Thursday, 11 February 2016

பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் கேரளாவில் பஸ் கட்டணம் ஒரு ரூபாய் குறைப்பு: முதல்வர் உம்மன்சாண்டி அறிவிப்பு


திருவனந்தபுரம்: டீசல் விலை குறைந்துள்ளதால், கேரளாவில் டவுன் பஸ்களில் கட்டணம் குறைக்கப்படும் என்று முதல்வர் உம்மன்சாண்டி கூறினார். திருவனந்தபுரத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு முதல்வர் உம்மன்சாண்டி கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலை குறைந்ததால் கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் டவுன் பஸ்களில் கட்டணம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்ச கட்டணம் 7 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக குறைக்கப்படும். சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ் போன்ற சொகுசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்படாது.இதேபோல், தனியார் பஸ்களிலும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பஸ் உரிமையாளர்களிடம் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார். இதனால் தனியார் பஸ்களிலும் கட்டணம் குறையும். இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்.

No comments:

Post a Comment