி1/5 காங். கூட்டணி கடந்த 2004 லோக்சபா தேர்தலில் இருந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து 2013-ல் திமுக வெளியேறியது.
சென்னை: தேமுதிகவுடனான கூட்டணியை உறுதி செய்வதற்காக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க பாஜக பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் ஓரிருநாட்களில் சென்னை வருகை தர உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான யூகங்கள் முடிவடையும் தருணம் வந்துவிட்டது.. அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னை வருகை தர உள்ளார். இதன்பின்னர் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட உள்ளது. இதேபோல் தேமுதிக-
பாஜக கூட்டணியை உறுதி செய்ய மத்திய அமைச்சர்கள் பிரகா ஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் ஓரிருநாட்களில் சென்னை வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே தொலைபேசியில் ஆலோசனை நடத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின்னர் தேமுதிக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. பாஜகவைப் பொறுத்தவரையில் மார்ச் முதல் வாரத்தில் பிரசார களத்தில் இறங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.
ஆகையால் அதற்கு முன்னதாக கூட்டணி தொடர்பான அனைத்து பணிகளையும் முடிப்பதில் அக்கட்சி முனைப்புடன் உள்ளது. தமிழகத்துக்கு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் இருந்து அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து வருகை தர உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

No comments:

Post a Comment